
உடம்பு
திருமந்திரம் 8 – #நங்கநல்லூர் J K SIVAN
திருமூலர்.
திரிபுரம் அழித்து திரிபுராந்தகனை சிவன் வென்றான் என்று புராணங்கள் சொல்லட்டும். திரிபுராந்தகனின் மூன்று கோட்டைகளும் அழிந்ததோ இல்லையோ இதற்கு வேறு ஒரு அருமையான அரத்தம் உள்ளது. அது என்ன என்று திருமூலர் விளக்குகிறார் இந்த திருமந்திரத்தில்:
”அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே”
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே”
கங்கை நீரைத் தனது விரித்த செஞ்சடை மேல் தாங்கிய முழு முதல் கடவுள் பரம சிவன்,ஹரனை துவாரகமாக ஏற்று ஆகாச கங்கை பூமிக்குள் வேகமாக நுழைகிறாள். ஹர் த்வார் என்பது தான் ஹரித்வார் ஆகி ஹரனையே ஹரியாக மாற்றிவிட்டோம். ரெண்டும் ஒன்றே தானே. எந்த பெயர் சொல்லி வணங்கினால் என்ன?
திரிபுராந்தகனின் மூன்று வலிமையான கோட்டைகளை பரம சிவன் எரித்தான். உண்மையிலேயே அவை வேறொன்றுமில்லை. மும்மலங்களான ஆணவம், கர்மம், மாயை என்பவையை அவன் அழித்ததையே குறிக்கும்.. சிவன் இவ்வாறு செய்த பெருஞ்செயலை வேறு யாரால் அறிய முடியும் என்று வியக்கிறார் திருமூலர்.
ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு .மேஉல கோடுயிர் தானே
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு .மேஉல கோடுயிர் தானே
இந்த திருமந்திரம் இது என்ன சொல்கிறது? சிவன் ஒருவன் தான் சதாசிவன் என்கிற சிறந்த தெய்வம் . ஏழ் உலகங்களும் படைக்க அவன் தான் காரணன். அவன் தான் இந்த ஏழு உலகங்களையும் படைத்ததோடு அல்லாமல் காக்கின்றான். அது மட்டுமா. அந்த ஏழு உலகங்களையும் கண்ட்ரோலில் வைத்து ஒடுக்குகிறான். உலகம் என்று சொல்லும்போது அதனுள் வாழும் எண்ணற்ற பல கோடி உயிர்களையும் தான் குறிப்பிடுகிறேன். அவை அத்தனைக்கும் அவனே வாழும் உலகமாகவும் அவற்றினுள்ளே உயிராகவும் உள்ளான்.
”உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்.
உடம்பினுக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.”
உடம்பினுக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.”
சுவாமி, உண்மையிலே எனக்கு இந்த உடம்பை பற்றி தெரிந்ததெல்லாம் சொல்பம் தான். ஏதோ சுகமாக வெந்நீரில் குளித்து, நிறைய பவுடர், வாசனாதி திரவியம் அணிந்து, நல்ல பளபள பாட்டாடைகள் அணிந்து இந்த உடம்புக்கு அங்கங்கே ஆபரணங்கள் பூட்டி கண்ணாடியையே சுற்றி சுற்றி வந்து இந்த உடம்பின் அழகை முன்னும் பின்னும் பார்த்து ரசித்து, மகிழ்ந்து, இதற்கு ”நான்” என்று ஒரு பெயரும் சூட்டி அடிக்கடி கலர் கலராக போட்டோ வில் ”நான்” என்னையே பார்த்துக்கொண்டு ”அச்சில் வரும் ”என்னை” –அதாவது என் பெயரையே–திரும்ப திரும்ப படித்துக்கொண்டிருக்கிறவன். இது தான் சாஸ்வதம் என்று முட்டாளாக நம்புகிறவன்.
இந்த உடம்பை பற்றி அப்பப்போ கொஞ்சம் பயம் உண்டு. வயோதிகம், வியாதி, நரை திரை, வழுக்கை., சுருக்கம் இதெல்லாம் பயமுறுத்தும்போது ஏதாவது சினிமா பாட்டு பாடிக்கொண்டு மறந்து விடுவேன்.
என்னவோ தெரியவில்லை. ஒருநாள் மேலே உள்ள பாட்டு என்னை அடியோடு கவிழ்த்துப் போட்டுவிட்டதே. உடம்பு என்றால் ஏதோ ஒரு அசுத்தமான ஒன்று அதை அடிக்கடி சுத்தம் செய்து வாசனையாக வைத்துக் கொள்ளவேண்டும், வியாதி, வயோதிகம், நரை திரை, உள்ளது என்று தான் நினைத்தேன். அதற்குள்ளே இதுவரை ”நான்” அறியாத ஏதோ ஒன்று இருப்பதை கண்டுகொண்டேன்.
என்னவோ தெரியவில்லை. ஒருநாள் மேலே உள்ள பாட்டு என்னை அடியோடு கவிழ்த்துப் போட்டுவிட்டதே. உடம்பு என்றால் ஏதோ ஒரு அசுத்தமான ஒன்று அதை அடிக்கடி சுத்தம் செய்து வாசனையாக வைத்துக் கொள்ளவேண்டும், வியாதி, வயோதிகம், நரை திரை, உள்ளது என்று தான் நினைத்தேன். அதற்குள்ளே இதுவரை ”நான்” அறியாத ஏதோ ஒன்று இருப்பதை கண்டுகொண்டேன்.
அடடா இது ”நான்” அல்ல, இது இன்னொருத்தன் — ”பெரும்-ஆள்” பெருமாள், இருக்கும் இடம் போல இருக்கிறதே என்று புரிந்து கொண்டேனோ! அதற்கப்புறம் என்ன ஆச்சர்யம். நான் கோவிலுக்கு போகவில்லை சார்….. இந்த உடம்பையே அவன் ஆலயமாக கருதி என்னுள்ளே அவனை வணங்கிக் கொண்டிருக்கிறேன்.
இத்தனை கழுதை வயதிலும் தெரியாத இந்த சிறிய நாலு வரி மந்திரத்தை எனக்கு ஒரு பழைய புத்தகக் கடையில் ரெண்டு ரூபாவுக்கு அட்டை போன கிழிசலாக வந்த திருமூலர் அல்லவோ உபதேசித்தார். இனி அவரை விடுவதில்லை. அவர் சகலருக்கும் அல்லவோ குரு. அவர் நிறைய சொல்கிறாரே. அதை உங்களுக்கும் சொல்லலாமே.
தொடரும்
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




Radhe radhe 🌹🙏🕉️💐🤝