JAYADEVA’ S ASHTAPATHI – DASAVATHARASLOKAS – J K SIVAN

அஷ்டபதி – நங்கநல்லூர் J K SIVAN
ஜெயதேவர்

தசாவதார ஸ்லோகங்கள் – 1-3.

ஜெயதேவர் சில நூறு வருஷத்துக்கு முன் பிறந்தவர் என்றாலும் மனதளவில் கிருஷ்ணன் காலத்தை சேர்ந்தவர்.ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன் பிருந்தாவனத்தில் கண்ணன் வீட்டில், பிருந்தாவனத்தில், அவன் நண்பர்கள் , கம்சனின் ராக்ஷஸர்கள் ஆகிய எல்லாவற்றோடும் இணைந்த கிருஷ்ணனின் சேஷ்டிதங்களை நேரடியாக கண்ட அனுபவத்தோடு ஸ்லோகங்கள் இயற்றியவர். கீத கோவிந்தம் என்று அதற்கு பெயர்.அதில் எட்டு பதங்களைக் கொண்ட பாடல்கள் அஷ்டபதி என்று உலகெங்கும் உள்ள ஹிந்து பக்தர்களால் பாடப்படுபவை.

கீத கோவிந்த அஷ்டபதிகளை பாடும்போது முதலில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரத்தை ஸ்லோகங்களாக பாடுகிறார். அவற்றை இன்று ருசிப்போம்.

ஜெயதேவர் 12ம் நூற்றாண்டு வங்காள ராஜா லக்ஷ்மண சேனன் அரண்மனையில் கௌரவிக்கப்பட்டவர். சங்கீதம் நாட்டிய கலைகளில் வல்லவர். சிறந்த கிருஷ்ண பக்தர். பாகவத புராணம் மஹாவிஷ்ணு அவதாரங்களை பத்தோடு நிறுத்தவில்லை. 24 இருப்பதாக சொல்கிறது. ஜெயதேவர் பாடல்கள் என்றால் சைதன்யருக்கு ரொம்ப பிடிக்கும். இன்று சாயந்திரம் வரையிலும் ஆறு வயது முதல் என் போன்ற 85வயதுகள் வரை பாடிக்கொண்டே இருக்கிறார்கள்

1.प्रलयपयोधिजले धृतवानसि वेदम् । विहितवहित्रचरित्रमखेदम्॥ केशवाधृतमीनशरीर जयजगदीशहरे॥ अ प १-१

pralaya-payodhijale Gopala Krishna, dhrutavanasi vedam vihita-vahitra-caritram akhedam | kesava dhruta-mina-sharira jaya jagadisa hare!

ப்ரளய-பயோதி-ஜலே த்ருவானஸி வேதம்விஹித-வஹித்ர-சரித்ரமகேதம் கேஸவ த்ருத-மீன-சரீர ஜய ஜகதீஸ ஹரே

ஹே ஜகத்துக்கே ஈஸ்வரனாகிய ஹரி, கேசவா, திருப்பாற் கடலில் இருந்து எழுந்து இறங்கி மீனாக உருவெடுத்து கீழே வா. உலகையே கடலடியில் ஜலப்ரவாஹத்தில் மூழ்கடித்து, வேத தர்மம் அனைத்தும் ஆழத்தில் மூழ்கியதை மீனாக நீ தானே கொண்டுவரவேண்டும். நீரில் மூழ்கியவனை கப்பல் தானே வெற்றிகரமாக காப்பாற்றமுடியும். .

கேசவன் என்ற பெயரின் அர்த்தமே அற்புதமானது. க: ப்ரம்ம. ஈஸா ; சிவன், ப்ரம்மா சிவன் இருவருமே ஒன்று சேர்ந்த சக்தி தான் கேசவன்: ஹரி எனும் நாராயணன். நாம் வணங்கும் எல்லா தெய்வங்களும் ஒன்றே.
ப்ரளய காலத்தில் பிரபஞ்சம் நீர் மயமாக காட்சி அளிக்கும்போது மீனாக வந்த நீ அல்லவோ காப்பாற்ற முடியும். மீனைப் போல் நீரில் யாரால், எதனால் மூழ்கி ஹயக்ரீவன்(இப்படி ஒரு ராக்ஷஸனுக்கும் பெயரா?) என்ற ராக்ஷஸன் திருடி கடலடியில் மறைத்து வைத்திருந்த வேதங்களை எல்லாம் மீட்க முடியும் என்று ஜெயதேவர் பாடுகிறார்.

2.क्षितिरतिविपुलतरे तवतिष्ठतिपृष्ठे।धरणिधरणकिणचक्रगरिष्ठे केशव धृतकच्छपरूप जयजगदीशहरे॥ अ प १-२

kṣitirati-vipulatare tava tiṣṭhati pṛṣṭhe dharaṇī-dharaṇa-kina-cakra-gariṣṭhe | keśava dhṛta-kaccapa-rūpa jaya jagadīśa hare ||2||

க்ஷிதிரதி விபுலதரே திஷ்டதி தவ ப்ருஷ்டே தரணி-தரண-கிண-சக்ர-கரிஷ்டேகேஸவ த்ருத-கச்சப-ரூப ஜய ஜகதீஸ ஹரே!

ரெண்டாவது அவதாரம் ஆமை. எதற்காக நாராயணா, நீ ஆமை உருவத்தை ஏற்றாய் என்று புரிகிறது. தேவர்களும் ராக்ஷஸர்களை திருப்பாற்கடலை கடைந்து அம்ரிதம் தேடும்போது மந்திரமலை மத்தாக தேர்வானது. கடைய கயிறு வேண்டுமே? வாசுகி தான் கயிறு. சரி, மத்து எங்கே உறுதியாக அசையாமல் ஆழமான பாற் கடலில் நிற்கமுடியும். த்ரிமூர்த்திகளின் சக்தி ஒருங்கமைந்த கேசவா, நீ அல்லவோ அந்த உறுதி. அதற்காக நீ ஆமையாக உன் முதுகில் மந்த்ரமலையை சுமந்தாய்.

3.वसति दशनशिखरे धरणीतवलग्ना ।शशिनि कलङ्ककलेव निमग्ना॥ केशव धृतसूकररूप जयजगदीशहरे॥ अ प १-३

vasati dasana-sikhare Gopala Krishna dharani tava lagna shasini kalaka-kaleva nimagna | kesava dhruta-sukara-rupa jaya jagadisa hare ||3||

வஸதி தஸன-ஸிகரே தரணீ தவ லக்னா ஸஸினி கலங்க-கலேவ நிமக்னா கேஸவ த்ருத-ஸுகர-ரூப ஜய ஜகதீஸ ஹரே!3

வராஹம் என்றால் பன்றி. ரொம்ப இழிவாக நாம் இந்த வாயில்லா மிருகத்தை பழிக்கிறோம், ஒருவரை திட்டும்போது ஏன் இந்த மிருகத்தின் பெயர் சொல்ல வேண்டும்? அது என்ன பண்ணிற்று? ஆனால் அதன் உயர்வை கடவுள் நிலைக்கு உயர்த்தியவர் மஹா விஷ்ணு. ஒரு அவதாரமே வராஹம் தான்.அதனால் அநேகர் பக்தர்கள், ஹிந்துக்களின் வராஹன் என்ற பெயர் கொண்ட உன்னதர்கள். ஹிரண்யாக்ஷன் எனும் ராக்ஷஸன் பூமியைப் பாயாய் சுருட்டி ரஸாதலம் எனும் பாதாள லோகத்தில் மறைத்து வைத்து விட்டான். அவனைத் தேடி சென்று தனது பலம் மிகுந்த கோரைப்பற்களால் அசுரனைக் கொன்று பூமியை அலாக்காக கடலுக்கு மேலே தூக்கிக் கொண்டு வந்து மீண்டும் பூமி சுதந்திரமாக தனித்து இயங்க செய்தவர் வராஹ மூர்த்தி. வராஹ அவதாரத்தில் அவர் வெளிப்படுத்திய இந்த சக்தி சத்ய சங்கல்பம் எனப்படும். !

மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மீதி உள்ளதை அடுத்தடுத்த பதிவுகளில் அறிவோம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;