RAMANA MAHARSHI – J K SIVAN

ரமண மஹரிஷி  –    நங்கநல்லூர்   J K  SIVAN 

அருணாசல மஹிமை 

அருணாசலேஸ்வரம்  எனப்படும்  திருவண்ணாமலை யின்  வயது யாருக்குமே தெரியாது. அது பல  தெய்வீக  ரஹஸ்யங்களைக்  கொண்ட ஆன்மீக  சுரங்கம்.  அதன் பல குகைகளில் மஹான்கள் தங்கி த்யானம் செய்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று  விரூபாக்ஷ குகை. அதில் தான் ரமண மகரிஷி ஆரம்பத்தில் தங்கி ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டவர்.  அவருக்கு முன் அங்கே யாரோ ஒரு மஹான், ஒரு முனிவர்,துறவி,  இருந்திருக் கிறார். அவர் சில புத்தகங்களை அந்த குகையில் விட்டு சென்றிருக்கிறார். எப்போதாவது அங்கே வருவார்.
ரமணர்  இளம் வயதினனாக  அந்த விரூபாக்ஷ குகை யில்  சென்று தாங்கினார்.  அவருக்கு முன் அங்கே இருந்த துறவி ஒருநாள் அங்கே வந்தபோது  ரமணர்  அவரை  வணங்கி  அவர் வைத்திருந்த  சில  புத்தகங்கள்  அங்கே  இருப்பதை ஞாபகப்படுத்தினார்.
”உன்கிட்டேயே  எல்லாம் இங்கே  இருக்கட்டுமே..அப்புறம் வந்து எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார் அந்த மஹான்.
ஒருநாள் ரமணர்  ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப்  பிரித்தபோது  ஏதோ ஒரு பக்கம் …. அதில்  பரமேஸ்வரன்  கொடுத்த வாக்குறுதி இருந்தது.   ”யார்  இந்த  அருணா சல கிரியிலிருந்து  3 யோஜனை தூர வட்டத்தில்  வசிக்கிறார்களோ   அவர்களுக்கு முக்தி நிச்சயம்”. அடுத்த முறை  அந்த புத்தகங்களை வைத்த மஹானை  சந்தித்தபோது இளம் ரமணர் இந்த வரிகளை சுட்டிக்காட்டினார்.  அதற்கு அந்த மஹான் சிரித்தபடி தலையை ஆட்டி ‘ஆமாம், உண்மை”  என்று மட்டுமே பேசாமல் ஆமோதித்தார்.  ஒரு தடவை யாரோ ஒரு நன்றாக  கற்றறிந்த பண்டிதர், கவிஞர், சிறந்த குரு,   காவ்யா காந்தா கணபதி முனி என்று பெயர். விருபாக்ஷ குகைக்கு வந்தார்.   அவர் மனத்திலும் ஒரு சந்தேகம், அது   நிவர்த்தி யாகாமல் இருந்த நிலையில் ரமண மகரிஷியை சந்திக்கிறார்.  அவர் கேள்விக்கு ரமணர் உடனே பதில் சொன்னதில் அந்த பண்டிதருக்கு ரொம்ப சந்தோஷம்.   அந்த க்ஷணத்திலேயே  சமஸ்க்ரிதத்தில் ஒரு ஸ்லோகம் இயற்றி அதில் ரமணரை  ‘மஹரிஷி’ என்று  புகழ்கிறார். அன்று முதல் பெயரில்லாமல்  பிராமண முனிவர் என்று எல்லோரும்  அறிந்த  ரமணரை உலகம்  ரமண மகரிஷி என்று  தெரிந்து கொள்கிறது.   வெங்கட்ராமன் என்கிற இயற்பெயரும் மறைந்துவிட்டது.  பெயர்  என்பது மனிதனல்ல. அது ஒரு அடையாளம். ரமண மஹரிஷி  சத் சித்  ஆனந்த ஸ்வரூபம்.  ரமணரின்  54 வருஷ  அருணகிரி  வாழ்க்கையின் முதல் பாதி இந்த விரூபாக்ஷ குகையில் கழிந்தது. மீதி  மலையடிவாரத்தில் ரமணாஸ்ரமத்தில்,
அவருடைய  உள்ளது நாற்பது அற்புதமான  தத்வ பாடல். அதை விவரமாக எழுதி இருக்கிறேனே. மீண்டும் பதி விடட்டுமா? ரமணர்  மௌன  உபதேச குரு.  நயன தீக்ஷையில்  ஞானம் அளித்தவர். 

சந்தோஷம் என்பது மனதில் உருவாகும் ஏதோ ஒரு ஆசை, விருப்பம் பூர்த்தி யாவதில்லை. மேலும் மேலும் அடுத்தடுத்து விருப்பங்கள் வளர்கிறதே. எங்கே முடிவு?  உன்னை நீ யார் என்று அறிவதில் செலுத்து  விசாரம் உன்னை சரியாக வழி நடத்தி  ஆத்ம ஞானம் பெறச் செய்கிறதே அந்த ஆனந்தத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை.
சுவாமி  ஆத்ம விசாரம் செய்வது யார்? ஆத்மாவுக்கு  விசாரம் செய்யவேண்டிய அவசியமே இல்லையே.  நான் என்று தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் அகம்பாவம் தான்  தேடுகிறது.  தேடலில் கடைசியில்  உண்மையான ‘நான்”  எது என  அறிந்ததும்  அகம்பாவம் காணாமல் போகிறது.
நான் நடக்கிறேன், பேசுகிறேன், உட்காருகிறேன், சிரிக்கிறேன்  என்று சொல்லும்போது அது உடலைத் தான் குறிக்கிறது என்று புரிந்தாலே முதல் படி ஏறி யாகிவிட்டது என்று அர்த்தம்.  நான் நம்புகிறேன், நான் நினைக்கிறேன், நான் முடிவெடுத்துவிட்டேன்  என்று சொல்லும்போது  ”நான்”  உடல் அல்ல என்றும் புரிகிறது. அந்த  ”நான்” யார்? என்று தேடும்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக  மனதில் ஞானம் பிறக்கிறது. 

மனதும் உடலும் சேர்ந்து தான் ”நான்” என்ற பொய்  உருவை  எண்ணத்தைக் கொடுக்கிறது.  உண்மை யான  ”நான்”என்பதை அறியாமலே  பலர் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.  எல்லாமே  மூளையின்  வேலை .உண்மையான  ”நான்” எனும் ஆத்மாவுக்கு யோசிக்க வேண்டிய வேலை இல்லை, அது முடிவெடுக்காது, சிந்திக்காது. அது அதுவாகவே இருக்கும். அதில் சர்வமும் அடக்கம்.   தூக்கத்துக்கும்  விழிப்புக்கும் இடைப்பட்டது அது.  தூக்கத்துக்கு முன்னும்  விழித்த வுடனும்  ”நான்”  பற்றி யோசி. உண்மை புலப்படும்.
கடியாரம் அடித்து எழுந்திருக்கவேண்டாம்.  தானாகவே விழிப்பு வந்தபோது எழுந்ததும்  முதல் நாள் தூங்குவ தற்கு முன் என்ன நினைத்தாய், என்று யோசி   அது ஒரு சாதனையாக மாறும்.   உண்மையான  ”நான்” ஏன்  இப்படி ஒரு எட்டாக்கனி யாக இருக்கிறது என்று வருத்தம் வேண்டாம்.  யார்  தேடினார்கள் அதை?தேடினால் கைக்கு எட்டும். கொஞ்சமாவது குதித்து எழும்பினால் தானே  மரக்கிளையில் மாங்கனி கைக்கு எட்டும்?  முயற்சி அவசியம் இல்லையா.?
விழிப்பு, கனவு, தூக்கம்  என்ற மூன்று நிலையும்  கடநத நான்காவது நிலைக்கு துரீயம் என்று பெயர்.  முதல் ரெண்டு நிலையில்  உடல் நினைவு உண்டு.  ஆத்மா இந்த நான்கிலும் உண்டு.  கடைசி ரெண்டில் முழுவதுமே அது தான்.  துரீயம்  என்பதே  ஆத்மாவின் மறுபெயர் தான்.  அது ஒன்றே  சாஸ்வதம். சத்யம்.ஆழ்ந்த  உறக்க  நிலையில் மனம் காணாமல் போகிறது.  மீண்டும் விழிப்பு நிலைக்கு திரும்பும்போது மனமும் விழித்துக் கொள்கிறது.   ஆத்மாவை மறைத்து விடுகிறது.
தியானம்  மனதை அமைதிப்படுத்தி நிம்மதியைத் தருவது.  பிறக்கும்போதே  நாம் ஒவ்வொருவரும்  நமது ஆழ்மனதின் அடிவாரத்தில் சதானந்தத்தை தரும்  ஆத்மாவை கொண்டவர்கள் தான். அந்த ஆனந்தத்தை தேடி பிடித்து மேலே கொண்டுவந்து அதை அனுபவிக்க தவறுபவர்கள். எத்தனையோ ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள், சான்றோர் நமக்கு அதை நினைவுறுத் தியும் அதை செயல்படுத்த மறுப்பவர்கள். இதை ராமநமஹரிஷி நமக்கு அடிக்கடி  வலியுறுத்தி ஆனந்தமாக வாழ வழி சொல்லிக் கொடுத்தவர்.  மற்ற எண்ணங்கள்  மலைபோல் கூடி மனதை ஆக்கிரமித்து நம்மை வாழ்க்கை துன்பங்களில் ஆழ்த்துகிறது. தவிக்கிறோம்.  பற்று, புலன்களின் ஈர்ப்பு,  உணர்ச்சிகள் இவற்றால் சின்னாபின்னப்படுகிறோம். தியானத்தை, அதன் அருமையான பலனை இழக்கிறோம். ”நான்”  என்னும்  ப்ரம்மம்  ஒவ்வொருவரிலும் இருக்கிறதே.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;