
ஸூர் ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN
யசோதா உனக்கு கோபம் ஆகாதேடி…
யசோதைக்கு இப்போதெல்லாம் பழக்கமாகிவிட்டது. ஆரம்பத்தில் இருந்த அதிர்ச்சி மறைந்து விட்டது. என்ன செய்வது? எப்படி அவனை திருத்துவது? எதற்கும் பயமில்லையே அவனுக்கு, அவன் விஷமத்தை, கொட்டத்தை எப்படி அடக்குவது? அவனால் நேரும் வெண்ணெய் தயிர் நெய் கொள்ளையை எப்படி தடுப்பது? என்ற வழி தெரியாத கவலை ஒன்றே அவளை ஆட்கொண்டது. இதோ சிலர் வந்துவிட்டார்கள். மெதுவாக அவர்களை வரவேற்று தரையில் அவர்கள் எதிரே அமர்ந்து கொண்டாள் யசோதை. குற்றவாளி போல் அவள் வாய் பேசாமல் அவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்ளத்தான் முடியும்?வேறென்ன செய்வது?
”யசோ, என்னடி இது, ஏதாவது நல்ல புத்தி சொல்லி,இந்த பயலை திருத்த முடியாதா உன்னால்? முதுகில் ரெண்டு சாத்து சாத்து, அப்படியாவது உன்கிட்டே கொஞ்சம் பயம் வரட்டும் அவனுக்கு?
இப்படிச் சொல்றேனே தவிர என்னாலேயே அவனைப் பார்த்தாலே ஒவ்வொரு நாளும்அவன் அடிக்கற லூட்டி, அவன் செய்யறவிஷமம், அவன் மேலே இருந்த கோபம் எல்லாமே காணாம போயிடுறதுடீ. நீ எப்படி அவனை அடிப்பே? சிரிச்சே மயக்குறான் அந்த கள்ளன். நான் வெண்ணை எடுக்கலேங்கறான், ஆனால் வாய் ஓரத்திலே, கன்னத்திலே எல்லாம் வெள்ளையா திட்டு திட்டா வெண்ணெய் . வெண்ணையை எடுக்கும்போது அவன் கீழே சிந்தின வெண்ணெய் . உடம்பெல்லாம் தயிர் அபிஷேகம். எங்க வீட்டுப் பிள்ளைகள் கூட அவனுக்கு உள் கை . ஒத்தன் மேலே ஒருத்தன் வெண்ணை, தயிரை வாரி வீசி விளையாட்டு.
இந்த பொல்லாத கிருஷ்ணன் கண்லே படக்கூடாது ன்னு நானும் தான் எவ்வளவோ யோசித்து, எத்தனை தான் ரஹஸ்யமாக வெண்ணெய், தயிர், பால், நெய் சட்டையெல்லாம் வச்சாலும் எப்படியோ கண்டுபிடிச்சுடறான். யசோதா நான் உன் புள்ள கிட்டே தோத்துபோய்ட்டேன் டீ. அவன் பலே திருடன் டீ. ஊர் முழுக்க யமுனா நதிக்கரையிலே அவனைப் பத்தி தான் பேச்சு. ஆனா ஒருத்தருக்கும் அவனை தண்டிக்க மனசில்லே . நினைச்சாலும் அவனைப் பார்த்ததும் மறந்து போயிடறது.
ஒருநாள் கையில் கொம்பை எடுத்து யசோதை கண்ணனை ரெண்டு தட்டு தட்டினாள் . அதைப் பார்த்த சில கோபிகள் புலி போல் பாய்ந்து வந்து யசோதையின் கையில் இருந்த கொம்பை பிடுங்கி தூர போட்டுவிட்டார்கள்.
”எவ்வளவு பச்சை குழந்தை அவன். அவனை அடிக்க எப்படி டீ யசோ, உனக்கு மனசு வந்தது. கல் நெஞ்சக்காரியா நீ? அவன் கண்லே ஜலத்தை பார்த்தியா? கண்ணு ரொம்பி, கன்னத்திலே வழிந்து மார்லே இறங்கி முத்து முத்தா ஜொலிக்கிறது. கருப்பு உடம்பிலே வெள்ளை முத்து மாதிரி ஜலக்குமிழிகள் பளிச்சுனு ஜொலிக்கிறது பார். ரெண்டு கண்ணு விழிகளும் மிரள மிரள அங்கேயும் இங்கேயும் பார்க்கும்போது ரெண்டு பறவைகள் வேடன் வில்லையும் அம்பையும் பார்த்துட்டு தப்பிக்கப் பறந்து போக முயல்வது போல் அலை பாயறது பார்”
ஸூர்தாஸ் எவ்வளவு அற்புதமாக ஒவ்வொரு காட்சியையும் நமக்கு கவிதையாக கொடுக்கிறார். அவர் எழுதிய மொழியில் படிக்க, புரிந்து கொள்ள, முடியாவிட்டாலும், யாரோ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததே இவ்வளவு ருசி யாக இருக்கிறதே!
The gopis complain
Why don’t you reprimand that boy?
What can I say? Every day it happens.
I haven’t the strength to endure:
He swallows the butter, spills milk on the floor,
smears his body with curd,
Then chases after the children left at home,
spraying them with butter-whey.
If ever I hide a thing, even in places
far-off and secret, he knows where.
What to do? Defeated, undone,
I’m driven to despair by your son.
His thefts are so clever—that wish-fulfilling jewel!—
that their tale cannot be told,
And so, to get a hold on him, says Sūr,
all of Braj is flowing,
dashing here and there.
How could you have become so angry with Kānh
That you took a stick in that harsh hand of yours
and let it touch his soft, tender frame?
Look at how those tears drip down from his eyes
and glisten as they settle on his breast,
As if a wagtail wanted to gather many pearls
in a beak too small to hold them all inside.
Those eyes shuttle back and forth in such terror—
look into his face and listen to what I say—
That it seems, says Sūr, two birds have seen the bow
of a hunter, and are desperate to fly.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



