
தேனான வேமனா- நங்கநல்லூர் J K SIVAN
எத்தனையோ வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிரு ந்தாலும் அடி மனத்தில் வேமனாவை விட்டு விடோமே, இப்போது எங்கிருக்கிறாரோ, மீண்டும் அவரைத் தேடிக் கண்டுபிடித்து சில பொன் மொழிகளை சம்பாதிக்க வேண்டும், அதை உங்களோடு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்ற அரிப்பு இருந்து கொண்டே இருக்கும் . கொஞ்சம் ப்ரீ FREE ஆனவுடன் முயற்சி வீண் போகவில்லை. இதோ நமது தெலுங்கு பட்டினத்தார். சில பாடல்களை ஏற்கனவே சொல்லி இருந்தாலும் மீண்டும் அவற்றின் ருசிக்காக படிப்போமே .
கரும்பு பற்றி அவர் இனிப்பாக சொல்வதிலிருந்தே தொடங்குவோம்.
”அல்பபுத்திவானி கதிகாரமிச்சின தொட்டவாரி னெல்ல தொலககொட்டு செப்பு தினெடி குக்க சிறகு தீப்பெருகுனா விச்வதாபி ராம வினுர வேமா !
அல்பனுக்கு பிரியாணிக்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்டு அதிகாரம் கொடுத்தால் அவனிடமிருந்து என்ன கிடைக்கும். தன போன்றோர்க்கே நிழல் கொடுப்பான். அறிவீர் சிறந்தவர்களின் அனுபவஸ்தர்களை விரட்டி யடிப்பான். இது எதுபோல தெரியுமா? கரும்பை பக்கத்தில் பார்த்தாலும் அதை ஒதுக்கி கிழிந்த செருப்பை கண்டதும் சந்தோஷமாக கடித்து மெல்லும் சொறிநாயின் தன்மை போல.
அற்பமான புத்தி கொண்டவன் வேறென்ன செய்வான் என்பதையும் வேமனா சொல்கிறார்:
அல்படைனவானி கைதிக பாக்யமுகலக தொட்டவாரி திட்டி தொலக கொட்டு
அல்பபுத்தி வாடதிகுலனெருகுனா விச்வதாபி ராம வினுர வேமா !
உயர்ந்த படிப்பு, பொறுப்பு, ஞானம் இல்லாத ஒரு அல்பன் திடீர் பணக்காரனாகிறான். உடனே கர்வம் மண்டைக்கேறிவிடுகிறது. சுலபத்தில் அனைவரையும் பகைத்துக் கொள்கிறான். பணத்தினால் எடைபோட்டு மிகுந்த அறிவாளிகளையும் ஞானிகளையுமே ஏசுவான். அவமதிப்பான் . அவனைப்புகழும் அல்பர்களின் சகவாசமே அவனுக்கு சுகமளிக்கும். விரைவில் அழிவான்.
அலனு புடக புட்டி நப்புடே க்ஷயமவுனு கலனு காஞ்சு லக்ஷ்மி கனுடலேது
இலனு போகபாக்ய மீ தீரே கானுரு விச்வதாபி ராம வினுர வேமா !
கடலைப்பார்க்கிறோம் . பெரிய அலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக எகிறி எழும்புகிறது. அவற்றின் மகுடமாக வெள்ளை நுரை. பார்க்குமிடமெங்கும் தோன்றும் அந்த வெண்ணிற நுரை எங்கே போச்சு? அலை திரும்ப சாதுவாக கடலை நோக்கி ஓடும் முன்பே நுரை காணாமல் போகிறது. கனவில் கார், பங்களா, ப்ளேன் எல்லாம் வாங்குகிறோம். கன்மூடித் தூங்கும்பொது கனவு காணும்போது தான் அந்த ஐஸ்வர்யம். கண்ணைத் திறந்தால் பழைய ஏழ்மை நிலை தான். கனவில் கண்ட செல்வம் எங்கே போச்சு?. எனவே தான் கிடைத்தபோது செல்வத்தை நாமும் உபயோகித்து மற்றோர்க்கும் அளிப்பது. இலையேல் அது நுரை, கனவில் வந்த கார் தான்!!
அனக னனக ராக மதி சயிலுச்சுனுண்டு தினக தினக வேமுதீய நுண்டு
சாதனமுன பனுலு சமக்கூறு தரலோன விச்வதாபி ராம வினுர வேமா !
பாடு பாடிக்கொண்டே இரு. அப்பத்தான் உனக்கு ராகம் பாடவரும். கசப்பான வேப்பிலையைக் கூட கொஞ்சம் கொஞ்சமாக விடாமல் சாப்பிட்டுக்கொண்டே வா. பிறகு சாப்பிட அது பழகிவிடும் மட்டுமல்ல இனிக்கவும் ஆரம்பிக்கும். இது எதுக்காக சொல்கிறார் வேமனா தெரியுமா? என்ன கஷ்டமான காரியமாக இருந்தாலும் விடாமல் செய்து வந்தால் அது எளிதாகிவிடும். த்யானம், ஜபம், எல்லாம் இதுபோல் தான். சாதகம் தான் மனதில் லட்சியமாக இருக்கவேண்டும் என்கிறாரோ?
அனுபுகாணி சோட நதிக்குள மனராது கொஞ்சமாயின நதியு கொதுவகாது.கொண்ட யத்தமந்து கொஞ்சமை உண்டதா விச்வதாபி ராம வினுர வேமா !
சந்தர்ப்பம் சூழ்நிலை, தகுதி இல்லாத இடத்தில் மகான்களைப் பற்றி பேசாதே. இத்தகைய இடத்தில் அறிமுகப்படுத்தாததால் மகான்களின் பெருமை ஒன்றும் குன்றாது. நாலே பேர் கூடினாலும் சத்சங்கம் தான் அங்கே பேசலாமே. ஒரு பெரிய மலையைக்கூட ஒரு சிறு மொபைல் டெலிபோன் கேமரா படம் பிடிக்கிறதே. வேமனாவுக்கு மொபைல் தெரியாது. சிறு கண்ணாடித்துண்டு என்பதால் மலையின் பிம்பம் தெரியுமே என்கிறார்.
எனக்கு ஒரு பழக்கம். ஒரே சமயம் பல தலைப்புகளில் பல தரப்பட்ட விஷயங்களை ஒவ்வொன்றாக தொடர்ந்து எழுதி உங்களிடம் சேர்ப்பது. இதில் ஒரு கஷ்டமும் இல்லை. மனது தெளிவாக இருக்கிறது. எதை எப்போது சொல்லவேண்டும் என்று ஒரு திட்டம் மனதுக்குள் வரிசைப்படுத்துகிறது. ஒன்றை எடுத்துக்கொண்டால் அதை முடித்த பிறகு அடுத்தது என்பதில் மனது சோர்வு கொள்ள வாய்ப்பு உண்டு.இதில் அப்படி இல்லை. ஒரு தலைப்பு பல மாதங்கள் கூட தொடரும். மஹா பாரதத்தை முழுமையாக ‘ ஐந்தாம் வேதம்’ என்ற தலைப்பில் எழுத 3 வருஷங்கள் ஆயிற்றே!! அந்த மூன்று வருஷமும் வேறு எதுவும் தொடாமல் இருந்தால் மஹா பாரதம் பிடிக்காத வாசகர்களின் நிலைமை என்ன? ஒரு தலைப்பில் படிக்க பிடிக்காதவர்களை கட்டாயப் படுத்தியா படிக்க வைக்க முடியும்? . உலகத்தில் அநேகருக்கு அநேக விஷயங்களில் ஈடுபாடு. விளையாட்டு என்று எடுத்துக் கொண்டாலே, கிரிக்கெட், கால் பந்து, ஹாக்கி, ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், அம்பு எறிதல், தாண்டுதல், குதித்தல், என்று பல வகை இருக்கிறதே.
அனைத்து நண்பர்களும் ரசிக்கும் படியான, கோவில் கள், மகா பெரியவா, ரமணர், விவேகானந்தர், வேமனா, கம்பர், என் பழைய கால நினைவுகளை, சங்கீத விஷயம், சுற்றுலா, பழம் தமிழ் கவிதைகள், புராணங்கள், ஆதி சங்கரர், சூர் தாஸ், தாகூர், சிவாஜி, பழமொழி, தத்துவ, வாழ்க்கை நெறிமுறைகள் இன்னும் எத்தனையோ விஷயங்கள் எழுத வாய்ப்பு இருக்கும்போது ஒவ்வொன்றாக முடிந்தபோது தொடுவோமே என்ற எண்ணத்தால் இது போல் ஒரு தலைப்புக்கும் அடுத்த தலைப்புக்கும் இடைவெளி கூடுகிறது. மன்னிக்கவும்.
யாரை எப்படி கணித்து வைத்திருக்கிறார் வேமனா என்பது இந்த பாடலில் வருகிறது:
” ஆபத்தைன வேள நனி பந்துல சூடு பயமுவேள சூடு பண்டு தனமு
பெதவேள சூடு பெள்ளாமு குணமுனு விஸ்வதாபி ராம வினுர வேமா ”
நமது உண்மையான பந்துக்கள் (உறவினர்) யார்? நமது வசதி காலத்தில் கூடவே இருந்து எல்லா வசதிகளையும் பெற்றுக் கொண்டு, கொஞ்சம் கடின, கஷ்ட தசையில் நாம் தவிக்கும்போது ஓடிவிடாமல், கூடவே அப்போவும் இருந்து உதவும் குணம் உள்ளவனே உண்மையான உறவினன்.
நிக்கமைன மஞ்சி நீலம் ஒக்கட்டி சாலு தளுகு பெளுகு தட்டெடேல?காடு பத்ய மிலனு சாலதா ஒக்கடைன விஸ்வதாபி ராம வினுர வேமா
ஒரு பெரிய தட்டு. அதில் நிறைய கலர் கலராக கண்ணைப்பறிக்கும் கண்ணாடி கற்கள் மினுமினுக்கி என்ன பயன். ஒரு நல்ல ஜாதி நீலக்கல்லுக்கு அவை அத்தனையும் ஈடாகுமா ? குப்பை குப்பையாக எதெல்லாமோ படிப்பதை விட பளிச்சென்று ஒரு சிறு அர்த்தமுள்ள, மனசில் பதியும் பதிகம் ஒன்றே போதுமே. (அதற்காகத்தான் வேமனா!)
Eluka tholu thechi yedadi uthikina ………………ఎలుక తోలు తెచ్చి ఏడాది ఉతికినా
Nalupu nalupey gani thelupu kadhu………………..నలుపు నలుపే గాని తెలుపు కాదు
Koyya bomma thechi kottina palukuna……………కొయ్య బొమ్మ తెచ్చి కొట్టిన పలుకునా
Viswadhaabhirama vinura Vema………………….. విశ్వధాభిరామ, వినుర వేమ
ஒரு எலியைப்பிடித்து நிறைய சோப்பு போட்டு குளிப்பாட்டினாலும் அதன் தோல் வெளுப்பாகவா மாறப்போகிறது. ஒரு மரப்பாச்சியைப் போட்டு அடி அடி என்று அடித்து ” பேசு பேசு ” என்றாலும் அது பேசுமா? மனிஷர்களும் அப்படித்தான் அவனாகவே மனம் மாறினால் தான் உண்டு.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



