RAMANA MAHARSHI – J K SIVAN

ரமண  மஹரிஷி   –   நங்கநல்லூர்  J K  SIVAN
சாந்தம்மா  அனுபவம்.

இது  நடந்து 100 வருஷங்களுக்கு  மேல்  ஆகிவிட்டது.  சாந்தம்மாவுக்கு 40 வயசாக  இருக்கும்போது  எப்படியாவது மோக்ஷம் அடைய  வேண்டும் என்ற  ஆவல்  ஏற்பட்டது.  யார்  சரியான குரு இதற்கு வழி காட்டுவார் என்று தேடி பத்து வருஷம் அலைந்து  1927ல்   யாரோ சொல்லி  திருவண்ணாமலை எங்கே   இருக்கிறது என்று கேட்டு அறிந்து அங்கே  மூன்று பெண்மணிகளோடு சேர்ந்து ரமணாஸ்ரமத்தை  அடைந்தாள். 

ஆஸ்ரமத்தில் நுழைந்த  போது ஒரு ஓலைக்குடிசையில்  ஒரு கயிற்று   கட்டில்  மேல்  மகரிஷி உட்கார்ந்தி ருந்ததை பார்த்தாள். அவரைப் பார்த்த முதல் பார்வையிலேயே  அவளுக்கு  தான்  தேடிய  குரு மட்டுமில்லை  அவர்.   பகவானே நேரில் மனித ரூபத்தில்  காட்சி தறுகிறார்  என்று தான்    தோன்றி யது.
மஹரிஷி அருகே  ஒரு பெரியவர்  கைகட்டி  நின்றி ருந்ததை பார்த்து அருகில் இருந்தவர்களிடம் அவர் யார் என்று கேட்டாள் .

”அவர்  தான்  முருகனார் என்ற சிறந்த ரமண  மஹரிஷி  பக்தர்.  கவிஞர், வேதாந்தி.   ராமநாத புரத்தை சேர்ந்தவர்”
என்று யாரிடமிருந்தோ  பதில் வந்தது.   சாந்தம்மா வுக்கும் ஊர்  ராமநாதபுரம் தான்.   சாந்தம்மா  மெதுவாக  பகவானிடம் சென்று  வணங்கிவிட்டு பேசினாள் .

”சாமி  இன்னிக்கு  எனக்கு பகவான் அருள் கிடைச்சுது. என் மனசு இனிமே  என்னை தொந்தரவு படுத்தாமல் இருக்க நீங்கள்  தான் அருள் புரியவேண்டும்.”

மஹரிஷி  முருகனார் பக்கம் திரும்பி
“அந்தம்மா கிட்டே மனஸு ன்னு  ஏதாவது ஒன்னு இருக்கா ன்னு முதல்லே தேடி கண்டு பிடிக்க சொல்லு.   அப்படி இருக்கறதா தெரிஞ்சா, அது எப்படி இருக்குன்னு  விவரமா சொல்ல சொல்லு” என்றார் .

ஏன் இப்படி மஹரிஷி  சொல்றார் னு சாந்தம்மாக்கு புரியலே .  அதற்குள்  முருகனார்  அவளைப் பார்த்து  விளக்கினார்.

”அம்மா,.  உங்களுக்கு மஹரிஷி  என்ன சொல்றார்னு  புரியலையா?  ஆத்மா ன்னு ஒண்ணு  இருக்கே அது எங்கே இருக்குன்னு தேட சொல்றார்.  அதுக்கு பேர் தான் ஆத்ம விசாரம். இரவும் பகலும் முழு முயற்சியா  ஆத்மாவை தேடினா அதை அடையலாம்” .

சாந்தம்மா சொல்வது கேட்கிறதா: உன்னிப்பாக கேளுங்கள்: ‘

‘ நாற்பது நாள்  ரமணாஸ்ரமத்திலேயே இருந்தேன்.  நாங்க தங்கி இருந்த இடத்திலேயே  சுத்தமாக சமைத்து  ஆஸ்ரமத்துக்கு எடுத்து செல்வோம்.  மஹரிஷி  அதை ருசி பார்ப்பார்.  எல்லோருக்கும்  விநியோகம் பண்ண சொல்வார். அப்போதெல்லாம்  ஆஸ்ரமத்தில்  சமையல் கட்டில்   மகரிஷி தம்பி  சின்னசாமி என்பவர் தான் சமையல் வேலை பார்ப்பார்.  சாம்பாரோ கறியோ  கூட  இருக்காது.  வெறும்  சாதம், மோர், ஊர்காய் தான் அத்தனை பேருக்கும்.  எனக்கு  ரமண  மஹரிஷி  ஜெயந்தி வரைக்குமாவது அங்கே இருக்க விருப்பம். கூட இருந்தவர்கள்  அவசரப்படுத்தினார்கள். மஹரிஷி கிட்டே சொல்லிட்டு  ஆசியோடு புறப்பட சென்றேன்.
”இன்னும் ஒரு நாள் இரு.உபதேச சாரம்  என்கிற  புஸ்தகம் ரெடியாகி நாளை வரும். வாங்கிண்டு போ”அடுத்தநாள் புத்தகம் ஆஸ்ரமத்துக்கு வந்தது.   உபதேச சாரம் புத்தகம் ஒரு பிரதியை அவர் கையாலேயே வாங்கி கொள்ளும் பாக்யம் கிடைத்தது.  அவரை விட்டுப் போகவே மனசில்லை.. அழுதேன்.  மஹரிஷி பார்த்துட்டார். 

”ஏன் அழறே,  நீ  ராமநாதபுரம்  தானே போறே? ஆனா  அருணாச்சலத்தை விட்டு விட வில்லையே. போய்ட்டு சீக்கிரம் வருவே”  ” என்றார் . 

அதிர்ஷக்காரி நான். அடுத்த ஜெயந்திக்கு அருணாசலம் வந்துவிட்டேன்.  ,மஹரிஷி  பக்தர்களுக்கு  அவரைப்  பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் எந்த தடங்கலும் குறுக்கி டாது என்பது அனுபவம். 

மறுபடி நான் ஆஸ்ரமத்தில் செண்ரபோது  புதிதாக கட்டிய  ஹாலில்  ஒரு சோபாவில்  உட்கார்ந்திருந்தார்.  தண்டபாணி சுவாமி என்பவருக்கு  உள்ளது நாற்பது பற்றி விளக்கிக்  கொண்டிருந்தார். என்னைப்பார்த்ததும் முதல் கேள்வி என்ன தெரியுமா?

”உன்கிட்டே  உள்ளது நாற்பது  புஸ்தகம் இருக்கா? உன் அட்ரெஸ்க்கு  ஒரு  பிரதி அனுப்ப சொன்னேனே”

ஆஹா  பகவானுக்கு  பக்தர்கள் பெயர் கூட எப்படி  ஞாபகம் இருக்கிறது, ஆஸ்ரமத்தில் சாந்தம்மா  சூரியோதயம் முதல் அஸ்தமனம் வரை  சேவை செய்தாள்.  ஜெயந்தி வைபவம் முடிந்து பக்தர்கள் திரும்பும்போது நானும் திரும்பிஊருக்கு போக ஒரு எண்ணம் தோன்றியது.   தைரியத்தை சேகரித்துக் கொண்டு மகரிஷியிடம் சென்றாள்

 ”பகவானே,  உங்களோடு இங்கே இருக்கும்போது மனதுக்கு ரொம்ப அமைதியாக இருக்கு.  இதை விட்டு போனால் மனதில் சஞ்சலம் மறுபடியும் வந்துவிடுகிறது. என்ன செய்வேன்?”’

‘அப்படின்னா, உன் மனசு அமைதி முழுமையாக பெறும்  வரை இங்கேயே  இரு. மனசில் சஞ்சலமே இல்லேன்னு தெரிஞ்சதும் எங்கே வேணாலும்  போ. எதுவும் உன் மனசை அப்புறம் சஞ்சலம் பண்ணாது. 

அப்புறம் ரெண்டு மாத காலம்  சாந்தம்மா தான் ஆஸ்ரம  சமையல் கட்டில்  இன் சார்ஜ்.   அந்த பொறுப் பில் இருந்த சின்னசாமி உடல்  நலம் குன்றியதால்  மெட்றாஸு க்கு போய்  ரெண்டு மாதம்  வைத்யம்  செய்து  கொள்ள  கிளம்பி விட்டார்.
அதன் பின்  ரெண்டு காலம் ஆனவுடன் சாந்தம்மா  ஆஸ்ரமத்தை விட்டு செல்லவில்லை.  ரெண்டு மாதம் மட்டும் இல்லை,எப்போதுமே  ஆஸ்ரமத்தை பிரியவில்லை. திடீர் திடீரென்று  மஹரிஷி  சமையல் கட்டுக்குள் நுழைவார். சமையல் கட்டிலும் , அதே  சமயம்  விடாமல்  ஆஸ்ரம ஹாலில் பக்தர்களை சந்திக்கவும்  செய்வார்.  அரிசி  பருப்பு  தூசி தும்பு, கல் நெல் இல்லாமல் பொருக்கி சுத்தமாக்குவார்.   காய்கறிகள்  தோல் சீவி கொடுப்பர்.  வேர்க்கடலை போன்றவற்றை உடைத்து ,உரித்து,  ஊறவைத்து தானியங்களை கல்லுரலில் அரைத்து  கொடுப்பார்.  ஈர்க்குச்சிகளை ஒடித்து  மந்திரி இலைகளை  சாப்பாட் டுக்கு தயார் பண்ணுவார். எல்லா வேலைகளிலேயும் அவரோடு மற்றவர்கள் பங்கேற்பார்கள். பேசிக் கொண்டே  இருப்பார். கதைகள்,  புராணங்கள், பழைய சம்பவங்கள்,  உபதேசங்கள்  தத்துவங்கள்   எல்லாமே அற்புதமாக  மற்றவர்களுக்கு கிடைக்கும்.  ஒரு தாய் எப்படி குழந்தைகளை கண்டிப்பாளோ அப்படி நடு நடுவே  தப்பு பண்ணினால்  கோபிப்பார். அடுத்த விநாடியே  மறப்பார்.

சாந்தாம்மா இன்னும் சொல்வார்.கேட்போம். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;