கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா
கேள்வி பதில் ரத்னமாலை 71-85
71. எது மின்னல் போல் தோன்றி மறைவது?
தீயவர்கள் நட்பு. மின்னல் போல் இதுவும் பளிச்சென்று அழகாக இருந்தாலும் கண்ணைப் பறித்துவிடும் ஜாக்கிரதை.
72.. எவன் இந்த கலிகாலத்திலும் கூட நல்வழியிலிருந்து பிறழாதவன். கட்டுப்பாடுடையவன்.?
நன்னெறியை, சன்மார்க்கத்தை விடாமல் கடைப்பிடித்து நடக்கும் நல்லவன்.73.. தம்பி உனக்கு தெரியுமா? சொல். எது சிந்தாமணி போல் இரும்பையும் தங்கமாக்குவது?
” சாதுர் பத்ரம் என்ற நாலு சமாச்சாரங்கள்’ எது தெரியுமா அந்த நாலு :
1. தர்மமோ தானமோ செய்யும்போது அன்போடு இதமாக, மனதை குளிர்விக்கும் சொற்களோடு, விளம்பரம் விரும்பாத,இன்முகத்தோடு தருவது
2. அகம்பாவம், கர்வம், இல்லாத கல்வி அறிவு. ஞானம். இது தான் மொத்தத்தில் அடக்கம் என்பது. ‘அமரருள் உய்க்கும்’ சக்தி கொண்டது.
3.மன்னிக்கும் தன்மை கொண்ட கம்பீரம். வீரம். forgive and forget சமாச்சாரம். அற்புதமான குணம்.
4. செல்வம் இருந்தாலும் அதை தாராளமாக பிறருக்கு அளிக்கும் கொடை உள்ளம். இப்படி செய்தால் வள்ளல் என்ற பட்டம் உங்களுக்கு கிடைக்கும்.

74. எதற்கு வருந்தவேண்டும்?
கருமித்தனம் இருக்கிறதே என்று. கஞ்சன், பிசினாறி என்றெல்லாம் பேர் வாகுகிறார்களே. அல்ப பிராணிகள். தானும் அனுபவிப்பதில்லை, பிறரையும் அனுபவிக்க விடுவ தில்லை. அப்படிப்பட்ட செல்வம் பின்னால் எவனுக்கோ புதையல்.. அப்படி ப்பட்ட செல்வத்தால் அதை பிற்காலத்தில் அடைந்தவனுக்கும் எந்த பெருமையோ புகழோ இல்லை. அவஸ்தை படுகிறான். நிறைய படிக்கிறோம். யூட்யூபில் பார்க்கிறோமே.75.சகல சௌபாக்யங்கள் இருந்த போதும் எது புகழப்படுகிறது?
தர்ம , தயாள குணம். கருணை உள்ளம். கடவுளின் அம்சம் கொண்டவன் அவன்.
76. எவரை கற்றோர்கள், அறிஞர்கள் போற்றுவார்கள்?
எவன் இயற்கையாகவே எளிமை, கருணை இரக்க ஸ்வபாவம் கொண்டவனோ அவனை. ஊரும் உலகும் அவனை போற்றும்.77. ஒருவனுடைய குலத்தாமரைக்கு, வம்ச கமலத்துக்கு எது சூரியன் எனலாம்?
சகல நற்குணங்கள் கொண்டவனாக இருந்தும், எவன் ரொம்ப பதவிசாக,எளிமையாக, மரியாதையுடன், பணிவுடன் நடந்துகொள்கிறானோ அவன் . குணம் உள்ளவன் தான் பணம் உள்ளவன். என்று சொல்லும்போது

78. எவன் உலகத்தை ஆள்பவன்.?
எவன் மருதுபாஷியாக, இனிமையாக, இன்சொல் லோடு பிறருக்கு உதவும் எண்ணத்தோடு நல்வழியில் நடக்கிறானோ அவன்.
79. எது, யார் கற்றோர், அறிஞர்கள் மனதை து கொள்ளை கொள்கிறது?
இனிய, எளிய பொருள் செறிந்த கவிதைகள், ஞானம் நிறைந்த பெண்.80. எவரை துரதிர்ஷ்டம் நெருங்குவதில்லை?.
மூத்தோர், பெரியோர் சொற்படி நடப்பவன், எளிமையானவனை.
81. மஹா லக்ஷ்மிக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?
எவனிடத்தில் உடலிலும் மனத்திலும்
சோம்பேறித்தனம் இல்லையோ, எவன் ஒழுக்கமானவனோ, நற்குணம் உடையவனோ அவனை ,மகாலட்சுமிக்கு மட்டுமில்லை எல்லோருக்குமே பிடிக்கும்.
82. எவனை மஹாலக்ஷ்மி நீ வேண்டாம் போ என சட்டென்று உதறிவிடுவாள்?
சோம்பேறியாக இருந்து கொண்டு, பிராமணர்கள், குருமார்கள் , தேவர்கள் எல்லோரையும் இழிவாக பேசுபவனை. இப்போது கலிகாலத்தில் மஹாலக்ஷ்மியால் இப்படிப்பட்டவர்கள் ரக்ஷிக்கப்பட்டு பணத்தோடு பதவியும் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.
83.ஒருவன் எங்கே வசிக்கவேண்டும்?
நல்லவர்களோடு கூடி , சேர்ந்து, அவர்கள் அருகே அவனும் வாழவேண்டும். இல்லையென்றால் காசிக்கு போய் அங்கே வசிக்கலாம். இப்போது காசியில் கும்பல் அதிகமாகிவிட்டது.
84.. எந்த இடத்தை தவிர்க்கவேண்டும்?
மட்டமான வர்கள், தீய எண்ணங்கள் செயல்கள் கொண்ட கெட்டவர்கள் வர்கள் வாழும் இடத்தில் வசிக்கவே கூடாது. அதைவிட ஒரு படி மேலே போய் சொல்வதென்றால் சுயநலம், பேராசை, கருமித்தனமான ராஜா ஆளும் ராஜ்யத்திலேயே இருக்கக்கூடாது. அடே கிருஷ்ணா, நாங்கள் இதை விட்டு வேறே எங்கே போவது?85. ஒருவனை துயரத்திலிருந்து, துன்பத்திலிருந்து எது விடுபட செய்கிறது?
இருப்பதை வைத்து திருப்தியாக வாழத் தெரிந்த, அடக்கமான சொற்படி கேட்கும் மனைவியை அடைந்தவன் பாக்கியசாலி. நண்பர்களே இப்படிப்பட்ட பாக்கியசாலிகள் மனைவியோடு உங்கள் போட்டோக்களை போட்டு விவரம் சொல்லுங்கள் எழுதி எல்லோருக்கும் அனுப்புகிறேன். நிறையபேர் இப்படி உருவாக வாய்ப்பிருக்கும்.

This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.