RUDHRAAKSHAM – J K SIVAN

ருத்ராக்ஷம் –   நங்கநல்லூர்  J K  SIVAN
ருத்ராக்ஷம் பற்றி  ரொம்ப  விஷயங்கள் இருக்கிறது. அவற்றை பொறுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள். நான் எங்கிருந்தோ சேகரித்த விஷயங்கள் இவை.
ருத்திராக்ஷ மரங்கள் தென் கிழக்கு ஆசியாவில்  ஜாவா, கொரியா, மலேசியாவின் சில பகுதிகள், தைவான், சீனா, தெற்காசியாவிலும் வளர்கிறது. நேபாளத்தில் தான்  ஜாஸ்தி. நேபாளத்தின்  உயர்ந்த இமய மலை பகுதிகள், கண்டகி, பாக்மதிகளின் குளிர் தண்ணீரும், மிதமான இதமான சூழ்நிலையும் ருத்ராட்ச மரங்களைச் செழிப்பாக வளர்க்கிறது.
ருத்ராக்ஷம் என்றாலே  பரமேஸ்வரன் சிவனின் கண்கள் என்று பெயர். கண்களை விட  சிவனருளை அதிகம் தருவது ருத்ராக்ஷம்.  பிரபஞ்ச உயிர்களின்  நன்மைக்காக  சோவும் டஜயம, செய்பவர்.  தியானத்திலிருந்து  கண் திறந்ததும்  சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் ருத்ராக்ஷமாக  வளரவைத்தாள் என்று புராணம் சொல்கிறது.  எத்தனையோ   ஆயிரம் வருஷங்களாக உடல் நலம், ஜபம், சக்தி     அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால்  நமது முன்னோர்கள்  ருத்திராக்ஷம் அணிந்தவர்கள். 

சிவனடியார்கள் என்றாலே  இப்போதும் அநேகர்  சொல்வது “நெற்றியில் பட்டை”, “காவிச் சட்டை”, “கழுத்தில் கொட்டை”  என்கிறார்கள். இது அடையாளம்.   ருத்ராக்ஷம் அணிந்தால் ஏதோ ஒருவித சொல்ல முடியாத சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவுகிறது.  என் அனுபவம் இது. உள் ஒளியை  மேலோங்கச் செய்கிறது. இதை அணிந்தால் பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்கள்  நெருங்கியதில்லை என்று முன்னோர்கள் சொல்வார்கள். ருத்திராக்ஷம் அணிந்தால்  முக்கியமாக   மன அமைதி,  மன ஊக்கத்தையும், புத்திக் கூர்மை  அதிகரிக்கும். அளிக்கிறது. 38 வகையான ருத்ராக்ஷம் இருக்கிறது.  21 வகை மிக பிரசித்தம். முகத்தைப் பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வரிசைப் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
ஒரு முக ருத்ராக்ஷம்:   மந்திரம் – ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ
இது  சூரியனால்  ஆளப்படுகிறது. இந்த  ருத்ராக்ஷம்  ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் ராஜா. தூய உணர்வைக் (Pure consciousness)  குறிப்பது.இதை அணிந்தால் போகமும்  மோக்ஷமும்  கிட்டும்.  ராஜா ஜனகர் போல  வைராக்கியத்தோடு  பற்றற்று இருக்கலாம். அதற்கு வேண்டும் மனப்பக்குவம் கிட்டும். ம், நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும், அறுவை சிகிச்சையில் வெற்றி பெறுவதற்கும் ஒரு முக ருத்ராக்ஷம் உதவுகிறதாம். டாக்டர்கள் சொல்கிறார்கள்.
ரெண்டு முக  ருத்ராக்ஷம்;  மந்திரம்: – ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ
சந்திரனால்  ஆளப்படுவது. சிவனும் சக்தியும் இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிப்பது.  (மாதொரு பாகன்) இதை அணிந்தால்  ‘ஒற்றுமை’ (unity) உணர்வைத் தரும். குரு-சிஷ்யன், பெற்றோர்-குழந்தைகள், கணவன்-மனைவி, நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் கூட  இது குறிக்கிறது.
மூன்று முக ருத்ராக்ஷம்:   மந்த்ரம்: – ஓம் கிளீம் நமஹ
அதை ஆளுவது அங்காரகன்.  செவ்வாய்.    அக்னியை குறிப்பது.  எல்லாப் பொருட்களையும் ஸ்வாஹா பண்ணியபிறகு அக்னி தூய்மையாக சாம்பலாகிவிடுவது போல   இதை அணிவோர்க்கு  சிவனருள் கிட்டி வாழ்க்கையில் பாவங்களில், தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய நிலையை அடையலாம்.  இந்த ருத்ராக்ஷம்  தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) உள்ளார்ந்த பயம் (Subjective fear) குற்ற உணர்வு (Guilt) மனச்சோர்வு இல்லாமல் காக்குமாம். அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள்.
4முக ருத்ராக்ஷம்:  மந்த்ரம்:  ஓம் ஹரீம் நமஹ

ஆளுமை இதற்கு புதன். பிரம்மனைக் குறிக்கும்  ருத்ராக்ஷம்  இது. சிவனருளால்   அணிவோருக்கு  ஆக்க  சக்தி கிட்டுகிறது. மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்க வல்லது. ஞாபகசக்தி, கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நான்முக உருத்திராக்கங்கள் மூன்றினை வலது கையில் கட்டினால் அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது என நம்பிக்கை. .

பஞ்ச முகம். 5 முக  ருத்ராக்ஷம்:  மந்திரம் – ஓம் ஹரீம் நமஹ
இதை ஆள்பவர்: குரு பகவான். வியாழன்.  மங்களகரத்தின் குறியீடான சிவனை குறிப்பது. இதை அணிந்தால்  உடல் நலம், அமைதி கிட்டும். இரத்த அழுத்தம், இதய நோய்கள் வராது. ஜபம் செய்வதற்கு பயன்படுகிறது.  இந்த  ருத்ராக்ஷ மலாய் மாலையை அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும்.  அகால மரணம் ஏற்படாது.  சந்தேகம் வேண்டாம்.
ஆறு முக ருத்ராக்ஷம்: ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ
ஆறுமுகம்  என்றாலே சுப்ரமண்யம்:    ஆளுமை செய்யும் கிரகாம்:  வெள்ளி. சுக்ரன்.  முருகனுக்கு உகந்தது.  அணிவோருக்கு  அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, மனத்திட்பம், திடமான மனம் ஆகியவை  கிட்டும்.  இதை  அணிபவர்கள்  மேலாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் முக்கியமாக.
ஏழு முக ருத்ராக்ஷம்:  மந்திரம்: – ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக
ஆளுமை செய்யும் க்ரஹம் :  சனி.   இந்த ருத்ராக்ஷம்  லக்ஷ்மி தேவியை குறிக்கும் . அணிந்தால்  நல்ல உடல் நலம்  கிட்டும்.  உடல்  தொடர்பான துன்பங்கள்,  பணத் தொல்லைகள், மனத் துன்பங்கள் வராது.  இதை  அணிவதால் வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி கிடைக்குமாம். 

எட்டு முகம்   ருத்திராக்ஷம்:   மந்த்ரம் – ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ
ஆளும் க்ரஹம் :  ராகு.   விக்னேஸ்வரரை குறிக்கும் ருத்ராக்ஷம்.  அணிவோருக்கு   எல்லா முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றி கிட்டும்.  ரித்திகள் (Riddhis), சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப் பேறுகளையும்  பெறலாம். அணிவோரின்  பகைவர்கள், எதிரிகள், மனத்தையும், நோக்கங்களையும்  இந்த ருத்ராக்ஷம் மாற்றிவிடுமாம்.
ஒன்பது முக ருத்ராக்ஷம்:  மந்த்ரம்:  – நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ
ஆளும் க்ரஹம்  கேது: தேவி துர்க்கையைக் (சக்தி) குறிக்கிறது.அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.

பத்து முக ருத்ராக்ஷம்: மந்த்ரம் – ஸ்ரீ நாராணாய நமஹ, ஸ்ரீ வைஷ்ணவை நமஹ, ஓம் ஹ்ரீம் நமஹ
நவக்ரஹ  தொடர்பில்லை.  நவகிரஹத்தால் ஏற்படும் தீய பலன்களையும் இது  குறைக்கும்.  பத்துத் திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக  ருத்ராக்ஷத்தில் உண்டு என்கிறார்கள்.  உடலுக்கு  கேடயம் போல் செயல்பட்டு, எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது.  அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும்.

பதினோரு முக  ருத்திராக்ஷம் :  மந்த்ரம் – ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ
இது  ஹனுமானைக் குறிக்கும். வணங்கி  அணிபவருக்கு   அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை அருளும். விபத்தினால்   அகால மரணம் ஏற்படாமல் தடுக்கும்.  பயம் போக்கும். தியானத்திற்கு  சிறந்தது. 

பன்னிரண்டு முக  ருத்ராக்ஷம்:   மந்த்ரம்:  சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ
சூரிய பகவானைக் குறிக்கும். அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர். அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர்.  பிரகாசமான  ஒளியுடனும், பலத்துடன், பிறரை ஆட்சி செய்வார்கள். மந்திரிகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு உகந்தது.
பதின்மூன்று முக  ருத்ராக்ஷம்:   மந்த்ரம்:  ஓம் ஹரீம் நமஹஆளுமை: இந்திரன். அணிபவர்களுக்கு எல்லா சுகங்களையும் அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தும்  நிறைவேற்றுமாம்.  அஷ்டமா சித்திகளையும் அளிக்க வல்லது. 

பதினான்கு முக  ருத்ராக்ஷம்:   மந்த்ரம் :ஓம் நமஹ சிவாய
அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக மணி இது. தேவ மணி.  அணிவோருடைய ஆறாவது புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார். இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒரு போதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோர் இடர்கள், துன்பங்கள், கவலைகள் எல்லாவற்றையும் கடந்து விட முடிகிறது.மேலும், அணிவோருக்குப் பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.

பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள் கொண்ட  ருத்ராக்ஷங்களும் இருக்கிறதாமே . அடேயப்பா. என்ன ஒரு ஆச்சர்யமான தாவரம்  இது.  முனிவர்கள் இந்த  ருத்ராக்ஷங்களை கண்டறிந்து பூஜை மேடையில் வைககப்பட்டு  பல  குடும்பங்கள்  சுபிக்ஷமாக  வாழ்கின்றன.   ருத்ரனாகிய  சிவன் அருள் கிடைக்க இத்தனை  வித ருத்ராக்ஷங்கள் நமக்கு அருள் கிறது.
கௌரி சங்கர் என்று  ஒரு வித  ருத்ராக்ஷம் ரொம்ப விநோதமானதும் சிறப்பானதும் கூட.  கௌடி சரடு என்றும் சொல்வதுண்டு.   மந்த்ரம்: ஓம் கெளரி சங்கராய நமஹ
ஒன்றாக இணைந்தரெண்டு ருத்ராக்ஷங்கள் தான் கௌரி சங்கர். பார்வதி பரமேஸ்வர ஸ்வரூபம். குடும்பத்தில் அமைதியும் சுகமும் விளங்க வைக்கும். கௌரி சங்கர் ருத்திராக்ஷத்தை தொழுது வந்தால்  துன்பம், வேதனை, உலகியல் தடைகள் எல்லாம் அழிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும்  பொங்கும். 3, 4, 5, 6, எண்ணிகையில் வளையமாகக் கோர்த்து அணிவது வழக்கம்.  கழுத்தில் அணியும் மாலைகள் 27, 54, 108 என்ற கணக்கில் இருக்கும். கழுத்தில், கையில் அணியும் ருத்ராக்ஷம்அகுபங்சர் போல் செயல்பட்டு பயன் தருகிறது. நெல்லிக்கனி அளவுள்ள   ருத்திராக்ஷம்   மேன்மையானது. உத்தமமானது   ;இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ;கடலை அளவுடையது அதமம்.  இதைப்பற்றி ஒரு  பாடல் :
“உத்தமமே மலகத் தின்கனிக்கொப் பானகண்டி ;மத்திம மாகும் இலந்தை வன்கனிக்கொப்புஇத்தலத்துள் நீசஞ் சணவித் திணை யென்ன வேநினைக ;பாசவிதம் பாற்ற நினைப் பார். “
இரண்டு முகமுடையதும் மூன்று முகமுடையதும் செபமாலைக்கு உரியது அன்று; பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது ; மற்றனைத்தும் உத்தமம்  என்று  பாடல் சொல்கிறது:  \\இரண்டுமுகக் கண்டிசெப மாலைக் கிசையாதுஇரண்டுடன் ஒன்றும் இசையாது – இரண்டுடனேபத்துமுக மும்பதின் மூன்றும் பழுது ;மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.”வெள்ளை ருத்திராக்ஷம் சிவமணி, மணி, கண்டி எனப்படுகிறது.   கடவுள் மணி, அடையாளமாலை என்றும்  அதற்குப் பெயர். வெள்ளை உருத்திராட்சம் காந்த சக்தியும், மின் சக்தியும் ஒருங்கே உடையது. இதை அணிபவர்களுக்கு இவ்வாற்றல் கிடைக்கப் பெறுவதால் உயிராற்றல் பெருகும். உடல் பொலிவு பெறும். வளம் பெருகும். நோய் அணுகாது. நல்லொழுக்கம் பெருகும். மேலும் குருதியை (இரத்தம்) தூய்மைப்படுத்தும்.

சிவபக்தருக்குக்  ருத்ராக்ஷம்  தானம் செய்வது சிறப்புடையது.  ருத்ராக்ஷம்  அணிந்தவரை பணிவதும் சிவ புண்ணியம்.
அறுபத்து மூன்று நாயன்மார்களூள் ஒருவர் மூர்த்தி நாயனார். அவரைச் சுந்தரர் திருத்தொண்டர்த் தொகையில் ” மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் ” என்று  சுந்தரர் சொல்கிறார். “மும்மை ” என்பது ருத்திராக்ஷம்.  ஜடை, திருநீறு .இந்த மூன்றையே உண்மைப் பொருள் என மதித்து வாழ்ந்தவர் மூர்த்தி நாயனார்.
 ருத்ராக்ஷத்துக்கு   சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic)சக்தி உண்டு.  காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive) ஆகியன உள்ளன என்று  விஞ்ஞானிகள் பரிசோதித்து சொல்கிறார்கள். ருத்ராக்ஷம் அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது. அதிக  மன அழுத்தம்,  கூர்ந்த மனக்குவிவு  ஏற்படும் போது, மூளைக்கும் மூளையிலிருந்து இரத்த ஓட்டம் பீறிட்டும் செல்லும் .  ருத்திராக்ஷங்கள்  மூலம் ஒருவகைச் சாந்தம் ஒரு முகக்குவிவு, கூர்ந்த குவிவு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது. அணிவோருக்கு குறிப்பிடத்தக்க அளவு மனத்திடத்தையும், உள்ளார்ந்த பலத்தையும் அளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான சக்திகளையும் ஒரு நிலைப்படுத்தி, செழிப்பு, ஆக்கம், உள்ளுணர்வுத் திறன், எதிர்கால நிகழ்வுகள் குறித்து ஆய்தல், பாலின ஒத்திசைவு போன்ற சிறப்புப் பண்புகளை தருவன.  திறம்படச் செயலாற்றவும், வெற்றி காணும் வாழ்க்கையை வாழவும் உதவுபவை.  ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து  உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன. நரம்பு மாற்றிகள் (Neuro Transmiters) டொபமைன் (Dopamine), செறொரின் (Serotinin), போன்ற செயல்பாடுகளில் ருத்ராக்ஷம் அணிவதால் ஏற்படும் தாக்கங்களையும் நிலைநாட்ட முடிகிறது. இதனால் ஒருவரது ஆளுமையிலும் மனப்பாங்கிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்கின்றன. அதனால் தான் ரிஷிகள், முனிவர்கள் யோகிகள் வியத்தகு வகையில், மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக  இருந்தவர்கள்.  உடலின் பாதுகாப்பிற்கு எந்த விதத் துணிகளும் அணியாமலேயே இமாலய மலையின் கடுங்குளிரைத் தாங்கினார்கள். இவர்கள் தமது உடலிலுள்ள வெப்பத்தை வெளிக் கொணரும் போது அதைக் கட்டுப்படுத்தி அதன் வழி குளிரைத் தாங்கினார்கள். இது சாதாரணமாக செய்யத்தக்க செயல் அல்ல.
 சோமடைசேஷன் (Somatisation)  எனும்  சீரற்ற சுவாசமும் இரத்தச் சுற்றோட்டமும் கட்டுப்படுத்தப்பட்டவுடன் அதற்கான காரணி அதன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. இந்த அடிபப்டை விதிமுறையைக் கொண்டே எல்லா சைகோ பார்மகோலொஜிகல் (Psycho pharmacological) மருந்துகளும் செயல்படுகின்றன். இரத்தச் சுற்றோட்டம் சாதாரண நிலைக்கு வந்ததும், ஒருவருக்கு மனத்தெளிவு ஏற்படுத்துவதுடன், உடல் மனம் ஆகிய இரண்டின் செயல்பாடுகளிலும் கூர்ந்த நோக்கு உண்டாகின்றது.ருத்துவ குணங்கள்  அறிவோம்.  ஹிந்துக்களுக்கு   கிடைத்த  அரிய  பொக்கிஷம்  ருத்ராக்ஷம்  எனலாம். முன்னோர்கள்  கௌடி சரடு  என்று  கழுத்தில்  கட்டிக்கொள்வார்கள்.  இதை  அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபஆராய்ச்சிக் குறிப்பு. பித்தம், தாகம், விக்கல்   எல்லாம் போகிறது.  கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராக்ஷம்  கை கண்ட  மருந்து.
ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராக்ஷத்தை பொடித்து துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும்.
ஒரு முக ருத்ராக்ஷம் கிடைப்பது ரொம்ப அரிது. சன்யாசிகள் மட்டுமே இதை அணிய வேண்டும்.  ருத்திராக்ஷத்தை கழுத்தில் மாலையாக 32ம், கை மணிக்கட்டில் 12ம், மேல் கையில் 16ம், மார்பில் 108ம் ஆக தரிக்கலாம். ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.
மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.
ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.
ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும்.
எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.
ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.
பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.
பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.
மஹா பெரியவா என்ற  பெயரை நினைக்கும்போதே  அவரது தலை, கழுத்து, கைகளில்  ருத்ராக்ஷம் கண் முன் தெரிகிறது. 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;