NAME AND FAME J K SIVAN

பேரும்  புகழும்  –   நங்கநல்லூர்   J K  SIVAN
மனித குணம் என்ன வென்றால்  தன்னை  யாராவது எப்போதும் புகழ்ந்து கொண்டே  இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது.  சிலர் இதற்கு மேல் ஒருபடி போய்  தாங்களை தாங்களே புகழ்ந்து கொள்பவர்கள்.  தன்னைத்தவிர  வேறு எந்த பேச்சும் பேச மாட்டார்கள்.  வாய் வலிக்காமல், ஓயாமல்  தனது புகழ் பாடும்  ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு.  இதில்  ஏழை பணக்காரன் பாகுபாடு கிடையாது.  படித்தவன் படிக்காதவன் வித்தியாசமும் கிடையாது.  பணக்காரனை  ஏழை,  எஜமானனை வேலைக்காரன்  புகழ்வது, அரசியல் வியாதியை அன்டியவன் புகழ்வது  பிழைப்புக்காக, எச்சில் பணத்துக்காக.
”அய்யா  மாதிரி  உண்டுங்களா?   அய்யா  சொன்னா  சொன்னதுதான்.   ஆணி  அடிச்சது  மாறில்ல   இருக்குது.” ஒருவேளை  சாப்பாடோ,ஐந்து ரூபாயோ  கூட  அண்டியவனை   இப்படி  பேச வைக்கிறது.

”உங்களைபோல  யாருன்னா இப்படி எல்லாம்  செய்வா?  குறிப்பறிந்து  ஒவ்வொண்ணையும்  பண்றதிலே உங்களுக்கு நிகர்  நீங்கதான்.  உங்கண்ணாவும் இருக்காரே….!   புதுப்புடவை  மனைவி வாங்கிக்  கொண்டபோது  வாய் மூடி  பணம்  கொடுத்த  கணவனிடம்  அவளை  இப்படி பேச செய்யும்.

”இந்த ராகத்தை  அண்ணா  இன்னிக்கி   பாடினதுபோல் யாரும்  விஸ்தாரமா அலசி  பிழிஞ்சு  கொடுத்ததில்லை.  முப்பது வருஷத்திலே  நான் கேட்டதே இல்லை.  பக்க வாத்தியம்  அடுத்த  கச்சேரி  சான்சுக்காக வித்வானிடம்  சொல்லும்  வார்த்தையே தவிர  அது  பாட்டை கவனிக் காமல்  வீட்டை  நினைத்துக்கொண்டே  வாசித்ததது  தான்  உண்மை.

”அம்மா  உன்  கை  தாராளம்.  நேத்து கொடுத்தியே  உப்புமா  எங்க ஊட்டிலே  எல்லாமே  நல்லா  துன்னுச்சுங்க. ”

ஊசிப்போன உப்புமாவை  ரோட்டிலேயே கொட்டி  அதைத்   தின்ற நாய்  கோபத்தோடு   துரத்திக்  கடிக்க வந்தபோதும்  அதை மறந்து  வேலைக்காரி  பட்டு  எஜமானியைப்  புகழ்வது  அட்வான்ஸ்  100  ரூபாய்க்காக.

இப்படி  எல்லோரும்  புகழ்ந்து பாடுவதை கேட்பவர்கள்  மனநிலை  என்ன?   சந்தோஷம் என்ற ஒன்று கிடைப்பதற்காக.  உண்மையிலேயே  தான் அப்படிதத்தான்  இருக்கிறோம்    என்ற  எண்ணம்  கொஞ்சம்  கொஞ்சமாக  சேர்ந்து வளர்ந்து  ஒருநாள்  அப்படியே  ஆகவும் வழி உண்டு.  இவர்களை முகஸ்துதி பிரியர்கள்  என்று  அறியலாம்.

இதற்கு  நேர்  மாறாக  ஒன்று  இருக்கிறது.

கடவுளை  ஸ்தோத்ரம் செய்வது  மனம்  மகிழ்ந்து.  பலன்  எதிர்நோக்காது இருப்பது.  ஸ்தோத்ரம் இந்திரன்  சந்திரன் என்றெல்லாம் இயற்கைக்கு  மாறாக  புகழாமல்  என்றும்  உண்மையான தாக  இருக்கவேண்டும்   என்பதற்காகவே இதை  இயற்றிய  மகான்கள்  புராணங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டி  இவற்றை  இயற்றியிருக்கிறார்கள்.  அவற்றை  சொல்லும்போது  அவற்றின்  பொருள்  உணர்ந்து  நாம்  உச்சரிக்கும்போது  நம்  மனம்  இன்பமடைகிறது.  பகவானின்  பாரபட்ச மில்லாத  அன்பு, கருணை,  பாசம்,  பற்று  எல்லாம்  புரிகிறது.  

இர்ண்டறக்கலக்கும்  மன  நிலையை  அளிக்கும்  வண்ணம்  அழுத்தமான  வார்த்தைகளில்  பல  மகான்கள் சரணாகதி அடைந்து பாடியிருக்கிறார்கள்.

”நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ?   நல்லோர்க் கிங்
கீயேன் ஒன்றும் இல்லேன் நான் என்செய் கேனோ?  என்னுடைய
தாயே அனையாய்,   சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ?
சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ?.”

வள்ளலார்  மனம்  கனிந்து கெஞ்சுகிறார்.   இந்த நாய்  துன்பக்கடலில்  விழுந்து  அல்லல் படுவது  உனக்கு  அழகா? நல்லவர் களுக்குநான் ஒன்றுமே  கொடுத்ததில்லையே? என்னிடம்   ஒன்றுமே கொடுக்க இல்லையே?  நீதானே  அம்மா எனக்கு !  கொஞ்சம்  தயவு  காட்டமாட்டாயா?  குழந்தை தான்  நான்  உனக்கு,   என்னை  காப்பாற்றவேண்டாமா?  என்னை  அம்போ என்று நீ விட்டுவிட்டால்  உலகம்  உன்னைப்  பார்த்து  சிரிக்காதா?.  என்ன  பக்தி  பார்த்தீர்களா.?  இது  முகஸ்துதியா?  இல்லை, பரிபூர்ண  பக்தி. நம்பிக்கை.

”தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
ஒறி லாதுநல் தொண்டருக் கருள்வான்
ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.”

அம்மா தான் கிடையாதே.  அப்பா என்று  உன்னை நம்பி  உன் சந்நிதி வந்தேன். நீர்  என்னடாவென்றால்  வாயில்லையோ  என்று சந்தேகப்படும்படி  வாயே திறக்கவில்லை.  உம்மை,   என்  மனத்தை  ஒரு  கோயிலாக்கி  அதற்குள்  பிரதிஷ்டை  பண்ணி வைத்திருக்கிறேனே.  என்னுடைய  குறை உமக்கு தெரியாதோ? .  திருவொற்றியூரில்  உட்கார்ந்து கொண்டு  தொண்டர்களுக்கு  எல்லாம்  அருள்பவரே,   என்னையும்  அவர்களில்  ஒன்றாக  கருதி  அருளவேண்டும்.      வள்ளலாரைப் பற்றி  நிறைய   எழுத ஒரு  விருப்பம்  உள்ளே   இருந்து கொண்டே   இருக்கிறது.  அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைத்தபோது அதை விடவே மாட்டேன்.
பக்தி சிலருக்கு  ஒரு தெய்வத்திடம் மட்டும்  இருக்கலாம்.  இஷ்ட தேவதை  என்று  அந்த  தெய்வத்தை மட்டும் வணங்குவதால் தவறில்லை.  மற்ற  தெய்வங்களை  தாழ்த்தியோ  இகழ்ந்தோ குறை சொல்வது, தூற்றுவது,  மிகப் பெரிய  தவறு.  ஒரு  கிராமத்தில் ஒரு  மிராசுதார்  சிவ பக்தர்.  அவரிடம்  ஒரு  அருமையான   நம்பகமான பணியாள் .  அவனிடம் அவருக்குகொஞ்சம்  அதிருப்தி அவன் பெயரில்   மட்டும்  தான்.
”எலே உன் பேர்  என்னடா?
”பெருமாளுங்க”
”சரி  போ”
வெகுநாள்  அவருக்கு  உள்ளே  இது  உறுத்திக்கொண்டே  இருந்தது. எப்போது பார்த்தாலும் ”பெருமாளு  பெருமாளு;;  என்று  நொடிக் கொருதரம்  அவன்  பெயர் சொல்லிக்கூப்பிடுவது  சங்கடத்தை  அளிக்கவே  ஒரு நாள்  அவனைக் கூப்பிட்டு
”இந்தா பாரு,  நீயி  போய்  உன் பேரை  மாத்திக்கிடணும். புரியுதா?”
 ”புரியில்லீங்களே சாமி”
  ”இதோ பார்ரா,  உன் பேரை  பெருமாளு ன்னு  இல்லாம  வேற   ஏதாவது ஒரு பேர்  மாத்தி  வச்சுக்கோ  எங்கறேன்?”
  ”எதுக்கு  சாமி?”
  ”எனக்கு  அப்போ  உன்னை  இன்னும்  ரொம்ப  பிடிக்கும்  நிறைய  சம்பளம் கொடுக்கணும்னு  ஆசை.”
 ”ஊட்டிலே  கேக்கறேங்க.”
 ”கேக்கறதுன்ன  மாத்திக்கறேன்னு   சொல்லு.”
வீட்டில் கேட்டதுக்கு  ஊரில்  பூசாரி கிட்ட  போய்  சொல்ல சொன்னார்கள்.  பெருமாள்  ஊருக்கு போனான்.  பூசாரி  விஷயம்
கேட்டான்.
”சரி  பேத்தை  மாத்த   நிறைய  செலவாகுமே.  ஊரிலே  சோறு  போடணும் அம்புட்டு பேருக்கும். அவங்க  முன்னாலே கோவில்லே  உனக்கு  பேர்  மாத்திடறேன். கோவிலுக்கு  நூறு  ரூவா. எனக்கு  இருநூறு ரூவா.  படையலுக்கு  ஊர்  சாப்பாட்டுக்கு  ஆயிரம்  ரூவா  கொண்டுவா. ஓடு”
எஜமான் கிட்ட  சொன்னதும்.  அவருக்கு  இது  ஒரு பெரிய  விஷயமாக  படலை.  பணம் கொடுத்தார்.  ஒருவாரம்  கழித்து  பெருமாள்  வந்தான்.
வெகு  ஆர்வமாக   ”என்னடா  பெருமாள்  பேர்  மாத்திட்டியா? ”
”ஆமாம் எஜமான்.”
” என்னடா  பேர்”?”
”பெத்த  பெருமாள்”  அய்யா.”
எஜமான்  அசந்து போய்  உட்கார்ந்தார்.  

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2567

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;