
மஹா பெரியவா மணி மொழி: 3 – நங்கநல்லூர் J K SIVAN
பெரியவா நூறு வயது வாழ்ந்தவர், எத்தனையோ அருள் வாக்குகள் அளித்திருக்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக காதில் விழுந்தது, சேர்த்தது, கேட்டறிந்து, பிடித்து படித்தது என்று பலவற்றில் நாம் நிறைய அனுபவித்திருக்கிறோம். மொத்தமாக யாராலும் அளவு காட்ட முடியாது. என்னால் முடிந்தவரை ஏதோ அங்கே ஒண்ணு இங்கே ஒண்ணு என்று தேடித் பிடிச்சு சொல்வதைப் பார்த்தே, படித்தே அசந்து போகிறோம். யாராலும் மஹா பெரியவா போல் சிந்திக்க முடியாது. தனது நூறு வயதை லோகக்ஷேமத்துக்கு அர்ப்பணித்தவர்.
மஹா பெரியவாளோடு கூடவே இருந்து முடிந்தவரை அவரது அருள் உரைகளை, அதிசயங்களை அனுபவித்தவர்களை, , எந்தரோ மகானுபாவுலு, அந்தரிகி வந்தனமு’ என்று தான் இரு கரம் சிரம் மேல் தூக்கி அடி மனசிலிருந்து ஆழமாக சொல்ல வைக்கிறது. இதோ ஒரு சில மணி மொழிகள் இந்த பதிவிற்காக:
கேள்வி: மஹா பெரியவா, பகவான் எங்கே இருக்கார் என்று தெரிஞ்சுக்க முடியுமா, நாங்கள் தப்பு பண்ணாம இருக்க முடியுமா?.
பதில்: ”ஸ்வாமி இல்லாத இடம் எதுடா? ஸ்வாமி எங்கும் இருக்கிறார். அவரை ஒரு கல்லில் வைப்பானேன் என்று கேட்கலாம். எங்கும் அவர் இருப்பதாகச் சொல்லுகிறோம் என்றாலும் எங்கும் அவர் இருக்கின்றார் என்ற நினைவு மனதில் தங்குவது இல்லையே. ஸ்வாமி எங்கும் இருக்கிறார், நாம் சொல்வதை கேட்கிறார்,பண்ணுவதைப் பார்க்கிறார் என்ற எண்ணம் மனதில் இருந்து விட்டால் எவனாவது பொய் சொல்லுவானா? கெட்ட காரியம் பண்ணுவானா செய்வானா? எங்கும் அவர் இருப்பது உண்மையே, அவர் இருப்பது மாத்திரம் நமக்குப் போதாது. அவருடைய அருளைப்பெற வேண்டும். அதற்கு அவர் பற்றிய எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்கணும்.”
கே: கோவில்கள் அதற்கு அவசியமா?”
ப: ‘சூர்ய கிரணம் இருக்கிறது. ஒவ்வொரு கிரணமும் நெருப்பே. ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் அதில் தீப்பற்றிக் கொள்கிறது. பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது. அப்படியே எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய அவன் சக்தி ஒருமித்த கர்ப்ப கரஹம், மூலஸ்தானம், கோவிலில் அவசியமாக இருக்கிறது.”
கே: ”எல்லோரும் இதை புரிந்து கொண்டு பூரணத்வம் பெற முடியுமா?”
ப; ‘கோடிகோடி ஜனங்கள் மக்கள் வீணாகப் போனாலும் ஒருவன் பூர்ணத்வம் அடைந்து விட்டால் அதுதான் நம்முடைய மதத்திற்கு ப்ரயோஜனம். அவன் ஒருவனுக்கு கிடைத்த அனுக்ரஹத்தாலேயே உலகம் க்ஷேமமடையும். அப்படிப்பட்ட ஒருவன் உண்டாவதற்காகத்தான் நாம் பிரசாரங்களைச் செய்கிறோம். உபன்யாசம் நிகழ்த்திடுகிறோம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



