

பணமும் மனமும் – நங்கநல்லூர் ஜே .கே. சிவன்
நம் எல்லோரிடமும் மனமும் இருக்கிறது பணமும் இருக்கிறது. மனம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அளவற்ற சக்தியோடு உள்ளது. பணம் எல்லோரிடமும் ஒரே அளவு இல்லை. அன்றாடங்காய்ச்சிகளில் இருந்து அரண்மனை சுகவாசம் அனுபவிப்பார் வரை ஒவ்வொருவருக்குள்ளும் பண விஷயத்தில் அநேக வித்யாசம் உள்ளது. எது சக்தி வாய்ந்தது?
பணமா? மனமா? . என்னைப் பொறுத்தவரை மனம் தான் அதிக சக்தி வாய்ந்தது. முதன்மையானது. ஆற்றல் மிகுந்தது.
ஏன் தெரியுமா? பணத்தை உருவாக்குவதும், அதனைப் பாதுகாப்பதும், நல்வழியில் பயன்படுத்துவதும் மனித மனமே.
நடைமுறையில் அணுகினால், இந்த உலகில் பணம் இல்லாமல் மன அமைதியைத் தக்க வைத்துக் கொள்வது கடினமாக இருக்கிறதே!. ஓஹோ பணமும் மனமும் பிரிக்க முடியாதவையா? இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையா? இந்த ரெண்டு சக்திகளின் வலிமையை கொஞ்சம் அலசுவோமா?
அன்றாட வாழ்க்கையில் பணம் ஒரு புறக் கருவியாக அளப்பரிய அதிகாரத்தைக் கொண்டுள்ளது:
நம்முடைய அடிப்படைத் தேவைகளும் பாதுகாப்புக்கும், அதாவது, உணவு, உடை, இருப்பிடம், தரமான கல்வி மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளைப் பெறுவதற்குப் பணம் அவசியம் தேவைப்படுகிறது. அவசர காலங்களில் ஒரு உயிரைக் காப்பாற்றப் பணம் நேரடியாக உதவுகிறது. பணம் தான் ஒருவனுக்கு சமூக அந்தஸ்தும் அதிகாரமும் பெற்று தருகிறது. ல் ஒரு மனிதனின் செல்வாக்கையும், சமூக மரியாதையையும் தீர்மானிக்கும் அளவுகோலாகப் பணம் உள்ளது. பணம் இருந்தால் மட்டுமே பல காரியங்களை எளிதில் சாதிக்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது.
“பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்” என்று ஒரு பழமொழி தெரியுமல்லவா? வறுமையில் வாடும் ஒருவருக்கு ஆன்மீகமோ, தத்துவமோ, அருகில் உட்கார்ந்து வேத தத்துவமோ, உபநிஷடோ, கீதையின் அற்புதத்தையோ சொன்னால் காதில் ஏறுமா? அடித்து விரட்டுவான். அடிப்படைப் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும்போதுதான் மனதால் நிம்மதியாகச் சிந்திக்க முடியும். நிறைய பேர் அலமாரியில் அடுக்கடுக்காக புத்தகங்களை நிரப்பி ”நான் ரிட்டையர் ஆனபின்னால் விடாமல் படிப்பேன்” என்று கனவு காண்கிறார்கள். அந்த ”புத்தகம் படிக்கும் ஒய்வு” ஒருநாளும் எவருக்கும் வந்ததில்லை.
இங்குதான் மனதின் வலிமை பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது. பணம் என்பது வெறும் காகிதம் அல்லது எண்கள் மட்டுமே; அதற்கு உயிரும் மதிப்பும் கொடுப்பது மனித மனமே:
மனம் தான் பணத்தை உருவாக்கும் மூலதனம்: உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் கூடத் தங்கள் செல்வத்தை இழந்த பின், தங்கள் அறிவாலும், மன உறுதியாலும் மீண்டும் அதை உருவாக்கியுள்ளனர். பணம் தீர்ந்து போகலாம்; ஆனால் ஆற்றல் மிக்க மனம் எப்போதும் புதிய செல்வத்தை உருவாக்கும். அதன் சக்தி அளவற்றது. வயதுக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லாதது.
மனதால் மட்டுமே மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தர இயலும். பணத்தால் விலை உயர்ந்த படுக்கையை வாங்க முடியும், ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது. பணத்தால் மருந்துகளை வாங்க முடியும், ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. மன அமைதியும், திருப்தியும் (போதும் என்ற மனம்) மனதின் பக்குவத்தால் மட்டுமே கிடைக்கும்.
பணம் வேகமாக ஓடும் குதிரை. மனம் அதை தவறான பாதையில் ஓடாமல் தடுத்து கட்டுப்படுத்தும் கடிவாளம் மனம் தான். பக்குவப்படாத மனதிடம் சேரும் அளவற்ற பணம், ஆணவம், போதை, மற்றும் அழிவிற்கே வழிவகுக்கும் நிறைய யு ட்யூபில் அற்பர்களின் அறிவிலிகளின் செயல்களைப் படமாக பார்க்கிறோமே.
பணத்தை அறவழியில் செலவிடவும், பிறருக்கு உதவி மகிழவும் விசாலமான மனம் தேவை. பகவான் கிருஷ்ணனிடம் அதைதான் விடாமல் வேண்டுகிறேன்.
பணம் அளவுக்குட்பட்டது. வெளிப்புற கருவி (External Tool); சாஸ்வதமில்லாதது. நிலையற்றது.
மனம் அளவற்ற அகச் சக்தி (Internal Power); அழிவற்றது
பணம் மனிதனின் உழைப்பாலும் எண்ணத்தாலும் உருவாகிறது.
மனம் எண்ணங்கள் உருவாக்கி அதன் பலனாக ஞானம் மற்றும் அனுபவத்தால் பண்படுகிறது.
பணத்தால் அதிகாரம் பொருட்கள் வசதிகள் சிலவற்றை பெறமுடியும்.வாங்க முடியும்.
மனத்தால் மட்டுமே உணர்வுகளையும், மகிழ்ச்சியையும், விதியையும் தீர்மானிக்க முடியும்.
மனத்தால் மட்டுமே உணர்வுகளையும், மகிழ்ச்சியையும், விதியையும் தீர்மானிக்க முடியும்.
பணம் இருந்தால் ஆபத்து.பணம் மட்டும் இருந்தால் பேராசையும் பயமும் வரலாம்.
மனம் வலிமை பெற்றால் உறுதியாக இருந்தால் எத்தகைய சூழ்நிலையையும் ஒருவனால் அமைதியாக வெல்ல முடியும்.
மனம் எஜமானன். பணம் வேலைக்காரன்.
பணத்தை எஜமானனாக்கியவன் எவனும் வாழ்ந்து சுகப்பட்டதில்லை.
மனம் கட்டுப்பாட்டில் இருந்தால் அது தான் எஜமான்; பணம் என்பது மிகச் சிறந்த பணியாளன்.
பணம் மனதின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அது வாழ்க்கையை அழகாக்கும். அப்படி இல்லாமல் மனம் பணத்திற்கு அடிமையாகிவிட்டால், எவ்வளவு கோடி இருந்தாலும் நிம்மதி இருக்காது.
“பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை”என்று வள்ளுவர் சொன்னாலும், முழுக்க முழுக்க “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” மற்றும் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்று மனதின் தூய்மைக்கும் வலிமைக்குமே முதலிடம் கொடுத்துள்ளார்.வாழ்க்கை என்ற வண்டி ஓட பணம் என்ற சக்கரம் அவசியம்; ஆனால் அந்த வண்டியைச் சரியான திசையில் செலுத்தும் சாரதி (கடிவாளம்) மனம் மட்டுமே. எனவே, பணத்தை விட மனமே பேராற்றல் கொண்டது.
இது கவனத்தில் இருந்தால், தேவைக்கான அளவு பணம் மட்டும் நம்மிடம் பணம் இருந்தால் நாம் பாக்கியசாலிகள்.மனது இடம் கொடுக்கும் என்பதால் பகவத் கீதையும் புரியும், பந்துவராளி ராகமும் ரசிக்க முடியும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




