சத்ரபதி சிவாஜி கதை 

சத்ரபதி சிவாஜி கதை  –  நங்கநல்லூர்   ஜே .கே. சிவன் 
தாதாஜி  கொண்டதேவ் மரணத்திற்கு பிறகு  மராத்திய வீரர்களின் எதிர்காலம் வீர இளைஞன் சிவாஜியை நம்பி இருந்தது. அவர் தாயார்  ஜீஜா பாயின் தேச பக்தி, பவானி தேவியின் அருள் ரெண்டுமே  சிவாஜியின் வளர்ச்சிக்கு காரணம். பலம் வாய்ந்த அதிகாரிகளாக  தேஷ்முக்  என்பவர்கள் செல்வாக்கு கொண்டவர்களாக இருந்த காலம் அது. சிவாஜியின் மீது அவர்களுக்கு ஒரு அன்பும் பாசமும் ஏற்பட்டது கடவுள் செயல் தான். பல்வேறு ஊர்களைச் சேர்ந்த வருவாய் நிர்வாக அதிகாரிகள், தங்களுடைய அலுவல் தொடர்பாகப் பூனாவுக்கு வரும்போதெல்லாம், சிவாஜி அவர்களுடன் பல மணி நேரம் தனியாகக் கலந்துரையாடுவார். தாதாஜி கொண்டதேவரின் ஊக்கமும் ஆதரவும் அவருக்குத் துணையாக இருந்ததால், அந்த விசுவாசமிக்க நிர்வாகியின் கீழ் பணியாற்றிய உதவியாளர்கள் அனைவரையும் சிவாஜியால் தம் பக்கம் ஈர்க்க முடிந்தது.

தேஷ்முக்குகள் முன் தம்முடைய திட்டங்களை எடுத்துரைத்து, அவற்றைப் பற்றிய அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்து, தமது முயற்சிக்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுப்பார். அவருடைய பேச்சாற்றலும் பணிவான அணுகுமுறையும் அவர்களுடைய மனங்களில் அத்தகைய ஈர்ப்பை ஏற்படுத்தின. அதன் விளைவாக, ஒவ்வொரு சந்திப்பும் நீடித்த நட்புறவுக்கான ஒப்பந்தத்தில் முடிவடைந்தது.

சிவாஜி தமது தந்தைக்குச் சொந்தமான ஜாகீர் நிலப்பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காகப் பயணம் மேற்கொள்ளும்போதும், அங்கிருந்த பல்வேறு தேஷ்முக்குகளைச் சந்தித்து அவர்களைத் தமது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடமாட்டார்.

அதேபோல், பூனாவுக்கு   வந்த  சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மராட்டியப் பிரபுக்களும் செல்வாக்கு மிக்கவர்களும் மிகுந்த ஆடம்பரத்துடனும் சிறப்புடனும் உபசரிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் அனைவரும் சிவாஜியின் நெருங்கிய நண்பர்களாகவும் ஆதரவாளர்களாகவும் மாறி ஊர் திரும்பினர்.
   
சிவாஜி வயதில் இளையவர் என்றும், அரசியல் மற்றும் நிர்வாக அனுபவத்தில் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்றாலும்  துணிச்சலும்  ஆர்வமும்  கொண்டவராக   திட்டங்களை   சமர்ப்பித்தபோது ஒப்புதல் அளித்தனர்.


அந்த இளம் வீரன்  சிவாஜியிடம் ஒரு  அபூர்வமான மனம்கவரும் ஆற்றல், காந்த சக்தி  இருந்தது. அவருடைய அன்பான அணுகுமுறை, சமயப்பற்று, மத உணர்வு, முகமதியர் ஆட்சியின் மீதான அவரது வெறுப்பில் வெளிப்பட்ட உண்மையான நேர்மை ஆகியவை, தன்னலமே பெரிதெனக் கருதியவர்களைக்கூட அவரது ஆர்வத்தில் பங்குகொள்ளச் செய்தன.

தமது தந்தை  ஷாஹாஜியின் புகழையும் பெருமையையும்  விஞ்ச வேண்டும் என்ற தீவிர விருப்பத்துடன் இருந்த சிவாஜி, அப்பா  ஷாஹாஜி  என்னென்ன  தவறுகள் செய்தார், என்ன குறை இருந்தது  என்றெல்லாம்  ஆராய்ந்தார். தந்தையின் நிர்வாக மற்றும் இராணுவ முறைகளை  திருத்தினார்.  நடைமுறையில் இந்து நிர்வாகத்தின் கீழ் மக்கள் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் வாழ வழி வகுத்தார்.   பீஜப்பூர்  சுல்தானின் நேரடி ஆட்சிக்குள் செல்ல வேண்டும் மாற்றவேண்டும் கிய சிவாஜி, இந்து அரசாட்சியை மீண்டும் நிலைநாட்ட  வேண்டும்  எனும் லக்ஷியம்  கொண்டவராக இயங்கியதை  சிவாஜியின் ஒவ்வொரு  நடவடிக்கையிலும் தெரிந்தது. அதற்கான திறமை, தைர்யம், ஆற்றல்  உற்சாகம் எல்லாமே பவானி அம்மன் அருளால் சிவாஜிக்கு இருந்தது.மராத்தியர்கள் சிவாஜியை வரவேற்றனர்.
 
கண் குத்தி பாம்பாக மகாராஷ்டிராவின்  மலைக்  கோட்டைகள் , ரகசியவழிகள், அவற்றின் பாது காப்பு, எல்லாவற்றையும் நன்றாக  ஆராய்ந்து எப்படி   உபயோகிப்பது என திட்டங்கள் தீட்டினார்.  ஒரு நம்பகமான பலம் மிகுந்த வீரர் படை  தயாராயிற்று. இனி  முகலாயர்களை  போரில்  சந்தித்து தாக்குவது தான் பாக்கி. சுதந்திர ஹிந்து ராஜ்ஜியம் ரெடியாக போகிறது.  மாவாலி ,  பாராமதி, இந்தபூர்  ஜில்லாக்கள்  அதிகாரம் மிக்க  தேஷ்முக் கள்  வசமிருந்ததை மெதுவாக  மீட்டு தனது ஜாகிர்களுடன் இணைத்து விட்டார். இனி உள் குத்து ஒன்று மில்லை. வெளியில் முகலாய எதிரிகள் மட்டும் தான்.   பீஜப்பூர் சுல்தான் எதிர் நோக்கி இருக்கும் ஒரு  மகா சக்தியாக உருவான  மஹாராஷ்ட்ர  சுதந்திர படையை  அறியவில்லை. அதன் சக்தியை உணரவில்லை. 
கர்நாடகத்தில்  அப்சல்கான் பலமிக்க  முகலாய எதிரி..தளபதி.. .அவன் அசந்துள்ள நேரம் எது? சரியான திட்டமிட
வேண்டும்.   பீஜப்பூர்  சுல்தான் ராஜ்யத்தில்  நிறைய  உட்பூசல் இருந்தது நல்ல சமயம் தான். 
 
​ஜாகிர்கள்  தாதாஜி  கொண்டதேவ் அதிகாரத்தில் இருந்தவரை சிவாஜியால் சுதந்திரமாக  செயல் பட முடியவில்லை. தாதாஜி முகலாயருக்கு அடங்கி இருப்பதை  தான் விரும்பியவர். அப்பா ஷாஹாஜியும் ஒருவிதத்தில் அவ்வாறே அடிமையாக  பீஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றியவர்… இப்போது  நிலைமை வேறு.  சுல்தானின் ஆட்சியிலேயே  சில ஜாகிர் அதிகாரிகள் முகலாயர்களுக்கு எதிரியாக இருந்தவர்கள். வெளியே காட்டிக்கொள்ளாமல் செயல் பட்டவர்கள் இப்போது சிவாஜியின் ஆதரவாளர்கள்!
 
நாங்கள்  பீஜப்பூர் சுல்தானின் ஆதரவாளர்கள்.  சில பாழடைந்த மேற்கு கடற்கரை பகுதி மலைகளை, கொட்டைகளை சிவாஜி வசம் ஒப்புவித்து அவரை பராமரித்து  பாதுகாத்தால்  முக்காளர்களின் எதிர்ப்பை பீஜாப்பூர் சுல்தான் எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என்று அந்த கோட்டைகளை  சீர்திருத்தி பாதுக்காக்க உரிமை  கோரி  பீஜப்பூர் சுல்தானின் நண்பனாக ஆதரவாளனாக கடிதம் எழுதி  தூதுவர்கள் தளபதிகளை அனுப்பினார் சிவாஜி. அவர் எதிர்பார்த்தபடி  அவரை எதிரியாக கருதாத சுல்தான் அந்த கோட்டை பகுதிகளை சிவாஜியின் அதிகாரத்துக்குள்ளாக்கி  அங்கீகரித்தல். அப்படிதான் சில பலமான கோட்டைகள்  சிவாஜி வசம் வந்து பலப்படுத்தப்பட்டன.சுதந்திர படை இன்னும் பலம் பெற்றது…
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;