
சாணக்ய நீதி – நங்கநல்லூர் J K SIVAN
ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பே ஒருவன் இரவும் பகலும் நிறைய சிந்தனை செய்திருக்கிறான். உலகத்தின் மிகச் சிறந்த புத்திசாலிகளில், கெட்டிக்கார்களில் முதன்மையானவன். ஆங்கிலம் என்பது தமிழ்,தெலுங்கு. ஹிந்தியைப் போல் ஒரு மொழி. அது தெரிந்தால் தான் ஒருவன் படித்தவன், கெட்டிக்காரன், அறிவாளி என்று எடைபோடுவது அபத்தம். மடத்தனம். நான் சொல்லும் மனிதன் ஒரு சிரஞ்சிவி. ஆயிரமாயிரம் வருஷங்களுக்கப்புறமும் அவன் பேர் அநேகர் மனதில் நிறைந்திருக்கிறதே. அவனைப் பாராட்டுகிறார்களே .
கௌடில்யன், விஷ்ணுகுப்தன், சாணக்யன் என்று அவனுக்குப் பெயர். பல விஷயங்களை, உண்மைகளை, அவன் உள்வாங்கி அவை அவன் மனதில் ஓடி இருப்பதால் அதை எல்லாம் ஆய்ந்து ஆராய்ந்து எழுதிவைத்திருக்கிறான் நமக்காக. பல சமாச்சாரங்கள் இன்றும் ‘பலே பலே’ ‘ சபாஷ் கௌடில்யா, சாணக்யா’ என பாராட்டி கை தட்ட வைக்கிறது.ஒரு சாதாரண தர்ப்பைப் புல் பிடிக்கும் பிராமணன் ஒருவன் ஒரு மஹா சாம்ராஜ்யத்தையே உருவாக்கி தெற்கு ஆசியா முழுதும் மௌர்ய சாம்ராஜ்யம் பறந்து விரிந்து சந்திரகுப்தனின் ஆட்சியில் பொற்காலமாக உருவாக்கியவன்.அவனது நூல்களில் அர்த்தசாஸ்திரம், சாணக்ய நீதி ரெண்டும் இரு கண்கள் போன்றவை. ஒன்று அரசாள தேவை, மற்றொன்று மக்களின் குணத்தை மேம்படுத்த. நீதி நியாயம், பக்தி, பண்பாடு, ஒழுக்கம், உண்மை, அன்பு, பரோபகாரம் பற்றியவை. அவை தானே நமக்கு அவசியம். அரசியலில் இல்லாதவை அல்லவா இவை?
எனக்கு அரசியல் வேண்டாம். சாணக்ய நீதி பற்றியே சொல்ல பிடிக்கும்.ஏனென்றால் கௌடில்யன் எனும் சாணக்கியன் போன்ற சாமர்த்ய சாலி, ராஜதந்திரி, தீர்க்கதரிசி, வேத சாஸ்த்ர நிபுண னை பாரத தேசம் அவனுக்குப் பிறகு இன்னும் காணவில்லை.
சாணக்கியன் சந்திரகுப்தனுக்காக ஸ்தாபித்தது ஹிந்து சனாதன மௌர்ய சாம்ராஜ்ய தர்ம ஆட்சி. சாணக்கியன் ஒரு தீர்க்க தரிசி, ராஜ தந்திரி, ராஜகுரு, இப்படி ஒருத்தன் இன்று வரை இல்லையே என மூக்கின் மேல் விரல் வைத்து அதிசயிக்க வைப்பவன் .
தனது பெயரை அழியாப்புகழ் மிக்கதாக நிலைநாட்ட காரணமாக இருந்தது சாணக்யனின் விசேஷ குணாதிசயம், புத்தி கூர்மை, நாணயம், நேர்மை , நிர்வாக திறமை, வேத சாஸ்த்ர ஞானம், பக்தி. நித்ய கர்ம அனுஷ்டானம். அவனது நுட்பமான சொற்கள் விலை மதிப்பற்றவை. என்றும் உபயோகப்படுபவை. மறக்காமல் நாம் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது அவனது நீதி சாஸ்திரம்படித்து ரசிக்க வேண்டும், புரிந்து கொண்டு பயன் பெறவேண்டும். அப்புறம் நேரம் இருந்தால் தான் அர்த்தசாஸ்திரம். அது நாம் ஒருவேளை, ராஜாவாகும்போது, அல்லது ஏதாவது ஒரு மந்திரியாகும்போது உபயோகப்படுத்தும். இப்போதுள்ள அரசியல் வியாதிகளுக்கு அவன் பெயர் கூட தெரியுமோ தெரியாதோ, நீதி சாஸ்திரம் அர்த்தசாஸ்திரம் எப்படி தெரியப்போகிறது .
ஒன்றுமே தெரியாமல் வளர்ந்த பெரிசுகள் பலரில் , ஜே .கே. சிவன் என பெயர் கொண்ட நானும் ஒருவன். சில விஷயங்களை மட்டுமே தெரிந்து கொண்டு அதைச் சொல்லும் எனக்கே எவ்வளவோ நண்பர்கள் இருக்கிறார்களே, கௌடில்யன்,சாணக்யன் மாதிரி ஒரு சிறந்த கல்விமானைப் பற்றி கேட்கவேண்டுமா, சொல்ல வேண்டுமா, எழுத வேண்டுமா? அதனால் தான் அவன் சிரஞ்சீவி.
பசித்த போது உணவூட்டும் அம்மா மாதிரி கல்வி. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்வது தான் கல்வி.ஞானம். அதைப் புகட்டுபவர்களில் முதல்வனாக எனக்கு தோன்றுகிறான் சாணக்யன் .
சாணக்கிய நீதி, அந்த மஹா புத்திசாலி, உடம்பு பூரா மூளை கொண்ட , ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு அபூர்வ மனிதனின் எண்ணத்தில் உதித்த அற்புத உபதேசம். 17 அத்யாயங்கள் கொண்டது. 350-400 ஸ்லோகங்களை கொண்ட அற்புத நூல். அதை உங்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக சமர்ப்பிக்கவேண்டுமென்று எனக்கு ஒரு ஆசை. எவ்வளவு பேர் அதை விரும்பி படிப்பீர்கள் என்று தெரியாது. ஓரிருவர் படித்து பயனடைந்தால் கூட அந்த புண்யத்தால் நான் நரகத்திலிருந்து தப்பிவிடுவேன். பகவத் கீதையே ஒரே ஒரு ஆளுக்காக தானே அவன் கேட்காமலேயே புகட்டப்பட்டது.
உங்களில் எத்தனை பேருக்கு சாணக்யன் பிடிக்கிறான் என்று யாரும் சொல்லவே யில்லையே?. எனக்காக சொல்லவேண்டாம். உங்களுக்கு சாணக்யனின் வார்த்தைகள் பிடித்திருந்தால் படித்த பிறகு சொல்லவும்.
சாணக்கியன் என்ற கௌடில்யன் ஒரு வேத பிராம ணன். அதி புத்திசாலி, ராஜ தந்திரி, இந்திய தேசத்தை ஆண்ட மிகப்பெரிய சாம்ராஜ்யம், மௌரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவன். குப்தர்களின் பொற்காலத்தை தந்தவன். ஒரு சாதாரணனை சக்ரவர்த்தியாக்கி அவன் மூலம் அப்போதே வெளிநாட்டிலிருந்து ஆக்கிரமிக்க வந்த அலெக்சாண்டரின் படையை தடுத்து முறியடித்து அனுப்பியவன்.
சாணக்யனின் அர்த்த சாஸ்திரம் புஸ்தகம் படித்திருக்கிறேன். இவ்வளவு சிந்தனையா? இத்தனை ராஜ தந்திரமா? சாஸ்த்ர ஞானமா? என்று மூக்கின் மேல் விரல் வைக்க பண்ணியவன் அந்த வைதிக ப்ராமணன். எத்தனை எதிர்ப்புகள் அவருக்கு. கடைசியில் எதிரிகள் சூழ்ச்சியால் உயிர் துறந்த ஞானி. நமது ராஜாஜியை சாணக்யர் என்பார்கள். அடுத்தது துக்ளக் சோ வும் கூட ஒரு ராஜதந்திரி, சாணக்ய மூளை உள்ளவர், என அழைக்கப் பட்டவர். ஆனால் இவர்களை சாணக்யனோடு ஒப்பிடு\வது சாணக்யனுக்கு அவமரியாதை செய்வதாகும்.
1. न चोरहार्यं न च राजहार्यं न भ्रातृभाज्यं न च भारकारि । व्यये कृते वर्धत एव नित्यं विद्याधनं सर्वधनप्रधानम् ॥
Na chorahāryaṃ na ca rājahāryaṃ,na bhrātṛbhājyaṃ na ca bhārakāri. Vyaye kṛte vardhata eva nityaṃ, vidyādhanaṃ sarvadhanapradhānam.
ந சோரஹார்யம் ந ச ராஜஹார்யம், ந ப்ராத்ருபாஜ்யம் ந ச பாரகாரி. வ்யயே க்ருதே வர்தத ஏவ நித்யம்,வித்யாதனம் ஸர்வதனப்ரதானம்.கல்விச் செல்வத்தை எந்த திருடனாலும் திருட முடியாது; ராஜாவால் வரி போட்டு பிடுங்க முடியாது.
2 विद्वत्त्वं च नृपत्वं च नैव तुल्यं कदाचन । स्वदेशे पूज्यते राजा विद्वान् सर्वत्र पूज्यते ॥
Vidyattvaṃ ca nṛpatvaṃ ca naiva tulyaṃ kadācana. Svadeśe pūjyate rājā vidvān sarvatra pūjyate.
வித்வத்த்வம் ச ந்ருபத்த்வம் ச நைவ துல்யம் கதாசன. ஸ்வதேஶே பூஜ்யதே ராஜா, வித்வான் ஸர்வத்ர பூஜ்யதே.புலமையும் அரச பதவியும் ஒருபோதும் சமமானவை அல்ல. அரசன் தன் நாட்டில் மதிக்கப்படுகிறான்; ஆனால் அறிவுடையவன் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறான். கற்றோர்க்கு சென்றவிடமெலாம் சிறப்பு. ராஜாவுக்கு அவன் நாட்டில் தான் கொஞ்சமாவது மதிப்பு. மற்ற இடத்தில் அவனது அறியாமையால் செருப்பு. பதவியால் கிடைக்கும்
மரியாதையைவிட அறிவாலும் பண்பாலும் கிடைக்கும் மரியாதை நீடித்தது.
3. आचारः परमो धर्मः श्रुतिः स्मृतिरुदाहृता । तस्मादाचारवान् नित्यं भवेद् धर्मपरायणः ॥
Ācāraḥ paramo dharmaḥ, śrutiḥ smṛtir udāhṛtā.Tasmād ācāravān nityaṃ bhaved dharmaparāyaṇaḥ.
ஆசாரः பரமோ தர்மः, ஶ்ருதிஃ ஸ்ம்ருதிருதாஹ்ருதா. தஸ்மாத் ஆசாரவான் நித்யம் பவேத் தர்மபராயணः.
நல்லொழுக்கம் உயர்ந்த தர்மமாக கருதப்படுகிறது; வேதங்களும் ஸ்மிருதிகளும் அதனை எடுத்துரைக்கின்றன. ஆகவே, ஒருவர் எப்போதும் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து அறவழியைப் பின்பற்றி மற்றவர்க்கும் அது உபயோகப்படும்படி வாழவேண்டும். நாம் அறிந்த நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்துவதே உண்மையான பண்பு.
प्रणम्य शिरसा विष्णुं त्रैलोक्याधिपतिं प्रभुम् । नानाशास्त्रोद्धृतं वक्ष्ये राजनीतिसमुच्चयम् ॥
Praṇamya śirasā viṣṇuṃ trailokyādhipatiṃ prabhum, nānāśāstroddhṛtaṃ vakṣye rājanītisamuccayam.
ப்ரணம்ய ஶிரஸா விஷ்ணும் த்ரைலோக்யாதிபதிம் ப்ரபும், நாநாஶாஸ்த்ரோத்த்ரு
अधीत्येदं यथाशास्त्रं नरो जानाति सत्तमः । धर्मोपदेशविख्यातं कार्याकार्यं शुभाशुभम् ॥
Adhītyedaṃ yathāśāstraṃ naro jānāti sattamaḥ, dharmopadeśavikhyāta
அதீத்யேதம் யதாஶாஸ்த்ரம் நரோ ஜாநாதி ஸத்தமः,தர்மோபதேஶவிக்யாதம் கார்யாகார்யம் ஶுபாஶுபம்.இந்த நூலை முறைப்படி கற்றறியும் சிறந்த மனிதர், அறநெறிகளின் அடிப்படையில் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எது நன்மை, எது தீமை என்பதைப் புரிந்துகொள்கிறார். இந்த ஞானம் அவர் வாழ்க்கையை மேம்படுத்தும்.
அறிவு என்பது தகவல்களைச் சேகரிப்பது மட்டுமல்ல; சரியான முடிவுகளை எடுக்க உதவுவதும் ஆகும். பிறர்க்கும் உபயோகமாகும்.
Tad ahaṃ sampravakṣyāmi lokānāṃ hitakāmyayā, yena vijñātamātreṇa sarvajñātvaṃ prapadyate.
ததஹம் ஸம்ப்ரவக்ஷ்யாமி லோகாநாம் ஹிதகாம்யயா, யேந விஜ்ஞாதமாத்ரேண ஸர்வஜ்ஞாத்வம் ப்ரபத்யதே.மக்களின் நன்மையைக் கருதி இந்த நீதிகளை நான் விளக்குகிறேன். அவற்றை அறிந்துகொள்வதன் மூலம் மனிதன் பல விஷயங்களைப் பற்றிய பரந்த புரிதலைப் பெறுகிறான். வாழ்க்கையில் எவ்வாறு சிந்திக்க வேண்டும், மனிதர்களை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும், நன்மை தீமைகளை எவ்வாறு பகுத்தறிய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலே இந்த நூலின் நோக்கம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



