
‘நான் இருக்கேன் உங்கள் வாரிசு” — நங்கநல்லூர் ஜே . கே. சிவன்
நென்மேலி லட்சுமி நாராயண ஸ்ரார்த்த பெருமாள்
நண்பர்களோடு நான் சென்ற ஒரு யாத்திரையில் தரிசித்த பெருமாள்.
தமிழகத்தின் ஆன்மிக மரபில், முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய ஸ்ராத்தம், திதி, பித்ரு கடன் மற்றும் பித்ருக்களுக்கு மோக்ஷம் வேண்டுதல் ஆகியவற்றுடன் தனித்துவமாக சம்பந்தப்பட்ட ஸ்தலம் இது.
ரொம்ப பெரிய கோவில் இல்லை. இங்குள்ள பெருமாளுக்கு ‘ஸ்ரார்த்த பெருமாள், ஸ்ரார்த்த சம்ரக்ஷணப் பெருமாள்’ என்றுபெயர். பெற்றோர் முன்னோர்களுக்கு ஸ்ராத்த கடமைகளைச் செய்ய இயலாதவர்கள், தங்களுடைய பித்ருக்களை நினைத்து வழிபட விரும்புபவர்களுக்கு ரொம்ப சௌகரியமான ஆலயம்.
எப்போதுமே நாம் சில புராணங்களில் பெறுகின்ற விஷயங்கள் கல்வெட்டுகளில் இருக்காது. அது வேறு சில விஷயங்களை சொல்லும்.
நென்மேலி எனும் ஊர் செங்கல்பட்டு அருகில், தமிழ்நாட்டில் தான் உள்ளது. ரெண்டு மூணு மணிநேரத்தில் சென்று விடலாம். செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் போகும் வழியில் நென்மேலி வரும்.5–7 கி.மீ. தான்
எத்தனையோ பேருக்கு பிள்ளைகள் இல்லை. வாரிசுகள் இல்லை. யார் அவர்களுக்கு பித்ரு பிண்டம் வழங்குவார்கள்? கவலை வேண்டாம். நான் இருக்கிறேன் அவர்களுக்கு வாரிசாக, நான் ஸ்ராத்தம் பண்ணுகிறேன் அவர்களுக்கு என்றுமுன்வந்த பெருமாள் இவர் வாரிசற்ற பித்ருக்களுக்கு புத்ரன் ஸ்ராத்த சம் ரக்ஷண பெருமாள்.
ஒருகாலத்தில் இந்த ஸ்தலம் “புண்டரிக நல்லூர்”, “பிண்டம் வைத்த நல்லூர்” என்ற பெயர்களோடு இருந்தது.
பத்மாசனத்தில் வீற்றிருந்த பெருமாளாக அருள் பாலிக்கிறார். உற்சவர் “சிராத்த சம்ரட்சண நாராயணர்” மூலவர் சந்நிதியில் ரொம்ப சக்திவாய்ந்த மஹாலக்ஷ்மி சாளக்ராமம் பூஜிக்கப்படுகிறது.
பத்மாசனத்தில் வீற்றிருந்த பெருமாளாக அருள் பாலிக்கிறார். உற்சவர் “சிராத்த சம்ரட்சண நாராயணர்” மூலவர் சந்நிதியில் ரொம்ப சக்திவாய்ந்த மஹாலக்ஷ்மி சாளக்ராமம் பூஜிக்கப்படுகிறது.
நமது நாட்டை யார் யாரோ ஆண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் முஸ்லிம்கள் ஆட்சியில் ஆற்காட் நவாப் தான் ராஜா. அவன் காலத்தில் இங்கே யக்ஞ நாராயண சர்மா என்ற ஒருவர் தனது பத்னி சரஸவாணியோடு இங்கே வாழ் ரெண்டு பேருமே பெருமாள் பக்தர்கள். நவாபுக்கு செலுத்தவேண்டிய கப்பம், வரிப்பணம், கோவிலுக்கு செலவாகி விட்டது. நவாப் சும்மா விடுவானா. இவர்களை பிடித்து சிறையில் தள்ளி சித்ரவதை செய்ய ஆணையிட்டான். இந்த அவமானம் நமக்கு வேண்டாம் பெருமாளிடமே போய்விடுவோம் என இந்த தம்பதியர் முடிவு செய்து திருவிடந்தை க்ஷேத்திரத்துக்கு நடந்தார்கள். அங்கே ஸ்வாமியை தரிசனம் செய்து விட்டு கைகோர்த்துக்கொண்டு ரெண்டு பெரும் திருக்குளத்தில் ஆழத்துக்கு இறங்கிவிட்டார்கள். மனதில் ஒரே ஒரு குறை… வருத்தம்..
” நமக்கு வாரிசு ஒன்றுமே இல்லையே.நமக்குப் பின் நம் பித்ருக்களுக்கு கடன்களை, திதி அர்ப்பணம் ஸ்ராத்தம் செய்ய யாருமில்லையே.பகவானே எல்லாம் நீ விட்ட வழி”
பெருமாளுக்கு காது எவ்வளவு ஸூக்ஷ்மமாக கேட்கும். சும்மா இருப்பாரா?
“உங்களுக்கு நான் மகனாக இருப்பேன்…” என்று உயிர் போகுமுன் அவர்களுக்கு பதில் கொடுத்தார்.
அதன் பிறகு வாரிசு இல்லாமல் இறந்தவர்களுக்கும், திதி செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கும்,அகால மரணம் அடைந்தவர்களுக்கும்,தற்கொலை அல்லது விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இந்த ஸ்ராத்த சம்ரக்ஷக பெருமாள் தானே வாரிசாக அவர்களுக்கான திதியை புரிந்து தானே ஏற்றுக்கொள்கிறார் என்று ஐதீகம்.
வடக்கே கயா சென்று செய்யும் பித்ரு கிரியைகளுக்கு சமமாக இங்கே ஸ்ராத்தம் நடப்பதால் சௌலப்ய கயா என்றும் இதற்கு பெயர்.
தினமும் மத்தியானம் 12- 1 மணி வரை இங்கே “குதப காலம்” எனப்படும் பித்ரு காலம். அப்போது பெருமாள் தானே விரதமிருந்து, பித்ரு பூஜையை ஏற்றுக்கொள்கிறார் என்று ஸ்தல விசேஷ செயதி.
அமாவாசை மற்றும் ஏகாதசி நாட்களில், எண்ணற்ற பக்தர்கள் இங்கே திதி, சிராத்தம் பண்ணுகிறார்கள்.
காலை 11 மணிக்குள் கோவிலுக்கு வந்து, மஞ்சள், எள், தர்ப்பைப்புல், பவித்ரம், வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்., கோவிலின் பின்புறத்தில் இருக்கும் “விஷ்ணு பாதம்” அருகில், வைதீகர் ஒருவர் சங்கல்பம் செய்து முன்னோர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.
வைப்பார். அப்புறம் வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டை மற்றும் எள் சேர்த்த துவையல் நைவேத்தியம் பெருமாளுக்கு.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




