PANCHAGNI VIDHYA RAHASYAM J K SIVAN

@followers தேவ, பிரபஞ்ச ரஹஸ்யங்கள்…. –  நங்கநல்லூர்  J K  SIVAN 

பஞ்சாக்னி  வித்யை  ஜனனம்  மரணம் பற்றி சொல்கிறது.  கண்ணுக்கு தெரியாத  சில   பிறப்பு  இறப்பு  காரணங்கள் நமது வாழ்வை நிர்ணயிக்கிறது. எது ஒருவனை பிறக்க செய்கிறது?  எதனால் அவன் மரணம் சம்பவிக்கிறது?  இது ரஹஸ்யம்.  இது பற்றி யோசித்து சொல்வதுதான் உபநிஷத். புரிகிறதா?
ஸ்வேதகேது, உத்தாலக மகரிஷி பிள்ளை.  அவனைப் பற்றி  ஏற்கனவே சொல்லி  இருக்கிறேன்.அவன்  ஒரு நாள் ப்ரவாஹன ஜெய்வாளி எனும் ராஜாவை போய் பார்க்கிறான்.  அவனை வரவேற்று உபசரித்து ராஜா அவனிடம்  சில கேள்விகள் கேட்கிறான்.

”ரிஷி குமாரா, நீ நன்றாக கல்வி கற்று தேர்ச்சி பெற்றவன் என்கிறாயே,   உன்னிடம் நான் ஐந்து கேள்விகள் கேட்கிறேன். பதில் சொல்கிறாயா?”

”கேளுங்கள் மஹாராஜா””
”இறந்த பின், ஒருவன் எங்கே போகிறான்?
‘ராஜா, இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது.”

”சரி என் ரெண்டாவது கேள்விக்காவது பதில் சொல்லப்பா?”இறந்தவன் எங்கிருந்து வந்து அடுத்த பிறவி எடுக்கிறான்?

”மன்னிக்கணும் மஹாராஜா. இதற்கும் எனக்கு பதில் தெரியாது””

”சரியப்பா  என் மூன்றாவது கேள்வியை நன்றாக கேட்டு புரிந்து கொண்டு பதில் சொல்””இறந்தவர்கள் போகும் பாதை தேவாயணம் பித்ரியாணம்  என்று பெயர்கள்  கொண்டதாமே . இந்த ரெண்டுக்கும் என்ன வித்யாசம் என்று உனக்கு தெரியுமா?”

”மஹாராஜா, எனக்குத் தெரியாதவைகளை  நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டு என்னை துளைக்கிறீர்கள். இதற்கும் எனக்கு பதில் தெரியாது.”

”சரியப்பா , நாலாவது  கேள்வியை காதாலாவது கேள். நான் சொல்லும்  இறந்தவர்கள் செல்லும் உலகம் ஏன் அதிகம் கும்பலாக நமது  உலகம் போல் இல்லை.  பொங்கி வழியவில்லை? என்ன காரணமாக இருக்கும்?

”இதற்காவது விடை தெரிந்தால் உங்களை வாயைப் பிளந்து கொண்டு நான் பார்ப்பேனா மஹாராஜா?”

”உனக்கு  விடை தெரியுமோ தெரியாதோ,  நான் எனது ஐந்தாவது  கடைசி  கேள்வியையும் கேட்டு வைக்கிறேன். கேள்வியாவது எனக்கு மறந்து போகாமல் இருக்கட்டும்”

”பகவானுக்கு  படைக்கும்  ஐந்து பதார்த்தங்கள் எது?. அதில் ஐந்தாவதான  ஜலத்திலிருந்து தான் மனித உயிர் பிறக்கிறது என்கிறார்களே. அதை பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?”

”மஹாராஜா  சத்தியமாக எனக்கு கேள்வியே புரியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு ஒன்றுமே  இங்கே வேண்டாம்.  நான் போகிறேன்”
”நான் நன்றாக கற்றவன் என்று சொல்லிக்கொண்டு ஏன் இங்கே வந்தாய்? இந்த சாதாரண ஐந்து கேள்விகளுக்கு கூட பதில் தெரியாதவன் என்ன கல்வி, ஞானம் கற்ற
வன்?  இதை கூட  அறியாத நீ உன் தந்தையிடமோ, உன் குரு  யாரிடமோ என்ன தான் கற்றாய்?

ஸ்வேதகேது  அப்பாவிடம் ஓடினான். 

”என்னடா  ஸ்வேத கேது இப்படி ஓடி வருகிறாய்? என்ன ஆயிற்று உனக்கு?”
”அப்பா, எனக்கு எல்லாம் கற்றுக் கொடுத்தாயிற்று. இனி கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை.  இனி நீ ஜபம் செய்து  கொண்டு தனியாக உனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக்கொடு என்று சொன்னீர்கள்.  நானும் அதை நம்பி ஒரு ராஜாவைப்  போய் பார்த்தேன். அந்த ராஜா ஐந்தே ஐந்து கேள்விகள் கேட்டு என்னை மடக்கி விட்டான். தண்ணீர் கூட குடிக்காமல் இங்கே ஓடி வந்து விட்டேன். ”

”உனக்கு கற்றுத்  தரவேண்டியதை எல்லாம் நான் உனக்கு  சொல்லிக் கொடுத்தாய்  விட்டது. அது இருக் கட்டும். ராஜா உன்னை என்ன ஐந்து கேள்விகள் கேட்டார் அதைச் சொல்?’ஸ்வேதகேது கிளிப்பிள்ளை போல் நடந்ததை சொன்னான்.

‘நீ கேட்கும் கேள்விகளோ  அவற்றுக்கு பதிலோ  எனக்குமே தெரியாது. வா, நாம் இருவருமே அந்த ராஜாவிடம் சிஷ்யர்களாக போய் அவரிடமே பதில் அறிந்து கொண்டு வருவோம்.”

”அப்பா,  நான் எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு மறுபடியும் அந்த ராஜாவைப் போய் பார்ப்பேன்.  நான் வரமாட்டேன்.  நீங்கள் மட்டுமே போய் வாருங்கள்”

உத்தாலகர் ராஜாவைப்  போய் பார்த்தார். வரவேற்று உபசாரிக்கப்பட்டார். அன்றிரவு அரண்மனையில் ஓய்வெடுத்து மறுநாள் ராஜ சபையில் ராஜாவை போய் பார்த்தார்.

”உங்களுக்கு என்ன வரம்  வேண்டுமோ கேளுங்கள், தருகிறேன்” என்றான் ராஜா.

”மஹாராஜா, எனக்கு எதுவுமே வேண்டாம். என்னிடம் இருப்பதே போதும்.   என் மகன் உங்களை சந்தித்த போது நீங்கள் ஐந்து கேள்விகள் கேட்டீர்களே. அதற்கு எனக்கும் பதில் தெரியாது என்பதால் உங்களையே அணுகி உபதேசம் பெறவே வந்தேன்.

ராஜாவுக்கு  நெகிழ்ச்சியாக இருந்தது. என்ன சொல்வது இவருக்கு?   உடனே  இந்த ரிஷிக்கு எல்லாவற்றையும் விளக்க முடியாதே. யோசித்து பதிலளித்தான்;

”மகரிஷி,  சிறிது காலம் என்னோடு இங்கே இருங்கள். தக்க நேரம் வரும்போது உங்களுக்கு  நீங்கள் கேட்ட  விடை தருகிறேன்’.

ஒரு வருஷம்  ஓடிவிட்டது.  ராஜா  ரொம்ப விவேகமா னவன். ஞானி.  அவன் சொல்லும் பதில்கள்  தியான மந்த்ரங்கள். வித்யைகள் எனப்படுபவை., உயர்ந்த ஞானம்.

இயற்கையின் விதிகளுக்கு கட்டுண்டு தான் மனிதன் வாழ்கிறான். அவை அவனை கட்டுப்படுத்துகிறது. ஞானி கட்டுப்படாதவன். உறுதியான மனதுடையவன்.  பிறப்பும் இறப்பும் நமது  கட்டுப்பாட்டில்  இல்லாதவை. எப்போது எங்கே எப்படி நேரும் என்று கூட அறிய முடியாது நம்மால்.  ராஜா  சொன்ன விடை  பஞ்சாக்னி வித்யை. அக்னி என்றால் நெருப்பு, தீ என்று இங்கே புரிந்து கொள்ளக்கூடாது.   யாக ஹோம குண்டத்தில் வளரும் அக்னி, மந்திரங்கள் ஜபிப்பதால் சக்தி கொண்டவை. அர்ப்பணிக்கும்  திரவியங்களால்  மந்த்ர சக்தி தெய்வீகம் பெறுகிறது.  யாகத்தில்  பூஜிக்கப்படும் தெய்வங்கள்  ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அவிர்பாக அர்ப்பணிப்பு உள்ளது. அதுவே  அந்தந்த தெய்வங் களுக்கு திருப்தியை  அளித்து  யாகத்தை நடத்தும் எஜமானனுக்கு  அவன் வேண்டிய சக்தியை பலனை, வரத்தை அளிக்கிறது.

குழந்தை பிறப்பது ஏதோ தானாகவே நடப்பதாக நாம் எண்ணுகிறோம். தாய் கருத்  தரித்து பெறுகிறாள்….இது முழு  உண்மை ஆகாது.  ஒவ்வொரு பிறப்பின் பின்னா லும் அநேக  தேவ ரஹஸ்யங்கள் உள்ளன. கருப்பையில்  உயிர்  தாய் தந்தையால் மட்டும்  உருவாவதில்லை.  பிரபஞ்சமே அதில் இயங்குகிறது.  தெய்வீக சக்திகள் தான் அப்பா. பிரபஞ்சம் தான் அம்மா. ஒருமனிதனின் கர்மா, அவனுக்கு எது சரியான சரீரம், எத்தனை காலம் அவன் மொத்த கர்மாக்களில் ஒரு பகுதியை  ப்ராரப்த மாக  அவனோடு கொண்டு செல்லவேண்டும், அவன் செய்த கர்மாக்கள் அனைத்தும் தரமாக  கணிக்கப்பட்டு பிறகு தான் அவனுக்கு சரீரம் கிட்டுகிறது. மிருகமோ, மானுடனோ, பறவையோ, மற்ற உயிரினமோ அதற் கேற்ப தாய் தந்தை அமைகிறது.   ”ஆஹா, இவன் என் குழந்தை, பிள்ளை, பெண்  என்று பெருமைப்படுவதில் முழு நியாயமும் இல்லை, என்று புரிகிறதா? கடவுள் பிரசாதம் என்று  சொல்வதின் உண்மை விளங்குகிறதா? அந்த உயிர் எங்கிருந்து வந்தது?   பேரண்டத்திலிருந்து வந்த பிண்டம். பிண்டமும் பேரண்டமும் ஒன்றே தான். அதிலிருந்து இது,அதே தான் இது.
இதை தான் பஞ்சாக்னி வித்யை சொல்கிறது.

எப்படி மேகம் உருவாகிறது, எப்படி இடிக்கிறது, எப்படி மழையாகிறது, எப்படி நிற்கிறது. எப்படி மீண்டும் சூரிய வெப்பம் கொளுத்துகிறது. எப்படி நீராவியாக மாறி மேகமாகிறது…. சயின்ஸ் அடிப்படை உண்மையை மேலோட்டமாக தான் விளக்கமுடியும். நிகழ்ச்சியின் கோர்வை யாருக்குமே  தெரியாது. எது நீராவியானது, எது மேகமானது, ஏன் இடித்தது, மழை எந்த அளவு ஏன் எதிலிருந்து பெய்தது. ….. கேள்விகள் ஜாஸ்தி. பதில் …வாயைப் பிளக்கவேண்டியது தான்…

இன்னும் சொல்கிறேன். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;