
ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN மரகதத்தின் கல்யாணம்
வேத சாஸ்திரங்களைத் தவிர கல்லையும் கரைய வைக்கும் சிறந்த பக்தி சங்கீத ஞானமும் கொண்டவர் காமகோடி சாஸ்திரிகள். அதுவும் அம்பாளின் அனுக்ரஹம் தான் இந்த ஸ்ரீ வித்யா உபாசகருக்கு.
சிஷ்யர்களுக்கு வேத ஞானத்தைத் தவிர சங்கீதத்தில் பாவம், தாளம், ராகம் எல்லாமும் கற்றுக்கொடுத்தார். சாஸ்திரிகள் சிவன், விஷ்ணு, பராசக்தி மேல் நூற்றுக்கணக்கான கிருதிகளை இயற்றியவர். தெலுங்கிலும் கிருதிகள் உண்டு.
ஒன்றிரண்டு பாடல்கள் பெயர்களை சொல்கிறேன்.
1 கேதாரகௌளம் ராகத்தில் சித்சபாநாயகம்.
2. பைரவி ராகத்தில் ரமப்பதே, ஸதானதே தயாம் .
3. மத்யமாவதி. காமாக்ஷி மாம் பாலயம் .
காமாக்ஷிஸ்தோத்ரம் , மற்றும் காமாக்ஷி பிரஷஸ்டி ஸ்லோகங்கள் ரொம்ப உயர்ந்தவை. பூஜைகளில் பாடப்படுவது.
அவருடைய ஸ்தோத்திரங்கள் தான் அதிகம். சாமா சாஸ்திரிகள் முத்துசாமி தீக்ஷிதர் போல் கீர்த்தனைகள் அல்ல.
திருப்புட்குழியில் அப்பா என்று ஒரு வைஷ்ணவர் காமகோடி சாஸ்திரிகளின் நண்பர். நாலு வேதங்கள், சாஸ்திரங்களில் நிபுணர். அவருக்கும் சிஷ்யர்கள் நிறைய பேர். சாஸ்திரிகள், அப்பா ரெண்டு பேருமே பல ஊர்களுக்கு அழைக்கப்பட்டு அங்கே உபன்யாசங்கள் செய்பவர்கள். அப்படித்தான் வழூர் என்கிற ஊருக்கு சென்றார் சாஸ்திரி. தனிமையாக அதிக ஜன நடமாட்டம் இல்லாத ஆரண்யம் போன்ற அந்த இடம் சாஸ்திரிகளுக்கு பிடித்து விட்டது. காஞ்சியை விட்டு வழூரிலேயே சாஸ்திரிகள் குடியேறி விட்டார். உள்ளூர் மக்கள் அவருக்கு அங்கே வாழ வசதிகள் செய்து கொடுத்தார்கள்.
கௌண்டின்ய கோத்ரத்தை சேர்ந்த சாஸ்திரிகளுக்கு புத்ரன் இல்லை. ஒரே ஒரு பெண் சேஷம்மாள். அவருடைய அண்ணா சிதம்பர சாஸ்திரிகளுடைய குழந்தைகள் மேல் பாசம் ஜாஸ்தி. சிதம்பர சாஸ்திரிகளுக்கு ரெண்டு பிள்ளை ரெண்டு பெண். ஒரு பெண்ணின் பெயர் மரகதம். அழகான பெண். புத்திசாலி. சித்தப்பா மேல் கொள்ளை ஆசை.அவரிடம் நிறைய விஷயம் கிரஹித்துக் கொண்டவள். ”இவள் காமாக்ஷி அம்சம்” என்று அடிக்கடி காமகோடி சாஸ்திரிகள் சொல்வார். மரகதத்தின் மேல் மற்ற குழந்தைகளை விட அதிக பாசம் அவருக்கு. இதிகாசம், நாடகம், அலங்காரம், சங்கீதம் எல்லாம் அவளுக்கு கற்பித்தார். மரகதம் பன்னிரண்டு வயதிலேயே சாஹித்ய சங்கீத கலாவதி என்ற விருதுபெற்றாள் . அவள் இனிய குரலில் இசையை கேட்டால் பட்ட மரமும் துளிர்க்கும் என்பார்கள். சங்கீத ஞானமே இல்லாதவர் களுக்கு கூட மேலும் மேலும் அவள் பாடுவதை கேட்க ஆவலாக இருக்கும். குரல்வளமா? பக்தி பாவமா? ரெண்டுமா? என்று சொல்லவே முடியாது.
அதிக பக்ஷம் 12 -13வயதிலேயே பெண்களுக்கு கல்யாணம் ஆகும் காலம் அது. காமகோடி வம்சத்தில் பௌரகுத்ஸ கோத்ரத்தை சேர்ந்த சிஷ்யன் வரதராஜனை காமகோடி சாஸ்திரிகள் தனது ஆசை மகள் மரகதத்துக்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தார். வரதராஜன் அழகான, லக்ஷணமான, ஸ்ரீ வித்யா உபாசகன்.சாஸ்திரங்கள் நன்றாக அறிந்தவன். நற்பண்புகள் வாய்ந்தவன். தாய் தந்தை குரு ஆகியோர் தெய்வமாக போற்றி வணங்கியவன். வரதராஜனையும், மரகதத்தையும் ராமர் சீதை என்பார் சாஸ்திரிகள். வரதராஜனின் அப்பா சேஷாத்ரி ஜோஸ்யர். கேட்கவேண்டுமா? ரெண்டு பேர் ஜாதகத்தையும் நன்றாக பரிசீலனை செய்து ஒப்புதல் அளித்த பின் கல்யாணம் நிச்சயம் ஆயிற்று. காமாக்ஷி அம்பாளை ஆராதித்து சுவாசினி பூஜை நடந்தது. ப்ராமணர்களுக்கு தான தர்மங்கள் வழங்கினார்கள். காஞ்சிபுரம் கோவில்களில் இருந்து பிரசாதங்கள் வந்தது. வழூரில் ஏழு நாள் கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது.
காஞ்சிபுரத்தில் கணவன் வீட்டில், மரகதம் புருஷனை பரமேஸ்வரனாக பாவித்து பார்வதி தேவி போல் பூஜித்தாள் . ஒவ்வொருநாளும் பொழுதுவிடிந்ததும் முதலில் மூன்று முறை வரதராஜனை வலம் வந்து நமஸ்கரிப்பாள். தினமும் கோ பூஜை செய்வாள். பெரிய தோட்டம். அதிலிருந்து புஷ்பங்கள் பறித்து தொடுத்து புருஷனின் பூஜைக்கு எடுத்து வைப்பாள். ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள் எல்லாம் சொல்வாள். ருசியாக சமையல் செய்து புருஷனுக்கும் மற்ற விருந்தாளிகளுக்கு வயிறு நிறைய உணவளிப்பாள் . மத்தியான வேளைகளில் புராணங்களை உரக்க வாசிப்பாள். வரதராஜனும் கேட்டுக் கொண்டிருப் பான்.ஒவ்வொரு நாளும் சாயந்திரம் கணவனோடு காமாக்ஷி அம்பாள், ஏகாம்பரேஸ்வர் கோவில்களுக்கு செல்வாள்.வீட்டுக்கு வந்ததும் மற்றவர்களுக்கு உணவளித்து கணவன் மனைவி உண்பார்கள். கணவனுக்கு புஷ்பங்களால் பூஜை செய்வாள். மொத்தத்தில் வேதகாலத்து பெண். பின் தூங்கி முன் எழும்பிய ஸ்த்ரீ.வரதராஜன் மனைவி தூங்கியே பார்த்ததில்லை.மேலே சொன்னதெல்லாம் ஒவ்வொரு நாளும் காணப்பட்ட காட்சி.
தொடரும்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



