
அப்பா நினைவு : நங்கநல்லூர் J.K. SIVAN
உலகத்தில் எல்லோருக்கும் அப்பா என்று ஒருவர் உண்டு.. அப்பா இல்லாத ஜீவனே கிடையாது. ஒவ்வொரு ஆணும் ஒருநாள் அப்பா பதவி பெறுப வன். பிள்ளையே தான் அப்பாவாகும்போது தான் ”அப்பா” பதவி என்ன என்பது புரியும். ஒவ்வொரு அப்பாவுக்கும் தனது மகன்/மகள் எப்படி வளர, உயர வேண்டும் என்று கனவு நிச்சயம் உண்டு. ஆனால் ஏனோ எல்லா அப்பாக்களின் கனவுகளும் நிறைவேறுவதில்லை. இதில் ஆச்சர்யம் என்னவென் றால் இன்னும் சிலர் கனவே காணாத பொறுப்பற்ற அப்பாக்களாக வே வாழ்ந்து மறைபவர்கள் .
ஒவ்வொரு அப்பாவும் தனது மகனை, தான் எப்படி யெல்லாம் இருந்தானோ, அப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறானோ, அவ்வாறெல்லாம் இருக்காமல் பிள்ளை/பெண்ணை வளர்க்க படாத பாடு படுவான். தன்னை மாதிரி இருக்க வேண்டாம். தன்னைக்காட்டிலும் உயர்ந்தவனாகவே அவன் வளர பிரயத்தனப்படுவான். சிலர் தான் படிக்காமல் இருந்த தால் தனது பிள்ளை நன்றாகப் படித்து முன்னேற வேண்டும். பெரிய பதவி வகிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கமாகிவிட்டது. சிலர் அதை நிறைவேற்ற என்னவெல்லாம் பாடு படுகிறார்கள் என்பது கண்கூடாகப் பார்க்கிறோம்.
சக்திக்கு மீறி கடன் வாங்கி, சொத்துக்களை விற்று பிள்ளையின் முன்னேற்றத்துக்குத் தியாகம் செய்த அப்பாக்கள் தெய்வத்துக்கு அடுத்தபடி. தனது ஆவல், ஆசை, எண்ணம், சுதந்திரம், ஏன், தேவை, இதை யெல்லாம் திரஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு தவம் செய்பவன் போல் பிள்ளையின் முன்னேற்றத்துக் காக, விழாதவன் காலில் எல்லாம் விழுந்து, வியர்வை சிந்தி இரவும் பகலும் உழைத்த பெற்றோர்களை நான் அறிவேன்.
இதற்கு பிரதியுபகாரமாக மகன் என்ன செய்கிறான்? இளம் வயதில் ஒரு பயத்தோடும், சற்று ஒதுங்கியும் தான் அப்பாவோடு பழகுகிறான். அம்மாவிடம் உள்ள சலுகை, சவுகரியம், சுதந்திரம் அப்பாவிடம் இல்லை. அம்மா வேண்டுமா, அப்பா வேண்டுமா? என்றால் முதலில் அம்மா தான். இப்படி வளர்கிறவன், பெரிய வனாகி, உலகம் இவ்வளவு தான்! என்று புரிபடும்போது தான் அப்பாவையும் புரிந்து கொள்கிறான். சிலர் அப்ப வும் அப்பாவை புரிந்து கொள்வதில்லை என்பது தான் வேதனை.
தனது வளர்ச்சி, தனது முன்னேற்றம் சகலத்துக்கும் தானே, தனது அறிவே, தனது திறமை யே தான் காரணம் என்று ”கனம்” தலைக்குள் ஏறி அப்பாவை துச்சமாக நினைக்கிற மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளவே ண்டிய வர்கள். அவர்கள் அப்பாவாகும்போது தான் அது தெரிய வரும். அப்போதும் தெரியாதவர்கள் தான் வாழ்க்கையில் திண்டாடுபவர்கள்.
ஏதோ ஒரு கதை, நிஜமாக எங்கோ நடந்ததோ இல்லையோ, வழக்கில் பலர் அறிந்த ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்.
ஒரு அப்பா படிக்காத, தண்ணீர் சுமந்து வீடு வீடாக சப்ளை செய்பவர். தன் பிள்ளையை எப்படியெல்லா மோ கஷ்டப்பட்டு, உயிரைக்கொடுத்து படிக்க வைத்து, அவனும் நன்றாக படித்து, கலெக்டர் உத்தியோகமும் கிடைத்தது. ஆபிஸ் பங்களா. பெரிய இடத்தில் அவனுக்கு மனைவி கிடைத்தாகி விட்டது. அம்மா இல்லை. கிழ அப்பாவுக்கு பங்களாவின் ஓரத்தில் ஒரு சின்ன அறை , இல்லை சிறை. அதில் அப்பா தனி யாக வாசம். வேளா வேளைக்கு ஒரு நசுங்கிய எவர் சில்வர் தட்டில் சாப்பாடு பங்களாவிலிருந்து சமையல் காரர் கொண்டு போய் அந்த அவுட் ஹவுசில் இருக்கும் அப்பாவுக்கு கொடுப்பார்.
கிழவரின் தண்ணீர் சம்பந்தம் இன்னும் நீங்க வில்லை. தினமும் ஒரு தவலையில் நீர் மொண்டு தோளில் சுமந்து, எல்லா செடி கொடிகளுக்கும் ஊற்றுவார்.
ஒருநாள் சில பெரிய இடத்து நண்பர்களுடன் அவரது ‘கலெக்டர்’ பிள்ளை பங்களாவில் ஹாலில் பேசிக் கொண் டி ருக்கையில் பெரியவர் ஒரு தண்ணீர் தவலையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் எதற்கோ நுழைகிறார். யார் அவர் என்று நண்பர்கள் கேட்க பையன் கூசாமல் ”அவர் எங்கள் குடும்ப தோட்டக் காரர் என்று சொல்வது கிழவருக்கு புரிந்து விட்டது. ஆங்கிலம் அவ்வளவாக தெரியாவிட்டாலும், பேச முடியாவிட்டாலும்
”who is he ?
He is our gardener”‘
என்கிற வார்த்தைகளாவது புரியாதா? கிழவருக்கு மனம் வெந்தது. தோளில் குடத்தில் நீரோடு, கண்களில் கண்ணீரோடு கிழவர் தனது சிறைக்கு திரும்புகிறார்.
இதே மாதிரி இன்னொரு கதையில் ஒரு கிழவர் வருகிறார். அதில் கிழவர் காலமானவுடன், அந்த பணக்கார நன்றிகெட்ட பிள்ளையின் ஆட்கள் கிழவரின் அறையை சுத்தம் செய்கிறார்கள், கிழவர் உபயோகித்த சாமான்கள் தூக்கி வெளியே எறியப்படு கின்றன. கிழவரின் எட்டு வயது பேரன் கையில் தாத்தா சாப்பிட உபயோகித்த அந்த நசுங்கிய எவர்சில்வர் தட்டு இருப்பதை பிள்ளை பார்க்கிறான்.
”ஏண்டா அதை பங்களாவுக்குள் எடுத்துக்கொண்டு வந்தாய்?” என்று மகனை கேட்கிறான்.
‘ அப்பா, நீ தாத்தாவுக்கு சாப்பாடு கொடுத்த மாதிரி நான் பெரியவனா போனதும் உனக்கு சாப்பாடு கொடுக்க வேண்டாமா,?தாத்தா எல்லாரும் இதுலே தானே சாப்பிடணும்னு நீ தானே ஒருநாள் எங்கிட்ட சொன்னே, அதுக்காக” என்கிறான்.
காலம் மாறிவரும் நிலையில் அப்பாக்களின் காலம் மகனின் காலத்தோடு எப்படி ஒத்துப்போகும்? பழக்கம், சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் எப்போதும் ஒன்றாகவேயா இருக்கிறது?
நாகரிகம், விஞ்ஞான வளர்ச்சி, இவற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நிறைய அப்பாக்கள் நிழலுக் கு பழைய மரத்தடியிலேயே ஒதுங்குகிறார்கள். தெரிந்த பழைய முறைகள், பாந்தமாக இருக்கிறது என்று அவர்கள் வாழ்வது வேகத்தின் வளர்ச்சியில் அடித்துச் செல்லப்படும் மகன்களுக்குப் பிடிக்க வில்லை. ”முட்டாள்கள், பைத்தியங்கள்” என்ற இலவச டிகிரி பட்டங்கள் அப்பாக்களுக்கு எளிதில் கிடைக் கிறது. பண பற்றாக்குறை, வசதி, எதிர்பார்ப்பு, நிர்க் கதி, போன்றவைகளால் பீடிக்கப்பட்டு நிறைய அப்பாக்கள் கடினமான வார்த்தைகளை, இதயத்தை பிளக்கும் சொற்களை காது நிறைய, மனம் கொதிக்க, மறுவார்த்தை பேசாமல் வாங்கிக்கட்டிக் கொள்கி றார்கள். சில அப்பாக்கள் இதை சகிக்கமுடியாமல் எதிர்க்கிறார்கள். வீடுகள் பிளவு படுகின்றன. தேவை யற்ற தனிமை, சரணாலயம், முதியோர் இல்லங்கள், சக்தியிழந்த, எல்லாமே இழந்த அப்பாக் களை பெறு கிறது. அந்த அப்பாக்கள் வேறு யாரும் இல்லை, இன்றைய மகன்களே இன்னும் கொஞ்சம் காலத்திலே நீங்கள் தான்.
சில மகன்கள் புத்திசாலிகள். சீர் தூக்கிப் பார்க்கிறார் கள். என் தந்தை எனது சந்தோஷத் துக்காக தன்னைத் தியாகம் செய்து கொண்டவர் என்று அடிமனதில் நிரம்ப கவனமாக இருப்பவர்கள். எது அப்பாவுக்கு பிடிக்கும் என்று தனக்குத் தெரிந்ததையோ , அம்மாவி டம் கேட்டோ அப்பாவைத் திருப்தி படுத்துவதை சில குடும்பங்களில் கண்டு மகிழ்ச்சி யடைந்திருக்கிறேன்.
தாய் தந்தையின் நலனுக்காக விட்டுக்கொடுக்காத பிள்ளைகள் தங்களது வயோதிக காலத்தில் அத்த கைய ”சுகத்தை” தங்களது பிள்ளைகளிடமிருந்து பெறுவார்கள் என்பது தான் காலம் விதிக்கும் விதி. மேலே சொன்ன பேரன் கை தட்டு கதை.. இதைத்தான் சுருக்கமாக தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற மூதுரை விளக்குகிறதோ?
கடைசியாக ஒரு வார்த்தை. அப்பா இல்லாத போது தான் அப்பாவின் அருமை புரியும், தெரியும் என்ற நிலை வேண்டாமே. அப்பாவும் அம்மாவும் இருக்கும் போது அவர்களை தெய்வமாகப் போற்றும் மகனாக/மகளாக இருக்கலாமே. என்ன குறைவு? அல்லது குறை? இதில் .நடுக்கடலில் ஒரு படகில் போய்க் கொண்டி ருக்கிறோம். படகு பல அலைகளை, வேகமா க எதிர்க்கும் நீரோட்டங்களை எல்லாம் வென்று, காற்று எதிரில் பலமாக தடுத்த போதும் அதையும் மீறி மேற்கொண்டு செல்கிறது. சுகமாக உட்கார்ந்து இருக்கிறோம். வாழ்க்கைப் படகைச் செலுத்துபவன் தான் அப்பா.
படகில் அமர்ந்து கரை சேர்ந்த எவனும் படகோட்டியை யோ, அவன் சாதனையையோ நினைவில் கொள்வது இல்லை. இது தான் வாழ்க்கை. படகு இல்லாதபோது நாமே தட்டுத் தடுமாறி நீந்தி கரை சேரும்போது தான் ”அடடா படகோட்டி இல்லையே” என்ற ஒரு ஆதங்கம் பிறக்கிறது. இது தான் நியதி. இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது இறைவன் வகுத்தது. எனவே அதை எதிர்கொள்வோம். அவன் மீது நம்பிக்கை தொடர்ந்தால் நாமே நல்ல அப்பாவாகக் கூட மாற முடியும். இல்லை மாறவேண்டும்..
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




