RAMANAANUBHAVAM J K SIVAN

​​ரமணானுபவம். – நங்கநல்லூர் J K SIVAN
​
​இப்போதிருக்கும் சாமியார்கள் போல் விளம்பர ப்ரியர் இல்லை ரமண மஹரிஷி. எண்ணற்ற பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ ஆஸ்ரமத்துக்கு வந்து மகரிஷியை தரிசித்து அளவளாவி, தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்ட, உபதேசம் பெற்ற புண்யசாலிகள். பலர் தங்கள் அனுபவத்தை எழுதி வெளியுலகம் அறியச் செய்தவர்கள். அப்படி வாக்கிலோ எழுத்திலோ வெளிப்படுத்தியவர்களை விட தங்களோடேயே
அந்த அற்புத அனுபவங்கள் மறையச் செய்தவர்கள் தான் அதிகம். நான் மஹரிஷியின் தரிசன அனுபவம் கிடைக்காதா என்று தேடி அலைந்தபோது சில பக்தர்கள் மற்றவர்கள் அறிய உதவட்டுமே என்று எழுதிவைத்த சில அனுபவங்கள் படிப்பதற்கு கிடைத்தது. அதைத்தான் அப்பப்போ உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். இதோ ஒரு பாக்யசாலியின் அனுபவம். இவர் டாக்டர் கே. சுப்பிரமணியம் ஹைதராபாத் ரமண கேந்திரம் நிறுவியவர். ஆங்கில பேராசிரியர். 1992ல் அவர் எழுதிய ஒரு அனுபவ விஷயம்;

​++
​”எங்கப்பா திருவண்ணாமலையில் முனிசிபல் ஹை ஸ்கூல் வாத்யார். 1927​ல் மகரிஷியை சந்தித்து சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டவர்.
“​பகவானே, நாடு முழுக்க யார் யாரோ சந்யாசிகள், சாதுக்கள் சுற்றுகிறார்களே, அவர்களில் யார் உண்மையானவர் என்றுஎப்படி தெரிந்து கொள்வது?”

​மஹரிஷி சிரித்துக்கொண்டே ”எந்த முயற்சியும் எடுக்காமல் நீ யார் முன்பு, சொல்லமுடியாத மன அமைதி அடைகிறாயோ அவர் தான் உண்மையான சாது ‘

​1928-61 கால கட்டத்தில் என் தந்தை கொடைக்கானலில் ஒரு ஆங்கில பள்ளிக்கூடத்தில் பணியாற்றியபோது பஞ்சாபில் நாபா என்கிற ஊர் ராஜாவின் இளவரசிக்கு வாத்யார். அவள் மூலம் ராஜா ராணியின் தொடர்பு கிடைத்து அவர்களிடம் பேச்சு வாக்கில் திருவண்ணாமலை மகரிஷி அருமை பெருமைகளைப் பற்றி சொன்னார். 1944ல் ராஜாவுக்கு உடல்நலம் சரியில்லை. ”கிருஷ்ணசாமி, நீங்கள் அந்த மகரிஷியிடம் போய் எனக்காக பிரார்த்தனை பண்ணி ஆசிர்வாதம் வாங்கி வாருங்கள் ” என்று ராஜா அனுப்பினார்.

​எங்கப்பா மகரிஷியிடம் ராஜாவின் உடல் நிலை பற்றி சொன்னபோது மகரிஷி ஒன்றும் பேசவே இல்லை. மகாராஜாவுக்கு பிரசாத பொட்டலம் ஆசிரமத்திலிருந்து கொடுத்ததை ராஜா பிரித்தார். என் தந்தையை ராஜா கூப்பிட்டு என்ன சொன்னார் தெரியுமா?

”கிருஷ்ணசாமி, என் காலம் சீக்கிரம் முடிந்து விடும் என்று புரிகிறது. இந்த பிரசாத பொட்டலத்தில் குங்குமம் இல்லை. விபூதி மட்டுமே இருக்கிறது ” சொன்னது போலவே அடுத்த நாலு மாதத்தில் ராஜா மறைந்துவிட்டார்.

சுப்ரமணியம் அடிக்கடி மகரிஷிக்கு கடிதங்கள் எழுதுவார். அவர் சொல்வது;
நான் திருக்காட்டு பள்ளியில் ஹாஸ்டலில் இருந்து படித்தேன் (1941-45. ) அப்போது ஒரு முறை திருவண்ணாமலை சென்று மகரிஷியை தரிசித்தேன்.
” நீ தானே எனக்கு கடிதங்கள் எழுதுபவன்” என்றார் மகரிஷி. எனக்கு ஆச்சர்யம்.மெதுவாக ”ஆம் சுவாமி” என்றேன்.
”உனக்கு லெட்டர் எழுதி போஸ்ட் பண்ண அப்பா பணம் அனுப்புறாரா?” என கேட்டு புன்சிரிப்பு.
எனக்கு உள்ளூர நடுக்கம்.
1945ல் நான் SSLC முடித்த்துவிட்டு மதுரை அமெரிக்கன் காலேஜ் சேர விண்ணப்பம் போட்டேன். காலேஜில் சேர கிளம்பு முன் திருவண்ணாமலையில் மகரிஷியை போய் பார்த்தேன்.
”நான் மதுரையில் காலேஜில் சேர போகிறேன்”
”எந்த காலேஜ்?”
”மதுரை காலேஜ் ‘ என்று அமெரிக்கன் காலேஜ் பெயருக்கு பதில் மாற்றி சொல்லிவிட்டேன்.
”சரி” என்றார் சிரித்துக்கொண்டே.
‘எனக்கு அமெரிக்கன் காலேஜில் இடம் கிடைக்காமல் மதுரை காலேஜில் தான் சேர முடிந்தது”
1949ல் ஆஸ்ரமத்தில் மாத்ருபூதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம். சாயந்திரம் ஆர்த்தி எடுத்துவிட்டு மகரிஷியிடம் எடுத்து சென்றார்கள். நான் மகரிஷி அருகே நின்றுகொண்டிருந்தேன் . இரு கைகளையும் நீட்டி ஆரத்தியை பக்தியோடு தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார்.
மகரிஷிக்கு கையில் ஆப்பரேஷன் நடந்தபோதெல்லாம் ஆஸ்ரமம் போவேன். தனக்கும் தன் கைக்கும் சம்பந்தமே இல்லாதது போல் நடந்து கொள்வார்.
1946ல் நான் 18 வயது மாணவன். பழைய தியான கூடத்தில் இருந்தேன். அருகே கிணற்றின் பக்கத்தில் மகரிஷி யாரோ ஒரு பக்தரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் அங்கே இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆச்சர்யம். என் பக்கம் திரும்பினார். நான் தலை குனிந்து கைகட்டி நின்றேன். ஏதோ ஒரு மின் காந்த சக்தி அவர் பார்வாயிலிருந்து என் மீது விழுந்தது போல் இருந்தது. அந்த ஆனந்த உணர்ச்சி கிட்டத்தட்ட மூன்று வாரம் எனக்கு இருந்தது.

ஒருமுறை மாதரு பூதேஸ்வரர் கோவிலுக்கு வெளியே, புது தியான மண்டப வாசலில் உட்கார்ந்திருந்தேன். பகவானையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனதில் ஏக்கம். ”இத்தனை நாள் ஆஸ்ரமத்துக்கு வருகிறேன். எனக்கு இன்னும் தியானம் மன ஓட்டம் நிலைத்து பூரணமாக மனம் தியானத்தில் ஈடுபட வில்லையே. பகவான் அனுக்கிரஹம் எப்போது கிடைக்குமோ ?”கண்ணை மூடினேன், தியானத்தில் முனைந்தேன். எத்தனை நேரம் அப்படி இருந்தேன் என்று தெரியவில்லை. கண்ணைத் திறந்தபோது எதிரே தியான கூடத்தில் எவருமே இல்லை. இரவு நேரம் ஆகியிருந்தது. என்னைத்தாண்டி மற்றவர்களும் மகரிஷியும் போயிருக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. என் மனதில் உள்ளதை உணர்ந்து பகவான் அனுக்ரஹம் பண்ணி, என் மனம் முழுமையாக தன்னை மறந்து தியானத்தில் ஈடுபட முடிந்ததை அறிந்தேன்.

ஆகஸ்ட் 1949ல் ஆஸ்ரமத்துக்கு சென்னையிலிருந்து சென்றேன். மகரிஷி கையில் ரெண்டாவது ஆபரேஷன் . புது தியான மண்டபத்தில் உட்கார்ந்திருந்தார். மண்டபத்தில் யாருக்கும் அனுமதி இல்லை. உள்ளே நுழைந்து வணங்கிவிட்டு பேசாமல் செல்ல மட்டுமே அனுமதி.

ஆகஸ்ட் 16 அன்று சென்னைக்கு திரும்ப எனக்கு எண்ணம். தியான மண்டபம் உள்ளே நுழைந்து அவரை நமஸ்கரித்து ”நான் போகிறேன்” என்று சொன்னேன்.
வழக்கமாக சரி என்று சொல்பவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து நான் மீண்டும் உள்ளே போனேன். மீண்டும் ”நான் போகிறேன்” என்று சொன்னதும் அப்போதும் மகரிஷி முகம் வேறு பக்கம் திரும்பியது. எனக்கு என்னவோ போலிருந்தது. மூன்றாம் முறையும் உள்ளே சென்று ”நான் போகிறேன்” என்றபோதும் முகம் திரும்பியது. என்ன ஆச்சர்யம் இது?

ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயிலைப் பிடிக்க லேட்டாகி விட்டது. வேகமாக ஓடினேன். கொஞ்ச தூரம் போனதுமே என்னால் மேலே போக முடியவில்லை. மஹரிஷி யின் அனுமதி பெற்ற பிறகே செல்வது என்று முடிவெடுத்
தேன்.
அடுத்தநாள் அவரை வணங்கி ”நான் போய் வருகிறேன்” என்றேன்.
”சரி” பதில் வந்தது.
இன்று வரை ஏன் எனக்கு இதற்கு முன் அனுமதி வழங்கவில்லை” என புரியவில்லை.

1950ல் B.A.(Hons. பரிக்ஷை மார்ச்சில் முடிந்தது. என் சகோதரி மாமனார் T.V. கிருஷ்ணஸ்வாமி அய்யர்,
என்னிடம் முருகனார் விளக்கம் எழுதிய அக்ஷரமண மாலை கையெழுத்து பிரதி புத்தகம் ஒன்றை படிக்க தந்தார். நூறு பக்கங்கள். பரிக்ஷை பற்றி கவலையே இல்லாமல் அதை அப்படியே ஒரு நோட் புத்தகத்தில் பிரதி எடுத்துக் கொண்டேன். பரிக்ஷைக்கு படிப்பதை விட இது முக்கியம் என்று எனக்கு தோன்றியது. மறுநாள் பரிக்ஷை. முதல் பேப்பர் பழைய ஆங்கிலத்திலிருந்து நவீன ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பு. சில கட்டுரைகள் பரிக்ஷைக்கு முதல் நாள் மொழி பெயர்க்க பயின்று கொண்டு இருந்தேன். ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து அந்த பக்கத்தில் இருந்ததை நவீன ஆங்கில மொழிபெயர்ப்பு செய்ய முயன்றேன். முடித்ததும் படுத்து தூங்கி விட்டேன். மறுநாள் பரிக்ஷையில் வினாத்தாளில் நான் முதல் நாள் மொழி பெயர்த்த அதே கட்டுரை தான் மொழி பெயர்ப்பு கேள்வியாக வந்தது. எனக்கு எப்படி இருக்கும்? நான் பரிக்ஷைக்கு தயார் செய்யாமல் அக்ஷரமணமலை நூறு பாடல்களையும் காப்பி பண்ணிக்கொண்டிருந்து விட்டு பிறகு தான் புத்தகத்தை எடுத்து அதில் ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து மொழிபெயர்ப்பு செய்து பார்த்தேன். அதுவே மறுநாள் பரிக்ஷையில் கேள்வியாக வந்த போது எனக்கு ஆச்சர்யம். ஆஹா இது பகவான் அனுக்ரஹம் தானே?

பகவானுக்கு மிருகங்கள், பறவைகள் மேலும் பக்தர்கள் மேல் உள்ள அன்பும் கருணையும் ஒன்றே தான். எந்த வித்தியாசமும் இல்லை. திடீரென்று குரங்குகள் தாவிக்கொண்டு அவர் அருகே வரும். தியான மண்டபத்
தில் நுழைந்து அட்டகாசம் செய்யும். கத்தும். விளையாடும். சில பக்தர்களுக்கு கோபம் வரும்

”இங்கே வா என்று அவற்றை மகரிஷி கூப்பிட்டு முந்திரி திராக்ஷை, வேர்க்கடலை கொடுப்பார். ”வெளியே போய் விளையாடுங்கோ” என்பார் எல்லாம் பெட்டிப்பாம்பாக அடங்கி உடனே போய்விடும். ஒரு அணில் அவர் உட்கார்ந்திருக்கும் சோபா மேல் தாவி ஏறி அவர் மடிமேல் உட்காரும். கீச் கீச் என்று கத்தும். அவர் அன்போடு அதை தடவிக்கொடுப்பார். அதற்கு பயமே கிடையாது. கடலை, பொறி ஏதாவது கொடுத்தால் அவர் கையிலிருந்தே சந்தோஷமாக சாப்பிடும். ஓடிவிடும்.

ஆஸ்ரம மான் ஒன்றை ஏதோ காட்டு மிருகங்கள் காயப்படுத்திவிட்டது. ரத்த கசிவோடு மான் மெதுவாக அவரிடம் ஓடிவந்தது. தாய் போல் அதன் அருகே அமர்ந்து முகத்தை கையில் ஏந்தி ஆறுதல் அளித்தார். மான் கண்களில் கண்ணீர் வெள்ளம். ஆஸ்ரம மேனேஜர் என் அப்பாவை கூப்பிட்டு நீங்கள் இந்த மானுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறீர்களா? என்று கேட்டபோது மகரிஷி கையை அசைத்துவிட்டார். கண்ணை மூடினார். சில வினாடிகளில் மான் கடைசி மூச்சை விட்டது. ஆஸ்ரமத்தில் பசு லக்ஷ்மி சமாதிக்கு பக்கம் மானுக்கும் சமாதி.

ஒரு சமயம் என் மாமா ” மகரிஷி , ராவணனுக்கு பத்து தலை என்பது நிஜமா?”என கேட்டார்.
”இந்த கவலை உனக்கு எதற்கு, எந்த விதத்தில் இது தெரிந்து உனக்கு உதவும் என்று சொல்? உன் ஒரு தலையை உன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உன்னால் முடியுமா என்று முயற்சி செய் ” என்றார் மகரிஷி.

மாத்ருபூதேஸ்வரர் கோவில் கட்டும் போது தலையில் கூடையில் செங்கல் மண் எல்லாம் பகவானே தூக்கிக் கொண்டு போய் மேஸ்திரியிடம் சித்தாள் போல் கொடுப்பார். ‘என்னாலான கைங்கர்யம் இது” என்பார்.

​ஒரு சமயம் திடீரென்று குபுகுபு வென்று ஒரு பக்தர்கள் கூட்டம் ஆசிரமத்துக்குள் வந்துவிட்டது அவர்களுக்கு மதிய உணவுக்கு என்ன செய்வது?
​சமையல் காரர் மஹரிஷியிடம போய் ”சமையல் கட்டில் அதிக உணவு இல்லையே எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை” என்றார் .
​’கவலைப்படாதே, எதேஷ்டமாக எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கும் போ” எல்லோரும் சாப்பிட உட்கார்ந்த போது மகரிஷியும் அவர்களோடு உட்கார்ந்து அனைவரும் சாப்பிடுவதைப் பார்த்தார். சாப்பிடுவதற்கு முன்பே அநேகருக்கு வயிறு நிரம்பிவிட்டது போல் ஒரு உணர்வு. மஹாபாரத துர்வாச மகரிஷி காட்டில் தர்மபுத்ரன் ஆஸ்ரமத்துக்கு 1000சிஷ்யர்களோடு அக்ஷய பாத்திரம் காலியான பிறகு திடீர் விஜயம் செய்தபோது கிருஷ்ணன் அருளால் எல்லோருக்கும் வயிறு நிரம்பியது போல் அல்லவோ இந்த அனுபவம் இருக்கிறது!. இலையில் கொஞ்சம் அன்னம் போடும்போதே ‘போதும் போதும்’ என்று அதை உண்டுவிட்டு எழுந்து விட்டார்கள்.”

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;