
தசாவதாரம். – நங்கநல்லூர் J K SIVAN
தசாவதாரம் என்பது ரொம்பவே தெரிந்த ஒரு தமிழ் வார்த்தை. கிருஷ்ணன் எட்டாவது அவதாரம். அது துவாபர யுகத்தில். அப்புறம்? இதோ இப்போது நாம் வாழும் கலியுகம். அதற்கு மொத்தம் எத்தனை வருஷம் தெரியுமா? 432,000வருஷங்கள். கலியுகம் ஆரம்பித்து இப்போது கிட்டத்தட்ட 5530 வருஷம் ஓடிவிட்டது. இன்னும் 4,26,000 வருஷம் போல் பாக்கி இருக்கிறது. நாம் இருக்கப்போவதில்லை. அப்புறம் கல்கி அவதாரம் 10 வது அவதாரம்.அப்படியென்றால் 9வது அவதாரம் என்ன ஆயிற்று? பலராமன் தான் 8வது, கிருஷ்ணன் 9வது என்று சில நூல்கள் சொல்கிறது. பலராமன் கிருஷ்ணனின் அண்ணா. ரெண்டு பேருமே துவாபரயுகம் என்று நாம் அறிவோம்… பாகவதம், பாரதம் எல்லாம் அப்படி தான் சொல்கிறது. 9வது அவதாரம் கிருஷ்ணன் என்று ஏற்றுக்கொண்டால் அடுத்தது கடைசி 10வது கல்கி அவதாரத்துக்கு காத்திருக்கவேண்டும். நிச்சயம் நமது காலத்தில் கல்கி வரப்போவதில்லை. ஒரே ஒரு முக்கியமான விஷயம் இதில் என்னவென்றால் ஒன்பதாவது அவதாரமோ எட்டாவது அவதாரமோ புத்தர் என்று அநேக நூல்கள் சொல்கிறது. அங்கே தான் தலையைச் சொரிந்து கொள்கிறோம்.
நாராயணீயம் எழுதிய மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி குருவாயூரப்பன் எதிரே அமர்ந்து அவன் சரித்த்ரம், தசாவதாரங்கள் பற்றி அவனிடமே கேள்வி கேட்டு பாடியவர். அவர் கூட பலராமன் அவதாரம் பற்றி தான் சொல்கிறார். அப்புறம் கிருஷ்ணன் கடைசியில் தசாவதாரமாக, பத்தாவது அவதாரமாக கல்கி அவதாரம். சம்பலா கிராமத்தில் கல்கியின் அவதாரம் பற்றி சொல்கிறார்.
ஜெயதேவர் அஷ்டபதியில் தசாவதார ஸ்லோகம் பாடும்போது aनिन्दसि यज्ञविधेरहह श्रुतिजातं सदयहृदयदर्शितपशुघातम् ।
केशव धृतबुद्धशरीर जय जगदीश हरे ॥ ९ ॥ என்கிறார். nindasi yajna-vidher ahaha sruti-jatam sadaya-hridaya darsita-pasu-ghatamkesava dhrita-buddha-sarira jaya jagadisa hare. எல்லோரிடமும் கருணை காட்ட கேசவா, நீ புத்த சரீரம் எடுத்தாய் என்கிறாரே…. புத்தர் மஹாவிஷ்ணு என்று புத்தர்களே ஒத்துக்கொள்ளமாட்டார்களே. நாம் எப்படி பாடுகிறோம்?
மஹா புத்திசாலி, ஞானிகள் எவரும் இதுவரை புத்தரை மஹாவிஷ்ணு அவதாரம் என்று சொல்லி நான் கேட்டதில்லையே, படித்ததில்லையே. புத்தர் தோன்றிய இந்த நாட்டில் புத்தமதம் நிலைக்க வில்லையே. மௌரியர்கள், குப்தர்கள் காலத்தோடு மறைந்து விட்டதே. சாணக்கியன் எனும் கௌடில்யன் புத்தரை மஹாவிஷ்ணு அவதாரம் என்று சொல்லவே இல்லையே. மகா ஞானி விவேகானந்தரே ராமக்ரிஷ்ணரோ கூட மஹாவிஷ்ணு தான் புத்தர் அவதாரம் என்று சொன்னதில்லை. எப்படியோ போகட்டும்.
நாம் பலராமனை ஒரு அவதாரமாக ஏற்றுக்கொண்டு ஒன்பது கணக்கு காட்டி விட்டோம். பத்தாவது கல்கி அவதாரம் எங்கே எப்போதுஎன்று ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. குதிரை மீது வருவாராம். கையில் பட்டாக்கத்தி இருக்குமாம். கல்கியைப் பற்றி நாம் அறிவது.
1. கல்கி என்பவர் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற சரித்திர நாவல்கள் எழுதியவர். இவர் மஹாவிஷ்ணு அவதாரம் இல்லை.
2.கல்கி ஒரு வாராந்திர பத்திரிகை. கல்கி என்ற ரா. கிருஷ்ணமூர்த்தி காலத்தில் ஓஹோ என்று டிமாண்ட் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது. இன்னும் வாராவாரம் வருகிற பத்திகை. இதற்கும் மஹாவிஷ்ணுவுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
3. கல்கி சம்பாலா என்கிற ஊரில் விஷ்ணுயஷா என்கிற பிராமணருக்கும் சுமதி என்கிற மாமிக்கும் கலியுகத்தின் முடிவில் பிறப்பாராம். அது சரி. சம்பலா எங்கே இருக்கிறது? உலகத்தில் அந்த மாதிரி ஒரு கிராமம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. நிச்சயம் தமிழ்நாட்டில் நமது அரசாங்கத்தின் நிர்வாகத்தில் சம்பலா இல்லை. வடக்கே நேபாளம், திபெத் பக்கம் எங்காவது இருக்கலாம் என்று ஹேஷ்யம்… ஒரு நிம்மதியான விஷயம். கல்கி அவதாரம் காலம் அப்போது வரை பிராமணர்கள் இருப்பார்கள் என்று அறிவதில் முதலில் ரொம்ப சந்தோஷம். கல்கி வெள்ளை குதிரையின் மேல் வருவார். குதிரையின் பேர் தேவதத்தன். ஒளிவீசும் வாள் கையில் இருக்கும். தீயவர்கள் நடுங்குவார்கள். நல்லவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். அதர்மத்தை அழிப்பார். அதற்குள் அதர்மம் நம்மை எல்லாம் அழித்து விடும் நிலைமை இப்போது பயமாக இருக்கிறதே. நிச்சயம் நம்மைக் காப்பாற்ற கல்கி வரப்போவதில்லையென்று தெரிந்து விட்டது. எல்லாம் அவன் விட்ட வழி.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



