CALL HIM J K SIVAN

ஹரே ராமா, சிவ சிவா, நாராயணா …. நங்கநல்லூர் J K SIVAN

நம்மிடம் 108 உபநிஷதுகள் உள்ளன. அதில் தைத்ரீய உபநிஷத் ஒன்று. நான்கு வேதங்களில் கிருஷ்ண யஜுர்வேதத்தின் பகுதி இது. இதில் சீக்ஷா வல்லி எனும் அத்தியாயத்தில் முதலில் காணப்படுவது வேத மந்த்ரங்களை உச்சரிக்கும்போது, வேத விற்பன்னர்கள் முதலில் பாராயணம் பண்ணும் சாந்தி மந்திரம். இதை எல்லா மகான்களும் உபன்யாசத்தை ஆரம்பிக்கும்போது சொல்லிவிட்டு துவங்குவது சம்ப்ரதாயம். குரு சிஷ்யன் இருவரும் சேர்ந்து விண்ணப்பிக்கும் ஈஸ்வர வந்தனம். இதை எத்தனை முறை கேட்டிருக்கிறோம். அர்த்தம் தெரிந்து கொண்டோமா?

உபநிஷத், வேத வாக்கியங்கள் சில சொல்கிறேன். நீங்கள் இவற்றை ஏற்கனவே நிறைய தடவை கேட்டிருப் பீர்கள்.

‘ॐ सऽ ह नाववतु। सऽ ह नौ भुनक्तु। सऽ ह वीर्यं करवावहै। तेजस्वि नावधीतमस्तु। मा विद्विषावहै॥ ॐ शान्तिः शान्तिः शान्तिः॥
Om sa̠ha nā̍vavatu । sa̠ha nau̍ bhunaktu । sa̠ha vī̠rya̍ம் karavāvahai । tejasvi nāvadhītamastu । mā vidviṣāvahai ॥ Om śāntiḥ śāntiḥ śāntiḥ ॥
ஓம் ஸ॒ஹ நா॑வவது । ஸ॒ஹ நௌ॑ பு⁴னக்து । ஸ॒ஹ வீ॒ர்யம்॑ கரவாவஹை । தே॒ஜ॒ஸ்வினா॒வதீ॑⁴தமஸ்து॒ மா வி॑த்³விஷா॒வஹை᳚ ॥ ஓம் ஶாந்தி ஸாந்தி, ஸாந்தி : ॥

ஹிந்துக்கள் அமைதி ப்ரியர்கள் .எங்கும் எதிலும் அமைதி சாந்தம் வேண்டும் என்று விரும்புபவர்கள். அன்பை நேசிப்பவர்கள். இத்தகைய ஸாந்தி மந்திரம் ஒலிக்கும்போது குரு சிஷ்யன் இருவருமே சேர்ந்து சொல்வார் கள். கடவுள் வாழ்த்து, தேசியகீதம் இதெல்லாம் பாடும்போது எப்போதும் எல்லோரும் ஒன்று சேர்ந்து தானே சொல்கிறோம். அது தானே முறை..

மேலே சொன்ன மந்திரத்தின் அர்த்தம்:
‘ப்ரணவஸ்வரூபமே, இதை சேர்ந்து சொல்லும் குரு சிஷ்யன் இருவரையும் காப்பாற்று. எங்களை சக்தி யுள்ளவர்களாக்கு. உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் நாங்கள் சேர்ந்து பணியாற்ற வை. ஞானம், புத்திகூர்மை, அறிவுத்தெளிவு, இதெல்லாம் தா. எங்கள் இருவரின் கல்வியறிவும், ஞானமும் பெருகட்டும். அமைதி உள்ளும் புறமும் எங்கும் வியாபிக்கட்டும்.

இப்படி இந்த பாரத தேசத்தில் ஒவ்வொரு ஆசிரியரும், மாணவர்களும் கல்விக்கூடங்களில் இணைந்து இறைவனை வணங்கி கல்வி போதித்து கற்பித்தால், கற்றால், ஒற்றுமை, அன்பு, அமைதி பக்தி எல்லாமே எவ்வளவு நன்றாக வளரும்! எவ்வளவு சுபிக்ஷமாக நாம் இருப்போம்!.

எத்தனையோ வேண்டாத விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்கிறோமே. சினிமா பாட்டுகள் மனப்பாடமாக வார்த்தைகள் பூரா…. தெரியுமே .. என் சிறுவயதில் பராசக்தி, மனோகரா, படம் முழு டயலாக் என் சகமானவர்களில் சிலர் மனப்பாடமாக ஒப்பிப்பார்கள்… நாங்கள் ஆச்சர்யமாக வாயைப் பிளந்துகொண்டு அவர்களைப் பார்க்கும்போது அவர்கள் பெருமை அடைவார்கள். இதுவா தேவை? மேலே சொன்ன அற்புத ஸ்லோகங்களை மனப்பாடம் பண்ண ரெண்டு நிமிஷம் கூட ஆகாதே.. அதெல்லவோ வாழ்நாள் பூரா நமக்கு உதவக்கூடிய அறிவுரை. சொல்லும்போதும் கேட்கும்போதும் எவ்வளவு மன அமைதி கிடைக்கிறது.

श्रद्धावान् ऱभिे ऻानम् / shraddhAvAn labhate GYaanam ரிக்வேதத்தில் வருவது. எவன் ஸ்ரத்தையுடன் குரு உபதேசங்களையும், தனது கடமைகளையும் சாஸ்த்ரா ஸம்ப்ரதாயத்துடன் அனுஷ்டிக்கிறானோ, அவன் கை மேல் பலனடைவான். லாபம் கிட்டும்.
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

ॐ असतो मा सद्गमय । asato mA sadgamaya . இறைவா, மஹா தேவா, குருவே, என்னை அஸத்யத்திலிருந்து சத்தியத்துக்கு அழைத்தோ இழுத்தோ நடத்திச் செல். நானும் கொஞ்சம் புண்யம் பெறுகிறேன்

तमसो मा ज्योतिर्गमय । / tamaso mA jyotirgamaya என்னை இருளிலிருந்து மீட்டு ஒளிவட்டத்துக்குள் கொண்டுவா.
அஞ்ஞானத்திலிருந்து நான் மீண்டு ஞானம் பெறவேண்டுமே .

मृत्योर्मा अमृतं गमय ।mruthyormam amrutham gamaya. தோன்றியதெல்லாம் அழிந்தே ஆகவேண்டும். இறப்பு பிறப்பின் பிற்பகுதி. எனக்கு இறப்பு, மரணம் சம்பவிக்கவேண்டாம். என்றும் நிலையாக நான் உன்னைநினைத்து ஆத்மநாதா, மரணமற்று நான் உன் திருவடியில் இருக்க அருள்செய்.

र्वद्या ददाति र्वनयम् / vidyā dadāti vinayam கல்வி, ஞானம் கற்பது எளிமையை, நற்பண்பை மிகவும் பெற்று அமைதி காக்க.

भसर्द्धभभवति कमभजा / siddhirbhavati karmajA. செய்யும் தொழிலே தெய்வம் என மனப்பூர்வமாக செய்யும் எந்த காரியமும் வெற்றியையே தரும்.

सत्क्ये सवं प्रतिश्षििम् / satye sarvaM pratiShThitam எல்லாவற்றுக்குமே அடிப்படையாக, ஆதாரமாக இருப்பது சத்யம் ஒன்றே.

प्रऻानं र्ब्ह्म / pragyānam brahma ஆத்ம ஞானம் ஒன்றே பிரம்மத்தை நாம் உணர்ச்சி செய்யக்கூடியது. ப்ரம்மம் தானே பகவான். அப்புறம் என்ன இருக்கிறது அடைவதற்கு?

तनत्क्यं यािो शुभोदयं / Nityam Yato Shubhodayam ஒவ்வொரு கணமும் சுபமாகவே நேரட்டும்.பொங்கும் மங்களம் எங்கும் தங்குக… பிறரை வாழ்த்தும்போது இதைச் சொல்லலாமே. goodmorning குட் ஈவினிங் சொல்வதால் ஏற்படுவது ஒரு அற்ப நேர மகிழ்ச்சி என்பதைத் தவிர நாள் முழுதும் நம்மை ஊக்குவிக்கும் சக்தி கொண்ட மந்திரமா அது? ராம் ராம் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்று வடக்கே ஒருவரை ஒருவரை நேரில் காணும்போது சப்திக்கும் சொல் தான் உண்மையான மந்திரம். அதால் புத்துணர்ச்சி பெற முடியும். நான் அனுபவித்திருக்கிறேன்.

இன்னும் சொல்கிறேன்…

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;