GOD’S HELP J K SIVAN

கடவுளின் உதவி.       நங்கநல்லூர் J K  SIVAN 
 

எங்கேயோ  டார்ஜிலிங்  மாதிரி ஒரு  குளிர் மலைப்  பிரதேசம். வளைந்து வளைந்து  மலைப்பாதை.  இரு சக்ரம் நாலு சக்ரம்   தாராளமாக  ஏறி இறங்க  இடம் இருந்தது. 

 
 ஒருநாள்  ராஜு மலைப்பாதையில் சைக்கிகிளை பலமாக பிடமித்து மலையில் ஏறிப்  போய்க்கொண்டி
வெகுநாளாக  அங்கேயே  வசித்து   வசிக்கும்  பல சரக்கு வியாபாரி.  வருமானம் போதவில்லை என்பதால்  அவன்  மனைவி காமாக்ஷி வேறொரு இடத்தில் ஓட்டலில்  ஸர்வராக இருந்தாள் .  
 
மலைப்பாதையில் ராஜு சைக்கிளில் போகும்போது வழியில் ஒரு விலையுயர்ந்த கார் நின்று கொண்டி ருந்தது. அதை ஓட்டி வந்த வயதான மாது குளிரில் கலங்கி  நிற்கிறாள்.  வெகுநேரமாக  யாரும் அவளை லக்ஷியம் பண்ணவில்லை. ராஜு தூரத்திலிருந்தே இதை கவனித்தவன். அவள் அருகில் சைக்கிளை  நிறுத்தினான். கிழவி அவனை  என்ற இறங்க பார்த்தாள் .
 
 “அம்மா,   நான் ராஜு  இப்பகுதியில்  வசிக்கிறேன். உங்களுக்கு எதாவது உதவி தேவையா?”  
அந்த  கிழவியின் முகம்  கவலையாலும்,  பசி ,   களைப்பாலும்  வாடியிருந்ததை,   குளிரில்  நடுங்கிக் கொண்டிருந்தாள்.  காரின்  பின் பக்க ஒரு  டயர் பஞ்சர் என்பது  அவனுக்கு  புரிந்து விட்டது.  
 
 ” அம்மா   நீங்கள்  காரில்  உட்காருங்கள்.  நான்  சரி செய்து விடுகிறேன்”
காரில் இருந்து  ரிப்பேர் சாதனங்களுடன்  காரின்  அடியில் பிளாஸ்டிக் ஷீட்  போட்டு குனிந்து வேலை செய்தான்.

கைகளில்  காயத்துடன்,  ரத்தம் வடிய, ஒருவாறு  ஸ்டெப்னி டயர்  எடுத்து மாட்டி  காரை  ஓடும்படி செய்து விட்டான்.  உடலில்  மண்ணுடன்,  கைகள்  அழுக்கு படிந்து, கரைகளுடனும்  ரத்தத்துடனும் வெளி வந்த அவனிடம்  அந்த அம்மாள்

 

“தம்பி   நான் டெல்லியிலிருந்து  இந்த வண்டியை  ஓட்டி வருகிறேன்,  இங்கு வரும்போது  தான்  இவ்வாறு ஆகிவிட்டது.  நீ  செய்த  உதவிக்கு நன்றி, எவ்வளவு தந்தாலும்  அது  இந்த  சமயத்தில்  நீ  செய்த  உதவிக்கு  ஈடாகாது.  என்றாலும்  எவ்வளவு  கொடுக்கவேண்டும்  என்று  சொல்கிறாயா? “

 

ராஜு சிரித்தான்.  “அம்மா  நான் கார்  மெக்கானிக்  இல்லை. எனக்கு டயர்  மாற்றும் பழக்கம் உண்டு.எதோ  என்னால்  உங்களுக்கு  உதவ முடிந்ததே என்று  ஆண்டவனிடம்  நன்றி சொல்வேன்.  எனக்கு   வாழ்க்கையில்  பல  கட்டங்களில்  பலர் எதிர்பாராமல்   உதவியிருக்கிறார்கள்.  ஆகவே இது   கடமை என்று நினைக்கிறேன்”
”சரி நான்   உனக்கு  எப்படி உதவுவது, செல்லப்பா?”
”நீங்க  எனக்கு  ஏதாவது செய்யணும்   என்று விரும்பினால்  வேறு யாரேனும்  உதவி  நாடி  தவிக்கும்போது  உடனே  உங்களாலான  உதவி செய்யுங்கள்.   அப்போது  என்னை  நினைத்துகொள்ளுங்கள். “
‘கிழவி  தலையாட்டி  சிரித்தாள். பரம மகிழ்ச்சி அவளுக்கு.

கார்  வளைந்து கீழே மலைப்பாதையில் ஓடி மறைந்தது.    அதோடு கிழவி ஞாபகம் அவனுக்கு மறந்து போய்விட்டது.  மன திருப்தியுடன் சைக்கிளை மிதித்துக்கொண்டு  வழக்கம் அன்று மாலை  வீடு திரும்பினான் ராஜு .

மலைப்பாதையில் கீழே  இறங்கின கிழவிக்கு பசி.   எங்காவது   சாப்பிட இடம் தேடியவள் கண்ணில்  ஒரு சுமாரான உணவு விடுதி ஒன்று  பட்டது.  காரை நிறுத்தி உள்ளே சென்றாள். சின்ன  ஹோட்டல்.  அங்கு  ஒரே ஒரு  நிறைமாத கர்ப்பிணி  மட்டும்  தான்  அப்போது  இருந்தாள்.  கார்  ஓட்டிவந்த பெண்மணியை  புன்னகை யுடன்  அந்த  பெண்  வரவேற்றுச்   சூடான நீர் கொடுத்து,  சுத்த டவல் கொடுத்து   ”கை முகம் எல்லாம் துடைத்து  கொள்ளுங்கள். பிறகு சாப்பிடலாம்.” என உபசரித்தாள்.  வயிறு நிறைய ருசியான உணவு பரிமாறினாள்.


“சாப்பாடு  பிரமாதம் அம்மா.  சாப்பாட்டுக்கு எவ்வளவு தரவேண்டும். பில்  கொடுங்கள்”  

கிழவியின் வாய் பேசியதே  தவிர மனம்  வேகமாக ” பாவம்,   இந்தப் பெண்ணைப் பார்த்தால்  ஒரு  ஏழைஎன்று   எளிய  உடை காட்டியது.  நிறை மாத  கர்ப்பம் வேறு,   குளிரில்  வெறுங்காலில் நாள் முழுதும் நின்று முகம் கோணாமல் , தன் உடல் உபாதையை வெளிக்காட்டாமல் என்னமாய்  சேவை  செய்கிறாள்”  என்று  கிழவியின்  மனது  நினைத்தது.

பில்  85  ரூபாய்  என்றாலும்  500   ரூபாய்  நோட்டை  கர்ப்பிணி  கையில்  திணித்தாள் கிழவி.

 

” இதோ  ஒரு நிமிஷம்  இருங்கள்,  பக்கத்தில் சென்று இதை  மாற்றி  பாக்கி  பணம் கொண்டு  வருகிறேன்” என்று கர்ப்பிணி  அடுத்த கடைக்கு  ஓடினாள்.”

கார்  ஒட்டி வந்த  கிழவிக்கு  அப்போது   திடீரென்று ராஜுவின்  முகம் மனதில் தோன்றியது. அவன் பேசியது எல்லாம் நினைவுக்கு வந்தது.  தலையை  ஆட்டி  மனதில் தோன்றிய எண்ணத்தை  ஆமோதித்தாள்.  சிரித்துக்கொண்டே   தான்  சாப்பிட்ட  மேஜையின் மேல் ஒரு  டிஷ்யு  பேப்பரில் “பாக்கி ஒன்றும் இல்லை”  என்று ஆரம்பித்து  ஏதோ  எழுதி வைத்து விட்டு  வெளியில் சென்று காரில் பறந்து விட்டாள்.

சிறிது நேரத்திலேயே  பாக்கி  பணத்துடன் வந்த  கர்ப்பிணி,   மூதாட்டியைக்  காணோமே  என்று வியந்தவள் ,  அவள்  உட்கார்ந்திருந்த  மேசையின் மேல்  தட்டின்  அடியில்  டிஷ்யு பேப்பரில்  என்னவோ  எழுதியிருக்

கிறதே  என்று  எடுத்து பார்த்தவள்  –  அதன்  அடியில்  முழுசாக    இன்னொரு   ஐநூறு ரூபாய் நோட்டு. அதோடு  ஒரு   சின்ன   டிஷ்யூ காகிதத்தில் அதில் என்ன எழுதி இருக்கிறது?

” அம்மா, உனக்கு  நான் உதவியது என் கடமை,   எனக்கு ஒருவன்  ஏற்கனவே  இன்று உதவியதின்  தொடர்ச்சி  இது . நீயும்   இந்த  உதவி சங்கிலியை விடாமல் தொடர்ந்து  வளரவிடு ”

 
கர்ப்பிணி  ஹோட்டல் பெண்மணி இதை கண்ணீர் மல்க படித்தாள் . ரூபாயையும்   காகிதத்தையும் மடித்து தனது  கைப்பையில்  வைத்துகொண்டு  தனது அன்றைய  வேலையை  தொடர்ந்தாள்.  மேசை  துடைப்பது, வரும்  விருந்தினரை உபசரிப்பது,  உணவளிப்பது,  பில் செட்டில் பண்ணுவது கடைசியில்  எல்லா பொருள் களையும் கழுவி, துடைத்து, மீண்டும்  சுத்தமாக  அது அது  அந்த  அந்த   இடத்தில்  வைப்பது, — சாயந்திரம் கடை  முதலாளி வழக்கம் போல்  வருவார். 
 
கர்ப்பிணி அன்று  ஹோட்டல் முதலாளியிடம்  வரவு செலவு கணக்கு  பட்டுவாடா,  சொல்லி மீதி காசை  அவரிடம் தந்து அனுப்பி  விட்டு கடையைப்  பூட்டிக்கொண்டு  சென்று வீட்டு வேலைகளையும்  ஒருவாறு  முடிந்து , இரவு  படுக்கும்போது மணி  பத்து.  படுக்கையில்  படுத்தவாறு  நாள் முழுதும்  அவள்  அந்த  கிழவி  தனக்கு    கொடுத்த  பணத்தையும்,  காகிதத்தில் எழுதியிருந்ததையும்  நினைத்தே  அதிசயத்தில் இருந்தாள்.  அருகில் படுத்திருந்த கணவனை உலுக்கி  திருப்பி எல்லா விஷயங்களையும் சொன்னாள் . 

“ஏங்க, இன்னிக்கு  ஒரு  விசித்ரம் நடந்ததுங்க” என்று எல்லாவற்றையும் ஒப்பித்தாள்.  
”கவலைப்பட்டுகிட்டே இருந்தீங்களே. அடுத்த வாரம் ஆஸ்பத்திரிக்கு  700  ரூபாய்  குறையுது என்ன செய்றது,   எப்படி  டெலிவரிக்கு  பணம் கட்டறதுன்னு கேட்டீங்களே. – கடவுளா  பாத்து  இன்னிக்கு  வழி காட்டினாரு  பாத்திங்களா   இல்லேன்னா  எப்படிங்க ஒரு பணக்கார வயசான அம்மா  கரெக்டா  நமக்கு  தேவையான பணத்தை கொடுக்கணும்”   என்றாள்.

“கடவுளே  உன் அருளை யார் அறிவார்  என்று மனமுருகி  வேண்டினான்  ராஜு – காமாக்ஷியின்   கணவன்!
 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;