
இரு வல்லவர்கள் சந்திப்பு – நங்கநல்லூர் J K SIVAN
பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு மிக்கவர்கள். பாண்டுவின் மனைவி மாத்ரிக்கு பிறந்த நகுல சஹாதேவர்கள் இருவரும் அஸ்வினி ரெட்டை தேவதைகள் அம்சம். ஸஹாதேவன் மஹா ஞானி, ஜோதிடம் சாமுத்ரிகா லக்ஷணம், ராஜ நீதி முதலான சகல சாஸ்த்ரங் களும் அறிந்தவன், நேர்மை, தர்ம உணர்வு கொண்டவன். பொய் பேசாதவன். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை நன்றாக அறிந்தவன். போரில் வீரம் திறமை மிக்கவன். பாண்டவர்களில் சகாதேவன் ஒருவனிடம் மட்டுமே கிருஷ்ணனுக்கு அச்சம். சஹாதேவனுக்கு ஒரு சாபம் ; யாரும் எதையும் கேட்பதற்கு முன் எந்த உண்மையைச் சொன்னாலும் அவன் தலை வெடித்துவிடும். எனவே தனக்கு தெரிந்ததை தன்னுள்ளேயே வைத்துக் கொண்டிருந்தவன். ஆகவே பெரும்பாலும் மௌனமாகவே இருந்தவன். இதனால் தான் அவ்வப்போது கிருஷ்ணன் சஹாதேவனைத் தூண்டி கேள்விகேட்டு விஷயம் பெற்று பாரதப்போர் பாண்டவர்களுக்கு வெற்றியோடு அமைய உதவ முடிந்தது. சூதாட்டம், கபடம், பாண்டவர்களின் வீழ்ச்சி அனைத்திற்கும் மூல காரணமான சகுனியை பாரதப்போரில் கொன்றவன். கிருஷ்ணனும் ஸஹாதேவனும் சந்தித்த ஒரு சம்பவம் சொல்கிறேன். கிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்துக்கு சமாதான தூது சென்றது தோல்வியில் முடிந்து யுத்தம் நிச்சயமாகி விட்டது. கௌரவர்களும் பாண்டவர்களும் தமது பலத்தை அதிகரிக்க படைகள் சேர்த்துக் கொண்டிருந்த நேரம். அமைதியான ஒரு சோலையில் சல சலவென்று தெள்ளிய நீரோடு ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருக்க அதன் இரு கரைகளிலும் அடர்ந்த வாச மிகு மலர்கள் காற்று வீசிய போதேலாம் நறுமணத்தைக் கலந்து வாரி அள்ளி வீசியது. கரையில் மண்ணில் ஸஹாதேவன் தனிமையில் அமர்ந்து எதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். கிருஷ்ணன் வந்ததையும் கவனிக்க வில்லை. கிருஷ்ணன் ஸஹாதேவனின் கவனத்தை கலைக்க கனைத்ததையும் லக்ஷியம் பண்ண வில்லை. கிருஷ்ணன் ஸஹாதேவனின் தோளைத் தொட்டு உலுக்கினான்:”ஸஹாதேவா ! எந்த கோட்டையை பிடிக்க யோசனை.?”
“கிருஷ்ணா,நீ வந்ததையே கூட கவனிக்காமல் இருந்துவிட்டேன். என்ன கேள்வி கேட்டாய் நீ? இருந்ததையே கோட்டை விட்ட எங்களுக்கு இனி எதற்கு ஒரு புதிய கோட்டை ?”
“யுத்தம் கௌரவர்களோடு நிச்சயமாகிவிட்டதே என்ன செய்யலாம் என்று யோசனையா?”
“யுத்தம் வரும் என்று தான் முன்பே தெரியுமே எதற்கு அதைப் பற்றி கவலை தேவை கிருஷ்ணா?”
“அப்படியென்றால் ஒரு வேலை கௌரவர்களை ஜெயிக்க முடியாதோ என்ற கவலையா?”
“கிருஷ்ணா, அதைப்பற்றி நான் எதற்கு கவலைப்படவேண்டும்?”
“ஏன் ஸஹாதேவா, உனக்கு பொறுப்பில்லையா?”
“எல்லாம் என்னிச்சைப் படியாகவா நடக்கிறது கிருஷ்ணா?” சஹாதேவன் சிரித்தான் .
“என்னமோ ஸஹாதேவா! நீ பேசுவது, நடந்துகொள்வது எல்லாம் புரியாத புதிராகவே இருக்கிறது”
” ******* ‘
“ என்ன பதிலையே காணோம் ஸஹாதேவா?”“
”*********** ‘
”ஏதோ என்னிடம் சொல்ல மறைக்கிறாய் ஸஹாதேவா . சொல்லேன்”
“விதியை மதி வெல்லுமா கிருஷ்ணா??”
“ஏன் இந்த பீடிகை?? புரியும்படி சொல்லேன்!!”
“தெரியாதவர்களுக்கு சொல்லலாம். எல்லாமே தெரிந்த உனக்கு எதற்கு நான் புரியவைக்க வேண்டும்?”.
“இது தான் உன்னிடம் எனக்கு பிடித்த விஷயம் ஸஹாதேவா. சொல்லாமல் சொல்வது உனக்கு கை வந்த கலை”“ “கிருஷ்ணா. இந்த யுத்தம் வரும் என்று உனக்கு ஏற்கனவே தெரியுமல்லவா?]
” ********
”சொல் கிருஷ்ணா, இந்த யுத்ததில் யார் எல்லாம் அழிவார்கள், யார் மீள்வார்கள் என்பதும் உனக்குத் தெரியுமல்லவா ??
“ஸஹாதேவா, எனக்கும் இந்த யுத்ததிற்கும் என்ன சம்பந்தம்” நான் உங்கள் நண்பன். இயன்ற உதவி புரிகிறேன் அவ்வளவு தானே?”” ஹ ஹ ஹ”” கிருஷ்ணா, நீ எங்களுக்கு மட்டுமா உதவுபவன்?
” ஸஹாதேவா. நீ தான் இப்போது என்னை சோதிக்கிறாய்?!!!
“ கிருஷ்ணா, ஒரு பொம்மலாட்டத்தில் அதை இயக்குபவன் அல்லவோ கயிற்றை இழுத்தும் பிடித்து அவன் அசைவுக்கு ஏற்ப அல்லவோ பொம்மைகள் ஆடுகின்றன. இந்த யுத்தம், அதன் காரணம்,
அதன் விளைவு, முடிவு எல்லாம் பொம்மலாட்டக்காரன் உன்கையில் என்று எனக்கு மட்டுமே தெரியும் கண்ணா!!!. எனவே எனக்கு எந்த கவலையும் இல்லை. உன்னைப் பற்றியே நினைத்து கொண்டிருந்தேன். இன்று ஏதோ என்னையும் மீறி ஒரு சங்கடத்தில் என் மனம் மூழ்கியுள்ளது. என்னால் ஏதோ பெரும் சேதம் விளையப் போகிறது என ஓர் நிம்மதியின்மை எனக்குள் தோன்றுகிறது. அது என்ன என்று தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எது வரினும் அது நீ அறிவாய். ஆகவே நீயே என்னை அத்தகைய சங்கடத்திலிருந்து மீட்பவன். மீட்க வேண்டும், என்று தான் என் விருப்பம்.
“ஸஹாதேவா!!! நான் என்னப்பா செய்ய முடியும்??. நீங்கள் அனைவரும் உங்கள் துன்பத்தை நீங்களே விலை கொடுத்து வாங்கிவிட்டு அதற்கு என்னை ஏன் குறை சொல்ல வேண்டும்? உன்னைத்தேடி துரியோ தனன் வரப்போகிறானாமே எதற்கு என்று உன்னைக் கேட்டுத் தெரிந்து கொள்ள தான் நான் வந்தேன் நீ அதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை!!!”.
“ எதற்கு என்னைக் காண வருகிறான் என்று எனக்கே தெரியாது கண்ணா. ஆனால் இதுவே என் சங்கடமோ என தெரியவில்லை, கண்ணா””
“ ஓஹோ அப்படியா? எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும். வருவது பற்றி இன்று ஏன் கவலை கொள்கிறாய். என் மேல் பாரத்தை போட்டுவிட்டேன் என்றாயே நான் தானே அதை இனி சுமக்க வேண்டும். அவ்வாறே ஆகட்டும்.”
வந்த காரியம் முடிந்ததால் கிருஷ்ணன் சென்றான்.
துரியோதனன் ஸஹாதேவனை யுத்தத்திற்கு நாள் பார்த்து கொடுக்க சொன்னதும், ஸஹாதேவன் பாரபக்ஷமில்லாமல் அவன் வெற்றி பெற அமாவாசைக்கு நாள் குறித்ததும், கண்ணன் அதை போதாயன அமாவாசைக்கு மாற்றி அரவானைக் களபலி கொடுத்து பாண்டவர்க்கு வெற்றி தேடி தந்ததும் பாரதத்தில் படிக்கிறோமே. என் ”ஐந்தாம் வேதம்” முழு பாரதமும் விளக்கும் 2 பாகம் புத்தகம் வேண்டுமானால் அணுகவும் வாட்ஸாப்நம்பர் 9840279080
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

