RAMANANUBHAVAM J K SIVAN

தூரம் கிடையாது. –   நங்கநல்லூர்  J K  SIVAN 

ரமணாஸ்ரமத்தில்  எண்ணற்ற  பக்தர்கள்  பகவான் தரிசனத்துக்கு  காத்திருப்பார்கள்.  சங்கர்லால் பேங்கர்  என்ற  மஹாத்மா காந்தியின் நண்பர்  ஒருவர் 1934 ல் ஒரு  ஜெர்மன் விமானப்படை அதிகாரியை சந்தித்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்த போது  அந்த  ஜெர்மன் அதிகாரி  சங்கர்லாளிடம் ”உங்கள் தேசத்தில் ரமண மஹரிஷி என்று ஒரு ஞானி இருக்கிறாராமே, அவரைப் பார்த்திருக்கிறீர்களா? அதிசயமான மனிதராமே?” என கேட்டார்.   சங்கர்லாலுக்கு  ரமணரைப் பற்றி அதிகம் தெரியாது. ஆகவே  ”இல்லை அவரை நான் சந்தித்ததில்லை, கூடிய சீக்கிரம் அவரை தரிசிக்க எண்ணம் ” என்று பதில் சொன்னார்.
1935ல் சங்கர்லால் சென்னை வந்தபோது அவர் நண்பர்  சண்டே டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர்   M. S. காமத்தை  சந்தித்தார். காமத்  ரமண  பக்தர்.
”வாருங்கள்,  நாம் இருவருமே ரமணரைப் போய்  தரிசிக்கலாம்”  என்று அழைக்க இருவரும் திருவண்ணாமலை சென்றார்கள். ஆசிரமம் ரொம்ப  சாதாரணமாக  ஆடம்பரம்  எதுவுமின்றி அமைதியாக இருந்தது.  உள்ளே விசாலமான   கூடம். அதில் பக்தர்கள் அநேகர் தரையில்  அமர்ந்து கொண்டிருந்தார்கள்.  கோவணம் தரித்த ஒருவர்  ஒரு சோபாவில் சாய்ந்தவாறு, பேசாமல் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.  சங்கர்லாலுக்கு  ஷாக் அடித்தாற்போல  ஒரு  அனுபவம். அவர்  தேகம்  ஏனோ தானாகவே நடுங்கியது.  நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ‘இவரா  ரமணர்?  அவரிடம் என்னென்னவோ கேட்க   மனதில் எண்ணம் இருந்தது. ஆனால் எதையும் இப்போது காணோமே. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நான்  பரிசுரித்தமடைந்தது போல் எனக்குள் தோன்றியது.  ஓஹோ  நான் தான்  ப்ரம்மமா?  ‘சிவோஹம்  சிவோஹம் ‘ என்று இத்தனை நாள் சொல்லாத ஒரு  வார்த்தை  ஏன் மனதில் திரும்ப திரும்ப எழுகிறது?  எல்லாம் இந்த  அபூர்வ சூழ்நிலையாலா?” என்று எண்ணினார்  சங்கர்லால்.  அவர்  பூஜை  தியானம் எல்லாம் பண்ணுகிற  ஆன்மீக வாதி இல்லையே.
சங்கர்லால் தனக்குள் ஒரு அசாத்திய  தன்னம்பிக்கை  உண்டானதை  அனுபவித்தார்.  ஒரு மணி நேரத்துக்கு பிறகு  அங்கிருந்து விடைபெற்று செல்லும்போது சங்கர்லால் ஒரு புது மனிதராகி இருந்தார்.
டில்லியில்  மஹாத்மா  காந்தியை சந்தித்து தனது ரமணாச்ரம அனுபவத்தைச்  சொன்னார்.
”ஷங்கர், மகரிஷியை சந்தித்தது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம்.   அடுத்த தடவை ஆஸ்ரமத்துக்கு போனால் அதிக நேரம் அங்கே தங்குங்கள்’  என்றார் காந்தி.

1936ல்  மீண்டும் சங்கர்லால் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் சென்றார்.  மஹரிஷியை சந்தித்தார். பேசினார்.
”சுவாமி  நான்  எனது ஆன்மீக  முன்னேற்றத்துக்கு என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் ?
”புத்தகமா? எதற்கு புத்தகம்?  உன் இதயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால்  வெளிச்சம் காண்பாய்”
இதற்கு மேல் மஹரிஷி பேசவில்லை.  மகரிஷி சொன்ன வார்த்தைகள் திரும்ப திரும்ப  சங்கர்லால் மனதில்  நாள் முழுதும்  தோன்றிக் கொண்டே இருந்தது.   ஒரு பகல் ஒரு இரவு ஆஸ்ரமத்தில் தங்கி விட்டு ரயிலில்  மெட்ராஸுக்கு  கிளம்பினார்.

”இன்று காலை நாலு மணிக்கு  விழிப்பு வந்தது.  படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.  கண் எதிரே  மஹரி ஷியின் தோற்றம். கண்ணை நன்றாக துடைத்துக் கொண்டேன்.   அட என்ன  ஆச்சர்யம்  என் எதிரே தத்ரூபமாக  பகவான் நிற்பது போல் அல்லவோ ஒரு ஆச்சர்யம் அனுபவம் !” அன்று முழுதுமே மனதில் சொல்ல இயலாத ஒரு ஆனந்தம்.”என்கிறார்  சங்கர்லால்.    இதை  அப்படியே  டில்லி திரும்பியபோது  மஹாத்மா காந்தியிடமும் சொன்னார்.
”ஷங்கர், நீ  அடிக்கடி  திருவண்ணாமலை போய் அந்த ரிஷியை தரிசிக்க வேண்டும். உன் ரமணானுபவத்தை  நான்  ராஜன் பாபு, ஜம்னாலால் பஜாஜ் ரெண்டு பேரிடமும் கூறி, அவர்களையும்  திருவண்ணாமலை போகச்  சொன்னேன் ”என்றார்  காந்தி.1937ல்  மீண்டும் சங்கர்லால்  திருவண்ணாமலை சென்றார். திருப்பூரில் பஞ்சத்தால்  வாடும் ஏழை மக்கள் தன்னோடு  போட்டோக்களை எடுத்து சென்றார். கூடத்தில் பக்தர்களோடு  சங்கர்லாலும் அமர்ந்து பகவான்  ஆத்ம விசாரம்,ஆத்ம ஞானம் ,ஆத்மானந்தம் பற்றி பேசுவதை கேட்டார்.அவர்  நண்பர்  டாக்டர் சயீத்  அருகில் உட்கார்ந்திருந்தார்  அவரிடம்   ”ஸயீத்.   நான் பஞ்சத்தால் பசியால் வாடும் அநேகரை திருப்பூரில்  பார்த்தேன்.எப்படி  அந்த நிலையில் ஒருவர் எப்படி  ஆத்ம சிந்தனை,ஆத்மானந்தம் பெற  முடியும் என்று எனக்கு சந்தேகமாக  இருக்கிறது ”  என்றார் .
ஸயீத்  என்ன செய்தார் தெரியுமா? சங்கர்லால்  காட்டிய  திருப்பூர்  பஞ்ச பட்டினி மக்கள் போட்டோவை எடுத்துக் கொண்டு போய் மகரிஷி  அருகில்  வைத்து ”என் நண்பர்  எப்படி இந்த  மன நிலையில் ஒருவர்  அமைதியாக   ஆத்மா பற்றி சிந்திக்க முடியும், ஆனந்தமாக இருக்க முடியும்?’ என்று கேட்கிறார்” என சொல்லிவிட்டார்.
பகவான் அமைதியாக ”மற்றவர்கள் கஷ்டத்திலிருக்கும்போது உதவுவது நமது கடமை.அப்படி உதவுவதற்கு தனிப்  பெருமை கொண்டாடக்கூடாது. பகவான் தான் எல்லோரையும் ரக்ஷிப்பவர். எனக்கு தெரிந்து  ரெண்டு மூன்று நாள் கூட சாப்பிடாதவர்கள், பல ரிஷிகள் பல மாதங்கள்கூட எதுவும்  உண்ணாமல் ஆனந்தமாக  ஆத்ம சிந்தனையில்  ஈடுபட்டு ஆனந்தம் அடைந்தவர்கள். உள்ளே  அனுபவிக்கும்  அமைதி தான் காரணம்.  இந்தா  உன் போட்டோக்கள் ”  ரமணர்  சங்கர்லாளிடம் போட்டோக்களை தந்தார்.
அப்போது தான் ஒரு ஆச்சர்யம்  நிகழ்ந்தது. சங்கர்லால் அந்த போட்டோக்களை மீண்டும் பார்த்தார். இதென்ன அதிசயம்? இதுவரை கண்ணில் படாதது கண்ணில் பட்டது. அந்த போட்டோக்களில்   கல்லுடைத்துக் கொண்டிருந்த  அநேக  பஞ்ச பட்டினி மக்கள் அநேகர் முகத்தில் சிரிப்பு.ஆனந்தம். ஏன் இதை நான் கவனிக்க வில்லை?
அடுத்த நாள் மஹரிஷியை  சந்தித்தார். அவரை வணங்கினார்.மனதுள் ஒரு எண்ணம்..  ”ஆஹா இந்த  ரிஷியை  நமது மஹாத்மா காந்தி சந்தித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவர் எங்கோ டில்லியில் அல்லவோ இருக்கிறார்”மகரிஷி அர்த்த புஷ்டியோடு  சங்கர்லாலை  பார்த்தவர்  புன்னகைத்தார்.  பிறகு  தானாகவே  ”தூரம்  இடைவெளி  என்பதே  கிடையாது. அது ஒரு பிரமை”  என்றார் .
சங்கர்லால்  குஜராத்தில் வார்தா சென்றபோது  காந்தியைப் பார்த்தார்.  இதை அவரிடம் சொன்னபோது ”அட, இது உனக்கு புரியவில்லையா?   இடைவெளி , தூரம் என்பது  நாம் நினைப்பது போலவே இல்லை. மூன்று நாள் முன்பு நான்  இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேனே ” என்றார்.  காந்தி அந்த பத்திரிகையை கொண்டுவரச்  சொல்லி படித்துக் காட்டினார். மூன்று நாள் முன்பு தான் தெற்கே  திருவண்ணாமலையில் இதைப் பற்றி  மஹரிஷியும்  சொன்னது சங்கர்லாலுக்கு    உடனே  நினைவுக்கு வந்தது.
ஆம்  தூரம்,இடைவெளி என்பது மனதுக்கு கிடையாது.எங்கோ அமெரிக்காவில் இருந்தாலும்  மனதில் ஒருவரை  சந்தோஷமாகப் பார்க்கமுடியும்  பேச முடியும்.. 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;