
நிர்வாண மஞ்சரி. ஆதி சங்கரர். –நங்கநல்லூர் J K SIVAN
என்னை யாரென்று எண்ணி நீ பார்க்கிறாய்?
ஆதி சங்கரரின் அற்புத படைப்புகளில் அருமையான ஒன்று நிர்வாண மஞ்சரி, பன்னிரண்டு ஸ்லோகங்கள்கொண்டது. பெயரைப் பார்த்து நெளியவேண்டாம். மஞ்சள் சமாச்சாரம் இல்லை இது. நிர்வாணம் என்றால் நமது புத்தியில் ஆடையற்ற ஒரு உருவம் தெரிகிறதே அது தப்பு. நிர்வாணம் என்றால் ஒன்றுமில்லாத, அதாவது பற்றற்ற நிலை. மோக்ஷத்துக்கு ஏற்ற மனோநிலை. அது சம்பந்தமாக குட்டி குட்டி ஸ்லோகங்கள் .
1. अहं न अमरो नैव मार्त्यो न दैत्यो, न गन्धर्व यक्ष पिशाच प्रभेदः। पुमान् नैव न स्त्री नैव शण्ड, प्रकृष्ट प्रकाश स्वरूप शिवोऽहम्। 1
Aham na amaro naiva marthyo na daithyo, Na Gandharva Yaksha, pisacha prabhedha, Pumanniva na sthree naiva shanda, Prakrushta prakasa swaroopa Shivoham
அஹம் நாமரோ நைவ மர்த்யோ ந தை3த்யோ ந க3ந்த4ர்வ யக்ஷ: பிசாச ப்ரபே4த3: | புமான் நைவ ந ஸ்த்ரீ நைவ ஷண்ட3: ப்ரக்ருஷ்ட ப்ரகாச ஸ்வரூப: சிவோ(அ)ஹம் || 1
நான் யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்? நான் ஒரு தேவன் என்றா? நான் தேவன் அல்ல, மனிதனும் அல்ல, அஸுரனும் அல்ல, கந்தர்வன், ராக்ஷஸன், பிசாசம் என்கிற வகுப்பில் சேர்ந்தவனும் அல்ல, ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, அலியும் அல்ல. உத்தமமான ஞானத்தையே ஸ்வரூபமாயுடைய சிவ (மங்கள) ஸ்வரூபியான பரப்பிரஹ்மமே நான்.
எனக்கு உருவம் உண்டென்றால் உண்டு, இல்லையென்றால் அது இல்லை. என்னை சிவன் என்பார்கள்.
2 अहं नैव बालो युव नैव वृद्धो, न वर्णी न ब्रह्मचारी न गृहस्थः। वन्सधोभी नाहं संशुद्य धर्म, जगज्जन्म नैसैकहेतु शिवोऽहम्। 2
Aham naiva balo, yuva naïva vrudho, Na varni , na brahmachari na Grahastha, Vansdhobhi naham sansrudhya a yasa dharma, Jaga jjanma nasaika hethu Shivoham. 2
அஹம் நைவ பா2லோ யுவா நைவ வ்ருத்3தோ4 ந வர்ணீ ந ச ப்3ரஹ்மசா ந க்2ருஹஸ்த2: | வநஸ்தோ3(அ)பி நாஹம் ந சங்சருத்ய த4ர்மா ஜகஜ்ஜந்ம நாசைக ஹேது: சிவோ(அ)ஹம் || 2
அப்படியென்றால் நீ ஒரு சிறுவனா என்றால் இல்லை ;நான் பாலனும் அல்ல. யுவனும் அல்ல. கிழவனும் அல்ல, (பிராஹ்மண க்ஷத்திரிய வைசிய சூத்திரர் என்கிற நான்கு) வர்ணங்களில் எதையும் சேர்ந்தவனுமல்ல, (பிரஹ்மசாரீ, கிருஹஸ்தன். வானப்பிரஸ்தன் ஸன்னியாஸி என்கிற நான்கு ஆசிரமங்களில்) எதுவும் இல்லாதவன். எல்லாக் கர்மாக்களையும் விட்ட யோகியும் அல்ல. பிரபஞ்சத்தின் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், அது தான் , ஆக்கல் காத்தல் அழித்தல் மூன்றுக்கும் ஒரே காரணமாயிருக்கிற மங்கள ரூபியான பரப் பிரஹ்மம் என்று ஒருவனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? நான் தான் ஐயா அது. என்னை சிவன் என்பார்கள்.
अहं नैव मेयस्थिरो भूता माया, तद्वैक्षितुम माम् प्रक्रिया स्थुपय। समस्लीष्टको तार्यो अप्याध्वितीया, सदा अथिन्द्रिय सर्व रूप शिवोऽहम्। 3
Aham naïvameyasthiro bhoota maya, Thadaivekshithum maam pradhangaasthupaya, Samaslishta kayo thரே yo apyaadhwitheeya,
Sada athindriya sarva roopa shivoham. 3
அஹம் நைவ மேயஸ் – தி2ரோபூ4த – மாயா, ததை2வேக்ஷிதும் மாம் ப்ருத2ங் – நாஸ்த்யுபாய்: | ஸமாச்லிஷ்ட – காய – த்ரயோ(அ)ப்யத்3விதீய: ஸதா3(அ)தீந்த்3ரிய: ஸர்வரூப: சிவோ(அ)ஹம் || 3
நான் வேத சாஸ்த்ர பிரமாணங்களினால் அறியக்கூடியவன் அல்ல, மாயையினால் மறைக்கப்பட்டவனும் இல்லை. என்னை அறிவதற்கு வேறு தனியாக உபாயம் கிடையாது. ஸ்தூலம், ஸூக்ஷ்மம், காரணம் என்கிற மூன்று சரீரங்களால் நன்கு சூழப்பட்டவனாயிருந்தபோதிலும், இரண்டாவதென்பது இல்லாததாய் எப்பொழுதும் இந்திரியங்களுக்கு எட்டாததாய் எல்லா வஸ்து ஸ்வரூபமாக இருக்கும் மங்கள ஸ்வரூபியான பரப்பிரஹ்மமே நான். புரிகிறதா. இல்லையென்றால் திரும்ப திரும்ப படித்து யோசி. நான் யாரென்று புரிகிறதா? என்னை சிவன் என்பார்கள்.
अहं नैव मन्तः न गन्ता न वक्ता, न कर्ता न भोक्ता न मुक्ता आश्रमस्थाः। यदाहं मनो वृत्ति भेद स्वरूप, स्थधा सर्ववृत्ति प्रदीपा शिवोऽहम्। 4
Aham naiva mantha na gantha na vaktha, Na kartha , na bhoktha, na muktha asramastha,Yadaaham mano vruthi bheda swaroopa,
Sthadha sarva vuthi pradheepa, shivoham. 4
அஹம் நைவ மந்தா ந க3ந்தா ந வக்தா ந கர்தா ந போ4க்தா ந முக்தாச்ரமஸ்த2: |யதா2(அ)ஹம் மநோவ்ருத்தி பே4த2 ஸ்வரூப: ஸ்யதா ஸர்வவ்ருத்தி ப்ரதீ3ப: சிவோ(அ)ஹம் || 4
நான் (மனஸினால்) யோசிப்பவன் இல்லை, எங்கும் காலால் அலைந்து திரிபவனும் இல்லை. பொட்டுக்கூடை பேச்சு எவரிடமும் பேசுபவன் கிடையாது. ஐம்புலன்களால் காரியம் செய்பவன் இல்லை. உலகம் அளிக்கும் சுக போகங்களை அனுபவிப்பவனும் கிடையாது . நான் ஸ்வதந்திரன், எனக்கு எந்த சொந்த பந்தம், , ஒட்டு உறவு பற்று பாசம் எதுவும் இல்லாத ஒருவன். அதை தான் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட்டவன் என்று சொல்வது. அந்த நிலையில் உள்ளவன் நான். ம் அல்ல, எப்படி நான் மனஸினுடைய விருத்திகளின் பிரதிபலிப்பாக காட்சி யளிப்பவன் என்றாலும் எல்லா விருத்திகளையும் என் கட்டுப்பாட்டால் பிரகாசிக்கும்படிச் செய்யும் வெளிச்சமாயுள்ள மங்கள ஸ்வரூபமான பரப்பிரஹ்ம மாகவும் அறியப்படுபவன். என்னை சிவன் என்பார்கள்.
न मेय लोक यत्र प्रवाहा प्रवृत्ति, र्णमेय बन्धबुद्धा दूरीहा निवृत्ति। प्रवृत्ति निवृत्तस्य चित्तस्य वृत्ति, र्यथास्थान्वहम् तथ स्वरूप शिवोऽहम्। 5
Na mey loka yathra pravaha pravruthy, Rna mey bandhabhuddha dureeha nivurthy, Pravuthy nivurthasya chithasya vruthy, Ryathasthanvaham thathswaroopa shivoham. 5
மே லோக யாத்ரா ப்ரவாஹ ப்ரவ்ருத்தி: ந மே ப3ந்த4 – பு3த்2த்4யா து3ரீஹா நிவ்ருத்தி: | ப்ரவ்ருத்திர் நிவ்ருத்த்யா(அ)ஸ்ய சித்தஸ்ய வ்ருத்திர் யதஸ்த்வந்வஹம் தத்ஸ்வரூப: சிவோ(அ)ஹம் || 5
எனக்கு உலகங்கள் சகலத்தையும் இணைக்கும் காரியமோ, எண்ணமோ இல்லை. அவசியமும் எதுவும் இல்லை. என் சிந்தனையை, மனதை ஆக்கிரமிக்க காத்திருக்கும் தீய எண்ணங்களோ, சுயநல சிந்தனைகளோ எதுவும் இல்லை. கிட்டவே நெருங்காது. என் மனம் எதில் என்றால் காரிய காரணங்களுக்கு அப்பால், ஆதி அந்தம், தோற்றம் முடிவு எல்லாவற்றையும் கடந்த சர்வ வியாபி. அரூபமாக சாஸ்வதமாக உள்ள மங்கள ஸ்வரூபியான பரப்பிரஹ்மம். என்னை சிவன் என்பார்கள்.
निधानं यदा ज्ञान कर्मस्वस्य कार्य, विन यस्य सात् व स्वतो नैव भूति। यध्यान्तमध्यम् अन्तरालान्तरा, प्रकाशात्मकम् स्यात् देवहं अस्मि। 6
Nidhanam yada jnana karyasya karya, Vina yasya sathvam swatho naiva bhathi, Yadhyantha madhya antharalantharala,
Prakasathmakam syatha devaham asmi. 6
நிதா3நம் யத3ஜ்ஞாந – கார்யஸ்ய கார்யம் விநா யஸ்ய ஸத்த்வம் ஸ்வதோ நைவ பா4தி | யதா3த்4யந்த மத்4யாந்தராளாந்தராள ப்ரகாசாத்மகம் ஸ்யாத் ததே3வாஹமஸ்மி || 6
நம்மடைய அறியாமையால், அஞ்ஞானத்தால், அவதிப்படுகிறோம். எளிதில் புலன்களின் ஆதிக்கத்துக்கும் உலக மாயைக்கும் அடிமையாகிறோம். இப்படி எந்த உபாதையும் இல்லாமல் இருக்க முடியுமானால் ஞான மார்க்கத்தில் புக வேண்டும். இடது இதெல்லாம் கடந்ததோ, எதை மாயையோ, ஈர்ப்போ நெருங்காதோ, எது காரிய காரணங்களை கடந்ததோ, எது எல்லாம் தானாகவே காண்கிறதோ, அந்த ப்ரம்ம ஸ்வருபத்தை புரிந்து கொண்டால் அது நான் தான். எது ஞான ப்ரகாசமோ அது நான் ப்ரம்மம். என்னை சிவன் என்பார்கள்.
यथोहम् न बुद्धिर् न मेय कार्यसिद्धि, यथोनामङ्कम् न मेय लिङ्गभंगम्। हृद् आकास वर्ति गाथाङ्ग त्रयार्थि, सदा चिदानन्द मूर्॒ति शिवोऽहम्। 7
Yathoham na budhir na mey karya sidhi, Yatho nahamangam na mey linga bhangam, Hrudhakasa varthi , gathanga thrayarthi,Sada Sachidananda murthy Shivoham. 7
யதோ(அ)ஹம் ந பு2த்2தி4ர் ந மே கார்ய ஸித்3தி4: யதோ நாஹமங்க3ம் ந மே லிங்க3 ப4ங்க2: |
ஹ்ருதா3காசவர்தீ க3தாங்க3த்ரயார்தி: ஸதா3 ஸச்சிதாநந்த மூர்தி: சிவோ(அ)ஹம் ||
நான் அறிவோ, புத்தியோ இல்லை. எனக்கு என்று எந்த கர்மம், காரியமும் இல்லை. நான் சரீரமல்லவாதலால் பூத ஸூக்ஷ்ம சரீரத்திற்கு ஏற்படும் கெடுதல் அவஸ்தை எதுவும் எனக்கு இல்லை. ஹ்ருதயாகாசத்தில் எப்பொழுதும் இருப்பதாய் (ஸ்தூலம் ஸூக்ஷ்மம் காரணம் என்ற) மூன்று சரீரங்களினுடைய துன்பத்திலிருந்து விலகினதாய் ஸச்சிதானந்த ஸ்வ ரூபமாக இருக்கும் என்னை, மங்கள ரூபியான பரப் பிரஹ்மம் என்பார்கள். மேலும் என்னை சதானந்தமான சிவன் என்பார்கள்.
यदासीद्विलसाद् विकारम् जगद्ध, द्विकाराश्रयम् न द्वैत्यथ्स्यथ। मन बुद्धिः चित्ताहमकर मूर्॒ति, प्रवृत्तिर्यथास्याथ देवहं अस्मि। 8
Yadaaseedvilasad vikaram jagadha, Dwikarasrayam naa dwithyathwath syath, Mano budhi chithahamakara murthy,
Pravruthiryatha syatha devaham asmi.
யதா3ஸீத்3 விலாஸாத்3 – விகாரோ ஜக3த்3- யத்3 விகாராச்ரயோ நாத்3விதீயத்வத: ஸ்யாத் |
மநோ பு2த்தி4 சித்தாஹமாகார வ்ருத்தி ப்ரவ்ருத்திர் யத: ஸ்யாத் ததே3வாஹமஸ்மி || 8
எது விகஸிக்கும் போது (மலர்வதினால்) பிரபஞ்சமென்ற மாறுதலாக மாறியதோ, அதே சமயம் எது தனக்கு இரண்டாவதாக எதுவும் இல்லாததோ, மாற்றம் ஒன்றும் அடையாததோ, எதனால் மனஸ் புத்தி சித்தம் அஹங்காரம் என்று பிரிவுபட்டுள்ள அந்தக்கரண விருத்திகளுக்கு சம்பந்தமில்லாத பற்றற்றதோ, அதுவே நான். ப்ரம்மஸ்வரூபம். என்னை சிவன் என்பார்கள்
यदन्तरबहिर्व्यापकं नित्य शुद्धम्, यदेकं सदा चिदानन्द काँदम्। यथास्थूला सुष्क्रम् प्रपञ्चस्य भानम्, यथास्थः प्रसूथिष्ठ देवहँ अस्मि। 9
Yadantharbahirvyapakam nithya shudham,Yadekam sada sachidananda kandam, Yatha sthoola sukshma prapanchasya bhanam,
Yathasthat prasoothistha devahamasmi.
யத3ந்தர் – ப3ஹிர் வ்யாபகம் நித்ய சுத்3த4ம் யதே3கம் ஸதா4 ஸச்சிதாநந்த3 கந்த3ம் | யத: ஸ்தூ2ல ஸூக்ஷ்ம ப்ரபஞ்சஸ்ய பா4நம் யதஸ்தத் ப்ரஸூதிஸ் – ததே3வாஹமஸ்மி || 9
ஸ்படிகம் தன்னுளே துவுமில்லாதது எதையும் அப்படியே பிரதிபலிக்கும் உள்ளேயும் வெளியேயும்,அதாவது அகமும் புறமும் பரிசுத்தமாக தளிவாகஇருப்பது. நான் எப்போதும் எல்லோரிடத்தும்,எதனிடத்தும் ஒன்றாகவே,அதனுள் இருப்பவன். சத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாயுமுளளதாலும் ,எதனிடத்திலிருந்து பிரபஞ்சம் உருவானதோ அந்த சதானந்த பரப்பிரம்மம். என்னை சிவன் என்பார்கள்.
यदर्केन्दु विध्वत् प्रभा जाल माला, विलासपदं यथ्स्व भेदाधि शून्यम्। समस्तं जगद्यस्य पदाथ्मकम् स्य,ध्याथा शक्ति भानम् तदेवहँ अस्मि। 10
Yadarkendu vidhwat prabha jala maala, Vilasapadam yathswa bhedhadhi soonyam, Samastham jagdyasya padathmakam sya,
Dhyatha shakthi bhanam thadevahamasmi. 10
யத3ர்கேந்து3 வித்3யுத் ப்ரபா4 ஜால மாலா விலாஸாஸ்பத3ம் யத் ஸ்வபே4தா3தி3 சூந்யம் |
ஸமஸ்தம் ஜகத் யஸ்ய பாதா3த்மகம் ஸ்யாத் யத: சக்திபா4நம் ததே3வாஹமஸ்மி || 10
எது ஸூர்யன் சந்திரன் மின்னல் போன்ற ஒளிக்கு காரணமோ, எது எதனிடத்திலும் பேதம் இன்றி,அபேதமாக உள்ளதோ, எது தன்னுள் சகலத்தையும் அடக்கமாக கொண்டதோ, எது எதனிடத்திலும் சம்பந்தமில்லாமல் தனித்து காண்கிறதோ, அந்த பரப்பிரம்மம் தான் நான். என்னை சிவன் என்பார்கள்.
यथा काल मूर्तिर्भिभेति प्रकाशम्, यथाऽश्चित बुद्धिन्द्रियाणां विलासः। हरिब्रह्म रुद्रेन्द्र चन्द्राधीनाम्, प्रकाशो यथा स्यात् देवहँ अस्मि। 11
Yatha kala moorthir bhibhethi prakamam, Yathaschitha budhindriyanam vilasa, Hari brahma rudrendra chandradheenaam,
Prakaso yatha syatha devahamasmi. 11
யத: கால ம்ருத்யுர் பி3பே4தி ப்ரகாமம் யதச்சித்த பு3த்3தீ4ந்த்ரியாணாம் விலாஸ: | ஹரி ப்4ரஹ்ம ருத்3ரேந்த்ர சந்த்3ராதி3 நாம ப்ரகாசோ யத: ஸ்யாத் ததே3வாஹமஸ்மி || 11
எதனிடம் காலமிருத்யு கூட அஞ்சுகிறதோ , எதனால் சித்தம் புத்தி இந்திரியங்கள் பிரகாசம் பெறுகிறதோ, எதனால் விஷ்ணு பிரஹ்மா, ருத்ரன் இந்திரன் சந்திரன் முதலானவர்களும் ஞானப்பிரகாசம் பெறுகிறார்களோ, அந்த பிராமம் நான் தான். என்னை சிவன் என்பார்கள்.
यदाकाशाद् सर्वगं शान्त रूपम्, परम ज्योतिरेकाकार शून्यम् वरेण्यम्। यदन्तः शून्यम् परम् शङ्कराख्यम्, यदन्तर विभavyं तदेवहं अस्मि। 12
Yad akasavad sarvagam, Shantha roopam, Parama jyothiraakara soonyam varenyam, Yadad antha soonyam param, Shankarakhyam,
Yadanthar vibhavyam, tadhevaha masmi.
யதா3காசவத் ஸர்வக3ம் சாந்த ரூபம் பரம் ஜ்யோதிராகார சூந்யம் வரேண்யம் | யதா3த்3யந்த சூந்யம் பரம் சங்கராக்3யம்
யத3ந்தர் விபா4வ்யம் ததேவாஹமஸ்மி || 12
எது ஆகாசம் போல எல்லாவற்றிலும் வியாபித்துக்கொண்ட ஸ்வரூபமோ, பரஞ்சோதியோ, போற்றத்தக்கதாகவுள்ளதோ, எது ஆதி அந்தம் ஆற்றதோ, ப்ரபஞ்சத்துக்கே க்ஷேமத்தைத் தருகிறதோ,.அந்த சர்வ ப்ரம்மம் நான் தான். என்னை சிவன் என்பார்கள்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



