
ஹர்ஷ சாம்ராஜ்யம் – நங்கநல்லூர் J K SIVAN
எவ்வளவு பெரிய ராஜாவாக இருந்தாலும் விதியின் விளையாட்டிலிருந்து தப்ப முடியாது. மஹாராஜா இறந்து, ராணி தீக்குளித்து, அண்ணன் கொலை செய்யப்பட்டு, ஆசைத் தங்கையின் கணவன் போரில் மாய்ந்து, தங்கை சிறைப்பட்டு உயிர் தப்பி காட்டில் தனித்து வாடி, தற்கொலை செய்யத் துணியும் நேரத்த்ல் அவளைத் தேடி கண்டுபிடித்து மீட்டு, அவளோடு ஹர்ஷன் தானேஸ்வரத்துக்கு திரும்பினான்.
நகரம் கோலாகலமாக அவர்களை வரவேற்றது. எங்கும் வாத்ய கோஷம், வாழ்த்து சப்தம், மலர் மழை. ராஜ்ய ஸ்ரீ அரண்மனையில் மீண்டும் அமைதியாக வாழ்ந்தாள். ஆனால் ஹர்ஷன் இதயத்தில் புயல் ஓயவில்லை. வஞ்சகம், அதர்மம், அநீதிக்கு பழி தீர்க்க வேண்டாமா? காயம் ஆறவில்லையே. கௌட தேசம், மால்வா இரண்டின் மீதும் படையெடுத்து துரோகிக ளை அழிக்கவேண்டும்.
சமயம் கை கூடியது. வடகிழக்கில் காமரூப ராஜ்ய அரசன் பாஸ்கரவர்மன் நட்பு கோரி பரிசுகள் அனுப்பினான்.
“ஹர்ஷா, உனக்கு நேர்ந்த துன்பங்கள் அறிந்தேன். தைர்யமாக இரு. துரோகிகள், தீயவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். என் துணை, படை உனக்கு எப்போதும் உதவும். என் இதயத்தில் உன் மேல் அன்பு என்றும் உண்டு.
ஹர்ஷன் மகிழ்ந்தான். பாஸ்கர வர்மன் நட்பை ஏற்றான். பரிசுகள் தூதுவன் மூலம் அனுப்பினான்.
இரவு தூக்கமில்லை. உப்பரிகையில் தனியே ஆகாயத்தை பார்த்தவாறு நின்றான். மனதில் ஆயிரம் எண்ணங்கள் தீயாக எரித்தது. ஹர்ஷன் எதிரே தானேஸ்வரம் அவன் மேல் நம்பிக்கையோடு தாயின் அரவணைப்பில் தூங்கும் சேய் போல் உறங்கிக் கொண்டிருந்தது.
”பகவானே என்னை ஏன் இப்படி சோதனை செய்கிறாய் ? நீதி நேர்மையைக் காக்க எனக்கு சக்தி தா. எனக்காக நான் பழி வாங்க விரும்பவில்லை, தர்மத்துக்காக போராடுகிறேன். அநீதிக்கு தண்டனை நீதி தரட்டும். எல்லோரையும் இழந்து அனாதையாக நிற்கிறேன். நீயே துணை.”
நிலவின் ஒளியில் இளைஞன் ஹர்ஷன் முகத்தில் ஒரு வைராக்ய தீர்மானம் திடமாக தெரிந்தது. அவன் ஆட்சியில் தீயவர்கள் நடுங்கினார்கள். திருடர்கள் கொள்ளைக்காரர்கள் உயிர் எந்த நேரமும் போய்விடும் என்ற பயத்தில் இருந்தார்கள். ஏழைகள் தம் துயர் தீரும் என்று நம்பிக்கை பெற்றார்கள். கற்றவர்கள், பண்டிதர் கள், தமக்கு மரியாதை அந்தஸ்து காத்திருக்கிறது என உணர்ந்தார்கள். அரசவையில் ரஹஸ்யமாக போர் திட்டம் விவாதிக்கப்பட்டது. இரும்பு கொல்லர்கள் நாடெங்கும் ஆயுதங்கள் தயார் செய்வதில் இரவும் பகலும் ஈடுபட்டார்கள். யானைகளை போருக்கு மாவுத்தர்கள் தயார் பண்ணினார்கள். தங்க ஹம்சம் தான் ஹர்ஷனின் கொடி . நிறைய தயாராகி எங்கும் பறந்தது. போருக்கு புறப்பட முகூர்த்த நாள் தீர்மானித் தாயிற்று. ஹர்ஷன் பட்டத்து யானை தீப்தனாகா வின் மேல் ஆரோஹணி த்தான். அதன் தந்தங்கள் இரண்டும் தங்கத்தால் கவசம் பெற்றவை. இந்திரன் ஐராவதத்தின் மேல் பவனி வருவது போல் இருந்தது என்கிறார் பாண பட்டர் .எண்ணற்ற யானைகள், சக்தி வாய்ந்த இளம் குதிரைப்படை. அம்பு எய்யும் வீரர்கள் நிறைந்த தேர் கள். காலாட்படை வீரர்கள். கண்ணுக்கெட்டியவரை ஹர்ஷ னின் மா பெரும் சேனை புறப்பட்டது. கிழக்கே கவுட ராஜ்யம் நோக்கி நகர்ந்தது. வழியில் எதிர்த்த ராஜ்யங்கள் முறியடிக்கப்பட்டு ஹர்ஷனின் ஆதிக்கத்தில் வந்தன. சில ராஜ்யங்கள் சரணடைந்தன. ஹர்ஷனின் வெற்றி வளர்ந்தது. மால்வா சரணடைந் தது. லதர்கள் தேசம், கூர்ஜரம் ஆகியவை போரில் தோற்றன. ஹர்ஷனின் வீரர்கள் இரக்க சிந்தனையா ளர்கள். நிராயுத பாணிகளை கொல்வதில்லை. காயமடைந்தோருக்கு மருத்துவ உதவி தந்தனர். எளியோரைக் காப்பாற்றினர்.
காமரூப அரசன் பாஸ்கரவர்மனுடன் நட்பு வளர்ந்தது. கங்கைக்கரையில் இரு ராஜாக்களும் சந்தித்தனர். சஹோதரர்கள் போல் ஹர்ஷனும் பாஸ்கர வர்மனும் மனமுவந்து கட்டித் தழுவினார்கள்.
தர்மத்தை காப்போம் என சபதமிட்டார்கள். இரு நாட்டு சேனைகளும் இணைந்தது. பலம் வாய்ந்த படை கௌட தேசத்தை நோக்கி நகர்ந்தது படைக்கு ஹர்ஷன் உத்தர விட்டான்;”இன்று நாம் போரிடுவது மண், பொன் சேகரிக்க அல்ல. சத்தியத்தை நிலை நாட்ட. நமக்காக உயிர் துறந்த நமது சகோதர சகோதரிகளை எண்ணிப் பாருங்கள். அவர்களுக்காக நாம் போருக்கு செல்கி றோம். ”விஜய சங்கம் எனும் ஹர்ஷனின் சங்கு பூம் பூம் என்று காது செவிடுபட ஒலித்து நாலா பக்கமும் எதிரொ லித்தது. வேகமாக செல்லும் படை கிளப்பிய புழுதி வான் வரை திரையிட்டு கண்ணை மறைந்தது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


