
ஸூர்தாஸ் – – நங்கநல்லூர் J K SIVAN
மோஹனன் வந்தான்-
சூரியன் மெதுவாக மேலே உச்ச்சியை நோக்கி ஏறியவன், கொஞ்சம் கொஞ்சமாக மேலை வானத்தில் ஜகஜ்ஜோதியாக நெருப்பு பிழம்பாக கீழே இறங்குகிறான் பாருங்கள். அப்படியென்றால் மாலை வேளை .இன்னும் சிறிது நேரத்தில் ஒவ்வொரு நாளும் போல இதே நேரத்தில் அமைதியாக சூரியன் அஸ்தமிக்கும் அழகு மனம் கவரும். திகட்டாத இன்ப காட்சி. எத்தனையோ நாள் நான் மொட்டை மாடியில் ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டு ரசித்து சூரியனை நமஸ்கரித் திருக்கிறேன். நான் காளிதாசனாகவோ கம்பனாகவோ காளமேகமாகவா இருந்திருக்கக் கூடாதா? . நானும் ரசித்து மற்றவர்களையும் மகிழ்விக்க கவிதை எழுத தெரிந்திருக்குமே. உங்களுக்கும் ஆயிரத்திற்கும் மேலே அருமையான
கவிதைகள் கிடைத்திருக்குமே. இப்ப்போது வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டு நவராத்ரி சுண்டல் சாப்பிடும் சோற்று மூட்டையாக இருக்கிறேனே.
சூர்தாஸ் கண் இல்லாமலேயே அற்புதமாக ஒரு அஸ்தமன வேளையை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்.
பிருந்தாவனம் வழக்கம் போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. அந்தி மயக்கத்தில் மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடை பெற்று இரவின் ஆக்கிரமிப்பு இனி தலை நீட்டப்போகிறது. அதற்குஅச்சாரமாக மேல் வானம் ரத்தச் சிவப்பாகிறது. சூரியன் அளவில் குறைகிறான். பிருந்தாவன கோபியர்கள் அவர்கள் கணவன்மார்கள், சகோதரர்கள், பிள்ளைகள், சிறுவர்கள் காட்டிலிருந்து, வயலிலிருந்து திரும்பி வீடு வரும் நேரம் என்பதால் அவர்கள் வரவுக்கு காத்திருக்கிறார்கள். அவரவர் வீட்டு மனிதர்களுக்குகாத்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஒருவன் வருகைக்காக அல்லவோ அனைவருமே காத்திருப்பதல்லவோஅதிசயம்.
இதோ மோஹனன் வந்து விட்டான். அவனைச் சுற்றி பசுக்கள் கூட்டம்.கன்றுகள் இடை இடையே அவனை அன்பாக முட்டிக் கொண்டு இடித்துக் கொண்டு அழகு நடை போட்டு வருகின்றன. வயிறு நிறைய ஆகாரம் அத்தனைக்கும். அவன் அருகே இருப்பது அதை விட ஆனந்த உணர்வு அவற்றிற்கு. அம்மா என்ற வித வித குரல்கள் செவிக்கின்பம்.
கிருஷ்ணன் எந்த அவசரமும் இல்லாமல் மெதுவாகவே நடந்து வருகிறான். தலையே மறைந்து போகும் அளவிற்கு மகுடம் போல மயிற் பீலிகள் அவன் சிரத்திலே. கழுத்து நிறைய வன மாலைகள், காட்டு மலர்களை கோபியர் தொடுத்து மாலையாக அவன் கழுத்து நிறைய அணிவித்து அவன் மார்பே தெரிய வில்லை. ஒரு கையில் மூங்கில் குச்சி. பசுக்களை, கன்றுகளை விரட்ட. ஒரு நாளும் அவை அவனிடம் அடி வாங்கிய தில்லையே. எதற்கு அந்த குச்சி?. சும்மா. சும்மாவே தான். அவன் உடம்பு முழுதும் கோதூளி (பசுக்கள் நடந்து எழுப்பிய புழுதி) விபூதி அபிஷேகம் செய்தது போல்.
அதுஎன்ன ஒரு சிவப்புவஸ்திரமா கயிறா இடுப்பைச் சுற்றி?. ஓஹோ அது தான் அவனது இடுப்பில் மஞ்சள் வஸ்திரத்தின் மேல் பெல்ட்டா?? அதுவே எவ்வளவு அழகாக கண்ணைப் பறிக்கிறது! இரண்டு பாதங்களுக்கு மேல் கணுக்காலில் தண்டை. அவன்மெதுவாகநடக்கும்போதுஎன்னமாகஜல்ஜல்என்றுசெவிஇனிக்கஒலிக்கிறது. அவனைச் சுற்றி அவனை ஒத்த கோபகுல சிறுவர்கள். அவன் நண்பர்கள். ஒரே கும்மாளம் சிரிப்பு மயம். சந்தோஷத்தின் பிரதிநிதிகள். ஆனந்தத்தின் அடுத்த வாரிசுகள்.
தூரத்தில் தெரிந்த மோஹனன். ஷ்யாமளன், இதோ அருகில் வந்து விட்டான் என்று அவன் தண்டை ஒலி, கன்றுக் குட்டி களின் ‘அம்மா” ஓசை, அவன் நண்பர்களின் சிரிப்பொலி ஊருக்குள் எல்லோருக்கும் கேட்டு விட்டதே. அதற்காகத்தானே இத்தனை நேரம் காத்திருந்தார்கள்.
அனைத்து கோபியரும் எல்லாவற்றையையும் கண்டது கண்டபடி அப்படியே வீட்டில் போட்டுவிட்டு வாசலில் வந்து கண்ணிமைக்காமல் பார்க்கி றார்கள். ஆஹா மஞசள் வஸ்திரம் கண்ணில் படுகிறதே.மாலைச் சூரியனின் செக்கர்வான ஒளியில் குளித்தவாறு அழகிய நீல மேக ஸ்யாமளன் தெரிகிறான். கருமேகங்களிடையே கண்ணைப் பறிக்கும்வெள்ளை மின்னல் மாதிரி யல்லவோ இருக்கிறது இந்த காட்சி. !சபாஷ் ஸூர்தாஸ்…….
Mohan comes herding the cows,
crown of peacock feathers on his head,
garland of forest flowers on his chest,
in his hand a wooden staff,
his body wrapped in cow-dust.
A band around his waist
and from his feet the sound of anklets
there amidst his cow-boy friends
Shyam comes. His yellow garments standing out
like lightning amidst the clouds.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



