
மாதிரிக்கு ஒன்று. – நங்கநல்லூர் J K SIVAN
ஜெயதேவர் நாம் அறிந்த ஒரு ஒரிஸ்ஸாக் காரர். சம்பூர்ண கிருஷ்ண பக்தர். பூரி ஜெகந்நாதரை மூச்சாக கொண்டவர். கிருஷ்ணனை ஜெகந்நாதரில் கண்டு அவனோடு பேசியவர். சதா அவனை ரசித்தவர். ருசித்தவர். கிருஷ்ணனின் நிழலாக கோகுல பிருந்தாவன பிரதேசங்களில் அவனோடு கற்பனையில் ஓடி ஆடியவராக தன்னை அவனுடைய ‘க்ரூப்’ (GROUP) பில் இணைத்துக்கொண்டு ராதை, கிருஷ்ணன், தோழிகளோடு அவர்கள் பேசியது பாடியது, உணர்ந்தது எல்லாம் மனித ‘டேப் ரெகார்டராக’ (TAPE RECORDER) செயல்பட்டு நமக்கு ”கீத கோவிந்த”மாக அளித்திருக்கிறார். கண்ணனை, ராதையை, அவருடைய பிரபலமான ‘அஷ்டபதி’ யில் ஸ்பர்சிக்கலாம், கேட்கலாம், ரசிக்கலாம் உணரலாம். கீத கோவிந்தம் படிக்கும்போது பாடும்போது சென்னையில் வெயிலில் உட்கார்ந்திருக்கும்போதே குளிர்ந்த பிருந்தாவன சோலைகளுக்குள் கிருஷ்ணனோடு நாமும் இருக்கலாம்.
உதாரணத்துக்கு ஒரு அஷ்டபதி சொல்கிறேன்.
nAdha harE jagannAdha harE
Pasyati disi disi, Pashyathi dishi dishi tvadadhara madhura madhu ni pibantam
seedati rAdhA vAsa gruhE || nAdha||
2tvadabhisaraNa rabhasEna valantee patita padAni kiyanti chalantee||nAdha||
C 3vihita viSada bisa kisalaya valaya jeevati paramiha tava rati kalayA||nAdh
C 4muhuravalOkita manDana leelA madhuripu rahamiti bhAvana SeelA||nAdha
C 5tvarita mupaiti nakadhA mabhisAram hari riti vadati sakhee manu vAram||nAdha||
C 6Slishyati chumbati jaladhara kalpam harirupagata iti timira manalpam||nAdha||
C 7bhavati vilambini vigaLita lajjA vilapati rOditi vAsaka sajjA||nAdha||
C 8Sree jayadEva kavErida muditamrasika janam tanutam atimuditam||nAdha||
நாத ஹரே ஜகன்னாத ஹரே
பஸ்யதி திஸி திஸி ரஹஸி பவந்தம் த்வததர மதுர மதூனி பிபந்தம்
நாத ஹரே ஜகன்னாத ஹரே ஸீததி ராதா வாஸ க்ருஹே (நாத)
த்வத பிஸரண ரபஸேன வலந்தீ பததி பதானி கியந்தீ சலந்தீ (நாத)
விஹித விஸதபிஸ கிஸலய வலயா ஜீவதி ப்ரமிஹ தவ ரதிகலயா (நாத)
முஹுரவ லோகித மண்டன லீலாமதுரிபுர ஹமிதி பாவன ஸீலா (நாத)
த்வரித முபைதி ந கதமபி ஸாரம்ஹரிரிதி வததி ஸகீம் அனுவாரம் (நாத)
ஸ்லிஷ்யதி சும்பதி ஜலதர கல்பம் ஹரிருபகத இதி திமிரம் அனல்பம் (நாத)
பவதி விளம்பினி விகளித லஜ்ஜா விலபதி ரோதிதி வாஸக லஜ்ஜா (நாத)
ஸ்ரீ ஜயதேவ கவேரிதம் உதிதம் ரஸிக ஜனம் தனுதாம் அதிமுதிதம் (நாத
ஜெயதேவர் அளிக்கும் இந்த பிருந்தாவன நாடக மேடைக் காட்சியில் ராதையின் தோழி நேராக கிருஷ்ணனை தேடி தூது செல்கிறாள். எளிதில் அகப்படுபவனா அவன்? கண்ணனைக் காண்பதெப்போ என்று ராதை ஏங்குகிறாள். அடியே தோழி, சகி, ஏனடி என் கண்ணன் இன்னும் வரக் காணேன்? என்று திரும்ப திரும்ப கேட்கிறாள்.
கண்ணனை கண்ட தோழி அவனும் ராதையைச் சந்திக்க வேண்டும் என்ற உணர்வில் இருப்பதை அறிகிறாள் .
கிருஷ்ணன் தான் ஜெயதேவர் பாடும் ‘ஹரி’ என்பவன். ஜெயதேவர் மனைவி பத்மாவதி அற்புத நாட்ய நர்த்தகி. அவருடைய பாடல்களுக்கு அபிநயம் பிடிப்பவள். என்ன ஆதர்ச தம்பதிகள் !
”ஜெகன்னாதா, லோக நாயகா, உனக்காக ராதை எங்கெங்கோ அலைகிறாள். பசி தாகம் எல்லாம் மறந்துவிட்டாள். கிருஷ்ணா பித்து தலைக்கேறி பிச்சியானாள். நீ எங்கோ மற்ற கோபியருடன் விளையாடிக் கொண்டிருக்கிறாய். அவள் நிலை, கவலை உனக்கு தெரியாதா? துக்கத்தின் மொத்த உருவமாக இருக்கிறாள் ராதா. எப்படியாவது உன்னை சந்தித்தே ஆகவேண்டும். பரமாத்மா, உன் திவ்ய நினைவு என்கிற அமிர்தத்தில் திளைத்து அவள் கால் தடுமாறுகிறது. உடல் உள்ளம் எல்லாமே கண்ணன் எனும் திவ்யானுபவத்தில் இருக்கும்போது கால்கள் சரியாக நடக்கமுடியுமா? சாதாரணம் ஒரு அரை கண்ணாடி க்வார்ட்டர் மட்ட ரக குடி போதையே தள்ளாட வைக்கிறதே. பக்தி போதை என்ன செய்யாது?
உடல் தஹிப்பு தாங்கமுடியாமல் சில்லென்று தாமரைக் கொடிகளை எடுத்து கைகள் மேல் சுற்றிக்கொள்கிறாள். அவள் உயிர் வாழ்வது கண்ணன் தரிசனத்துக்காகவே. கண்ணீரும் கம்பலையுமாக தூக்கமின்றி வாடுகிறாளே ராதை. கண்ணா உன் மனம் இரும்போ, கல்லோ?
கடைசி பதத்தில், அஷ்டபதம் என்றால் எட்டு பதங்கள். அதில் கடைசியாக கவிஞர் ஜெயதேவர் ஐயா, எவ்வாறு ராதை மோசமான நிலையில் இருக்கிறாள், என்று நிலையை உணர்த்துகிறார். கலை ஆர்வம் ரசனை கொண்ட பக்தர்கள் இந்த தெய்வீக ப்ரேமையை துய்த்து சந்தோஷிக்கட்டும் என்கிறார்.
நானும் இந்த அஷ்டபதியில் நாலு ஐந்து பதியை மட்டும் பாடிவிட்டு அஷ்டபதியில் மீதியை விழுங்கி விட்டேன். நான் என்ன செய்ய முடியும் ஸ்ரீ பால முரளி கிருஷ்ணா அப்படித்தானே செய்திருக்கிறார். https://youtu.be/JfJtjwtTDO0
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



