
சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
அஸ்வத்தாமன் ஆசை
குழந்தைகளே, உங்களுக்கு பாரதம் கதை தெரியும். ராமாயணம் கதை தெரியும் அல்லவா? மஹாபாரதத்தில் நிறைய உப கதைகள் உண்டு. அதில் ஒன்று மஹா வீரரான துரோணாச்சார்யார் குமாரன் அஸ்வத்தாமன் பற்றி. அவனைப்பற்றி தான் ஒரு சம்பவம் உங்களுக்கு இப்போது சொல்கிறேன்.
ஒரு குருவுக்கு, ஆச்சார்யனுக்கு எது சந்தோஷம்? தன் மாணவன், சிஷ்யன், தன்னை மிஞ்சும் அளவுக்கு தேறி விட்டான் என்பதே.
“நான் கற்றுக்கொண்ட அஸ்த்ர வித்தையில் தலை சிறந்தது பிரம்மாஸ்திரம். நேரம் வந்து விட்டது அதை உனக்கு கற்பிக்கிறேன் அர்ஜுனா! நீயே தகுதியானவன் அதை பெற” என்றார் துரோணர். இது கேட்டதும் பற்றி எறிந்தான் அவர் மகன் அஸ்வத்தாமன். ”அப்பா என்ன இது, பெற்ற மகன் நானிருக்க ,மற்றவன் எவனுக்கோ வா இந்த வித்தையை அளிப்பீர் எனக்கும் கூட கற்றுத் தர வேண்டும்” என்று அரித்தான் அஸ்வத்தாமன். வேறு வழியின்றி அதை
அவனுக்கும் கற்றுத்தந்த துரோணர் ஒரு கண்டிஷன் போட்டார்
.”இது எக்காலத்திலும் என்ன காரண மானாலும் என்ன தவறு செய்தாலும் மானுடர்கள் மீது பிரயோகப்படாது” என்று. ”போதுமே, எப்போது அஸ்வத்தாமன் தேவர்கள் மீதும் இறைவன் மீதும் பிரம்மாஸ்திரம் போட போகிறான்?”:
சமயம் பார்த்து கொண்டிருந்தான் அஸ்வத்தாமன் . பாண்டவர்கள் வனவாசம் சென்றிருந்த போது கிருஷ்ணனைப் பார்க்க த்வாரகை போனான். கிருஷ்ணன் கடற்கரையில் உலாவ சென்றிருந்தான். கிருஷ்ணனைத் தனியே பிடிப்பதே வெகு துர்லபம் ஆயிற்றே.
“அட, அஸ்வத்தாமனா! ஆச்சர்யமாக இருக்கிறதே. எங்கே வந்தாய் இந்த பக்கம் ?”.
“கிருஷ்ணா, உன்னைக் காணத்தான் வந்தேன். நீ இங்கு இருப்பாய் என்று சொன்னார்கள். நல்லவேளை உன்னை சந்தித்தேன்.”
“என்ன விஷயம் சொல் அஸ்வத்தாமா?”.
“எனக்கு உன்னிடம் வெகு நாட்களாக மனம் விட்டு ஒரு விஷயம் பேச ஆவல். இன்று அது நிறைவேறும் என்றும் தோன்றுகிறது”.
“பீடிகை வேண்டாம் விஷயத்துக்கு வாயேன் அஸ்வத்தாமா”
“என்னிடம் பிரம்மாஸ்திரம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே அல்லவா. அதை உன்னிடம் கொடுத்துவிட்டு உன்னிடம் உள்ள சுதர்சன சக்ரத்தை நான் பெறவேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை”.
“அஸ்வத்தாமா, என்னிடம் உள்ள வில், அம்பு, கதை, சக்ரம் எதை வேண்டுமானாலும் நீ பெறலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவற்றுக்கு உன்னிடம் வர ஆட்சேபணை இருக்குமா என்று நீ அவற்றை தான் கேட்கணும். எனக்கு உன் பிரம்மாஸ்திரத்தை நீ தரவேண்டாம். எனக்கு அது வேண்டாம். உனக்கு தேவையானதை நீயே எடுத்துக்கொள்”.
சுதர்சன சக்ரத்தின் மீதே கண்ணாக இருந்த அஸ்வத்தாமா அதையே எடுக்க முயற்சித்தான். இடது கையால் எடுக்க முயன்று முடியாமல் வலது கையாலும் பிறகு இரண்டு கைகளாலும் முயன்று முடியாமல் முழுபலத்துடன் கிருஷ்ணன் கையினின்றும் அதை அகற்ற பிரயாசைப் பட்டான் பல மணி நேரம் ஆகியும் களைத்து போய் கிஷ்ணன் காலடியிலே விழுந்தான். .
“அஸ்வத்தாமா, நல்ல வேடிக்கை இது என் சிறந்த நண்பன் அர்ஜுனனோ, என் மகன் பிரத்யும்னனோ, சாம்பனோ, என் சகோதரன் பலராமனோ இதுவரை கேட்காததை நீ கேட்டாய். அது போகட்டும் யார் மீது பிரயோகபடுத்த என் சுதர்சன சக்ரத்தைக் கேட்டாய் அதை முதலில் சொல்?”.
“உண்மையைச் சொல்கிறேன் கிருஷ்ணா. உன் மீதே அதை பிரயோகித்து உன்னை கொன்றால் பிறகு என்னை எவராலும் வெல்ல முடியாதே என்ற தீய எண்ணம் என் மனதில் இருந்தது கிருஷ்ணா. இப்போது புரிந்து கொண்டேன். உன்னை தவிர எவராலும் உன் ஆயுதங்களை அசைக்க கூட முடியாது என்பதை தெரிந்து கொண்டேன்.”வந்த வழியே திரும்பி சென்றான் அஸ்வத்தாமன். அவன் எண்ணம் பலிக்காது என்பதை கிருஷ்ணனின் ஆயுதங்களே நிரூபித்து விட்டன. வெகு தூரம் அவன் நடந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணன் அவன் ஒரு புள்ளியாய் மறையும் வரை கிருஷ்ணன் அஸ்வத்தாமாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கிருஷ்ணன் சிரித்தான். அதோடு ஒரு நீண்ட பெருமூச்சும் விட்டான். ஆசார்யர் துரோணருக்கு தப்பாமல் பிறந்தவன் என நினைத்தேன் அவன் தப்பாக பிறந்தவன் என்று நிரூபித்துவிட்டானே அஸ்வத்தாமன் என்று தான் பெருமூச்சு சொல்லி இருக்கும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

