SUR DAS J K SIVAN

ஸூரதாஸ் .- நங்கநல்லூர் J K SIVAN

கண் விழியடா கண்ணா…

யசோதா தூங்கும் கிருஷ்ணனைப் பார்க்கிறாள். முகத்தில் விஷம ரேகைகள் பளிச்சிட அழகே உருவாக ஆனந்தமாக படுத்திருக்கிறான். இவனை எழுப்ப வேண்டும் என்று அவனை தடவிக் கொடுக்கிறாள். பட்டுப்போல் கன்னம். கரிய மினுமினுக்கும் சிறிய தேகம். அவன் சுருண்ட கேசத்தை மென்மையாக தடவிக்கொண்டே அவனை எழுப்புகிறாள்.

கிருஷ்ணா, என் கண்மணி, எழுந்திரடா.. அதோ பார் மேலே கருப்பாக இருந்த உச்சி வானம் வெளுக்க ஆரம்பித்து விட்டது. கீழ் வானம் செந்நிறமாக சிவந்துவிட்டது. நீயும் உன் தாமரை இதழ் கண்களைத் திற . அழகிய அல்லி விழிகளை மெல்ல மெல்ல திற . வயிறு முட்ட தேனைக் குடித்து விட்டு தேனீக்கள் திருப்தியாக ரீங்காரம் பண்ணிக் கொண்டு மலர்களை விட்டு கிளம்புவதைப் பார். செடிகளும் கொடிகளும் காற்றில் ஒரு புது நாளை வரவேற்க என்னமாக ஆடுகின்றன பார்.
கொக்கரக்கோ….எங்கோ ஒரு சேவல் கத்துகிறது. அதைத் தொடர்ந்து பல திசைகளிலிருந்தும் எதிரொலி போல் மற்ற சேவல்களும் கத்துவது வேடிக்கையாக இல்லை?
மடியில் பால் சுமந்து பசுக்கள் தொழுவங்களில் தமது கன்றுகளைத் தேடுகிறதா? அல்லது உன்னைத் தேடுகிறதா ம நீயே எழுந்து போய்ப் பார்.

”நண்பா, சூர்யா, எனக்கு டூட்டி முடிந்து விட்டது ”என்று சந்திரன் விடை பெறுகிறான். சூரியனும் அவனுக்கு குட் மார்னிங் சொல்கிறானே.

ஆயர்பாடி கிராமம் உயிர் பெற்று விட்டது. கோபியர்கள் எழுந்து விட்டார்கள். கலீர் கலீர் என்று அவர்கள் கால் தண்டை கொலுசு கை வளையல் சப்தம் கேட்கிறதே. கோபர்கள் ஏற்கனவே எழுந்து யமுனை ஆற்றங்கரைக்குச் சென்று விட்டார்களே. அவர்கள் உன்னைப் பாடும் சப்தம் உன் காதில் விழவில்லையா கண்ணா?

தாமரைக் கண்ணா எழுந்திரு இன்று நிறையவே நீ விளையாட வேண்டுமே. அதைக் காணவே தானே பொழுதும் விடிந்து விட்டது.

நேரில் நம்மை கோகுலத்துக்கும் பிரிந்தாவனத்துக்கும் கொண்டு சென்று கண்ணனை அன்னை யசோதை துயிலெழுப்பும் க்காட்சியைக் காண வைக்கிறது ஸூரதாஸின் கற்பனை நயம். ஆங்கிலத்தில் நான் படித்த ஸூரதாஸ் கவிதை;

Awake, Krishna, awake the lotus-petals open the water-lilies droop the bumblebees have left the creepers cocks crow, and birds chirp on the trees.
The cows are in the byre lowing;
they run after their calves;
the moon fades before the sun.
Men and women arise and joyfully sing their songs;
Krishna, of hands lotus-like awake,
for the day is about to dawn.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2567

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;