
ஞானக் குழந்தை — நங்கநல்லூர் J K SIVAN
நான் அறுபத்து மூன்று நாயன்மார்களை பற்றி எழுதும்போது என்னையறியாமல் அதிசயத்தில் திகைத்தது திரு ஞான சம்பந்தர் வரலாறு பற்றி விரல்கள் கம்ப்யூட்டரில் ஓடும்போது.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அல்லது சம்பந்தர் என்பவர் அப்பர் எனும் திரு நாவுக்கரசர் காலத்தவர். சைவ சமய குரவர்கள் நால்வரில் முக்யமான ஒருவர். இவருடைய வேறு பெயர்கள் சம்பந்தர், காழி வள்ளல், ஆளுடைய பிள்ளை, பாலரா வாயர், பரசமய கோளரி என்பன. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
அவர் ஆயுட்காலம் பதினாறு வருஷங்கள் தான். அடடா என்ன அற்புத சேவை. அதற்குள் 16000 தேவாரங்களா?? (நமக்கு கிடைத்ததோ 384 தான் ) எண்ணற்ற சிவ ஸ்தலங்களுக்கு விஜயம், எத்தனையோ மத வாதி களோடு தர்க்கத்தில் வெற்றி. புத்த சமண மதங்களின் ஆதிக்கத்தை வீழ்த்தி சைவ சமயத்தை தழைத்தோங்க செய்தவர். பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் சம்பந்தர் தேவார பாடல்கள். சம்பந்தர் வரலாற்றை சேக்கிழார் பெரியபுராணத்தில் 1256 பாடல்களில் விவரிக்கிறார்.
ஞான சம்பந்தருக்கு ஆலயம் ஒன்று தஞ்சாவூரில், ஒரத்த நாட்டில் பேய்க்கரும்பன்கோட்டை என்ற கிராமத்தில் உள்ளது. ஒரு நாள் போக வேண்டும். இங்கே சம்பந்தர் தான் மூலவர். உத்ஸவர் ரெண்டுமே. , தஞ்சாவூர் — பட்டுக்கோட்டை சாலையில் புலவன்காடு எனும் கிராமத்துக்கு கிழக்கே ஒன்றரை கி.மீ. ல் உள்ள கோவில்.
காஞ்சிபுரத்தில் பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் சம்பந்தருக்கு ஒரு கோவில் இருக்கிறது. திருவள்ளூர் வடமதுரை கிராமத்தில் ஒரு கோவில் உள்ளது.
சோழ ராஜ்யத்தில் சீர்காழிக்கு பலபெயர்கள் உண்டு. பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை வயம், கழுமலம் என்பவை அவை. அந்த ஊரில் கவுண்டின்ய ரிஷி கோத்திரத்தில் சிவபாத ஹ்ருதயர், பகவதி தம்பதியருக்கு பிறந்தவர் சம்பந்தர். அக்காலத்தில் சமண புத்த மதங்கள் எங்கும் தலை தூக்கி நின்றன. ஹிந்து வேத நெறி வளர்ச்சி குன்றியிருந்தது..
”பரமேஸ்வரா, என்ன அக்கிரமம் இது. இந்த மாந்தர் களின் ஆணவத்தை ஒடுக்கி, அடக்கி, வேதநெறி பின்பற்றும் சைவ மதம் சிறந்தோங்க நீ என்ன செய்யப் போகிறாய். யாராவது ஒரு ஞானியை நீ ஏன் இன்னும் தரவில்லை?. எனக்கே ஒரு மகனாக அப்படிப்பட்ட ஒருவரை தந்தருளவேண்டும் ” என்று பிரார்த்தித்தார். அவர் இருந்த இடத்தில் மூலவராக அருள் பாலித்தவர் திருத்தோணி யப்பர்.
சிவபாத ஹ்ருதயர் வேண்டுகோளுக்கு தோணி யப்பர் செவி சாய்த்து, கோள்கள் உச்ச நிலையில் அமைந்த ஒரு நன்னாளில் அந்த தம்பதியருக்கு திருவாதிரை அன்று சீகாழிப்பதியில், ஞான சம்பந்தர் பிறந்தார்.
ஞான சம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்த சமயம் ஒரு நாள் காலையில் சிவபாத ஹ்ருதயர் வழக்கம்போல் தமது நித்யானுஷ்டான ஸ்நானத்துக்கு கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார். அப்பா வெளியே செல்வதைக் கண்ட குழந்தை ஞான சம்பந்தர் அவர் கால்களைக் கட்டிக்கொண்டு ”நானும் வருவேன்” என்று அழ, அவரைக் கூட அழைத் துச் சென்றார். பிரம தீர்த்தக் கரையில் குழந்தை சம்பந்தனை உட்கார்த்தி வைத்துவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு குளத்தில் இறங்கி னார் சிவபாத ஹ்ருதயர். சில நிமிடங்கள் ஜலத்தில் முழுகி அகமர்ஷண மந்திரங்களை உச்சரித்தார்.
குளக்கரையில் உட்கார்ந்திருந்த ஞான சம்பந்தர் அப்பாவைக் காணோமே என அழுதார். கண்களில் எதிரே தோணி மலை தெரிய அதை பார்த்து கை களைப் பிசைந்து கொண்டு ”அப்பா அம்மா” என உளங்கனிந்து கூவினார்”
ஞான சம்பந்தனின் ”அம்மா அப்பா” எனும் அழுகுரல் தோணி அப்பருக்கும் அம்பாளுக்கும் மனதைப் பிழிய ரிஷ பாரூடர்களாக சீர்காழி சிவன் கோயில் குளக் கரைக்கு வந்துவிட்டார்கள்.
”உமா, இந்த சிறு குழந்தை பசியால் அழுகிறான் என தோன்றுகிறது அவனுக்கு பாலூட்டு ” என பணிக்க, அம்பாள் ஒரு பொற் கிண்ணத்தில் தனது முலைப்பால் நிரப்பி சம்பந்தன் அருகே சென்று அழுகின்ற குழந் தைக்கு பாலூட்டி அவன் அவன் அழுகையை நிறுத்தி னாள். ஆஹா சகல தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக் காத பேரின்பம் பெற்ற நிலையில் அந்த பாக்ய சாலி சம்பந்தன் திருஞானசம்பந்தராக அபரஞானம் பரஞானம் அனைத்தும் தெய்வானுக்ரஹத்தால் பெற்றான்.
”எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில்பொற் கிண்ணம்அளித்(து)
அண்ணலைஅங்கு அழுகைதீர்த்து அங்கணனார் அருள்புரிந்தார்.
சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்
என இதை சேக்கிழார் இந்த காட்சியை விவரிக்கிறார். ”அரன் சொற்படி அம்பிகை பொற்கிண்ணத்தில் தனது முலைப்பாலூட்டி அதன் பலனாக சம்பந்தன் சகல ஞானமும் பெற்றவனாக ஞான சம்பந்தனானான் ”
சில மணித்துளிகள் கழிந்தன. குளத்தில் மூழ்கி ஜப தபங்களை நித்யானுஷ்டான நியமங்களை முடித்து சிவபாத ஹ்ருதயர் குளத்தை விட்டு கறியேறினார். அற்புத தோற்றத்தோடு வாயில் பால் வழிய படித் துறையில் நிற்கும் சம்பந்தனைக் கண்டு ”எப்படி குழந்தை வாயில் பால் வழிகிறது. யார் பால் ஊட்டியது? என அதிசயித்து,
”குழந்தே, சம்பந்தா, யாருப்பா உனக்கு பால் தந்தது? யார் இப்படி எச்சில் ஒழுகும்படி பால் தந்தது? யாராவது பால் கொடுத்தால் குடிக்கலாமா நீ? என்ற கோபத்தில் குச்சி ஒன்றை எடுத்து அவனை அடிக்க ஓங்கினார்..
”எனக்கு பால் கொடுத்தது யார் என்றா கேட்கிறாய். சொல்கிறேன் கேள் ” என அந்த ஞானக்குழந்தை முதல் தேவார பாடலைப் பாடியது. அந்த பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. இன்றும் நான் மறவாமல் பாடுவது.
‘ தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடிக்
காடு உடைய சுட லைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே”
ஆஹா பரமேஸ்வரன் பார்வதி எதிரே தோன்றி தனக்கு அம்பாள் தாயக ஞானப்பால் ஊட்டியதை படம் பிடித்து காட்டு கிறது மூன்று வயது ஞானக்குழந்தை.
காதில் தோடு அணிந்து, ரிஷபத்தின் மேல் ஏறி, வெள்ளை வெளேரென்று பிறைச்சந்திரனை தலையில் சூடிக்கொண்டு, சுடு காட்டில் உள்ள வெள்ளை நிற சாம்பலை உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூசை செய்ய, அவனுக்கு அருள் வழங்கிய சிறந்த சீர்காழி என்ற ஊரில் இருக்கும் பெருமான் தோணியப்பர் தாயார் சகிதம் வந்த போது அந்த லோக மாதா எனக்கு பாலூட்டினாள் எனப் பொருள் படும் அற்புத பாடல். எல்லோரும் மனப்பாடம் பண்ண வேண்டிய ஒரு அருமையான தமிழ்ப் பாடல்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



