
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN
பாபிகளுக்கெல்லாம் நான் சக்ரவர்த்தி”
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை ஸூர் தாஸை அறியாதவர்கள் போல், ஏற்கனவே அவரை அறிந்தவர்களும் இந்த ஸுர்தாஸ் கட்டுரைகளை ஆர்வத்தோடு, ஆவலோடு படிக்கிறார்கள் என்று கேள்விப் படும்போது எனக்கு உண்மையிலேயே வயசு குறைந்து கொண்டே வருகிறது. அடடா, எவ்வளவு அதிர்ஷ்டம் , அப்படி யென்றால் இன்னும் கூட நிறைய எழுதலாமே! கட்டுரைகள் எழுத நிறைய தேட வேண்டி இருக்கிறது தேடியதை குப்பையாக சேர்த்துவைத்த தை, பூணல் சிக்கு பிரிப்பதுபோல் அவசரம் இல்லாமல் பிரித்து என் வழியில் நான் புரிந்து கொண்ட வகையில் உங்களுக்கு அளிப்பது தான் என் வேலை. நான் பட்ட ஸ்ரமம், நீங்கள் ரசித்து படித்து எனக்குத் தெரிவிக்கும் போது, என் கஷ்டங்கள் ஆனந்தமய இன்ப அனுபவமாக இனிக்கிறது. 18-20மணி நேரம் தினமும் உழைப்பவனை இன்னும் நேரம் கிடைக்குமா என்று தேட வைக்கிறது.
எனக்கே தெரிகிறது. நான் நிறைய பெரிய பெரிய விஷயங்களை ஒரே நேரத்தில் கையாள்கிறேன் என்று,.
ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம், மகா பெரியவா, ஸ்லோகங்கள், சூர் தாசர், கிருஷ்ண கர்ணாம்ருதம், கீத கோவிந்தம், சித்தர்கள், ஆச்சார்யர்கள், தாகூர், ரமணர், விவேகானந்தர் …திவ்ய க்ஷேத்ரங்கள், சிவாலயங்கள், ஆச்சார்யர்கள் வாழ்க்கை, சிறந்த கவிஞர்கள், எழுத்தா ளர்களின் அமர படைப்புகள் கிருஷ்ணனை பற்றிய நிறைய விஷயங்கள், விக்ரமாதித்தன், சாணக்கியன் போன்ற அற்புத மனிதர்கள் விஷயங்கள் என்று …என்னென்னவோ….
ஏதோ நம்மால் சில நல்ல காரியங்கள் எளிமையாக தர முடிந்தால் அதை மனப்பூர்வமாக செய்வோமே என்ற நப்பாசை…. உடல் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. வயது, விருத்தாப்யம் (86) கொஞ்சம் படுத்துகிறது. பரவாயில்லை. என் இரும்பு மனது அதை லக்ஷியம் செய்யவில்லை… கிருஷ்ணன் ஒத்துழைக்கிறான். தொடர் கிறேன்.. சரி இனி ஸூர்தாஸை பிடிப்
போம்… ஸூர்தாஸ் எழுதிய பிரிஜ்பாசி, ஹிந்தி,பாடல் ஒன்றின் ஆங்கில மொழி பெயர்ப்பு எனக்கு அகப்பட்டது:
” 0 lord, I am the crown amongst the sinners.The others are just the beginners
I have been born a crook.
To Ajamil, the hunter, and to the whore,
even to poison-breasted Putana you granted salvation.
You have shown favors to all but me. This hurts.
I claim, emphatically, confidently that nobdy else is as capable of sinning as 1 have been.
Still amidst the sinners, and crooks,
I , Sur, die of shame, for not having had your favor.
Who else, deserves your grace more than I?
இந்த பாடலில் தன்னை எவ்வளவு கடை நிலை மனிதனாக, இழிந்தவனாக காட்டிக்கொள்கிறார் பாருங்கள் ஸூர்தாஸ். ”என் அப்பனே கிருஷ்ணா, என் தெய்வமே, நான் யார் என்று உனக்கு தெரியாதா? பஞ்சமகா பாதகங்களை செய்த பாபிகளுக்கு நடுவே நான் தானடா, முடிசூடா சக்கரவர்த்தி.. நான் செய்த பாவங்களோடு மறவர்கள் புரிந்த பாபங்களை ஒப்பிட் டால் அவர்கள் அனைவருமே கற்றுக்குட்டிகள். அதெல் லாம் வெறும் ஜுஜுபி. நான் கருவில் இருக்கும்போதே பெரிய மஹா பாபியாக உருவானவன் ஆயிற்றே. .
அஜாமிளன் எனும் கொடிய வேடுவன், மற்றும் வேசி ஒருவள், கொடிய விஷம் தடவிய தனது முலையில் பால் அருந்த செய்து உன்னைக் கொல்ல வந்த பூதகி ஆகியோருக்கெல்லாம் கருணாசாகரமாக நீ முக்தி அளித்தாய். என்னை கவனிக்கவே மாட்டேன் என்கிறாயே?.
எனக்கு நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கிறதே. நான் மறுபடியும் சொல்கிறேன் கிருஷ்ணா, நான் ரொம்ப ரொம்ப மஹா பாவி, கொடியவன், என்னைவிட அதிக பாபங்கள் செய்தவன் இருக்கவே முடியாது. என் போன்றவர்களை அல்லவோ நீ முதலில் அருள் புரிந்து ரக்ஷிக்க வேண்டும். இன்னும் உன் கடைக்கண் பார்வை கூட என் மேல் படாமல் இருப்பது எனக்கே அவமானம் அதிகமாகி மண்டையைப் போட்டு விடுவேனோ என்று தோன்றுகிறது. பகைவனுக்கும் அருளும் பகவானே, என்னைவிட உன் கருணையை எதிர்பார்த்து வாடும் ஒருவன் உண்டா சொல் ? ”
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



