PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்    –  நங்கநல்லூர்  J K  SIVAN
மஹா பெரியவாளிடம்  நூறு  கேள்விகள்

நூறு கேள்விகள் என்பது சும்மா ஒரு நம்பர். அவரிடம் எத்தனையோ கேள்விகள் கேட்கவேண்டி இருக்கிறது. அப்பப்போ கேட்கும்போதெல்லாம் பதில் சொல்கிறார்.  சில கேள்வி பதில்கள் ஏற்கனவே அனுப்பி இருக்கிறேனே. ஆகவே இன்றும் வழக்கம் போலவே தான்.
விடியற்காலை ப்ரம்ம முகூர்த்த நேரம். என் அறையில் ரெண்டு பேர். ஒன்று நான். என் எதிரே  மஹா பெரியவாளின்  அபய ஹஸ்த படம்.  எப்போதும் அவரைப்பார்த்துக் கொண்டே இருப்பேன். என் மனதில் அந்தர்யாமியாக சில கேள்விகளை அவரிடம் கேட்பேன். அவரும் அழகாக பொறுமையாக சில சமயங்களில் பதிலளிப்பார். அவர் அளிக்கும் பதில்கள் ஏற்கனவே பல நூல்களில் வெளியானவையாக, ஏற்கனவே படித்திருந்ததாக  இருந்தாலும் மறுபடியும் திரும்பஅவற்றை சுவைப்பதற்கு  ஆனந்தமாக இருக்கும்.
”என்னடா கேக்கணும் உனக்கு?”’அம்ருதம்’  னா  என்ன?”பாலோ தேனோ தித்திப்பாக  குடிப்பதற்கு உண்டான வஸ்து இல்லை அம்ருதம். இந்த பிறவியிலேயே நாம் தேடிக்கொள்ளவேண்டிய மோக்ஷம் தான் அம்ருதம்.  அம்ருதம் என்றால் மரணமில்லாத என்று அர்த்தம். சரீரம் என்கிற  வியாதிக்கு மருந்து ஞானம்.  இந்த உடம்பு இல்லை, நான் இல்லை, என்றால் தற்கொலை  பண்ணிக்கிறது என்று புரிஞ்சுக்காதே. இந்த உடம்பு என்கிற சரீரம் நான் இல்லை, நான் அதனுள் இருக்கும்  ஆத்மா என்கிற ஞானம் வேண்டும். அதை ஆதி சங்கர பகவத் பாதாள்  நிறைய  உபதேசம் பண்ணி இருக்கார்.
”ஆத்மா  பற்றி சொல்லுங்கோ பெரியவா”ஆத்மா மூணு வகை. கௌணாத்மா, மித்யாத்மா, முக்த்யாத்மா.  புத்ரர்கள் , மித்ரர்கள் எல்லோருமே  நாம், அவர்களுடைய சுக துக்கம் நம்முடையது என்ற  அபிமானம் தான் கௌணாத்மா.  இந்த சரீரம் என்னுடையது என்று அதன் மீது அபிமானம் கொள்வது மித்யாத்மா.  நான் இந்த சரீரம் இல்லை.  சரீரத்திலிருந்து  ஆத்மாவை  பிரித்து   அந்த சுத்த ப்ரம்ம  ஸ்வரூபம் தான் நான் என ஆத்மாவாக இருப்பது தான் முக்த்யாத்மா.   பந்த பாசம் எல்லாம் விலக்கி ப்ரம்ம ஸ்வரூபம் தான் நான் என்கிற ஞானம் வந்தால் தான் ஆனந்தம்.  இதற்கு  ஈஸ்வர பக்தி அவசியம்.
வியாதிக்கு தேவையான அளவு மட்டுமே மருந்து சாப்பிடுகிறோம் அல்லவா? அது போல இந்த வியாதி என்கிற உடம்புக்கு பசிக்கு தேவையான அளவு மட்டுமே  உணவு உட்கொள்ளவேண்டும்.  மருந்து நாக்குக்கு ருசி இல்லை. அதுபோலவே  உணவும் ஒரு மருந்து மாதிரி. உடலை பாதுக்காக்க. ருசி அவசியம் இல்லை.  விபூதி, ருத்ராக்ஷம் அணிவது  அழகுக்கு அல்ல.  உள்ளத்துக்கு  சௌகர்யம் அளிப்பது.
நம்முடைய காசு மீதி நாடுகளில் செல்லாது. பரமேஸ்வரன் ராஜ்யத்தில்  எல்லா லோகங்களிலும் செல்லும் காசு தான்  தர்மம்.  நாமாக தேடி கண்டுபிடித்து அலையவேண்டாம். ஏற்கனவே நமது முன்னோர்கள் அனுபவித்து சொல்லி இருக்கிற தர்மங்களை கடைபிடித்தால் அதுவே போதும். தர்மம் தலைகாக்கும் மட்டும் அல்ல தலைமுறைகளையும் காக்கும்.
”தர்மம்  எப்படி பண்ணுவது பெரியவா?தர்மம் நாலு வகையில் பண்ணலாம். சரீரத்தால், மனத்தால், வாயால்,  பணத்தால் எது முடியுமோ அதை செய்யலாம். இந்த  தர்மம் தாம்  after life  insurance நமக்கு.  நமக்குள் பகவான் கொடுத்த ஹ்ருதயம் அவன் இருப்பதற்காக நமக்குள் அளித்தது. அதை குப்பை தொட்டியாக வைத்துக் கொள்கிறோம். நித்தம் மெழுகி, கோலமிட்டு, விளக்கேற்றி, மலர்கள் இட்டு  சுத்தமாக வைத்திருக்கவேண்டாம் அவன் வந்து அமர்வதற்கு.   அந்த காரியம் தான்  தினமும் ஐந்து நிமிஷமாவது பகவானை தியானம் பண்ணுவது.  மனம் தியானத்தில் ஈடுபட்டால் உடல் வாய் எல்லாம் நல்லதையே செய்யும் பேசும். இந்த உடம்பு எனதல்ல என்று பகவான் முன் கோவிலில் சென்று அதை தடியைப் போல தொப் என்று  கீழே போட்டு,  நமஸ்காரம் பண்ணுவது தான்  தண்டம் சமர்ப்பிப்பது.  வாயால் வம்பு பேசி பாவத்தையும், உபத்ரவத்தையும் வரவழைத்துக் கொள்வதற்கு பதிலாக  வாயினால் தியான ஸ்லோகங்கள், பகவன் நாமாக்கள் சொல்வதால் நமக்கும் கேட்பவர்களுக்கும் ஆனந்தம். புண்யமும் கிட்டும்.
”வேதங்களில் எது பெரியது, சிறந்தது?”
”வேதங்களில் பெரியது சிறியது என்று வித்யாசமே இல்லை. எல்லாமே  முக்யமானது தான்.   யஜுர் வேதம் ஒரு முக்யமான வேதம். அதன் மத்தியில்  நாலாவது காண்டம் உயர்ந்தது.  அதைவிட அதன் நாலாம்  ப்ரச்னம்  அதி முக்யமானது.அது தான் ஸ்ரீ ருத்ரம். அதில் எட்டாவது ஸ்லோகம் நடுவே  பஞ்சாக்ஷர வாக்கியம் ” நமசிவாய” . அதன் நடுவே  ”சிவ” என்னும் அக்ஷரங்கள்  ஜீவ ரத்னம் எனப்படுவது. மஹான்கள் பெரியவர்கள் அதை  ப்ரம்ம ஸ்வரூபம்  சிவ ஸ்வரூபம் என்பார்கள்.”மீதியை எல்லாம்  அப்புறம் கேட்டுக்கொள். இப்போது  இது போதும் உனக்கு ”
தியானத்திலிருந்து கண்ணைத் திறந்து வாசலில் பால்காரன் அழைப்பை ஏற்று வெளியே போக கதவைத் திறந்தேன் . .
 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;