
இடக்கு மடக்கு பேச்சு – நங்கநல்லூர் J K SIVAN
இடக்காக பேசுவது என்றால் தெரியுமல்லவா? ஏதாவது ஒன்று கேட்டால் வேறு ஏதாவதை பதிலாக, நக்கலாக, சொல்வது. இதில் ஹாஸ்யமும் உண்டு, கர்வம், மனம் புண்ணாகும் விஷயமும் உண்டு. ஆனால் ஹாஸ்யமாக சொன்னால் எல்லோரும் ரசிப்பார்கள். இப்படிப் பேசுபவர்களை நீங்கள் அறிவீர்கள். ஞாபகம் இருக்கும்.
எனக்கு சுப்பையரை இப்படி பேசுவதால் தெரியும். கொஞ்சம் தூரத்து உறவு. ஆங்கிலப் படிப்பு இல்லை, கிராமத்தில் இளநீர் வியாபாரம். தவிர ப்ரோகிதத்துக்கு ,ராமண போஜனத்துக்கு செல்வார். நிறைய விஷயங் கள் தெரிந்து வைத்திருக்கும் அதிசய மனிதர். நன்றாக பொழுது போகும் அவருடன் பேசும்போது.
அவருடன் பேசும்போது கவனித்த சில ஹாஸ்ய விஷயங்கள்;
சிவா கால்லே என்ன, இடது காலை கொஞ்சம் தாங்கி தாங்கி நடக்கிறே. ” இடது பதம் தூக்கி ஆடும்…”. பாட ஆரம்பித்துவிட்டார்.
”மாமா புதுசா செருப்பு ஒண்ணு வாங்கினேன் கடிச்சுடுத்து”
” ஏண்டா புதுசா அதை வாங்கிட்டு மிதிச்சா அதுக்கு கோவம் வராதா? சும்மாவா இருக்கும்?”
பாஷா மீரான் மளிகை கடையை ஒரு நாள் ராத்திரி எவனோ திருடன் பூட்டை உடைச்சு மூணாயிரம் ரூபா சாமான் திருடிட்டான். சுப்பையர் என்னோடு அங்கே வந்திருந்தபோது மீரான் அழுதார்.
”ஐயர்வாள் , பூட்டிட்டு உள்ளே மூணாயிரம் ரூபா சாமான் வச்சிருந்தேன். பூட்டுது ..”
”பாய் , பூட்டுக்குள்ளே எப்படி மூணாயிரம் ரூபா சாமான் வைக்க உங்களாலே முடிஞ்சுது”
சாமா ராவ், சுப்பையர், என் பிள்ளை BA படிச்சு முடிச்சுட்டான். இனிமே என்ன பண்ணப்போறான்
னு தெரியலே”
”ராவ் ஜி, இதிலே யோசிக்க என்ன இருக்கு, படிச்சு முடிச்சுட்டானோல்லியோ, இனிமே புஸ்தகத்தை
மூடிடுவான்”
ராமசுப்ரமணியம் ஒருநாள் சுப்பையரிடம் பேசிக்
கொண்டிருந்தபோது ”இப்பல்லாம் என்னாலே இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிடமுடியலப்பா” என்றார்.
”ராமு இதுக்கெதுக்கு ஒர்ரி பண்றே. என்னால கூட முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! யாராலயும் சாப்பிடமுடியாது. யாருக்கு அவ்வளவு பெரிய வாய் இருக்கு? புட்டு புட்டுதான் சாப்படணும்”
என்னிடம் ஒருநாள் கேட்டார்; ” டேய் சிவா ! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!” எங்கிட்ட சுத்தமா இல்ல சுப்பையர் !
” பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்! என்று பதில் வந்தது.
ராதாகிருஷ்ணன் ஒரு கம்பெனியில் பெரியஉத்யோகஸ்
தர். சுப்பையரிடம் கேலியாக
”மாமா எங்க ஆபிஸ்லே சேல்ஸ் டெபார்ட்மெண்ட்லே லே மேனஜர் உத்யோகம் காலியா இருக்கு. நான் சொன்னா எடுத்துப்பா. நீங்க வறீர்களா. ஆனா உங்க
ளுக்கு விக்கிற அனுபவம் இருக்கணுமே . இருக்கா?”’
‘ராதா கிருஷ்ணா என்னடா என்னைப்பார்த்து இப்படி கேட்டுட்டே? எங்க வீட்டிலே நிலம், மாட்டுவண்டி, என் பொண்டாட்டி அம்மா நகை எல்லாம் வித்து சீட்டாடி தொலைச்சவன் நான்… என்னை பார்த்து விக்கற அனுபவம் இருக்கான்னு கேக்கறேயே.’
‘சுப்பையர் மனைவி ஒருநாள் கோபமா அவரிடம் ஒருநாள் கத்தினாள்; நீங்களாவது உங்க பிரெண்ட் friend சாமுக்கிட்டே சொல்லமாட்டீளோ? கூட போனீர்களே. உங்க friend கோபாலனுக்கு பார்த்த பெண் நன்னாவே இல்லையே. மூக்கும் முழியும் சகிக்கலே…”!
”நான் ஏன் சொல்ல வேண்டும்! எதுக்கு சொல்லணும்? . அவன் நான் பெண் பாக்கும்போது கூடவே வந்தானே, பாவிப்பயல் எனக்கு சொன்னானா??? பழி தீத்துட்டேன்.
”சுப்பையர் பெண் பரிக்ஷைக்கு படிச்சிண்டு
இருந்தா.
”ஏண்டி காமு, நேத்து ராத்திரி பரிக்ஷிக்கு படிச்சேன்னு சொன்னியே..”’
‘ஆமாப்பா படிச்சேன்”
” உன் ரூம்’ல லைட்டே எரியலையே ?
சுப்பையர் மகள் காமு அப்பாவையே மிஞ்சுபவள்… அவள் என்ன பதில் சொன்னாள் தெரியுமா?’
‘படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!”
சுப்பையர் மனைவி கோவிலுக்கு அவரோடு போய் விட்டு வந்தாள் . சுப்பையர் ; ”சாமி கிட்ட என்னம்மா
வேண்டிண்டே?’
‘ அடுத்த ஜென்மத்திலும் நீங்கதான் என் புருஷனா வரணும் னுவேண்டிண்டேன். ‘ நீங்க என்ன வேண்டிண் டேள்?
”எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிண் டுட் டேன்”
சுப்பையர் மாமியாருக்கு வயிற்றல் ஏதோ ஒரு ஆபரே ஷனாம். டாக்டர் கிட்டே எவ்வளவு ஆகும்னு கேட்டார்.
”ஐயர்வாள் , உங்க மாமியாருக்கு வயத்துல சீரியஸ் ஆபரேஷன். சர்ஜரி பண்ணனும். குறைஞ்சது ரெண்டு லட்சம் ரூபாய்ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விடஅதிகமா சொல்றீங் களே”
சுப்பையர் தனது நண்பர் பிள்ளைக்கு பெண் தேடினார். தரகர் ஒரு பெண் ஜாதகம் கொடுத்து விபரங்கள் சொன்
னார். பெண் பார்த்தார்கள். அப்போது சுப்பையர் தரகரை தனியாக அழைத்து என்ன கேட்டார் தெரியுமா?
”தரகரே.. நீங்க பெரிய விஷயத்தைமறைச்சுட்டீங்க.. இப்படிசெய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
ஒய் பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னுசொன்னீரே அது சரி ஆனா மூணு அடி அகலம்ன்னு ஏன்யா சொல்லலே.?
ராமானுஜத்துக்கு ஒருநாள் பக்கு ரெண்டு விழுந்துட் டுது.
” என்னடா ஆச்சு எப்படி பல்லு விழுந்தது/’
”’சொல்ல மாட்டேன் சார்’
”’ஏண்டா என்ன ரஹஸ்யம் அதிலே’
”இதை வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும் ”னு என் மனைவி சொல்லியிருக்கா”
”சுப்பையர், இதை பார்த்தீளா. என் பையன் டெஸ்ட்லே பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்கறதை . எனக்கு கோபம் வருமா வராதா ?’
”நீங்க எதுக்கு அதை பூஜ்யம் மார்க்குன்னு பாக்கறேள் . வாத்தியார் அவன் நன்னா படிச்சதாலே நல்லா படிச்ச
துக்காக “O” ‘ஓ’போட்ருக்கார்னு நினைச்சுக்குங்கோ ”
கோடி வீட்டு மாமா தம்பி பஸ் ட்ரைவர். பஸ் ரோட்டி லிருந்து கீழே பள்ளத்தில் விழுந்துட்டுது. 15 பேருக் கு பலத்த காயம போலீஸ் எப்படி ஐயா பஸ் விபத்தில் சிக்கியது என்று கேட்டபோது சுப்பையர் அருகே இருந்தவன் முழித்தான்.
”உங்களுக்காவது தெரியுமா? பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
”அவனுக்கும் ஆச்சர்யமா இருக்கு, எப்படின்னு தெரியல, புரியல சார். பாவம் அவன் நல்ல தூக்கத்தில இருந்தேன் னு சொல்றான் சார்”
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




