
everyonefollowme விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னைப்போலவே உங்களில் பலருக்கும் விக்ரமாதித்யானையும் அவனுடைய வேதாளம் சொல்லும் கதைகளும்
பிடிக்கிறது. நாமெல்லாரும் ஒரே படகில் பயணம் உல்லாசமாக செல்கிறோம்.
இதோ ஒரு வேதாளம் கதை.
யாப்ணுசி என்று ஒரு ஊருக்கு பெயர். கங்கை நதிக் கரையில் இருந்த ஊர். அதன் ராஜா பிரதாப மகுடன். அவன் மகன் வஜ்ரமகுடன். அப்பாவைப் போலவே மஹா வீரன். அழகன். அவன் நண்பன் மந்திரிகுமாரன் புத்திசாரன்.
ஒருசமயம் வஜ்ரமகுடன் புத்திசாரனோடு காட்டுக்கு வேட்டையாட போன போது காட்டின் நடுவே ஒரு அழகான ஏரி .அதில் யாரோ ஒரு அழகி தோழிகளுடன் நீராடிக் கொண்டிருந்தாள் .அவள் அழகால் ஏரிக்கே புத்தழகு. அவள் பெயர் பத்மாவதி. ராஜகுமாரன் அவள் அழகிலே மயங்க அவளும் அவன் அழகில் மயங்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க அவள் ஒரு தாமரைப் பூவை பறித்து காதில் சூட்டிக் கொண்டாள். இன்னொரு பூவைப் பறித்து தலையில் வைத்துக் கொண்டாள் . என்ன அர்த்தம்? புத்திசாரன் புரிந்து கொண்டான். அவள் போய் விட்டாலும் அதற்குப் பிறகு அரண்மனை திரும்பிய ராஜ குமாரன் அவள் நினைவில் வாடினான். அவன் ஏக்கத்தை புரிந்து கொண்டான் நண்பன் புத்திசாரன்
‘நண்பா!வஜ்ரமகுடா, வருந்தாதே. நீ அப்பெண்ணை சுலபத்தில் அடைய வழி இருக்கிறது” என்றான்.’
‘எப்படி என்று சொல்?’ அவள் யார், எங்கிருப்பவள் ஒன்றும் தெரியாதே”
”அவள் தான் ஜாடையாக விஷயத்தை அப்போதே உனக்கு சொல்லிவிட்டாளே. நீ பார்க்க வில்லையா?”
”எனக்கு தெரியவில்லையே புரியும்படியாக சொல்லேன்’ ‘
”தாமரைப் பூவை காதில் செருகிக் கொண்டு “நான் கர்ணோத்பலன் என்னும் ராஜாவின் நாட்டுக்காரி ”என்று சொன்னாள் . அந்தப் பூவை காதணி மாதிரி சுருட்டிக்காட்டி ”அங்கேயுள்ள தந்தச் சிற்பி ஒருவன் மகள்” என்பதையும் குறிப்பிட்டாள். தாமரைப் பூவை தலையில் சூடி தன் பெயர் பத்மாவதி என்றும் கையை நெஞ்சகத்தின் மீது வைத்துக் கொண்டு , கடைக் கண்ணால் உன்னைப் பார்த்ததால், அவள் இதயம் உனக்கேசொந்தம் என்றும் அறிவித்தாள். ”
அப்புறம் நான் இந்த விஷயங்களை வைத்துக் கொண்டு விசாரித்ததில் கலிங்கதேசத்தில் கர்ணோத்பலன் என்னும் ராஜா இருப்பதையும், அவன் ஆஸ்தானத்தில் தந்த சிற்பிகளுள் சிறந்தவனான சங்கிராமவர்த்தனன் என்பவன் இருப்பதை, அவனுக்கு ஒரு பெண் பத்மாவதி என்ற பெண் ஒருத்தி இருப்பதையும் கண்டு பிடித்தேன்”
வஜ்ரமகுடன் நண்பனின் புத்திக் கூர்மையைக் கண்டு மகிழ்ந்தான். இருவரும் ஆலோசித்துவிட்டு மீண்டும் வேட்டைக்கு போவதுபோல் அரண்மனையை விட்டு கிளம்பினார்கள் . வஜ்ரமகுடன் பாதி வழியில் குதிரை பரிவாரத்தை விட்டு பிரிந்து நண்பனோடு கலிங்க தேசம் சென்றான். தந்த சிற்பி வீட்டை தேடி அலைந்து அதன் அருகில் ஒரு கிழவி வீட்டில் தங்கினார்கள். குதிரைகளை மறைவாக ஒரு இடத்தில் கட்டி ஆகாரம் போட்டுவிட்டு கிழவியிடம் பேச்சு கொடுத்தார்கள்.
“பாட்டி இந்த ஊரில் சங்கிராமவர்த்தனர் என்கிற சிற்பியை உனக்கு தெரியுமா?”
”அவரை எனக்கு நன்றாகத் தெரியும். நான் தான் அவ ர் மகளுக்குப் பால் கொடுத்து வளர்த்தேன். அவர் என்னைத் தம் மகளின் செவிலித் தாயாக வேலைக்கு வைத்திருக்கிறார். ஆனால் இப்போது நான் அங்கே போவதில்லை. அதற்கு வேண்டிய புடவை துணி மணிகள் என்னிடம் இல்லை. என் மகன் ஒரு சூதாடி. என்அணிமணி எதையாவது பார்த்துவிட்டால் அவன் உடனே அதை எடுத்துப் போய் விற்று விடுகிறான்”
”இந்தா இந்த விலையுயர்ந்த வஸ்திரத்தை போர்த்திக் கொள் என்று புத்திசாரன் அவளுக்கு தன் அங்க வஸ்தி ரம், அதோடு சில பரிசுகள் கொடுத்தான். நீ தான் எங்களுக்கு உதவி செய்பவள். நீஅந்த பெண்ணிடம் போய் ரகசியமாக போய், “நீ ஏரிக்கரையில் கண்ட ராஜகுமாரன் இப்போது இங்கே இருக்கிறான். உன் மேல் மோகம் கொண்டிருப்பதை அறிவிக்க தான் என்னை அனுப்பினான் என்று சொல்”
கிழவி சென்றாள் . சீக்கிரமே திரும்பி வந்தாள் .
”என்ன ஆச்சு பாட்டி?”
”அந்த பெண் கர்ப்பூரத்தில் தோய்த்த தன் இரண்டு கைகளால் என் இரு கன்னங்களிலும் அடித்துவிட்டாள். அவமானத்தால், நான் மனம் உடைந்து திரும்பி விட்டேன். இதோ பாருங்கள், என் கன்னத்தில் அவள் விரல் அடையாளங்கள்!” என்றாள்
கிழவி.புத்திசாரன் கெட்டிக்காரன். அதில் ஒரு சேதி இருக்கிறது என்று புரிந்து கொண்டு வஜ்ர மகுடனிடம்
”நண்பா இது நிலா காலம். சந்திக்க ஏற்ற சமயம் அல்ல. நிலா பத்துநாள் போகட்டும். அதுவரையில் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி இருக்கிறாள்.
பத்து நாள் கழித்து கிழவியை பத்மாவதியிடம் அனுப் பிய போது ”மூன்று விரல்களைச் செம்பஞ்சுக் குழம்பில் நனைத்து, என் மார்பில் அடித்து ௮னுப்பிவிட்டாள்.” என்றாள் கிழவி.
”இன்னும் மூன்று இரவுகள் அவளை சந்திக்க முடியாது என்று சேதி அனுப்பி இருக்கிறாள்” என்றான் புத்தி சாரன்
.மூன்று நாள் கழித்து சென்ற கிழவியை பத்மாவதி வரவேற்று சந்தோஷமாக உபசரித்தாள். உணவளித் தாள் .
கிழவி வீடு திரும்பும்போது பத்மாவதி வீட்டு வாசலில் கூச்சல். சப்தம். “மதம் பிடித்த யானை ஒன்று அதன் கட்டுத் தறியிலிருந்து சங்கிலியை அறுத்துக் கொண்டு கிளம்பிவிட்டது. தெருவிலே அங்குமிங்கும் ஓடி மக்களைக் காலால் மிதித்துக் கொண்டு வருகிறது” என்று குரல் கேட்டது.
உடனே பத்மாவதி கிழவியிடம். “நீ ராஜ வீதி வழியாகப் போகக் கூடாது. மதயானையினால் உனக்கு ஆபத்து நேரிடக்கூடும். என்னுடன் வா. வேறு வழியாக அனுப்பி வைக்கிறேன். உன்னை தோட்டத்தில் கயிறு கட்டி இறக்கி விடுகிறோம். நீ அங்கே இருக்கும் பெரிய மரத்தில் இறங்கி மதில் சுவரைத் தாண்டி கீழே இறங்கு. அந்த வழியாகச் சென்றால் எந்தவிதமான ஆபத்தும் உனக்கு வராது”
கிழவி அப்படியே ஜாக்கிரதையாக வந்து சேர்ந்த விஷயத்தை ராஜகுமாரன் மந்திரி குமரன் இருவரும் கேட்டதும் புத்திசாரன் இதன் அர்த்தத்தை மகுட வஜ்ரனு க்கு விளக்கினான்
“நண்பா. உன் ஆசை நிறைவேறியது. நீ எந்த வழி யாகச் சென்று தன்னை அடையலாம் என்பதை பத்மாவதி உணர்த்திவிட்டாள் . சூரியாஸ்தமனம் தாண்டி அப்படி யே நீ சென்று அவளை அடை”
சரியான நேரத்தில் வஜ்ரமகுடன் சுவரைக் தாண்டி தோட்டத்தை அடைந்து அங்கு தயாராக தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு மேல் மாடத்துக்கு போய்விட்டான். மாடியில் பூர்ணசந்திரன் முகத்துடன் பத்மாவதி அவனை வரவேற்றாள். அவர்கள் இருவரும் கந்தர்வ விவாகம் புரிந்து கொண்டார்கள். தன் ஆசைக்கினியாளை அடைந்த ஆனந்தத்திலே ராஜ குமாரன் சில நாட்கள் உலகையே மறந்து அவளுடன் தங்கிவிட்டான்.
பிறகு ஒருநாள் அவன் பத்மாவதியிடம் “அன்பே! மந்திரி குமாரனான என் நண்பனும் என்னுடன் வந்திருக் கிறான். உன் செவிலித்தாய் வீட்டிலே அவனை விட்டு விட்டு வந்துள்ளேன். அவனைப்போய் பார்த்துவிட்டு உடனே திரும்பிவிடுகிறேன்” என்றான்.
அப்போது பத்மாவதி “ நாதா,நானே உங்களை ஒரு விஷயம் கேட்கவேண்டும். நான் காட்டிய ஜாடைகளின்
உட்பொருளை நீங்களாகவே உணர்ந்து கொண்டீர்களா? அல்லது உங்கள் நண்பர்தான் அவற்றின் புதிரை விடுவித்து விடை கூறினாரா?” என்று கேட்டாள்.
“உன் ஜாடைகளில் ஒன்றுமே எனக்கு விளங்கவில்லை. மகா சாமர்த்தியசாலியான என் நண்பன் அவற்றைத் தன் நுண்ணறிவால் கண்டு எடுத்துச் சொன்னான்.” என்று உண்மையை அவளிடம்சொன்னான் வஜ்ரமகுடன்.
” நீங்கள் பண்ணினது தப்பு. என்னிடம் இதை சொல்ல வில்லை. அவர் உங்கள் நண்பர். ஆகவே என் சகோதரர். அவருக்கு நான் முதலில் மரியாதை செலுத்த வேண்டும்.’ என்றாள் .
இரவு கிழவி வீட்டுக்கு திரும்பிய வஜ்ரமகுடன் நடந்ததை சொன்னதும் புத்திசாரன் திடுக்கிட்டான்.
”நீ ரஹஸ்யத்தை சொல்லி இருக்க கூடாது. இதனால் தீங்கு நேரலாம்” என்று அஞ்சினான்.
மறுநாள் காலை ஒரு பணிப்பெண் பத்மாவதி வீட்டிலி ருந்து வந்தாள்,பட்சணம். பலகாரம், வெற்றிலை பாக்கு ஆகியவற்றுடன் வந்து. மந்திரிகுமாரனின் செளக்கியத் தை விசாரித்துவிட்டு அவன் கையில் கொடுத்தாள். ராஜகுமாரன் அவற்றைச் சாப்பிடக்கூடாது என்பதை அறிவிக்க ”எஜமானி உங்கள் வரவை உடனே எதிர்ப் பார்க்கிறாள். ஒன்றும் சாப்பிடாமல். உங்களுடன் சேர்ந்து சாப்பிட காத்திருக்கிறாள். வாருங்கள் ”என்றாள் .
புத்திசாரன் புரிந்துகொண்டு “வஜ்ரமகுடா, இதோ ஒரு வேடிக்கை. நீயே பார்”
என்று சொல்லிக் கொண்டே பணிப்பெண் கொண்டு கொடுத்த பலகாரத்தில் ஒரு சிறிது எடுத்து பக்கத்தில் இருந்த ஒரு நாய்க்குப் போட்டான். அதைத் தின்றதும். நாய் அதை சாப்பிட்டுவிட்டு அங்கேயே விழுந்து தன் உயிரைவிட்டது. அரச குமாரன் திகைத்துவிட்டான். “இது எதனால்? என்ன விஷயம்?” என்று அவன் பிரமிப்புடன் கேட்டான்.
“உண்மை என்ன என்றால், என் மதிநுட்பத்தை அவள் உணர்ந்துவிட்டாள். ஆகவே இரகசியம் வெளிப்படாம லிருக்க அவள் என்னைக் கொன்றுவிட வேண்டுமென்று இந்த விஷம் கலந்த பலகாரத்தை அனுப்பியிருக்கிறாள். என்னை எதற்காக அவள் கொல்ல விரும்பினாள் தெரியுமா? அவளுக்கு உன்மீது பூரண ஆசை. நான் உயிருடன் இருக்கும்வரை, என்னுடைய தோழமை கொண்ட நீ அவளிடம் பூரண ஆசை கொண்டு
அன்பு டன் இருக்கமாட்டாய் என்று சந்தேகம் , பயம். ஒருவேளை என்றாவது ஒருநாள் என் வார்த்தையைக் கேட்டு அவளை விட்டுவிட்டு ஊர் திரும்பி விடுவாயோ என்றும் பயம்.”
“நண்பா! உனக்கு புத்திசாரன் என்று பெயரிட்டது மிகவும் பொருந்தும். அறிவின் ஆதாரமே நீ!” என்று வஜ்ரமகுடன் புகழ்ந்தான்.
வாசலில் அப்போது ஒரு சப்தம். “ஐயோ! ராஜாவின் ஆண் குழந்தை இறந்து போயிற்றே” என்ற குரல் கேட்டது.
அதைக் கேட்ட மந்திரிகுமாரன் மிக்க மகிழ்ச்சி அடைந் தான்.
“நண்பா, இன்றிரவு நீ திரும்ப பத்மாவதியின் மாளிகைக் குச் செல். அவளுடன் குதூகலமாய் இருக்கும்போது அவளுக்கு நல்ல போதையுட்டி அவளை மதிமயங்கச் செய்து விடு. தன் நிலைமை மறந்து பிணம் போலப் படுக்கையில் படுத்துத் தூங்கும்போது அவள் நகைக ளைக் களைந்து இடையிலே நகங்களினால் சூலா
யுதத்தின் முக்குறிகளைப் போல கீறல் அடையா ளம் செய்து விட்டு வந்துவிடு. அதற்கு மேல் நடக்க வேண்டிய வற்றை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.” என்றான் மந்திரிகுமாரன் புத்திசாரன்.
அப்படியே அன்றிரவு வஜ்ரமகுடன் பத்மாவதியை மயங்க வைத்து நகத்தால் சூலாயுதத்தின் முத்திரையை அவள் இடையில் அடையாளம் பண்ணிவிட்டு அவள் நகைகளோடு கிழவி வீட்டுக்கு வந்தான். மறுநாள் புத்திசாரன் ஒரு சாமியார் வேஷம் போட்டுக் கொண்டான். வஜ்ரமகுடன் அவன் சீடனாக வேஷம் போட்டுக் கொண்டு பத்மாவதியின் முத்துமாலையை அவனிடம் கொடுத்து
“நண்பா, இந்த நகையை நீ கடைத் கெருவுக்குச் சென்று விலை கூறு. பலரும் பார்க்கட்டும். யாரும் வாங்கமுடியாத அதிக விலையை சொல். உன்னை யாரவது ராஜாவின் காவலாளிகள் பிடித்து விசாரித் தால், பணிவாகவே. “இதை விற்கச் சொல்லி என்
குருநாதர் என்னிடம் கொடுத்தார்” என்று மட்டும் சொல். வேறு ஒரு வார்த்தை பேசாதே. என்றான்.
வஜ்ரமகுடன் முத்துமாலையை சந்தையில் விலைகூறி உரக்க கத்தினவுடன் காவலாளிகள் அவனை ஒரு திட்டுறான் என்ற பிடித்து கொத்தவாலிடம் கொண்டு சென்றார்கள். சிற்பி வீட்டில் பெண்ணின் நகைகள் திருடு போன பிராது கொத்தவாலிடம் இருந்தது. வஜ்ரமகுடனிடம் விசாரித்தபோது அவன் ”எனக்கு ஒன்றும் தெரியாது என் குருநாதர் தான் இதைக் கொடுத்து விற்று வரும்படி சொன்னார்”என்று கூறினான் வஜ்ரமகுடன்.
கொத்தவால் மயானத்துக்கு சென்று அங்கே தபசி வேடத்திலிருந்த புத்திசாரனிடம் ”உன்னிடம் எப்படி இந்த நகை வந்தது?”என கேட்டபோது அவன்
“நான் ஒரு தவசி. எந்த இடத்திலும் நிரந்தரமாக வசிப்பவன் அல்ல. தற்செயலாக நேற்று இவ்விடம் வந்தேன். இரவு நேரம் மயானத்தில் தங்கியிருக்கையில். நடுநிசியில் மோகினிகளின் கூட்டம் ஒன்று இங்கே வந்தது. அவர்களுள் ஒருத்தி ஒரு ராஜ குமாரனின் உடலைத் தூக்கிவந்தாள் அந்த உடலைக் கிழித்து இதய கமலத்தை வெளியே எடுத்து பைரவனுக்கு நிவேதித் தாள். அவள் மோகன வித்தையில் வல்லவள். நன்றாக
மதுபானம் செய்து. போதையேறித் தன் வசம் இழந்து இருந்தாள். தனியே அமர்ந்திருந்த என்னிடம் நெருங்கி, முகத்தைக் கோணி என் ஜபமாலையைப் பிடுங்க முயன்றாள். அவள் என்னிடம் வந்து அத்துமீறி வம்பு பண்ணியதால் எனக்குக் கோபம் வந்தது. என் மந்திர சக்தியால் சூலாயுதத்தைப் பாய்ச்சி அவள் இடையில் குத்தினேன். அப்போது அவள் கழுத்திலிருந்த முத்து மாலையைப் பிடுங்கிக் கொண்டேன். தபசிக்கு முத்து மாலை எதற்கு? ஆகவே தான் என் சீடனிடம் கொடுத்து விற்க அனுப்பினேன்“
கொத்தவால் உடனே ராஜாவிடம் சென்று விஷயத்தை கக்கினான். ”என்ன சிற்பியின் மகள் மோகினியா?. அவள் இடையில் சூலாயுதம் குத்திய அடையாளம் இருக்கிறதா என்று உடனே பார்க்கவேண்டும் என ஒரு தாதியை அனுப்ப அவள் சென்று பார்த்துவிட்டு அவள் இடையில் சூல ஆயுத அடையாளம் இருக்கிறது பத்மாவதி ஒரு மோகினிப் பிசாசு அவளே ராஜ குமார னைக் கொன்றவள் என்று முடிவு கட்டினான் ராஜா.
.ராஜா மயானத்துக்கு ஓடினான். புத்திசாரன் தவசி வேஷத்தில் அங்கே இருப்பதைப் பார்த்து அவனை வணங்கி அந்த மோகினிப்பிசாசுக்கு என்ன தண்டனை தரலாம் என்று கேட்டான்.
”அவளை ஊரை விட்டு துரத்தி விடுங்கள் ”என்று புத்திசாரன் அறிவுரை வழங்க ராஜாவின் சேவகர்கள்
பத்மாவதியை காட்டுக்கு இழுத்துச் சென்று ஆடையா பரணங்களை உருவிவிட்டு, நடுக்காட்டில் விட்டு விட்டார்கள். பத்மாவதிக்கு இது வஜ்ரமகுடன் நண்பன் மந்திரிகுமாரன் வேலை என்று நம்பினாள் . அன்று மாலை வஜ்ரமகுடனும் புத்திசாரனும் தங்கள் நிஜ உருவில் காட்டுக்குள் வந்து அழுதுகொண்டு இருந்த பத்மாவதியை பார்த்து தேற்றி, அவளை தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்றார்கள்.சிற்பியும் மற்றவர்களும் பத்மாவதியை காட்டு விலங்குகள் கொன்று நின்று விட்டது என வருந்தினார்கள் சிற்பி சில காலத்தில் மனம் உடைந்து இறந்து போனான். கணவன் இறந்த துக்கத்தால் அவன் மனைவியும் மறைந்தாள்.
இது தான் பத்மாவதி கதை…இதைக்கேட்டாயா விக்ரமாதித்தா?
“இந்தக் கதையில் எனக்கு ஒரு சந்தேகம். அதைத் தீர்த்து வை தந்தச்சிற்பியும், அவன் மனைவியும் இறந்த
தோஷம், பாபம், வஜ்ரமகுடன், மந்திரிகுமாரன் புத்தி சாரன். பத்மாவதி இம்மூவரில் யாரைச் சாரும்? நீ அறிவாளி. சரியான பதிலைச் சொல். இல்லாவிட்டால் உன் தலை நூறு சுக்கலாக உடையும் . ஜாக்கிரதை.” என்றது வேதாளம்.
”ஹே, வேதாளமே! இதில் ஒரு சிக்கலும் இல்லை. நீ சொன்ன மூன்று போரையும் எந்த பாபமும் தோஷமும் சேராது. அந்தப் பழி எல்லாமே அந்த கர்ணோத்பல ஊர் ராஜாவையே சேரும்” என்றான் விக்ரமாதி த்தன்
.”எப்படி சொல்கிறாய்? அந்த ராஜா என்ன பண்ணி னான்? அந்த மூவரால் தானே தந்த சிற்பியின் உயிர் மாய்ந்தது? அன்னங்கள் அரிசியைச் சாப்பிட்டால் அந்தக் குற்றம் காகத்தைச் சாருமா?” என்று கேட்டது
வேதாளம்.
“உனக்கு புரிய வைக்கிறேன் கேள். உண்மையில் அந்த மூவர் மீதும் பழியில்லை. மந்திரிகுமாரன் புத்திசாரன் தன் எஜமானன் நன்மையை உத்தேசித்தே நடந்து கொண் டான். அவனுக்கு இதில் எந்த சுயநலமோ லாபமோ இல்லை. ராஜகுமாரனும், பத்மாவதியும் காமன் கணையால் தாக்குண்டு,அதனால் பாதிக்க ப்பட்டவர்களாய் தாங்கள் செய்வதென்ன வென்பதை அறியாமல் நடந்து கொண்டார்கள். தங்கள் எண்ணம் ஈடேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவர்கள் நடந்து கொண்டனர். ஆனால் கர்ணோத்பல அரசனோ ராஜ தர்மத்தைச் சரியாக உணராமல், வழக்கைத் தீர விசாரித்து உண்மையறியாமல், அரசனுக்குரிய அறிவு இல்லாமல், தவறாக முடிவு கட்டித் தீர்ப்புக் கூறியதா லேயே அவ்விருவரும் உயிர் இழக்க நேர்ந் தது. ஆகவே அந்தப்பழி முழுதும் அவனையே சாரும்”
விக்கிரமாதித்தனுக்கு ஒரு சாபக்கேடு. என்னதான் அவன் உண்மையை, சரியான பதிலை சொன்னாலும் கூட உடனே வேதாளம் பறந்து ஓடிப்போய் முருங்கை மரத்தின் மேல் உச்சாணிக்கிளையில் தொங்கும். பாவம் அவன் மரமேறி அதை பிடித்து தோளில் தொங்கப் போட் டுக் கொண்டு அடுத்த விடை சரியாக சொல்லும் போது மீண்டும் ஓடிப்போய் அதை பிடித்து வரவேண் டும்…
என்ன செய்வது அவன் தலையெழுத்து. அவன் தலை நூறு சுக்கலாக உடையாமல் சரியாக வேதாளத்துக் கும் நமக்கும் வேறு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



