
மஹா லக்ஷ்மியும் மஹேஸ்வரியும் ஒன்றே. – நங்கநல்லூர் J K SIVAN
இன்று வெள்ளிக்கிழமை – அம்பாள் யார்? உமா, பார்வதி, பரமேஸ்வரி தானே மகாலட்சுமியும் கூட, என்று தோன்றுகிறது.
ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்ரம் பாடி மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. “இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள். அதற்கு தண்டனைதான் தாரித்திரியம். பாவம் தொலைகிற காலம் வருகிற வரையில் இவர்களுக்குச் சம்பத்தைத் தருவதற்கில்லை” என்றது அசரீரி.
“மஹாலக்ஷ்மி தாயே, இந்த ஏழை பெண்மணி ஜன்மாந்தரங்களாகச் செய்த பாவம் இப்போது இருப்பதைவிடக்கூட அதிகமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; இத்தனை அன்போடு அகத்தில் இருந்த ஒரே பக்ஷ்யமான நெல்லிக் கனியையும் எனக்கு இவள் போட்டிருக்கிறாளே. இந்த அன்பும் தியாகமும் எத்தனை புண்ணியமானவை! சாப்பாட்டுக்கே இல்லாத இவள் எனக்குப் பிக்ஷை போட்ட பலன் எத்தனை பாவத்தையும் சாப்பிட்டு விடுமே!.
”ம்ம்ம்ம்” என்றாள் மஹாலக்ஷ்மி. அவளுக்கு ஆதிசங்கரரின் வாக்கு பிடித்தது.
“அம்மா, மஹாலக்ஷ்மி! இவளுக்கு இருக்கிற மாதிரி உனக்கும் நிறைய அன்பு இருக்கிறதே! அதனால் ரொம்பக் கண்டிப்போடு நியாயம் மட்டும் வழங்காமல், அன்பைக் காட்டி அநுக்ரஹம் பண்ணம்மா” ”
“दद्याद् दयानुपवनो द्रविणाम्बुधाराम्_ अस्मिन्नकिञ्चनविहङ्गशिशौ विषण्णे । दुष्कर्मघर्ममपनीय चिराय दूरं नारायणप्रणयिनीनयनाम्बुवाहः ॥८॥
Dadyaad Daya-Anupavano Dravinna-Ambu-Dhaaraam_ Asminn-Akin.cana-Vihangga-Shishau Vissannnne | Dusskarma-Gharmam-Apaniiya Ciraaya Duuram Naaraayanna-Prannayinii-Nayana-Ambu-Vaahah ||8||
தத்யாத் தயாநுபவனோ” எனும் இந்த ஸ்லோகத்தில் “சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக் காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை மாதிரி, இவர்களைத் தகிக்கிறது என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா? அந்தக் காற்றினால் உன் கடாக்ஷ மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா!”
மஹா லட்சுமி திருப்தி அடைந்தாள். மனம் குளிர்ந்தது. அந்த ஏழைப் பெண் அன்போடு போட்ட ஓர் அழுகல் நெல்லிப் பழத்துக்குப் பிரதியாக அந்த வீட்டு வேலி எல்லை வரையில் தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழிந்து தள்ளி விட்டாள். இந்த ஸ்தோத்ரத்துக்கு “கனகதாரா ஸ்தவம்” பொன்மழை துதி”. நான் அர்த்தம் எழுதி இருக்கிறேன். இத்துடன் இணைக்கிறேன். யாருக்கு வேண்டுமோ படியுங்களேன்.
ஆதி சங்கரரின் முதல் ஸ்துதி இது. ”ஆசார்யாளுடைய அன்பு, பிராம்மண பத்தினியின் அன்பு. மஹாலக்ஷ்மியின் அன்பு, எல்லாம் இதில் சேர்க்கை. இதைப் பாராயணம் செய்கிறவர்களுக்கும் துர்பிக்ஷங்கள் நீங்கி, தர்ம நியாயமாகக் காலக்ஷேபம் நடத்துவதற்குக் குறைவில்லாதபடி சம்பத்து கிடைக்கும்” என்கிறார் மஹா பெரியவா.
ஜீவனுக்கும் ஈசுவரனுக்குமே பேதமில்லை.. அதனால் அவருக்குத் தெய்வங்களிடையே பேதபுத்தியே கிடையாது. எல்லாத் தெய்வங்களும் ஒரே பராசக்தியின் ரூபங்கள் தாம் .
गीर्देवतेति गरुडध्वजसुन्दरीति शाकम्भरीति शशिशेखरवल्लभेति । सृष्टिस्थितिप्रलयकेलिषु संस्थितायै तस्यै नमस्त्रिभुवनैकगुरोस्तरुण्यै ॥१०॥
Giir-Devate[aa-I]ti Garudda-Dhvaja-Sundarii-[I]ti Shaakambharii-[I]ti Shashi-Shekhara-Vallabhe[a-I]ti | Srsstti-Sthiti-Pralaya-Kelissu Samsthitaayai
Tasyai Namas-Tri-Bhuvanai[a-E]ka-Guros-Tarunnyai ||10||
மஹாலக்ஷ்மி வாக் தேவி என சொல்லலாம். கருட துவஜ சுந்தரி. கருடனை கோடியாக கொண்ட மஹாவிஷ்ணு பத்னி. ”சசி சாகம்பரி’ சந்திரசேகரனின் தேவி. ஸ்ரிஷ்டி ஸ்திதி, சம்ஹாரம் எனும் முத்தொழில்களிலும் ஈடுபடுபவள்.
”மஹா லட்சுமி நீயேதான் வாக்தேவியான ஸரஸ்வதியாகவும், தாவர வளத்தைத் தருகிற சாகம்பரியாகவும், சந்திர மௌலீசுவரரின் பத்தினியான பார்வதியாகவும், இருக்கிறாய். மூன்று லோகங்களுக்கும் குருவான ஒரு பரமாத்மா இருக்கிறது. அதன் சக்தியே நீ. இருவருக்குமாகச் சேர்ந்து உலக சிருஷ்டி பரிபாலனம், சம்ஹாரம் என்கிற விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்” என விளக்குகிறார் காஞ்சி மஹா பெரியவா.
பராசக்தியான காமாக்ஷியும் காஞ்சி மண்டலத்தில் இதே மாதிரியாகப் பொன் மழை பொழிந்து மஹாலக்ஷ்மிக்கும் தனக்கும் அபேதத்தைக் காட்டியிருக்கிறாள். I am unable to attach my pdf book in tamil with this. pl contact me in whatsapp 9840279080 for a free copy of my book on KANAKADHARA STHOTHRAM in tamil.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



