

ஆத்ம பஞ்சகம் நங்கநல்லூர் J .K. SIVAN
ஆதி சங்கரர்
‘யாராவது இன்னொருவர் ஆதி சங்கரரைப் போல மீண்டும் பிறக்கமாட்டாரா? வாரி வாரி இன்னும் நிறைய அற்புத விஷயங்களை தரமாட்டா? ”
இந்த ஏக்கம் என் மனதில் மட்டும் அல்ல. எண்ணற்ற பக்தர்களின் மனத்திலும் எதிரொலிக்கிறது. இதைக் கேட்டு ஆதி சங்கரர் என்ன சொல்கிறார்?
”அப்பனே, நீ என்ன பேசறே? ஏற்கனவே நான் கொடுத்ததெல்லாம் படிச்சியா? படிச்சாலும் புரிஞ்சிண்டிட்டியா? அதுவே இன்னும் பத்து ஜன்மத்துக்கு நிறைய இருக்கே. புதுசா என்னை மாதிரி இன்னொருத்தரா? அவர் வேறே எழுதணுமா? போ, போ, முதல்லே நான் எழுதினதை படிச்சிட்டு அப்புறம் பேசு. படிச்சா தான் பேசவே மாட்டாயே . அப்படியே ஆனந்த சாகரத்தில் அமிழ்ந்துட்டா, பேச்சு எங்கிருந்து வரும்?”
இன்று காலை எழுந்ததும் மீண்டும் ஆதி சங்கரரின் ஆத்ம பஞ்சகம் மனதில் தோன்றியது. மீண்டும் அதை எழுத வேண்டும் என்று ஆர்வம் வளர்ந்தது. ஆத்ம பஞ்சகம் ஆன்மா பற்றிய ஐந்தே ஐந்து ஸ்லோகம்”
சந்தோஷம் என்பது நாலு பேருடன் பகிர்ந்து கொண்டால் தானே அதற்கு இன்னும் அது அதிகமாகும். எனவே தான் இந்த சிறு எண்ண பிரதிபலிப்பு. இந்த ஸ்லோகங்களை என் அருமை நண்பர், மதிப்புக்குரிய வித்தகர் ஸ்ரீ பி. ஆர். ராமச்சந்தர் வெகு எளிமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அதையும் கொடுத்திருக்கிறேன்.
1. नाहं देहो नेन्द्रियाण्यन्तरंगं नाहंकारः प्राणवर्गो न बुद्धिः दारापत्यक्षेत्रवित्तादिदूरः साक्षी नित्यः प्रत्यगात्मा शिवोऽहम् ॥१॥
Naham deho, nendriya nyantharangam, Nahamkara prana vargaa na budhi, Darapathya kshethra vithadhi dhoora, Sakshi nithya prathyagathma shivoham.
I am neither the body, nor the senses nor the mind, Neither am I pride, soul nor intellect, But I am Shiva, who is eternal, Who is completely unattached. Who is far , far and far away From wife, son , lands and assets, And is the witness for everything.
தேஹாத்ம புத்தி என்பார்கள். இந்த தேகத்தை தான் ஆத்மா என்று தவறான கணக்கு போடுகிறோம். தெரிந்தும் போடுகி றோம். தெரியாமலும் போடுகிறோம். பஞ்ச இந்திரியங்களும் ஆத்மா இல்லை. இன்னும் சொல்லப் போனால் நமது புத்தியும் ஆத்மா இல்லை. விடுகிறோமே மூச்சு. பிராணன் அதுவும் ஆத்மா இல்லை. குப்பு ராவ் மூச்சை விட்டு கட்டையாகி விட்டார். கும்பல் வீட்டில் சேருகிறது. ”மூச்சை விட்டார். பிராணன் போய் விட்டது” என்கிறோமே தவிர ஆத்மா போய் விட்டது என்றா சொல்கிறோம். அவர் ஒரு நல்ல ஆத்மா என்கிறோமே. ஏதோ கொஞ்சம் நாமும் தெரிந்து வைத்திருக் கிறோம் அல்லவா? அதை விஸ்தாரமாக புரிந்து கொள்ள முயலவில்லை. அஹங்காரமும் ஆத்மா இல்லை. பின் எது ஐயா ஆத்மா? எது பிள்ளை, பெண்டாட்டி, வீடு, வாசல், சொத்து, சுதந்திரம் எல்லாவற்றையும் விட்டு விலகி ஒரு சாட்சியாக தூரத்திலிருந்து சம்பந்தமே இல்லாமல் பார்க்கிறதோ அது தான் ஆத்மா. அடுத்த தெருவில் ஒரு பெரிய மாளிகை வீடு ஒரு செட்டியார் கட்டியிருப்பதை பார்க்கும்போது அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? என்பது போல் இந்த உடம்பையும், மற்ற உறவையும் கிட்டே சேர்க்காமல் வைத்துக்கொள்வது.
2. रज्ज्वज्ञानाद्भाति रज्जुर्यथाहिः स्वात्माज्ञानादात्मनो जीवभावः। आप्तोक्त्या हि भ्रान्तिनाशे स रज्जु- र्जीवो नाहं देशिकोक्त्या शिवोऽहम् ॥२॥
Rajjwagnanath bhathi rajjuryadhai, Swathma jnanad athmano jeeva bhava, Aapthokthya hi branthinase sa rajjur,Jjevo naham desikokthya shivoham.
Due to ignorance I think that a rope is a snake, For due to absence of Jnana .I ascribe life in to lifeless thing.And when the realized one points it out, I wake up from this illusion, And understand that it is a rope and not a snake. Similarly I am not the soul but Shiva, Which I only understand by the teaching of the great teacher.Similarly I am not the soul but Shiva, Which I only understand by the teaching of the great teacher.\
பிரதி பாசிகம் என்று சமஸ்க்ரிதத்தில் ஒன்றை மற்றொன்றாகவே கண்டு உணர்வது. அரை இருட்டில் ‘பள பள’ வென்று ஒரு தோரணக் கயிறு சுவர் ஓரமாக காற்றில் ஆடுகிறது. ஐந்து அடி நீளத்தில் ஒரு நாகம் அங்கு நெளிந்து கொண்டு இருக்கிறது என்று அதைக் கண்டு நடுங்குகிறோம். வியர்த்து, மார்பு படபடவென்று துடித்து பாதி உயிர் போய் விட்டது. பிறகு யாரோ அருகில் தைர்யமாக சென்று பார்த்து அதை கையில் எடுத்து அது ஒரு கயிறு என்று காட்டியது. பாம்பு போய் விட்டது. கயிறு மிஞ்சியது. பயமும் போனது. இது பாம்பு இல்லை என்ற ஞானம் இல்லாததால் கயிறு பாம்பாக பயமுறுத்தியது. அது போல் உயிரற்ற உடம்பை உயிர் என்று நம்பி படாத பாடு படுகிறோம். மஹா பெரியவா போன்ற ஒரு ஞானி, குரு, ”சுவாமி உங்க உடம்பு ஆத்மா இல்லை” என்று உணர்த்தினால் தான் பாம்பு கயிறாகும்.
இப்படி தட்டி எழுப்பின பிறகு தான் என்னுள் இருப்பது ஜீவன் அல்ல அந்த சிவனே என்று அந்த ஞானி, குரு, சொல்லிக் கொடுப்பது புரியும். அப்பறம் என்ன, சதா ஆனந்தம் தான்.
3. आभातीदं विश्वमात्मन्यसत्यं सत्यज्ञानानन्दरूपे विमोहात् । निद्रामोहात् स्वप्नवत् तन्नसत्यं शुद्धः पूर्णो नित्य एकः शिवोऽहम् ॥३॥
Aabhadhedham vishwamathmanya sathyam, Sathya jnanananda roope vimohat, Nidhramohat swapnavath thanna sathyam, Shuddha poorno nithya eka Shivoham.
Due to the veil of ignorance, I see this world in the eternal life,Which has the form of truth and joy,Similar to the dream which I see due to veil of sleep, For I am the pure complete, perennial and single Shiva.
காமாலைக் கண்ணனுக்கு கண்ட தெல்லாம் மஞ்சள். இந்த உலகமே என்றும் சாஸ்வதம். இந்த பூலோக வாழ்க்கை அழிவற்றது என்ற எண்ணங்கள் திரையாக ஒரு உண்மையை மறைக்கின்றன. எது அழிவற்றது, உண்மையானது, நிரந்தரம்? என்று தெரியவில்லை. உறக்கத்தில் காணும் கனவுத் தோற்றம். நிஜம் மாதிரியே இருக்கும். ஆனால் அது பொய். எது சுத்தமோ, எது பூரணமானதோ, எது ஒன்றேயோ, அது தான் என்னுள் உறையும் சிவன் என்கிற நான்.
4. मत्तो नान्यत् किञ्चिदत्रास्ति विश्वं सत्यं बाह्यं वस्तुमायोपक्लिप्तं । आदर्शान्तर्भासमानस्यतुल्यं मय्यद्वैते भाति तस्माच्छिवोऽहम् ॥४॥
Mathi nanyath kinchid athrasthi viswam,Sathyam bahyam vasthu mayopak li ptham,Adarsho andhar bhasamanasya thulyam,
Mayyadwaithe bhathi thasmad shivoham.
This world is in no way different from me, Similar to everything getting reflected in a mirror, All the world is within me,
So I am that Shiva which is without two.
எங்கும் பரவி இருக்கும் இந்த உலகம், நானே தவிர வேறில்லை. மாறிக் கொண்டே இருக்கிறதே. மாற்றம் என்றால் என்ன. ஒன்று இருந்து, அது மறைந்து வேறொன்றாக காட்சி அளிப்பது தானே மாற்றம். நானும் அப்படித்தானே. ஐந்து வயது நான், இருவது வயது நானில்லை, நாப்பது வயது நான் எண்பது வயது நான் கிடையாது. 80 வயது நான் இப்போது 86 வயதானவன் இல்லை. மாற்றம் இருந்தாலும் மொத்தத்தில் எல்லாமே நான். நானே எல்லாம். அப்போது எல்லாத்திலும் உள்ள சிவனும் நான், நானே தான் சிவன். எல்லாம் ஒண்ணே .
5.. नाहं जातो न प्रवृद्धो न नष्टो देहस्योक्ताः प्राकृताः सर्वधर्माः। कर्तृत्वादिश्चिन्मयस्यास्ति नाहं-कारस्यैव ह्यात्मनो मे शिवोऽहम् ॥५॥
Naham jatho na pravrudho na nashto, Dehasyoktha prakrutha sarva dharma, Karthruthwadhi schinmaya syasthi naham,Karasyaiva hyathmano may Shivoham.
Nor was I born nor grew nor die, For birth, growth and death are for the body, The nature of taking up a work is , The reflections of pride and not,
For my soul which is eternal, And so I am the unattached Shiva.
அப்படி என்றால், நான் பிறக்கவில்லை, வளரவில்லை, இறக்கவில்லை, என்றால் புரிகிறதா? அது ஆத்மா பற்றிய விஷயம். அது புரியாததால் ஆத்மா என்றால் இந்த உடல் தான் சார் என்கிறோம். உண்மையில் உடல் நான் இல்லை. நான் கல்கத்தாவுக்கு ஒரு மணியிலே வரேன் என்று சொல்கிறேனே. நானா பறந்தேன்? ஏதோ ஒரு ஏரோப்ளேன் என்னை தூக்கிக் கொண்டு போய் சேர்த்தது. ப்ளேன் வந்துது என்றா சொல்கிறேன். நான் வந்தேன் என்று தானே வார்த்தை. அது போல் என்னைத் தாங்கி நிற்கும் இந்த உடம்புக்கு தான் எல்லா மாற்றங்களும். இதில் அஹங்காரம் கொண்டு இருந்தால் அது எனதில்லை. பெருமை, கர்வம்..ஹுஹூம். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் தான் சிவனாயிற்றே. எதோடும் அட்டேச்மென்ட் இல்லையே.
नाहं जातो जन्ममृत्यू कुतो मे नाहं प्राणः क्षुत्पिपासे कुतो मे । नाहं चित्तं शोकमोहौ कुतो मे नाहं कर्ता बन्धमोक्षौ कुतो मे ॥६॥
Naham jatho janma mruthyu kutho may, Naham prana kshuth pipase kutho may, Naham chitham sokamohou kutho may, Naham kartha bandha mokshou kutho may.
I was not born, whence birth and death came to me, I am not the soul, whence came hunger and thirst to me, I am not the mind, whence came passion and sorrow to me, I am not the doer, whence came attachment and detachment to me?
நான் தான் பிறக்கவில்லையே எங்கேயிருந்து வந்தது பிறப்பு ; அதைத் தொடர்ந்து இறப்பு?
நான் தான் ஜீவன் இல்லையே, எங்கேயிருந்து பசி, தாகம் ?
நான் தான் மனம் இல்லையே, இந்த கோப தாப துக்க சந்தோஷ உணர்ச்சிகள் எங்கே இருந்து என்னை அணுகும்?
நான் தான் எதையும் பண்ணவில்லையே எங்கேயிருந்து இந்த பந்தம் பாசம் எல்லாம்? விட்டுத் தள்ளு.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



