
அப்பைய தீக்ஷிதர் – நங்கநல்லூர் J K SIVAN
பூனா ஒரு ராஜ்யமாக இருந்த காலத்தில் மைதிலோத்ரம் ஒரு தனி தேசம். அதற்கு ராஜா சந்திரசேகர பூபாலன். அவனிடத்தில் ஆஸ்தான கவி ரத்னகேட தீக்ஷிதர். ராஜாவுக்கு அப்பைய தீக்ஷிதரின் மகத்தான பாண்டித்யத்தைக் கேட்டறிந்த பிறகு தனது ஆஸ்தான வித்வானான் ரத்னகேட தீக்ஷிதரிடம் ”நீங்கள் அப்பய்ய தீக்ஷிதரின் பாண்டித்யத்தைப் பற்றீக் கேள்விப்பட்டதுண்டா’ என்று கேட்டான்.அவர் “அரசே! நான் அப்பய்ய தீக்ஷிதரின் பால்யத்தில் அவரது அதிகூர்மையான புத்தியை அறிவேன். இப்பொழுது பதினான்கு ஆண்டுகள் ஆனதால் அவர் ஸகல வித்யைகளிலும் நிபுணராக ஆகியிருக்கலாம். சமயம் கிடைத்தால் அவருடன் வாதம் செய்யவும் ஆடையுடன் அந்த வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கின்றேன்’ என்று பதில் கூறினார். “அப்படியானால் நீங்கள் காஞ்சிபுரம் சென்று அப்பைய தீக்ஷிதருடன் வாதம் செய்து வாருங்கள்” என அனுப்பினான். ரத்னகேட தீக்ஷிதர் காஞ்சீபுரம் வந்தபோது நவராத்திரி சமயம். காமகோடி ஜகன்மாதாவை சிறப்பாகப் பூஜித்தார். ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் பிரத்யக்ஷமாகி
“குழந்தாய், ரத்னகேடா! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று அருளிச்செய்தாள். கண்களில் ஆனந்த பாஷ்யம் பெருக, தன்முன்னே பரம கருணையுடன் பிரத்யக்ஷமான தெய்வத்தை ரத்னகேட தீக்ஷிதர் பல முறை வணங்கினார். உள்ளம் உருக, நாத்தழதழக்க, உடல் புளகாங்கிதமாக தோத்திரங்கள் பல செய்து,
“அம்மா காமாக்ஷி, உன் பக்தர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கும் தெய்வமே! அப்பைய தீக்ஷிதர் என்றொருவர் ஸகல வித்தைகளிலும் சிறந்தவர் என்று கேள்விப் படுகிறேன். எல்லா வித்யைகளும் அவரிடமே குடிகொண்டு அவரையே வணங்கி நிற்கின்றன என்றும் கேட்டறிகிறேன் தாயே! எனது கீர்த்தியும் உனதருளால் உலகம் அறியுமாதலால் அவரை நான் ஜயிக்கவேண்டும், எனக்கு நீ ஜயத்தை அளிக்க வேண்டும்” என்று வேண்டினார். இதைக் கேட்டதும் காமாக்ஷி தேவிக்கு சிரிப்பு வந்தது. “ரத்னகேடா! நீயும் அப்பைய தீக்ஷிதரும் வாதம் செய்வது முறையல்ல. நீ அவரை ஒரு சாதாரண மனுஷன் என்று எண்ணாதே. அவர் சாக்ஷாத் பரமேஸ்வரன் அம்சம். நான் உனக்கு அளித்த அருள் மனிதர்களை வெல்வதற்கு மட்டும் தான். பரமேஸ்வரனையே நான் தான் நீ. அவருக்கு இணையாக முடியாது. ஆகவே அப்பைய தீக்ஷிதருடன் வாதம் என்ற எண்ணத்தையே விடு. ஒரு வழி கூறுகிறேன். அதன் படி செய். உனது பெண்ணான மங்களாம்பிகையை அந்த அப்பைய தீக்ஷிதர் என்ற மகானுக்கு கன்யாதானம் செய்து கொடுத்துவிடு. இம்முறையில் உனது மனோரதம் நிறைவேறும். உன்னுடைய பாண்டித்யத்தாலும், வயதாலும், எனது அனுக்கிரஹத்தாலும் அப்பைய தீக்ஷிதருக்குக் குருவாகவும், மாமனாராகவும் ஆவாய்” என்றருள் பாலித்து மறைந்தாள்.
இன்னொரு அற்புதமும் நடந்தது. ரத்னகேட தீக்ஷிதர் காஞ்சியில் இருக்கும்போது ஸ்ரீ ஏகாம்பரநாதர் அப்பைய தீக்ஷிதரின் கனவில் தோன்றினார்.
“குழந்தாய் அப்பையா. காஞ்சிபுரத்தில் காமாக்ஷி உபாஸகர் ரத்னகேட தீக்ஷிதர் என்பவர் வந்திருக்கிறார். அவர் தனது பெண்ணை உனக்குக் கன்னிகாதானம் செய்து தருவார்” என்று அருளிச் செய்தார்.அப்பைய சிவனருள் பெற்ற மகிழ்ச்சியோடு காஞ்சீபுரம் சென்று ஏகாம்பரநாதருடைய சந்நிதியில் தகுதியான ஒரிடத்தில் வசித்தார். இந்த விவரம் அறிந்த ரத்னகேட தீக்ஷிதர் தனது பெண்ணை அழைத்துக் கொண்டு ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் இருக்குமிடம் வந்தார். அப்பைய தீக்ஷிதர் எழுந்து அவரை உபசரித்து நமஸ்கரித்தார். ரத்னகேட தீக்ஷிதர். “ஹே குழந்தாய்! மங்கள மூர்த்தியே! இன்று பொழுது விடிந்தது ஒரு பாக்யம். காமாக்ஷியின் பதியான ஏகாம்பரநாதருடைய அனுக்கிரஹத்திற்குப் பாத்திரமான உனது தர்சனம் எனக்குப் பரம சந்தோஷத்தைக் கொடுத்தது. என்னுடைய மங்கள வசனத்தை உன் செவிகளில் ஏற்றுக் கொள்வாய்.
”வித்வன் முகாதனுபமாம் தவ கீர்த்திமாராத்ச்ருத்வா ப்ரஸாத பரிதஸ்ஸமுபாகதோ (அ )ஸ்மி |விக்ஞானதச்ச வயஸா தபஸா (அ )பிவ்ருத்தோஸ்மிஅவ்யாஹதோத்ததவசா: ப்ரதிதப்ரபாவ: || யத்ராஸ்தே சாம்பவீ வித்யா தத்யாத்தஸ்மை சிரோ (அ )ம்புபி: |இதி ஜாநாஸி கிம் தன்மே வாணீமேகாம் ச்ருணுஸ்வயம் || கச்சித்விபச்சிதம்ருதாயிதமஸ்மதுக்தம் நோல்லங்கயேத்குசலவானதுநா (அ )ஸ்மி வித்வான் |தன்னஸ்ஸுதாம் ஜடிதி மங்கலநாயகீம் த்வம்உத்வாஹ்ய பூரி லபஸேஸுககீர்த்திசோபாம் |
‘அப்பையா, பண்டிதர்களின் வாயிலாக உனது பாண்டித்தியத்தையும், கீர்த்தியையும் கேட்டு மிக்க மகிழ்ச்சியோடு உன்னைப் பார்க்கவே ஒடிவந்தேன். நான் விக்ஞானத்திலும், தவத்திலும், வயஸிலும் கிழவனானதால் உன்னிலும் பெரியவனல்லவா? நான் அறிந்த உண்மையை உன்னிடம் கூறுகின்றேன். எந்த இடத்தில் சிவசம்பந்தமான வித்தையும், சிவபக்தியும் இருக்கின்றதோ அங்கே அவர்களைத் தலையாலே போற்ற வேண்டும் என்று நீயும் அறிவாய். அதனால், என் வார்த்தையைக் கவனமாகக் கேள். எனது வார்த்தை அம்ருதத்திற்குச் சமமானது. இதை யாரும் தட்டவும் கூடாது. எனது குமாரியான மங்களநாயகி என்ற அற்புதமான கன்யா ரத்தினத்தை நீ மணந்து கொண்டு மேலும் கீர்த்தியையும், ஸுகத்தையும் அடைந்து சோபையுடன் பிரகாசிக்க வேண்டுகின்றேன்” என்று கூறினார்.
அப்பய்ய தீக்ஷிதரும் “ஓ பண்டித ரத்தினமே! தாங்கள் யோஜிக்காமல் சொன்ன ஒரு சொல்லுக்காக ஒரு இரவில் காஞ்சி ஜகன்மாதாவின் திருவருளால் உலகம் பூராவும் அமாவாஸை பெளர்ணமி ஆனதை நானறிவேன். எனவே தங்களுடைய மஹிமையையும் அறிந்து, பரமேச்வரனுடைய ஆக்ஞையையும் உணர்ந்து தங்கள் புதல்வியை மணக்க சம்மதத்துடன் வந்துள்ளேன்.
”ஸம்பந்த: கலு ஸாதூநாமுபயோரேவ ஸம்மத: |சந்த்ரசூடநிதேசேன ஸஜ்ஜா மே பந்துதா (அ )துநா ||“நமது சம்பந்தமானது சந்திரசூடனான பரமேஸ்வரனுடைய ஆக்ஞையின் பேரில் ஏற்படுவதால் இருவருக்கும் சம்மதமே ஆகும். நான் ஸன்னத்தமாக இருக்கின்றேன். நல்லதொரு முஹூர்த்தத்தில் தங்களது புதல்வியை கன்னிகாதானம் செய்து கொடுங்கள்” என்று கூறினார்.
ரத்னகேட தீக்ஷிதர் பெருமகிழ்ச்சியோடு திருமணச் செய்தியை பந்துக்கள் அனைவருக்கும் அனுப்பி அனைவரையும் வரவழைத்தார். கல்யாணமண்டபத்தை நிர்மாணம் செய்து வாழைமரங்கள் கட்டி, தோரணங்களால் அலங்கரித்தார். நல்லதொரு முஹூர்த்தத்தில் கன்னிகையும் கனக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஸர்வாலங்கார பூஷிதையாகவும் ஸர்வ மங்கள சோபிதையாயும் திகழும் மங்களநாயகியை மணவறையில் வைத்து, ஸாக்ஷாத் பரமேச்வரனாகவே வரனை பாவித்து, வரவேற்று, வரபூஜை செய்து மங்களநாயகியை அப்பைய தீக்ஷிதருக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்தார். ஸ்ரீமத் தீக்ஷிதரும், மங்களநாயகியை பாணிக்கிரஹணம் செய்து கொண்டு, மாங்கல்யதாரணம் செய்து, அக்னி ப்ரதக்ஷிணாதிகள் செய்து, விதிப்படி அழகாக விவாஹம் நடந்தது. எல்லோருக்கும் அன்ன தானம் அளித்து பிராமணர்களுக்கு அபரிதமான ஸ்வர்ண தக்ஷிணையும் ரத்னகேட தீக்ஷிதர் சந்தோஷத்தோடு வழங்கினார்.
இந்த சமயம் ஒரு மஹாகவி ஒரு ச்லோகம் கூறினார்.
”அப்பைய ஜ்வன்யவநீஸுராணாம் அன்னம் ஸுவர்ணம் ஸரஸம் ததானே |அபர்ணமாஸீத்கதலீதரூணாம் ந கேவலம் ப்ருந்தமபி த்விஜானம் |
அப்பைய தீக்ஷிதரின் திருமணத்தில் பிராமணோத்தமர்கட்கு அன்னமும் தங்கமும் கொடுக்கும் பொழுது இப்புவியிலுள்ள வாழைமரங்கள் எல்லாம் இலை இல்லாமல் ஆயின. (அதை வடமொழியில் அபர்ணம் என்ற பதத்தால் கூறி), வாழை மரங்கள் மட்டுமா இலை இல்லாமல் போயின? ஏழை பிராமணர்களுடைய ஸமுதாயத்திற்கும் அபர்ணமாயிற்று. இங்கு அபர்ணம் என்ற பதத்திற்குக் “கடன் ஒழிந்தது” என்று அர்த்தம்.
ரத்னகேட தீக்ஷிதரும் காமாக்ஷியின் க்ருபையால் சந்தோஷம் அடைந்து அப்பைய தீக்ஷிதரோடு வாதம் செய்வதற்காக காஞ்சிபுரம் அனுப்பின சந்திரசேகர பூபாலனிடம் நடந்ததை எல்லாம் கூறினார் .
அப்பைய தீக்ஷிதர் திருமணமாகி மனைவியுடன் பிரம்மவாஸ்து என்ற இடத்தில் வசித்து ச்ரெளத, ஸ்மார்த்த கர்மாக்களை அனுஷ்டானம் செய்து கொண்டு பல தேசங்களிலிருந்து வரும் சிஷ்யர்களுக்குப் பாடங்களைப் போதித்துக்கொண்டும், சிவபெருமானைக் கொண்டாடும் சிவபாரம்யமான கிரந்தங்களைச் செய்து கொண்டும், அளவுகடந்த சிவபக்தி செய்து கொண்டும், சிவார்ச்சனை செய்து கொண்டும் திக்கெட்டிலும் அவரது கீர்த்தி பரவும்படி திகழ்ந்தார்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



