KRISHNA’S MSG TO VRAJABOOMI THRU UTHTHAVA J K SIVAN

கோபிநாதன்   –    நங்கநல்லூர்  J K  SIVAN

எத்தனையோ ராக்ஷஸர்களைக் கொன்றாகிவிட்டது. கம்ஸனும்  காலி. ”மதுராபுரி  ராஜாவாக ஆளுங்கள்” என்று ஏகோபித்து எல்லோரும் கேட்டபிறகும்  கிருஷ்ணனும் பலராமனும்  ராஜாவாக வில்லை. பழைய ராஜாவை சிறையிலிருந்து மீட்டு அவரையே  ஆள்வைத்துவிட்டு  முறையாக ஒரு குருவிடம் கல்வி கற்றபின் ராஜ்யபாரம் செய்ய விரும்பினார்கள். அவ்வாறே சாந்தீபனி முனிவரிடம் கல்வி பயின்ற பின்  கிருஷ்ணன் மதுரா திரும்பியபோது நகரமே    கோலாகலமாக அவனை வரவேற்றது. கிருஷ்ணனின் தாத்தா  உக்ர சேன மகாராஜாவின் ஆட்சியில் எங்கும் சுபிக்ஷம்.”கிருஷ்ணா, உனக்காக தான் நான் காத்திருக்கிறேன். உன் கல்வி முடிந்தது, இனி  நீயே ராஜா’ என்று அறிவித்து விட்டார்.
கிருஷ்ணன் மனதில்  சந்தோஷம் இல்லை. அவன் எண்ணத்தில்  பிருந்தாவனம் துளிர் விட்டது. யசோதா  நந்தகோபன், கோபியர்,  ராதா, பசுக்கள், நண்பர்கள், வசுதேவர் கோகுலம் என்றெல்லாம் திரும்ப திரும்ப  பழைய நினைவுகள் மனத்திரையில் ஓடின.  தனிமையில் அமர்ந்து நினைவு கூர்ந்து  உணர்ச்சி வசப்பட்ட போது  கண்களில் நீர் ஆறாக பெருகியது.  கிருஷ்ணன் தந்தை வசுதேவரின் சகோதரன் மகன்  உத்தவன் கிருஷ்ணனின் நெருங்கிய நண்பன்.  உறவினன் வேறு. அடிக்கடி கண்ணனை  சந்திப்பவன்.
 ”கிருஷ்ணா  நீ ஏன் எதையோ பறிகொடுத்தவன் போல்  சோகமாக இருக்கிறாய் ?”
”உத்தவா, இனி நான்  மதுராபுரி  அரசன். பழைய  பிருந்தாவன  கிருஷ்ணனாக பசுக்கள் பின் சென்று  சுதந்திரமாக சுற்றி எல்லோருடனும் பழகி  ஓடி ஆடி விளையாட முடியாதவன்.என் பொறுப்புகள் அதிகமாகி விட்டது.”

உத்தவனுக்கு பக்தி உணர்வு போதவில்லை,அவன் பிருந்தாவனம் சென்று அங்கு எல்லோரையும் சந்தித்து ஞானம் பெறவேண்டும் என்று கிருஷ்ணனுக்கு தோன்றியது.

”உத்தவா, நீ பிருந்தாவனம் போ. அங்குள்ள மக்களுக்கு  என்னுடைய  கடமையை எடுத்துச்  சொல். நான்  ,அவர்களை மறக்கவில்லை, என்றாலும் இனி அங்கே வந்து வாழ்வது நின்று போனதின் அவசியத்தை எடுத்துரை. என்னை  நினைத்து  வாழ உபதேசி.  வேதாந்த ஞானத்தை போதி. என்னைநேரில் காணாமலேயே அவர்கள் என்னோடு  வாழமுடியும் என்று எடுத்துக் கூறி  தைர்யமளித்துவிட்டு வா ”

”கிருஷ்ணா, எப்படி  கல்வியறிவில்லாத சாதாரண பிருந்தாவன மக்கள் வேதாந்த ஞானம் எல்லாம் புரிந்து கொள்வார்கள்?”

‘நீ நினைப்பது தவறு. பிருந்தாவன கோபியர்கள் ஞானிகள், சகலமும் துறந்தவர்கள். கல்வியை விட சிறந்த பூரண அன்பை உணர்ந்து அநுபவிப்பவர்கள். அவர்களுக்கு நீ அறிவை புகட்டு வாய்.  ஞானம் அளிப்பாய் வேதாந்தம் போதிப்பாய். நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் எப்போதும் கொண்டவன் மறக்க மாட்டேன் என்று சொல்.  போ. ”

உத்தவன் உருவத்தில் கிருஷ்ணனைப் போலவே இருப்பவன்.  கிருஷ்ணன் அவனுக்கு பீதாம்பரம் வைஜயந்தி மாலை எல்லாம்  அளித்து  கோபியரை சந்திக்கும் முன்பு இவற்றை அணிந்து கொள். ”என்னைத்  தவிர வேறு யாரையும் அவர்கள்  பார்த்ததில்லை. நீ தான் நான், நீ என் தூதன் என்று இந்த உடை அறிவிக்கும்.  என் தாய் தந்தையரைப் போய் பார். விரைவில் சந்திக்கிறேன் என்று சொல் ” என்கிறான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் சென்றபின் பிருந்தாவனம் சோபை இழந்துவிட்டது.  கோபியரின் கண்ணீர் ஆறாக ஓடியது. பசுக்கள் மேய்வதை நிறுத்தி விட்டன. நந்தகோபன் யசோதை  உணவை மறந்து பல காலம் ஆகிவிட்டது. கிருஷ்ணன் சாப்பிட்ட பின்னரே தினமும் சாப்பிடும் வழக்கம். அவனுக்காக  காத்திருக்கிறேன்” என்கிறாள் யசோதை.
”நீங்கள் கண்ணனை பசுக்களை மேய்க்க அனுப்பியதால் வந்தது இது. பாவம், அவன் காய்ந்த ரொட்டியை தின்று பசுக்கள் பின் ஓட வேண்டி இருந்தது. இந்த வாழ்க்கை வெறுத்து அல்லவோ அவன் மதுரா சென்று விட்டான்” என்று நந்தகோபனைச் சாடினாள் யசோதை.
”யசோதா, நீ சொல்வது தப்பு, நான் அவனை மேய்ச்ச லுக்கு அனுப்பவில்லை, அவனே அல்லவோ இனி நான் பசுக்களை கவனிக்கிறேன் என்று என்னிடம் சொல்லி பொறுப்பேற்றான்.  பசுக்கள் அவனுக்கு பிடித்தவை. இப்போது மதுராபுரி  நகர  மஹா ராஜா அவன். நம்மை கிருஷ்ணன்  மறந்து போக வேண்டிய நிலைமை .  நாம் என்ன செய்யமுடியும்?”

ஊர்க்  கோடியில் தேர் வருவதை பார்த்த கோபர்கள் குதூகலம் அடைந்தார்கள். ”ஆஹா நம் கிருஷ்ணன் வந்துவிட்டான்” என குதித்தார்கள். தேரை நோக்கி ஓடியவர்கள்  உத்தவனைப்  பார்க்கிறார்கள். அட இவன் கிருஷ்ணனைப்  போலவே இருந்தாலும் இவன் கிருஷ்ணன் இல்லையே..’
‘கிருஷ்ணனிடமிருந்து சேதி கொண்டு வந்திருக் கிறேன்’. விரைவில் உங்களை சந்திப்பான்.
”இல்லை  சேதி வேண்டாம். கிருஷ்ணன் தான் வேண்டும்.  கிருஷ்ணன்  எங்களை மறந்தாலும் நாங்கள் அவனை மனதில் நினைத்துக் கொண்டே தான் வாழ்கிறோம். அவனில்லாமல் நாங்கள் அவனோடு மனதளவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்” என்கிறார்கள்.

வாசலில் தேர் நின்றதை நந்தகோபனும் யசோதையும் பார்க்கிறார்கள்.கிருஷ்ணனை எதிர்பார்த்து ஓடிய நந்தகோபன் வேறு யாரோ இறங்குவதை பார்த்து மயங்கி விழுந்தான். எல்லோரும் கிருஷ்ணனை நினைத்து அவன் வராததால் அழுவதைப்  பார்த்தான் உத்தவன்.  சோகத்தில் உச்சிக்கு சென்று மரத்துப்போய் யசோதை உணர்ச்சியற்ற மரக் கட்டை யாக  பேசாமல் நின்றாள்.
”உத்தவா, நீ கிருஷ்ணனிடம் போய்  நந்தகோபன் யசோதை  இருவரும்  அழுகையில் இருந்து மீளவில்லை. யசோதை உன் நினைவாகவே இருக்கிறாள், அவள் மடியில் நீ  அமர்ந்திருப்பது போலவே எப்போதும்
 உணர்கிறாள். யமுனை நதியின் கருநிறம்  உன்னை அவளுக்கு அருகிலேயே நீ  இருப்பது போல் ஆறுதலளிக் கிறது”என்று சொல்.

உத்தவன் அந்த மக்களின் தூய கிருஷ்ண பக்தியை அறிகிறான். அவர்களுக்கு போதிக்கும் தகுதி தனக்கில் லை என்று உணர்கிறான்.  எங்கும் கோபியர் பாடும் கிருஷ்ண பஜனையை கேட்கிறான். யமுனையில் கிருஷ்ணனை வணங்கி ஸ்னானம் செய்கிறான்.  எங்கும் கிருஷ் ணன் புல்லாங்குழல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் என்கிறார்களே” என்று கிருஷ்ணனை எங்கும் எதிலும் காணும் ஒட்டு மொத்த  பக்தர்கள் இவர்கள் என்று புரிகிறது.
கோபியரின் பக்தி புரிகிறது. வேதாந்த ஞானம் போதிக்க முயலவில்லை.  அவர்களே  ”எங்களுக்கு கிருஷ் ணன்  நினைவு ஒன்றே போதும், வேறெதுவும் தேவை இல்லை” என்று கூறிவிட்டார்களே .
ராதையின் முன் நிற்கிறான் உத்தவன்.
”அம்மா உனக்கு கிருஷ்ணன் சேதி அனுப்பி இருக்கிறான் என் மூலம் ” என்கிறான்.
”உன் சேதி வேண்டாம் உத்தவா , கண்ணன் எப்போதும் என்னுள் இருக்கிறான், நானும் அவனும் பேசாத விஷயம் எதுவும் இல்லை, உன் சேதி வேண்டாம் நீயே வைத்துக் கொள்” என்று அனுப்பிவிட்டாள் .

கோபியருக்கு போதிக்க வந்தவன் அவர்கள் சீடனாக திரும்புகிறான். கிருஷ்ணன் முன் மதுராவில் கைகட்டி நின்றான்.
”என்ன உத்தவா, பிருந்தாவனத்தில் கோப கோபியர் யசோதை நந்தகோபன், ராதை எல்லோருக்கும் சேதி சொல்லி அவர்களுக்கு நான் ஒரு அரசனாக புரியவேண்டிய கடமையை எடுத்துச் சொன்னாயா?” என கேட்கிறான்.
”கிருஷ்ணா,   எனக்கு அவர்களுக்கு போதிக்கும் ஞானம் இல்லை. பக்தி என்றால் என்ன, கடவுளை எப்படி மனதில் நிலையாக நிறுத்தி அனுபவிக்கவேண்டும் என்பதை அவர்களிட மிருந்து நான் தான் தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன்.
”கிருஷ்ணா, நீ  கிருஷ்ணன் இல்லை,”கோபி நாதன்”
என்கிறான் உத்தவன்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;