ADHI GURU J K SIVAN

ஆதி குரு – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
முப்பத்திரெண்டே வருஷங்களில் மூவாயிரம் வருஷமானாலும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாததை அளித்தவர் ஆதி சங்கரர். ஹிந்துக்கள் சகலருக்கும் சொந்தமான விலைமதிப்பற்ற புதையல். சொத்து நமக்கு விட்டுச் சென்றவர்.
சங்கரர் வாழ்ந்த காலத்தில் மலையாள தேசத்தில் காலடி கிராமத்தில் ஒரு பழைய ஒடும் கூரையும் போட்ட சின்ன வீட்டில் இரு ஆசாரமான ஏழை பிராமண தம்பதியர் வாழ்ந்தார்கள். சிவகுரு. ஆர்யாம்பா என்பது அவர்கள் பெயர்கள். ஒரு தீராத குறை. புத்ரன் இல்லையே! . திரிசூர் சென்று வடக்குநாதனை வேண்டினால் கைமேல் பலன் கொடுப்பானல்லவா?.
”மஹாதேவா,எங்களுக்கு ஒரு மகனைத் தருவாயா?நாங்க என்ன பாபம் செய்தோமோ எங்கள் குறை தீர்ப்பாயா?
மஹாதேவன் வேண்டியவர்க்கு வேண்டியதை வேண்டாமலேயே தருபவனாச்சே. திரிசூரில் ஒரு மண்டலம் தங்கி தினமும் புஷ்கரணியில் ஸ்நானம் செய்து விரதமிருந்தனர் இருவரும். ஆர்யாம்பா கனவில் வடக்கு நாத ஈஸ்வரன் தோன்றினான்.
‘’கவலைப்படாதே, உன் வயிற்றில் பிள்ளையாய் நானே வருவேன்’’ என்றான். பெயர் சொல்ல எவனோ ஒருவன் வேண்டும் என்று வாடும்போது சிவனே உன் மகனாக வருவேன் என்றால் எப்படியிருக்கும்? அந்த ஆனந்தத் தை இந்த சிவனால் எழுத முடியுமா? மனதில் நினைத் தால் இனிக்கும் அந்த இன்பம் எழுத்தில் வருமா?
சர்வேஸ்வரனைப் பொருத்தவரை இது ஒரு தக்க தருணம் எனலாம். ஏனென்றால் இது நிகழ்ந்த காலத்தில் நிரீஸ்வரவாதிகள் பெருகி, கொஞ்சம் கொஞ்சமாக பௌத்தம், சமணம் எல்லாம் ஹிந்து தார்மீகத்தை விழுங்கிவந்த சமயம்.
”சனாதன தர்மத்தை பின் பற்றுபவர்கள் தக்க துணையின்றி, சாய்ந்து கொள்ள ஒரு பக்க பலமின்றி திணறுகிறார்களே. உடனே நீங்கள் ஏதாவது செய்து இந்து தார்மீகத்தை புனருத்தாரணம் செய்யவேண்டும்” என்று பிரம்மாதி தேவர்கள் சதாசிவனை வேண்ட அந்த தக்ஷிணா மூர்த்தி நானே அவதரிப்பேன் என்று வாக்களித்திருந்தார். எனவே ஆரியம்பா கனவில் கண்ட வடக்குநாத் ஈசன் அவளுக்குப் பிள்ளையாய் பிறந்தான். சிவனின் பெயரான சங்கரன் (சம்: மங்களம், கரன்: தருபவன்) என்ற பெயர் பெற்று பெயருக்குத் தகுந்தபடி சகல சந்தோஷத்தையும் தந்தான். சாஸ்திரம் சகலமும் கற்றான். இனி கற்க ஒன்றுமில்லை என்ற நிலை வந்ததோ என்னவோ? அது அந்த அவதார புருஷனுக் கல்லவோ தெரியும். வந்த கார்யம் சடுதியில் நடக்க ஆயத்த மாகக் கூட இருக்கலாம். சங்கரன் மனதில் சன்யாசம் கொள்ள மிக்க விருப்பம் உண்டாயிற்று. பால் மணம் மாறாப் பாலகன் என்று கூட சொல்லும் ஏழு வயதில் இப்படி ஒரு ஆசை. சங்கரன் ஒரு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக்கொண்டான்.
ஓடும் ஆற்றில் ஒருநாள் விடிகாலை அம்மா ஆர்யாம்பா வோடு ஸ்னானம் பண்ணிக்கொண்டிருந்தபோது பசியோடு ஒரு முதலை அவன் காலைக் கவ்விக் கொண்டது. சங்கரன் கத்தினான்.
”அம்மா அம்மா, முதலை என் காலைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறது இன்னும் சில நிமிஷங்களில் என் உயிர் போய்விடும்
”’மகனே சங்கரா எப்படியாவது உயிர் பிழைத்துக் கொள்ளடா. ஈஸ்வரா என் பிள்ளைக்கு உயிர்ப்பிச்சை கொடு” ‘
‘அம்மா எனக்கு உயிர் அடுத்த பிறவியில் தான் கிடைக்கும்.. நான் என்ன செய்யமுடியும்?’
”சங்கரா எனக்கு நீ வேண்டுமே”
”நான் மறுபிறவி எடுத்தால் உயிர் தப்புவேன், முதலை என் காலை விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது’
”எப்படிடா கண்ணா அது சாத்தியம்?”
‘இந்த பிறப்பில் நான் இப்போது சன்யாசம் பெற்றால் அது எனக்கு வேறு பிறவியாகிவிடும். முதலை என்னை விட்டுவிடும். ஆனால் சன்யாசியானால் உன்னோடு வீட்டில் தங்கி இருக்க முடியாதே. துறவியாக என் உயிர் பிழைக்கவேண்டுமா, வேண்டாமா?. நான் சந்நியாசி யாவதற்கு நீ ஆசிர்வாதம் பண்ணி சம்மதித்தால் நான் உயிர் பிழைத்து நீ என்னைக் கண்ணாலாவது பார்க்க முடியும்’
”’சரிடா சங்கரா, எனக்கு நீ எப்படியாவது உயிரோடு இருந்தால் அதுவே போதும்”
ஆதிசங்கரர் நமக்கு கிடைத்தார். எதற்கு சங்கரன் அவதரித்தானோ, காத்திருந்தானோ அந்த சந்தர்ப்பம் கிடைத்தபோது விடுவானா? சந்நியாசியாகி சங்க ரன் தனது குருவைத் தேடிப் புறப்பட்டுவிட்டான்.
போகுமுன் தாய் சங்கரரைக் கை கூப்பி வணங்கினாள். கண்ணீர் மல்க நா தழுதழுக்க ஒரு வேண்டுகோள்;
”சங்கரா எனக்கு ஒரே ஒரு ஆசை , அது நிறைறுமா?
‘சொல்லுங்கள் தாயே’
”’என் கடைசி நிமிஷம், என் உயிர் போகுமுன் உன்னை ஒருதரம் பார்க்க வேண்டுமடா என் செல்வமே”
சங்கரர் கடை சிநேரத்தில் அம்மாவை மடியில் போட்டுக் கொண்டு அவள் உயிர் பிரிந்து மோக்ஷம் அடைய உதவிய போது இயற்றிய மாத்ரு பஞ்சகத்தை அடுத்த பதிவில் தருகிறேன்.
எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் என் கண்களும் உங்கள் கண்களும் குளமாகிடும் ஒரு ஐந்து ஸ்லோகம்…
I am sure you will be thrilled to see the attacjed face of the young seven year old Adhi Sankara, visualised and rawn by a gifted artist, who is unknown… PRANAMS TO HIM AND ADHI SANKARA.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;