
விசித்திர குழந்தை – நங்கநல்லூர் J K SIVAN
உலகத்தில் பிறந்து வளரும் எத்தனையோ குழந்தைகள் போல் அல்ல கிருஷ்ணன். அவன் பிறப்பதற்கே ஒரு காரணம், வளர்வதற்கு அவன் எங்கே எவரிடம் என்பதும் ஒரு காரணம். எப்போது அவதாரத்தின் காரியங்களை எப்படி முடிக்க வேண்டும் என்பதும் அவனது திட்டப்படி தியான்.
கிருஷ்ணன் பிறந்த கணம் முதல் அவன் உயிரைப் பறிக்க எத்தனையோ ராக்ஷஸர்கள் அவனைத் தேடி அலைந்தார்கள். அவர்களின் அத்தனை முயற்சிகளையும் தொலைவியுறச்செய்து, நறுவிஸாக அவர்களையும் கொன்று குழந்தை முதலாகவே கிருஷ்ணன் தனது காரியத்தில் கண்ணாக இருந்த குழந்தை.
பத்து பதினோரு வயதுக்குள் பல ராக்ஷஸர்களை எதிர்த்து கொன்று அவன் பிரிந்தா வனத்திலிருந்து மாமன் கம்சன் அரண்மனைக்கு அவனுடைய அழைப்பில் மதுரா சென்றான். அங்கே கம்ஸன் அவனை அழைத்தது வந்ததும் கொல்வதற்காத்தான் . கிருஷ்ணனுக்கு தெரியாதா? கம்ஸனின் முடிவு தனது கையால் தான் என்று அறிந்தவனல்லவா? கம்ஸன் , அவனைச் சேர்ந்த மற்ற ராக்ஷஸர்களையும் கொன்று எண்ணற்ற அதிசயங் களைப் புரிந்து எல்லோர் அன்பையும் சம்பாதித்து, ”இனி நீ தான் எங்கள் மதுராபுரி ராஜா” என்று நகரமே ஏகோபித்து வேண்டிய போது தான் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது கிருஷ்ணனால்.
” இல்லை நான் கல்விபயிலும் வயதில் குருகுலவாசம் செய்து குருவிடம் ஞானம் பெற இதுவரை வழியில்லாமல் போனது. கல்வியை முறையாக குருவிடம் கற்காதவன் ராஜாவாக நாட்டை ஆள்வதற்கு தகுதி அற்றவன்” என்றான் கிருஷ்ணன்.
தனது தந்தை தாயை சிறையிலிருந்து விடுவித்த பிறகு இந்த நாட்டின் பழைய ராஜாவையும் சிறையி லிருந்து மீட்டு மீண்டும் ராஜாவாக்கினான்
ஒவ்வொரு பிள்ளையும் இளம் வயதில் பிரம்மச்சாரியாக குருவிடம் உபதேசம் பெறவேண்டிய வயதில் கிருஷ்ணனுக்கு மட்டும் தாமதம் இத்தனை காலம் ஏற்பட்டது. அதை தவிர்க்க தான் வ்ருஷ்ணிகுல குரு கர்காச்சார்யர், சாந்தீப முனிவர் இருவரும் உடனே கிருஷ்ண பலராமர்களுக்கு உபநயனம் செய்வித்தார்கள் உபநயனம் ஆன பின் தான் ஆசார்யன், குருவிடம் பாடம் கற்க செல்லவேண்டும்.
மதுராவில் இருந்த போது தான் அப்போது தான் கிருஷ்ணன் தனது அத்தை குந்தி தேவி அவள் பிள்ளைகள் பாண்டவர்களை முதலில் சந்தித்தான். ஹஸ்தினாபுரத்திலிருந்து குந்தி தேவி, பாண்டவர்கள்,ஆகியோர் விதுரனோடு மதுராவுக்கு வந்தாள். கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு. இருவரும் நர நாராயணர்கள் அல்லவா?
அவந்தி புரத்தில் இருந்த சாந்தீப முனிவர் ஆஸ்ரமத்தில் கிருஷ்ணன் பலராமன் இருவரும் வேத சாஸ்த்ர ஞானம் பெற்றார்கள். உபநிஷத வேத சாஸ்திரம் கற்றார்கள். க்ஷத்திரியர்கள் என்பதால் ஆயுத, யுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. 64 கலைஞானங்களும் சுலபத்தில் கிருஷ்ணன் அறிந்தான். பகவானையே சீடனாகப் பெற்ற சாந்தீபனி முனிவர் எவ்வளவு புண்யம் பண்ணியவர்.
கிருஷ்ணன் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் என்று எளிதில் புரிந்து கொண்டார். 64 நாட்களிலேயே சகல சாஸ்திரங்களும் தனுர்வேதமும் கண்ணன் அறிந்து கொண்டான் என்று ஹரிவம்ச புராணம் சொல்கிறது. மற்ற சிஷ்யர்கள் போல் இல்லாமல் கிருஷ்ணன் தனது குருவுக்கு அளித்த காணிக்கை குருதக்ஷிணை விசித்திரமானது. அவன் காரியம் எல்லாமே அதிசயம் தானே.!!
கடலில் மூழ்கி இறந்து போன சாந்தீபனி ரிஷியின் மகனை பாஞ்சஜனன் எனும் ராக்ஷஸன் விழுங்கி கொன்றுவிட்டான். கிருஷ்ணன் கடலில் குதித்து பாஞ்சஜனனை தேடி கண்டுபிடித்து அவனைக் கொன்று அவனால் கொல்லப்பட்ட சாந்தீபனீ ரிஷியின் மகனை யமலோகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்து குருதக்ஷிணையாக அவர் மகனை குருவிடமும் குருபத்னியிடமும் ஒப்படைத்து அவர்கள் ஆசி பெற்றவன் கிருஷ்ணன். இன்னொரு விஷயம். பாஞ்சஜனனன் என்ற ராக்ஷஸன் கிருஷ்ணன் கையால் மரணமடைந்தவன் அப்புறம் கிருஷ்ணனோடு சேர்ந்துவிட்டானே அது தெரியுமா உங்களுக்கு? கிருஷ்ணன் கையில் உள்ள சங்கம் பாஞ்சஜன்யம் என்று பெயர் கொண்டதிலிருந்து அதுவே முன்ஜன்மத்தில் அந்த ராக்ஷஸன் என்று புரிந்து கொள்ள யார் உதவியும் வேண்டாம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

