
பக்தர்கள் கேள்விக்கு பகவான் பதில் – நங்கநல்லூர்
J K SIVAN
‘ உனக்கு தெரியவில்லை, அஞ்ஞானம் என்கிறாயே, யாருக்கு தெரியவில்லை?, யார் அஞ்ஞானத்தில் உள்ளவர்? என்று யோசித்துப் பார். அந்த அஞ்ஞானம் தானாகவே காணாமல் போய்விடும். யார் ”அது?” என்றும் புரியும்.
”தியானம், ஜபம் பண்ணும்போது எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறதே சுவாமி, என்ன பண்ணுவது?”
”தியானம் பண்ணுபவர்கள் வேலை அழுத்தத்தில் தியானம் பண்ணவேண்டாம், விஸ்ராந்தியாக உடலும் உள்ளமும் ஓய்வாக இருக்கும்போது பண்ணினால் தூக்க தொந்தரவு இருக்காது. வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு தியானம் ஜபம் பண்ணினாலும் தூக்கம் வரும். வயிறு நிரம்ப, நிரம்ப, மனதின் சிந்திக்கும் திறமை குறை யும். அரைவயிறு, கால்வயிறு பட்டினியோடு தான் சாதுக்கள் ரிஷிகள் தவமிருப்பார்கள்.
வீணையின் கம்பிகளை அதிகவும் முடுக்கக்கூடாது, தளரவும் விடக்கூடாது. அப்போது தான் நாதம் பிறக்கும். உடம்பும் தியானமும் அப்படி தான்.
ராத்திரி பத்து மணிக்கு தூங்கினால் விடிகாலைரெண்டு
மணிக்கு விழிப்பு வரும். அது போதுமே. பகலில் தூங்க கூடாது. இன்னொன்று சொல்கிறேன். ஒருதரம் தூக்கத்திலிருந்து விழிப்பு வந்தால், மறுபடியும் தூக்கம் வந்தாலும் தூங்கக்கூடாது.
நான் தூங்கினேன், விழித்துக்கொண்டேன் என்ற எண்ணமே வேண்டாம். மனசு அலைந்து கொண்டே இருக்கும். தூங்கும். அதை கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும். தூங்க விடக்கூடாது”.
”பகவானே, உருவமுள்ள மனம், உருவம் இல்லாத மனம்” என்கிறார்களே அது என்ன?’
‘பரிசுத்த, நிர்மல மனத்துக்கு மனாகாஸம் என்று பெயர். ஒன்றுமில்லாத காலி மனம். தூங்கி எழுந்த கணம், விழிப்புணர்வு வருகிறது.கிளம்புகிறது. அது உருவமில்லாத மனம். அப்புறம் தான் ”நான் இந்த உடம்பு” இது தான் உலகம்” என்ற எண்ணங்கள் மனதில் உருவாகிறது. அது உருவமுள்ள மனம். சினிமா பார்க்க தியேட்டரில் உட்கார்ந்திருக்கிறோம். முதலில் இருட்டு அப்புறம் ஒரு ஒளிக்கற்றை திரையின் மேல் விழுகிறது. அப்புறம் எண்ணற்ற ஆட்டம் பாட்டம் ஓட்டம். காட்சிகள் திரையை மறைத்து ஒரு மாய வெளியில் நம்மை கட்டுப்படுத்துகிறது.
”சுவாமி, என் மனதை திடமாக உறுதியாக வைத்துக் கொள்ள எந்த முறையை நான் பின்பற்ற வேண்டும்?’
‘ஒரே ஒரு சமாச்சாரம் மனதில் இருந்து கொண்டே இருக்கட்டும். மனது அதைக் கேட்காவிட்டால் மீண்டும் அதைப் பிடித்து ஒரே ஒரு விஷயத்தின் மேல் மட்டும் நிலைக்கச் செய். முரண்டு பிடிக்கும். விடாதே, தொடர்ந்து அதை கட்டிப்போட்டு சொன்னபடி கேட்கச் செய். அப்புறம் அது அடங்கி நல்ல பிள்ளையாக சொன்னபடி கேட்கும். ”
”ஸ்வாமி, சில சமயம் தியானத்தில் மனசு போகிறது. மீதி நேரத்தில் ஊர் மேய போய்விடுகிறதே எதற்கு இப்படி ரெண்டு விதமாகமனசு நடந்து கொள்கிறது?
” நீ நினைக்கிறபடி இல்லவே இல்லை. தியானத்தில்
இருந்தாலும், உலக விஷயங்களில் ஈடு பட்டாலும் மனதின் வேலை ஒன்றே. எதைப் பிடிக்கிறதோ அதிலே நிற்பது. அதைப் பொறுத்தவரை ரெண்டும் ஒன்றுதான். ஒரு வஸ்துவுக்கு ரெண்டு பேர். அவ்வளவு தான்.
காக்கைக்கு ஒரே கண் என்றாலும் காக்கை வெவ்வேறு பக்கங்களிலும் கூட பார்க்கும் என்றாலும் ஒன்று தான். ஒரே கண்ணினால் ,நாலா பக்கமும் சுழட்டி தலையைச் சாய்த்து பார்க்கிறது என்கிறார்கள். நாகத்துக்கு காது கண் ரெண்டும் ஒன்றே தான். யானை ஒரே தும்பிக்கை யால் உண்ண, குடிக்க, மூச்ச்சு விட முடிகிறது.ஆகவே மனத்தை ஒரே சமயம் எந்த எண்ணத்தை வேண்டு மானாலும் நினைக்க வைக்கலாம், ஒரே எண்ணத்திலே யே நிலைத்திருக்க வைக்கவும் முடியும்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



