CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி    நங்கநல்லூர்  J K  SIVAN

ஆயிரம்  வருஷங்களுக்கு முன்பே ஒரு வைதிக ப்ராமணன்   எவ்வளவு சாமர்த்தியசாலியாக இருந்திருக்கிறான்.
மனித  குணாதிசயங்களை துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறான் என்று அதிசயமாக இருக்கிறது.   சாணக்கியனின்  சொற்கள் எவ்வளவு உண்மையானவை, இன்றும்  பொருத்தமானவை என்று  வியக்கிறோம்.
மூங்கில் மரங்களே, மற்ற மரங்களில் இலை  விதவிதமாக இருக்கிறது. ஆனால்  உங்களுக்கு மட்டும் ஏன்  இலைகளே   இல்லை?  யாருடைய குற்றம் இது?
பகலில் மறைந்துகொண்டிருந்து இரவெல்லாம் சுற்றும்  ஆந்தையே, நீ ஏன் மற்ற பறவைகள் போல் இல்லாமல்  பகலில் குருடானாய்? சூரியன் மேல்  கோபம்  வந்தது யார் குற்றம்?

வானத்தில் வாழும் சாதகப் பறவையின் வாயில் மழைத்துளி  விழாதது யார் குற்றம்? பாவம் ஆ வென்று வாயைத் திறந்து மேகத்தையே  பார்த்துக்கொண்டு  மழைத்த்துளிக்கு காத்திருக்கிறதே.

 எது, எப்போது, எவ்வளவு, எங்கே, எங்கிருந்து, யாரால்,  நமக்கு  கிடைக்க வேண்டும் என்று நாம் பிறக்கும் போதே இறைவன் நிர்ணயம் செய்து விடுகிறான்.

இடுகாட்டில் அலைந்து பிணம் தின்னும் நரியே, எவன் ஒருவன் வாழ்நாளில் தன் கைகளால் தானம் செய்யவில்லையோ, எவன் காதுகள் நல்ல விஷயங்களை கேட்கவில்லையோ, எவன் கால்கள் இறைவனின் திருத்தலங்களுக்கு செல்ல வில்லை யோ, எவன் ஒருவன் வயிறு தவறான வழியில் நிறைந்துள்ளதோ, அவர்களுடைய பிணங்களை தின்னாதே, உன் தூய்மை குறைந்துவிடும்.அந்த குணங்கள் உனக்கும் வந்துவிடும். 

கெட்ட மனிதன் நல்ல மனிதனுடன் சேர்ந்து நல்லவனாகிறான். ஆனால் நல்ல மனிதன் கெட்டவனிடம் பழகினாலும் தான்  கெடுவதில்லை. தப்பு சாணக்யா, இப்போது அப்படி இல்லை.  உனக்கு பணத்தின்  சக்தி அப்போது தெரியவில்லையோ?
 மரங்களின் பூக்கள் விழுந்து பூமி வாசம் வீசும். பூமியின் வாசம் மலர்களில் வீசாது. மழை பெய்யும் போது தான் தெரியும்.
 நம் உடம்பு அழிந்து விடக்கூடியது. நாம் சேர்க்கும் பணம் நிலை இல்லாதது. ஆதலால் காலம் உள்ள போதே நல்ல காரியங்கள் செய்யுங்கள்.

யோசிக்காமல் செலவு செய்பவனும், எப்போதும் சோம்பேறியாக இருப்பவனும், மனைவியின் தேவைகளை உதாசீனம் செய்பவனும், கவனம் இல்லாமல் செயல்கள் செய்பவனும் மிக விரைவில் அழிந்து போவார்கள்.

புத்திசாலி மனிதன் உணவில் ஆர்வம் செலுத்த மாட்டான், கல்வி கற்பதில், தர்மம் செய்வதிலும் தான் ஆர்வம் காட்டுவான்.

வெட்கப்படாமல் பணம் சேர்ப்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

முட்டாள் பெரியவனாக வளர்ந்தாலும் முட்டாளாகவே இருப்பான். எட்டிக்காய் பழுதாலும் இனிக்காது. நாம் தான் அன்றாடம் பார்க்கிறோமே.

நாம் கடந்த காலத்தில் நடந்த விஷயங்களை பற்றி கவலைப் படக்கூடாது, எதிர் காலத்தில் நடக்கும் விஷயங்களை பற்றி யோசிக்கக்  கூடாது, நிகழ் காலமே நம் கைகளில் இருக்கிறது, லட்சியத்தை அடைய விரும்புபவன் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வான்.
பந்த பாசமே அனைத்து துன்பத்திற்கு காரணம், ஒருவன் இன்பமாக வாழவேண்டுமானால் பற்றற்ற நிலையில் இருக்க வேண்டும்.
எவன் ஒருவன் எதிர்காலத்தை சந்திக்க தயாராக இருக்கிறானோ, கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்திக்  கொள்கிறானோ அவன் எப்பொழும் மகிழ்ச்சியாக இருப்பான். வெறும் அதிஷ்டத்தை நம்புபவன் அழிந்து போவான்.

ஒரு மன்னன் தவறு செய்தால், அவன் கீழ் உள்ளவர்கள் தவறு செய்வார்கள். ” யதா ராஜா ததா ப்ரஜா”. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. ஆதலால் மன்னன் ஒவ்வொரு செயலையும் நன்கு ஆலோசனை செய்து செய்ய வேண்டும்.

ஆன்மிக வழியில் வாழாதவன் வாழ்தாலும் இறந்தவன் ஆவான். ஆன்மிக வழியில் வாழ்ந்தவன் இறந்தாலும் உயிருள்ளவன் ஆவான்.
அனைத்தும் இறைவன் கையில் உள்ளது. ஆதலால் கிடைப்பதை கொண்டு திருப்தி அடைய வேண்டும்.

இந்த உலகில் மூன்று ரத்தினங்கள் உள்ளது , உணவு, நீர், இன்சொல். வெறும் கற்களான முத்து, பவளம் போன்றவற்றை முட்டாள்களே ரத்தினம் என்று கூறுவர்.

மனிதன் அவன் செய்யும் காரியங்களின் பலனையே அடைகிறான். நல்லதும் கெட்டதும் நம் செயல்கள் மூலமே விளை கிறது. முன் செய்த பாவ புண்ணிய பலன்களை நாம் இன்று அனுபவிக்கிறோம்.

வறுமை, வியாதி, துக்கம், சிறைவாசம், மேலும் நமக்கு வரும் துன்பங்கள் இவை யாவும் நாம் செய்த பாவம் என்னும் மரத்தில் விளைந்த பலன்கள் ஆகும்.

*செல்வம், நண்பன், மனைவி, அரசாட்சி ஆகியவைகளை இழந்தால் திரும்ப பெறலாம், ஆனால் ஆரோக்கியத்தை இழந்தால் திரும்ப பெறுவது இல்லை.

*பல  புல்புதராக ஒன்று சேர்ந்து கடுமையான நீரின் ஓட்டத்தை எதிர்பதை போல் பலமுள்ள எதிரியை பலர் ஒன்று சேர்ந்து வெல்லலாம்.

*நீரில் சிந்தும் எண்ணெய் , சிறிய குணமுள்ள மனிதனுக்கு தெரிய வரும் ரகசியம், தயாள குணமுடையவனுக்கு கிடைக்கும் செல்வம், புத்திசாலியிடம் சேரும் கல்வி இவை அனைத்தும் அதன் குணத்திருக்கேற்ப  பரவி விடும்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;