
மஹாலக்ஷ்மியின் பரமானுக்ரஹம் பெற்ற மஹான் ஸ்ரீ வித்யாரண்யர். அத்வைத ஆசாரியர்களில் மிகவும் சிரேஷ்டமான ஸ்தானம் வகிப்பவர். அவருடைய பெருமை இது மட்டுமல்ல. நாலு வேதங்களுக்கும் சேர்த்து பாஷ்யம் பண்ணின மஹாபுருஷர் அவர். ஜோதிஷம், வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், (ராஜ்ய பரிபாலனம் பண்ண உதவும்) அர்த்த சாஸ்திரம், இலக்கியத்துறை என்றிப்படி எல்லாவற்றுக்கும் கிரந்தங்கள் நமக்கு அளித்தவர் . அவருடைய பெயரே எவ்வளவு பொருத்தம் பாருங்கள் ”வித்யா – அரண்யர்”. வித்யா = கல்வி அறிவு, ஞானம். அரண்யம் = காடு. அவர் ஒரு ஞானக் காடு. பெரிய காட்டில் பல தினுசான மரம், செடி, கொடிகளும் மண்டியிருக்கிற மாதிரி வித்யையின் பல துறைகளும் அவரிடம் செழித்திருந்தன.
இவரைப்பற்றி சொல்லும் விஷயங்களை ‘ஹிஸ்டரி’ க்காரர்கள் ‘மிஸ்டெரி'(அற்புத நிகழ்ச்சி என்றால் முழுமையாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆனால், ஒன்று நிச்சயம். இன்றைக்கும் ஸயன்ஸுக் குப் பிடிபடாத அற்புதங்கள் உலகில் நடந்து கொண்டு தான் வருகிறது.
பிற்காலத்தில் ‘இரண்டாவது சங்கரர்’ என்கிற அளவுக்குப் ப்ரக்யாதி பெறப் போகிறவர் வித்யாரண்யர். ஆகவே ஆதி சங்கரர் மாதிரியே தானும் ஒரு ‘சாமர்த்திய’ செயலைப் புரிந்தார். அது என்ன சாமர்த்தியம்?
‘சந்நியாசி யாவதற்கு அம்மாவின் அநுமதி வேண்டுமே. அதற்காக ஏழு வயது ஆதிசங்கரர் என்ன சாமர்த்தியம் செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமே. அம்மாவோடு குளிக்கப்போன பிரம்மச்சாரி சங்கரர் ஆற்றில் முதலை தனது காலைப் பிடிக்கும்படி ஒரு ஏற்பாடு. அம்மாக்காரி பதறினாள்.
இதே போல தான் வித்யாரண்யரும் “இந்த ஜன்மாவில் உனக்கு அருள் பண்ணுவதற்கில்லை” என்று மஹாலக்ஷ்மி சொன்னவுடன், உடனே சந்நியாச ஆசிரமம் வாங்கிக்கொண்டு மஹாலக்ஷ்மியை வேண்டினார்;
காட்டில் தங்கமழை. எங்கு பார்த்தாலும் தங்கமும் நவநிதியும் கொட்டிக் கிடக்கிறது. சந்நியாசியான வித்யாரண்யருக்கு அதைப் பார்த்ததும், தாங்க முடியாத ஏமாற்றமும், துக்கமுமாகி விட்டது.
வித்யாரண்யர் மட்டுமில்லை; நம்மில் ரொம்பப் பேர் இப்படித்தான் வேண்டாததற்கெல்லாம் ஸ்வாமியை வேண்டிக் கொண்டு அவர் நம்மிஷ்டப்படி கிருபை செய்தபின் “அடாடா, நம்மிஷ்டம் என்று ஏன் ஒன்று இருக்கவேண்டும்? அவர் இஷ்டம் என்று விட்டிருக்கக்கூடாதா? இப்போது அறியாமையால் அனர்த்த பரம்பரையை அல்லவா வலிய வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறோம்?” என்று விசனப்படுகிறோம். நமக்கு எது வேண்டும் என்று பகவானுக்கு தானே தெரியும் என்று எல்லாம் உன் செயலே என்று விட்டு விடுவதுதான் புத்திசாலித்தனம்.
வித்யாரண்யர் மகா புத்திமான். மஹா லக்ஷ்மி ஏதோ ஒரு காரணார்த்தமாகத்தான் என்னிடம் இப்படி விளையாடியி ருக்கிறாள் என்று புரிந்தது .
அது மாலிக்காபூர் தட்சிண தேசத்தில் கொள்ளை அடிக்கும் படையோடு வந்த காலம். மாலிக்காபூர் ராமேசுவரம் வரையில் போய் ஹதாஹதம் செய்திருந்தான். நம் பிரசித்தி பெற்ற ஆலயங்களையெல்லாம் முக்கியமாக நாசம் பண்ணினான். நம் தர்மங்களை அழித்தான். அவனை எதிர்த்து போராட, தடுக்க, நல்ல திரவிய வசதியுள்ள ஹிந்து சாம்ராஜ்யம் எதுவும் இல்லை. ஆகவே வித்யாரண்யர் இந்த மஹா பெரிய பரம புண்ணியமான காரியத்தைச் செய்ய நினைத்தார். ‘இத்தனை நிதி கொட்டிக் கிடக்கிறது. அம்பாள் அநுக்ரஹத்தால் ஒரு ராஜ்ய பரிபாலனத்துக்கு உதவி பண்ணும் அளவுக்கு நமக்குப் புத்தி தீக்ஷண்யமும் இருக்கிறது. இந்தச் செல்வ பலம், நம் அறிவு பலம் இரண்டையும் கொண்டு ஒரு ஹிந்து சாம்ராஜ்யத்தை மேலோங்கி வருமாறு ஸ்தாபனம் பண்ணுவோம்’ என்று முடிவெடுத்தார். அவருடைய சொந்த நஷ்டம் ஸநாதன ஹிந்து தர்மத்துக்கே பெரிய லாபமாகப் பரிணமித்தது. விஜய நகரசாம்ராஜ்யம் உருவானது.
வித்யாரண்யர் சகல கலா வல்லவர். அவற்றில் சகுன சாஸ்திரம் ஒன்று. அதனால் பெரிய ஸநாதன தர்ம சாம்ராஜ்ஜியம் அமைக்க அப்போதே உரிய சமயம் வந்துவிட்டது என்று தெரிந்தது. இன்ன இடத்தில் இன்னாரைக் கொண்டு அதை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அவருக்குப் புரிந்தது. அதன்படி அங்கே ஆடு மேய்க்கிற இரு குறும்பர்களைப் பார்த்து இவர்களே புதிய ராஜ்ஜியத்தில் அரசாள வேண்டியவர்கள் என்று தீர்மானித்தார். அண்ணன் தம்பிகளான அந்த இரண்டு பேர் தான் ஹரிஹரன், புக்கன். துங்கபத்திரா பிரதேசத்திலேயே ஒரிடத்தில் ராஜதானியை ஸ்தாபித்து, அந்த இரண்டு பேரையும் அங்கே ராஜாக்களாகப் பட்டாபிஷேகம் பண்ணினார். அந்த இடம் தான் ஹம்பி.
மஹாலக்ஷ்மியின் அநுக்ரஹத்தால் கிடைத்த ஐஸ்\வரியத்தைக்கொண்டு ராஜ்ய பரிபாலனம் பண்ணவும், பெரிய சைனியம் திரட்டித் துருக்கரை எதிர்த்துப் போரிடவும் வசதி கிடைத்தது. ராஜ்ய ஸ்தாபனத்தின் போதே வித்யாரண்யர் அது பெரிய வெற்றி அடைந்து ஜயக்கொடி நாட்டும் என்று அதன் ஜாதகத்தைக் கணித்து விட்டார். அதற்கேற்றாற்போல் அது விஜய நகர சாம்ராஜ்யம் என்றே பெயர் பெற்று ஒங்கி வளர்ந்தது. வித்யாரண்யரை குருவாகக் கொண்ட ஹரிஹர, புக்கர்கள் அந்த ராஜ்யம் குரு வித்யாரண்யருக்கே சொந்தமென்று கருதி, ‘வித்யா நகர சாம்ராஜ்யம்’ என்று அவர் பெயரையே வைத்தார்கள். பிற்பாடு அது விஜய நகரமாயிற்று.
வித்யாரண்யரின் ஆலோசனைப்படியே ஹரிஹர, புக்கர்கள் ராஜ்யத்தை விஸ்தரித்தார்கள். இந்த இருவரின்
வித்யாரண்யரின் ஆசீர்வாத பலத்தால், கம்பன்ன உடையார் ராமேசுவரம் வரைக்கும் திக்விஜயம் செய்திருக்கிறார். வழியில் தில்லி சுல்தானின் பிரதிநிதிகளோடு ஐந்தாறு யுத்தங்கள் செய்து ஜயசாலியாக ஆனார். மதுரையில்தான் பெரிய யுத்தம் நடந்தது. மதுரை நகர தேவதையே கம்பன்னனுக்குப் பிரத்யட்சமாகி, ஒரு வாளை அநுக்கிரகித்தது. அவருக்கு அத்தனை உபாஸனா பலம். அதன் விசேஷத்தால்தான் மாலிக்காபூர் முதலானோர் செய்திருந்த நாசத்தையெல்லாம் அவர் தவிடு பொடியாக்கி, நம்முடைய கோவில்களை மறுபடி புதுப்பித்தார். ஹிந்து சமூகத்துக்குப் புதிய உற்சாகத்தைத் தந்து, வைதிக சம்பிரதாயத்துக்குப் புனர் ஜீவனம் செய்தார்.
திருச்சியில் சமயபுரத்துக்குப் பக்கத்தில் ஒரு கண்ணனூர் இருக்கிறது. அங்கே ‘பொச்சலேசுவரர்’ என்று ஜனங்கள் சொல்லுகிற கோவிலுக்குப் போயிருந்தேன். உண்மையில் ‘ஹொய்சலேசுவரர்’ என்பதே அது. கன்னடத்தைச் சேர்ந்த ஹொய்சல வம்சத்தவரால் ஆராதிக்கப்படுபவர். கன்னட ‘ஹ’ தமிழில் ‘ப’ என்று முதலில் சொன்னேனே, அதன்படி ஹொய்சலேசுவரர்தான் பொச்சலேசுவரராகிவிட்டார். ‘பொச்சலேசுவரர்’ என்று ஜனங்கள் சொல்வது தப்பு என்று நினைத்து, ‘போஜேச்வரர்’ என்று வேறு சரி பண்ணியிருக்கிறார்கள். வேடிக்கைதான்! அந்தக் கோவில் கோபுர மதிலில் “இந்தக் கோவிலைத் துலுக்கர்கள் நாசம் பண்ணுகிற காலத்தில் கம்பன்ன உடையார் ரட்சித்தார்” என்று பொறித்திருப்பதைப் பார்த்தேன். அந்த மதிலைப் பார்த்தாலே துருக்கர் செய்த கொடுமை தெரிகிறது. மதிலின் இரு பக்கங்களில் கல்லடுக்கி நடுவே ஜல்லி கொட்டுவது வழக்கம். இங்கே ஒரு பக்கக் கல் வரிசையும் ஜல்லியும் போய், சதையும் தசையும் போனபின் எலும்பு மட்டும் நிற்கிற மாதிரி இன்னொரு பக்கக் கல்சுவர் மட்டும் நிற்கிறது. அதுவும் இடிபடாமலிருப்பதற்குக் காரணம் கம்பன்ன உடையார்தான். அருகிலேயே உள்ள கம்பரசன்பேட்டைகூடக் கம்பன்ன உடையார் பேரில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். பக்கத்திலேயே வாளாடி நல்லூர். அது கம்பன்னன் வேதப் பிராம்மணர்களுக்கு இறையிலியாகத் தந்த ஊராதலால், இன்றும், ‘கம்பராய சதுர்வேதி மங்கலம்’ என்றே பத்திரங்கள் எழுதும்போது குறிக்கிறார்கள்.
கம்பன்ன உடையாரின் பத்தினி கங்காதேவி சமஸ்க்ரித ஞானி. அவளும் உடையார் படையெடுத்த இடங்களுக்கெல்லாம் அவரோடு போனாள் .போனது மட்டுமில்லை. அவள் திரும்பி ஊர் வந்து சேருகிற வரையில், ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சி களையெல்லாம் வெகு ஸ்வாரஸ்யமாக, காவிய நயத்தோடுகூட எழுதியிருக்கிறாள். காளிதாஸன்கூடத் தோற்றுப் போய் விடுவான் என்கிற மாதிரி நுணுக்கமான திருஷ்டி (close observation) யோடு, கவி சமத்காரத்தோடு, ‘கங்காதேவி மதுரா விஜயம்’ என்று எழுதியிருக்கிறாள். எபிக்ராஃபிகல் டிபார்ட்மென்டில் அதை அச்சுப் போட்டிருக்கிறார்கள். அறுநூறு வருஷங்களுக்கு முன், ஒரு ஸ்தீரி இப்படிப்பட்ட பிரயாண இலக்கியம் எழுதினது நமக்கெல்லாம் பெருமை.
மஹாலக்ஷ்மியின் அநுக்ரஹத்தால் விஜய நகர சாம்ராஜ்யம் இப்படி பிறந்தது. பராசக்தியின் அருளால் கம்பன்ன உடையார் யுத்தங்களில் வெற்றி பெற்று, அதை விஸ்தரித்து நிலைப்படுத்தினார். ஸரஸ்வதியின் அநுக்கிரகத்தால் இந்த திக்விஜய நூல் வந்தது.
ஒரு நாற்பது ஐம்பது வருஷ காலம் ஆதரவற்று வீணாகப்போன தக்ஷிண தேசத்தில், மறுபடியும் வேதம், கோவில், தருமம் எல்லாம் நிலைக்கும்படி செய்து, ஜனங்களுக்குப் பரமோபகாரம் செய்தார் கம்பன்ன உடையார். இந்த விஜய நகர வம்சத்தில்தான் பிற்பாடு உலகமே கொண்டாடுகிற கிருஷ்ணதேவராயர் வந்தார். இவர்கள் அத்தனை பேரும் செய்த காரியத்துக்கெல்லாம் வித்து வித்யாரண்யர் போட்டதுதான்.
வேத தர்மங்களை மறுபடியும் உச்ச நிலைக்குக் கொண்டு வருவதற்கு வழியாகவே துருக்கரை அகற்றி, ஹிந்து ராஜ்யம் அமைக்க அவர் வழி கோலினார். ராஜ்யம் ஸ்திரப்பட்டபின், இந்து தர்ம ரக்ஷணத்தைத் தாமே மேற்கொண்டார். ஆதி சங்கர பகவத் பாதர்களின் அத்வைத சம்பிரதாயத்தை மறுபடியும் ஜொலிக்கச் செய்துவிட்டால் வேத தர்மங்கள் எல்லாம் புனர் ஜீவனம் பெற்றுவிடும் என்று அறிந்தவர் அல்லவா? அதனால் கர்நாடக, ஆந்திர தேசங்களிலிருந்த பழைய சங்கர மடங்களைப் புதுக்களையோடு பிரகாசிக்கிற மாதிரி உத்தாரணம் செய்தார். சில புதிய மடங்களையும் ஸ்தாபித் தார். கன்னட தேசத்தில் அப்போது அத்வைதத்தை ஆட்சேபிக்கும் ஸ்ரீ மத்வரின் த்வைத சித்தாந்தமும் நிறையப் பரவியிருந்தது. அதைச் சமாளிப்பதற்காகவும் இந்த அத்வைத மடங்களை ஸ்தாபித்தார்.
ஜனங்களின் நல்வாழ்விற்கு சஸ்திரம், சாஸ்திரம் என்கிற இரண்டும், தேவையாயிருக்கின்றன. அஸ்திர சஸ்திரம் என்றால் ஆயுதம். விரோத ராஜ்யங்களால் தீமை ஏற்பட்டால் காப்பாற்றிக் கொள்ள சஸ்திரம் வேண்டுமே. நம்மை நாமே கெடுத்துக் கொள்ளாமல் ஆத்மாவை ரக்ஷித்துக் கொள்வதற்கு சாஸ்திரம் வேண்டியிருக்கிறது. வித்யாரண்ய ராஜ்ய ஸ்தாபனத்தில் மறைமுகமாக சஸ்திரப் பிரயோகம் செய்தும், ஸ்ரீசங்கர மடங்களின் புனருத்தாரணத்தால் தாமே நேராக சாஸ்திரப் பிரயோகம் செய்தும், ஹிந்து சமூகம் முழுவதையும் முகலாயர்களிடமிருந்
பணம் சம்பாதித்துக் கொள்வதைவிட பணத்தைக் கொடுக்கிற மனப்பான்மைதான் பெரிய லக்ஷ்மி. இந்த மனோபாவத் தையும் மஹாலக்ஷ்மி அநுக்கிரகம் செய்வாள். ஏழைப் பிராம்மணப் பெண்ணின் பொருட்டு அவளைச் செல்வத்துக்கு அதிதேவதையாக வைத்துக் கனக மழை பொழியும்படி வேண்டிக்கொண்ட சங்கரர், இதே ஸ்திதியில் தம் பொருட்டு அவளைப் பிரார்த்திக்கிறபோது, அவளைப் பணத்தின் அதிதேவதையாக மட்டும் நினைக்கவில்லை.
வைஷ்ணவர்கள் விஷ்ணுவைத் தகப்பனார் என்று சொல்லாமல் ‘பெருமாள்’ என்றே சொன்னாலும், மஹாலக்ஷ்மியைத் ‘தாயார்’, ‘தாயார்’ என்றே சொல்வார்கள். அவள்தான் ஸ்ரீ மாதாவான பராசக்தி. ஆசார்யாளும் இங்கு மாதா என்று அழைத்து, (மாமேவ மாதர் அனிசம்) “உன்னை நமஸ்காரம் பண்ணிவிட்டால் போதும்; அந்த நமஸ்காரங்கள் சம்பத்து, சகல இந்திரிய சந்தோஷங்கள், சாம்ராஜ்யம் எல்லாம் தந்து விடும். ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு உன்னிடமிருந்து ஒரே ஒரு செல்வம்தான் வேண்டும். என் துரிதங்கள் – பாபங்கள் எல்லாவற்றையும் கில்லி எறிவதற்கும் உன்னை நமஸ்கரிப்பதே சாதனமாகிறது. செல்வ தேவதையான நீ எனக்குத் தருகிற செல்வம் இந்த நமஸ்காரம்தான். இது என்னை விட்டு நீங்காமல் இருக்கட்டும்” என்கிறார்.
எல்லோரும் துராசைகளில்லாமல் ஜீவனோபாயம் நடத்துவதற்கு மஹாலக்ஷ்மியை உபாசிக்க வேண்டும். ஆதிசங்கரர் , வித்யாரண்யர், ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் மாதிரி சொந்த நலனுக்காக இன்றி, பரோபகாரமாக அவளைத் துதிக்க வேண்டும். எந்த செல்வம் வந்தாலும், வராவிட்டாலும், நம்மிடம் பாபமே சேராமல் நிர்மலமாக இருக்கிற செல்வத்தை விரும்பி அவளை நமஸ்கரிப்போம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


