
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
பிரேத ஸம்ஸ்காரம் .
என்ன ஒரு அஞ்ஞானம் நமக்கு! இந்த என் சாண் உடம்பை ரொம்ப சாஸ்வதமானது, நாம் தான் உலகிலேயே அதிக அழகு, நமது சௌந்தர்யம் ஈடு இணையற்றது. நமது பொன்னிற கலர் யாருக்குமே இல்லை. இந்த உடம்புக்கு விலை உயர்ந்த பட்டு, பீதாம்பரம். பல சைபர்கள் நம்பர் கொண்ட ரூபாய்க்கு வைர வைடூர்ய நகைகள். எட்டு ஊருக்கு மணக்கும் சென்ட், வாசனை திரவியங்கள் எல்லாம் போட்டு மினுக்குகிறோம். ஆஹா எப்படி எல்லாம் இந்த உடம்பை வளர்க்கிறோம். ஒருநாள் இது இல்லாமல் போகிறது. அப்போது இத2ன் மதிப்பு???? இந்த சரீரத்தின் சிறப்பு பற்றி மஹா பெரியவா சொன்னது ஞாபகம் இல்லையே.. ஞாபகப்படுத்துகிறேன்.
”உயிர் போனப்புறம் நம்ம உடம்புக்கு பிரேதம், பிணம் னு தான் பேர். அதற்கு சில காரியங்கள் பண்ணனும். ஏன்? னு ஒரு கேள்வி தோணும்., உடம்பு போனப்பறம் அந்த ஜீவனின் த்ருப்திக்காக ஸ்ராத்தம் தர்ப்பணம் எல்லாம் பண்றது பரோபகாரம் என்றால் ஸரி எனலாம் . ஆனால் ஜீவன் போனப்பறம் இந்த உடம்புக்கு எதுக்கு ஸம்ஸ்காரம்?
”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியல்லை . செத்துப்போன பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்துட்டதாலே அதை விடுவதற்கு பயம். அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேத ஸம்ஸ் காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இதைத் தவிர யாரோ அநாதை போய் விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, ‘ஸம்ஸ்கா ரம்’ பண்ணுகிறேன் என்று இழுத்து விட்டுக்கணும் ? நல்ல கேள்வி.
பிரேதமென்றாலே நமக்கு ஒரு வித பயம், கூச்சம். இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டி யிருக்கிறது?” என்று கேட்கலாம்.
சாஸ்திரங்களைப் படித்தால், தெரிந்து கொண்டால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங் களில் தேவதைகள் இருக்கு. கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என தேவாம்சங்கள் இருக்கு. அதெல்லாம் தன்னுடைய
மூலஸ்தானத்துக்குப் போகாமல் இருக்கிறதே.அனுப்ப வேண்டாமா?.
பிரேத ஸம்ஸ்காரம் பண்ணி தான் அதெல்லாம்
அதன தன் மூல ஸ்தானத்துக்கு கிளம்பி போகணும். அந்த மந்த்ரங்கள் ‘அபர மந்த்ரங்கள் ‘ எனப்படுபவை..
ஜீவாத்மா என்கிற புருஷனுக்கு 16 கலை உள்ளது. இதில் 15 கலைகள் மட்டுமே உயிராக இருப்பது , உடம்பு ஒரு கலை. ஆகவே உயிர் போனப்புறமும் ஒரு கலை அந்த உடம்பிலே இருக்கு. ஆகவே அந்த உடம்பை ஈஸ்வரார்ப்பணமாக்குவதற்காக பிரேத ஸம்ஸ்காரம் அவசியம். புரிகிறதா?.
உடம்பை தஹனம் பண்ணுவதை சாஸ்திரங்கள் ‘அந்த்யேஷ்டி’- அந்திய இஷ்டி – து ‘இறுதி வேள்வி’ என ரொம்ப உசத்தியா சொல்கிறது. கர்ப்பம் தரிப்பதி லிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் 40 ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.
‘ஸம்ஸ்காரம்’என்றால் ‘நன்றாக செய்வது ‘ என்று அர்த்தம். ‘ஸம்ஸ்க்ருதம்’ அப்படித் தான் நன்றாக அளிக்கப்பட் ட மொழி. உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்து வதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹுதி பண்ணிக் கொண்டே இருக்கிற ரீதியில் இந்த 40 ஸம்ஸ்காரங்கள்.
அந்த 40 ஸம்ஸ்காரம் என்ன? நான் இப்போது உங்க ளை ரொம்ப தொந்தரவு பண்ணப் போவதில்லை. இன்னொரு நாள் விவரமாக நீங்கள் நல்ல மூட் mood லே இருக்கும்போது சொல்றேனே.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



