DAFFODILS J K SIVAN

அற்புத ஆங்கில பாடல் ஒன்று… நங்கநல்லூர் J K SIVAN
மழை விடாமல் பெய்யப்போகிறது என்றார்கள். கதவுக்கருகே ஒரு நாற்காலியில் அமர்ந்து வானத்தை பார்த்தேன். கொஞ்சம் இதமான வெயில். வானத்தில் மழை மேகங்கள் இருக்கிறதா என்று பார்க்கும்போது ஒரே ஒரு அழகான கடல் நடுவே திட்டு போல ஒரு கருப்பும் நீலமும், வெளுப்பும் கலந்த மேகம் ஒன்று ஊர்வலம் போனது.. என்ன உருவம்? யானையோ? மலையோ ? திடீரென்று உருவம் விரிசல் கண்டது, அடுத்த சில நிமிடங்களில் ஒன்றோடொன்று இணைந்தது. வித விதமாக உரு மாறும் ஒற்றை மேகம். எனக்கு சிரிப்பு வந்தது. ஆஹா என் சின்ன வயதில் தி.நகர் ஹை ஸ்கூலில் TN சுந்தரம் ஸார் அழகாக விளக்கிய வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் இயற்றிய ஆங்கில பாடல் நினைவுக்கு வந்தது. SSLC யில் அது எங்களுக்கு பாடம். நானாகப் படித்த போது அர்த்தம் புரியவில்லை. இப்போது தனியே 85ல் வானத்தில் கண்ட ஒற்றை மேகம் அப்போது படித்ததில் அழகை வியாக்கியானம் செய்தது.
இந்த ஆங்கில கவிஞன் பாட்டை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? என் போன்ற பெரிசுகள் நிச்சயம் அறிந்திருப்பார்கள். மறந்திருப்பார்கள். இப்போதைய பாட திட்டத்தில் wordsworth இருக்கிறானா? டென்னிஸன் உண்டா. ஷேக்ஸ்பியர் தான் காணப்படுகிறானா? எனக்கு தெரியவில்லை. இவர்களைத் தெரிந்த எந்த குழந்தையும் வீட்டிலும் இல்லை. தெருவிலும் இல்லை.
”நான் தனியாக ஒற்றை மேகம் போல திசை நோக்கில்லாமல் தனிமையில் கால் போன போக்கிலே அலைந்தேன் என்று 1804ல் சொல்கிறான். இங்கிலாந்தில் ஏரிக்கரை பிரதேசம் என்று ஒன்றுண்டு. அங்கே அநேகர் நடந்து போவது வழக்கம். அந்த பகுதி கவிஞர்கள் என்றே சிலர் உண்டு. நாம் வாக்கிங் போகிறோமே அது போல் சுகமாக நடப்பார்கள். வேர்ட்ஸ்ஒர்த் அவன் சகோதரி இருவரும் நடக்கிறார்கள். அவன் சகோதரி தூரத்தில் ஏராளமாக மஞ்சள் நிறத்தில், ஆரஞ்ஜ் நிறத்தில் செம்பருத்தி போல விரிந்த இதழ்கள் கொண்ட அழகிய பூக்களை பார்த்து விட்டு அதை பறிக்க ஓடுகிறாள். கவிஞன் தன்னை மறந்து ரசிக்கிறான்.
அந்த பூக்கள் மேகத்தை பார்த்து ரசித்ததா? அவனைப்போல் மனதில் எந்த சிந்தனையுமின்றி சுகமாக காற்றில் ஆடியதா? மேலே தனிக்காட்டு ராஜா மேகம் கீழே பனி குல்லாய் அணிந்த மலை முகடுகள், கீழே பள்ளத்தாக்குகள், பளிங்கு நீரோடைகள், பச்சைப் பசேல் வயல்கள், கலர் கலராக புஷ்பங்களைக் கண்டு வியந்ததா..? நறுமணம் சுமந்த குளிர் தென்றலில் மயங்கியதா? இந்த ஆனந்தத்தில் தான் அந்த daffodils எனப்படும் பூக்கள் டான்ஸ் ஆடியதா?
மேகத்துக்கு ஆச்சர்யம் அட டா இதென்ன ஆகாயத்தில் பார்த்தால் நக்ஷத்திர மலர்கள், தரையிலே மஞ்சள் ஆரஞ்சு நக்ஷத்திரங்கள்! ஏரியின் நீல நிற ஜலத்தில் வெண்ணிற அலைகளின் ஆட்டத்துக்கு பின்புலமா கரையில் வர்ண ஆடைகளா இந்த மலர்கள்?மனதிற்கு இவ்வளவு ரம்யத்தை இயற்கையை விட வேறு யார் தரமுடியும்? இந்த வேடிக்கை கவனித்தாயா? மேலே தனித்து ஒரு ஆனந்த மேகம்? வனத்தில் தவம் செய்யும் ரிஷியைப் போல! கீழே கூட்டமாக மழலைப் பட்டாளம் போல் இந்த daffodil பூக்கள். வைத்த கண் வாங்காமல் அந்த மலர்களின் அழகில், ஆட்டத்தில், வள்ளலார் ரசித்த மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றுபோல ஏரிக்கரை குளிர் தென்றலின் சுகத்தில், தன்னை இழக்கிறான் வெள்ளைக்கார கவிஞன். பூக்கள் ஒன்றா இரண்டா, எண்ணவே முடியவில்லையே, பத்தாயிரத்துக்கு குறையாமல் கொசுறு இன்னும் ஒரு நூறும் கூட இருக்குமா?
மனித வாழ்க்கையில் எத்தனை எத்தனை உணர்ச்சிப் புயல்கள் சூறாவளிகள், நடுங்க வைக்கும் இடியோசை, எல்லாவற்றையும் கபளீகரம் பண்ணும் கோபம் எனும் கட்டுக்கடங்கா வெள்ளம். அதெல்லாம் இந்த இயற்கையின் வனப்பில் நாம் மறக்கத்தான் இந்த காட்சிகளா! வருடம் முழுதும் நாயாக பேயாக உழைத்து ஒரு ரெண்டு வாரமாக குடும்பத்தோடு எங்காவது விடுமுறையில் இப்படிப்பட்ட உல்லாச ஸ்தலங்களுக்கு செல்வது battery ரீ சார்ஜ் பண்ணிக்கொள்ளத்தானா?
பதினைந்து பதினாறு வயதில் இயற்கையின் வளமையை, எழிலை ரசிக்கத்தெரியவில்லை. பாடம், சோறு, விளையாட்டு என்பதிலேயே வயது ஏறிவிட்டது.ஆனால் பள்ளிக்கூடத்தில் நமக்கு பிடிக்காவிட்டாலும் ஆங்கில பாடங்கள் தமிழ் பாடங்களில் அற்புத விஷயங்கள் கட்டாயமாக கற்றுக்கொடுக்கப்பட்டு மனதில் பதிந்துவிட்டது. 60க்குமேல் இனிக்கிறது. சுகத்தை லேட்டாக அனுபவிக்க முடிகிறது. இப்போது 85ல் தனிமை சுகமாக இனிக்கிறது..இது தான் wordsworth பாடல்.
I wandered lonely as a cloud
That floats on high o’er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.
Continuous as the stars that shine
And twinkle on the milky way,
They stretched in never-ending line
Along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.
The waves beside them danced; but they
Out-did the sparkling waves in glee:
A poet could not but be gay,
In such a jocund company:
I gazed—and gazed—but little thought
What wealth the show to me had brought:
For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2565

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;