
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
‘முதல்லே காமாக்ஷியை தரிசனம் பண்ணிட்டு மெட்ராஸ் போ..”
நேற்று அனுஷம்…. மஹா பெரியவா பற்றி எழுத ஆசை. உடனே எழுத முடியாதபடி கரண்ட் கட். மழை புயல்….இன்றாவது எழுத வேண்டும் என்று நினைத் தேன்.
அனுஷ நாயகன் மஹா பெரியவாளை நினைத்தாலே எண்ணற்ற அதிசயங்கள் நினைவுக்கு வரும். எத்த னையோ பக்தர்களின் அனுபவங்கள். பாதிக்குமேல் வெளியே தெரிவதில்லை. விளம்பரமே வேண்டாதவர்..
இதோ ஒரு சம்பவம்.
காஞ்சிபுரம் போகவேண்டும். மஹா பெரியவாளை தரிசனம் செய்ய வேண்டும் என்று பல நாட்களாக நினைத்து ஒருநாள் அது நிறைவேறியது. ஒரு இளம் தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, முதியவருக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவை இருந்தது. அர்ஜண்டாக சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக காரை நிறுத்த சொன்னார். அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஹை வே தலை தெறிக்க வண்டிகள் குறுக்கே நெடுக் கே ஓடிக்கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர் பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போது தான் புதுஸாகப் பார்ப்பது போல், “தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக் கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித் தாள்.
ஐந்து வயது குழந்தைக்கு ரோடு traffic அதன் ஆபத்துகள் பற்றி என்ன தெரியும்?
கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில் ஒரு பெரிய அதிர்ச்சிகரமான சம்பவம். அசுரர் வேகமாக வந்த ஒரு லாரி …. அந்த ஐந்து வயது குழந்தையை அப்படியே தூக்கி வீசி எறிந்தது..அம்மா அப்பா தாத்தா எல்லோ ரும் ஹா என்று கத்தி சிலையானார்கள். விபத்தின் அதிர்ச்சியில் பேச்சு வரவே இல்லை. அப்பா பறந்து போய் கீழே கிடந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு அலறிக்கொண்டு காஞ்சிபுரத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.
“கொழந்தையை ஒடனே மெட்ராஸுக்கு கொண்டு போய்டுங்க! ரொம்ப ஸீரியஸ் கேஸ்!..”
காஞ்சிப்புரம் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர். விஷயத்தை கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய சொந்தக்காரர் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு, நேராக பெரியவாளிடம் ஓடினார்.
“பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே வழில கொழந்தை மேல லாரி மோதிடுத்து! டாக்டர்கள் கைவிரிச்சுட்டா! பெரியவாதான் கொழந்தையைக் காப்பாத்தணும்..”
அழுதார். அவர் மஹா பெரியவாளின் தீவிர பக்தர்.
“என்னடா நாணா சொல்றே, என்னைப் பாக்க வரச்சே யா குழந்தைக்கு ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?.
“மஹா பெரியவா மெதுவாக இப்படி கேட்டுவிட்டு, சற்று நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அப்புறம் பக்கத்தில் இருந்த ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து அவர் கையில் ப்ரஸாதமாகப் போட்டுவிட்டு,
‘நீ மெட்ராஸுக்கு கொழந்தையைப் பாக்க போறச்சே இதைக் குடு. போறதுக்கு முன்னாடி, காமாக்ஷிய தர்ஸ னம் பண்ணிட்டுப் போ!…”
அந்த குடும்பத்தின் சொந்தக்காரர், பெரியவா பக்தர் ஆப்பிள் பழத்தை எடுத்து கண்ணில் ஒத்துக்கொண்டு பையில் போட்டுக்கொண்டு நேராக காமாக்ஷி கோவி லுக்கு தர்ஶனம் பண்ணப் போனார். அடுத்த பஸ் பிடித்து மெட்ராஸ் போகணுமே.
காமாக்ஷி அம்மன் கோவில் நடை சார்த்தும் நேரம். எப்படியோ அவரால் ஒரே ஒரு க்ஷணம் மட்டுமே அம்பா ளை தர்ஶனம் பண்ண முடிந்தது. பெரியவாளை மானசீ கமாக மனதில் வேண்டிக்கொண்டு காமாக்ஷியை தரிசனம் பண்ணினார்.
நெய் தீபச் சுடரில் அதி அற்புதமாக காமாக்ஷி அம்பாள் ஸர்வாலங்கார பூஷிதையாக பச்சைப் பட்டுப் புடவை யுடன், அருள் பொழியும் முகத்தோடும் கண்ணெதிரே உட்கார்ந்திருந்தாள். பக்தர் கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.
அம்பாளை ஒரு க்ஷணமே தர்ஶனம் பண்ணினாலும், மனஸில் அந்தக் கோலத்தை இருத்தியபடி மெட்ரா ஸுக்கு பஸ் ஏறினார். நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று, ICU வில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை எப்படியோ வைத்து விட்டார்.
அழுது கொண்டிருந்த பெற்றோரிடம் பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னதைப் பற்றி கூறினார்.
பெரிய டாக்டரை ஒரு நிமிஷம் சந்திக்க முடிந்தது . குழந்தையின் அப்பா அழுந்துகொண்டே டாக்டரை கும்பிட்டு .நிலவரம் கேட்டார்.
“ஸாரி ஸார் . உங்க கொழந்தை “கோமா”க்குப் போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோ தான் சொல்லமுடியும். தைரியமா இருங்க”
பெற்ற தாய் அம்மா என்று கதறினாள். எல்லோரையும் வெளியேற்றினார் டாக்டர்.சில மணி நேரங்கள் கழிந்தது. ICU வாசலில் அந்த குடும்பமே சோக சித்ரங்களாக அமர்ந்திருந்தது. நர்ஸ் ஓடி பெரிய
டாட்கரிடம் சொல்கிறாள்.
”அட ஆச்சர்யமா இருக்குதே. குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்’
‘”கோமா…. மணிக்கணக்கு…. நாள்கணக்கு”… –
— பெரிய டாக்டர் சொன்னதையெல்லாம் தூக்கி அடித்து விசிறி எறிந்து விட்டது மஹா பெரியவா கொடுத்த ஆப்பிள் பழம்…..
“அம்மா!…”
குழந்தை அம்மாவை அழுது கொண்டே அழைத்தது ….மஹா பெரியவா அனுக்ரஹம் !
அப்புறம் என்ன?
அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது. ரெண்டு மூன்று நாளில் ஓரளவு நன்றாகத் தேறிய குழந்தை யைத் தனி ரூமுக்கு ஷிப்ட் பண்ணினார்கள். ஆப்பிள் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார்.
“அம்மா…..”
தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை.
“என்னம்மா?….”
“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?…”
“பாப்பாவா? இங்க ஏதும்மா பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன் னா இருக்கே! இங்க பாப்பா யாரும் இல்லியேடா!..”
குழந்தை சிணுங்கினாள்.
“இல்லேம்மா எங்கூட இருந்த அந்தப் பாப்பா எங்கேம் மா? எனக்கு அவகூட வெளையாடணும்..”
ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறது குழந்தை என்று அம்மா ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி குழந்தை யை ஸமாதானப்படுத்த எண்ணினாள்
.”எந்தப் பாப்பாம்மா உன்னோடு விளையாடித்து…? அது எப்டி இருந்தா சொல்லு! நான் போய் கூட்டிண்டு வரேன்” என்றாள் அம்மா.
“பச்சைப் பட்டுப் பாவாடை கட்டிண்டு நிறைய நகை எல்லாம் போட்டுண்டு சிகப்பா என் கூடவே இருந்தா ளே அவளைத்தான் சொல்றேன்.. கூப்பிடு அவளை. அந்த பாப்பாதான்!…”
மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினர், பெரியவா பக்தருக்கு பளிச்சென்று புரிந்து விட்டது.
”காமாட்சியை தரிசனம் பண்ணிட்டு மெட்ராஸ் போ…..”
பெரியவா சொன்னது, ஆப்பிள் பழத்தோடு காமாக்ஷி
யை தரிசனம் பண்ணியது. பாவாடை, சகல சர்வா
பரண பூஷிதையாக காமாக்ஷி சிரித்துக் கொண்டே தரிசனம் கொடுத்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. இப்போது ஆஸ்பத்திரியில் குழந்தை அவளைப் பற்றி சொன்னதும் பொட்டில் அடித்தது போல் ஆனது அவருக்கு. தெய்வ கடாக்ஷம் புரிந்தது !
“போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்ஶனம் பண் ணிட்டுப் போ!…” பெரியவா சொன்னதும், அம்பாள் ஒரு க்ஷணமே தர்ஶனம் தந்தாலும், ஹ்ருதயத்தை விட்டு அகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காஷி அளித்ததும் அவருக்குப் புரிந்தது; மேனியெல்லாம் புல்லரித்தது!
பெரியவா கண்மூடி க்கொண்டு ஒரு சில வினாடிகள் காமாக்ஷியை பிரார்த்தனை பண்ணியிருக்கிறார்.. .அவர் பிரார்த்தனையை அம்பாள் மீறுபவவளா? அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு ”பாப்பா ” வடிவில் வந்து கூடவே இருந்து விளையாடி, குழந்தைக்கு ஆபத்தை நீக்கி உயிரூட்டி அல்லவோ விளையாடியி ருக்கிறாள்!
மேனியெல்லாம் இதை எழுதும்போது எனக்கே புல்லரிக்கிறது!
உறவினர், மற்றவர்களுக்கு நடந்ததை எடுத்துச் , திக்கற்றோருக்கு துணையாக அருளும் பெரியவா இருந்த காஞ்சிபுரம் திசையை நோக்கி விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர். ஒன்று மட்டும் நிச்சயம். மஹா பெரியவா நினைத்தால், ஆப்பிளில் கூட அம்பாளை ஆவாஹனம் பண்ண முடியும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



