
தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN
வேமனா தெலுங்கு பட்டினத்தார் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவரைப் பற்றி அவர் தத்துவங் களில் கொஞ்சம் அளித்திருக்கிறேன்.இன்று அவரைக் கொஞ்சம் படித்தேன். அற்புதமான ஞானி வேமனா . தெலுங்கு தெரியாவிட்டால் தப்பில்லை.ஆங்கிலத்தில் அர்த்தம் யாரோ எழுதி இருக்கிறார்களே. அதிலிருந்து வேமனாவை புரிந்து கொள்ளுவோம். தெலுங்கு தெரிந்தவராகில் அவர் வாக்கியங்களை படிக்க சௌகர்யமாக கொடுத்திருக்கிறேன். ஒரு அக்ஷரம் கூட எனக்கு தெரியாது.
கவனித்தீர்களா, கொஞ்சம் புதுமாதிரியான, இதுவரை நாம்கண்டிராத வகையில் வேமனா தன்னுடைய பாடல்களில், தத்துவங்களை தனக்கே சொல்லிக் கொள்வதுபோல் அமைந்திருக்கிறது. என்னடா வேமா, புரிகிறதா,தெரிந்துகொள்ளடா? என்கிற டைப்பில்பாடி இருக்கிறார்.
చంద మెరిగి మాట చక్కగా చెప్పిన ఎవ్వడైన మాట మరికేల పలుకు
చంద మెరింగి యుండు సందర్భ మెరుగుమీ విశ్వదాభిరామ వినుర వేమ.
candam erigi mATa cakkagA ceppina evvaDaina mATa mArikEla paluku
canda meringi yunDu sandarbha merugumI viSvada abhirAma vinura vEma.
யாருக்காவது ஏதாவது மனதில் உறைக்கும்படியாக உபதேசம் பண்ணவேண்டு மானால் அந்த உபதேசம், அறிவுரையானது, எளிமையாக, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குட்டியாக இருக்கவேண்டும். மனதை புண் படுத்தக் கூடாது. அப்போது தான் அவன் ”ஆஹா நான் இதை அறிந்துகொண்டேன். அப்படியே செய்வேன்” என்று ஏற்றுக்கொள்வான். அதிகாரம் எதுவும் தேவையில்லை. இன்னொரு சமாச்சாரம். நீ யாருக்காவது அறிவுரை வழங்கும்போது அவன் அதை ஏற்றுக்கொள்ள, கேட்டுக் கொள்ளும் மன நிலையில் இருக்கிறானா, சந்தர்ப்ப சூழ்நிலைகள் உச்சிதமாக இருக்கிறதா என்று வேறு பார்க்கவேணும். அவசரமாக ஆபிஸ் லேட்டாகிவிட்டது என்று பஸ்ஸில் ஓடுபவனுக்கு கீதை ஞான யோகம் சொல்லட்டுமா என்றால்..? எப்படி ஸார் ….? நான் சொல்வது சரி தானேடா வேமா என்று ஒவ்வொரு பாட்டிலும் ஒரு தனி ஸ்டைல் வேறு வேமனாவிடம் இருக்கிறது.
21. Medi pandu chooda melimaiyundu……………….మేడి పండు చూడ మేలిమైయుండు
Potta vippi chooda purugulundu………………….పొట్ట విప్పి చూడ పురుగులుండు
Pirikivani madibinkamilagura……………………..పిరికి వాని మదిని బింకమీలాగురా
Viswadhaabhirama vinura Vema………………… విశ్వధాభిరామ, వినుర వేమ
எத்தனையோ பழங்களை உனக்கு தெரியும் அல்லவா. அவற்றில் சிலது பார்க்க அழகாக பள பளவென்று உடனே கடித்துத் திங்க வேண்டும் போல நாக்கில் நீர் ஊறும். ஆனால் உள்ளே பிரித்துப் பார்த்தால் கூடைப் புழு நெளியுமே. தூக்கித் தான் எறியவேண்டும். பழங்கள் விஷயத்தில் ஜாக்கிரதை தேவை.
ஒரு சில பழங்களை உனக்குத் தெரியும். பார்க்க அழகாக பள பளவென்று நாக்கில் ஜலம் ஊறும் . தின்பதற்கு ஆசையாக இருக்குமே உள்ளே பிரித்துப் பார்த்தால் கூடைப் புழு நெளியுமே. அதைத் தூக்கித் தான் எறியவேண்டும். நீ பார்க்கும் மனிதர்களும் அப்படித்தான். வீரனாக காட்டிக் கொள்பவன் உள்ளே அவன் கோழையாக இருக்கலாம். . தர்மிஷ்டனாக தெரிவான். ஆனால் சொந்தக் காசு ஒரு தம்படி கூட தர மாட்டான். படு கஞ்சன். பக்திமான் வேஷத்தில் இருந்தும் உள்ளே அவன் ஒரு கிராதகன். வெளிப்பகட் டில் மயங்காதேடா வேமா. நான் சொல்வது சரிதானே வேமா?
Inumu virigeneni irumaaru mummaaru……………….ఇనుము విరిగెనేని ఇరుమారు ముమ్మారు
kaachi yatakavachu kramamu gaanu………………….కాచి యతకవచ్చు క్రమము గాను
manasu virigeneni mari chercharaadaya……………..మనసు విరిగెనేని మరి చేర్చరాదయ
Viswadaabhiraama, Vinura Vema…………………….. విశ్వధాభిరామ, వినుర వేమ
கனமான பலமுள்ள இரும்பை ரெண்டாக மூன்றாக உடைத்தாய். அதை மீண்டும் ஓட்டவைத்தாய். அட, பழையபடி அது ஒன்றாக பலமாக சேர்ந்துகொண்டதே. ஆனால் ஒரு மனிதனின் மென்மையான மனத்தை உடைத்தாயே, உன்னால் எவ்வளவு முயன்றும் அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடிந்ததா? இதயத்தை உடைப்பதும் நொறுக்குவதும் ரொம்ப சுலபம். அன்பால் இணைக்கலாமே அப்பா? காசா பணமா? எதுவுமே தேவையில்லையே. வாய் வார்த்தையில் இனிமை போதுமே! நான் சொல்வது சரிதானேடா வேமா? என்று தன்னையே கேட்டுக் கொள்கிறார் வேமனா .
Tappulennuvaru Tandopatandambu……………….తప్పులెన్నువారు తండోపతండంబు
Lurvi janulakella nundu tappu……………………….లుర్వి జనులకెల్ల నుండు తప్పు
Tappu lennuvaru tamatappu lerugaru…………….తప్పు లెన్నువారు తమతప్పు లెరుగరు
Viswadhaabhiraama, Vinura Vema………………. విశ్వధాభిరామ, వినుర వేమ
தப்பு லென்னுவாரு தண்டோ³ப தண்ட³ம்பு³ லுர்வி ஜனுலகெல்ல நுண்டு³ தப்பு தப்பு லென்னுவாரு தம தப்புலெருக³ரு விஶ்வதா³பி⁴ராம வினுர வேம!
உன்னைச் சுற்றிப்பார். மனிதர்கள் எது விஷயமாக மும்முரமாக இருக்கிறார்கள் பார்த்தாயா? எங்கே, எதில், எதால் , தப்பு கண்டு பிடிக்கலாம் என்று அலைவோர் தான் கண்ணில் படுகிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. தப்பு செய்யாதவன் யாரேனும் ஒருவன் உலகில் உண்டா? மற்றவன் தப்பை எண்ணுகிறவன், செயலில் குற்றம் கண்டுபிடிக்கிறவன், ஏன் தன்னுடைய தப்புகளை முதலில் எண்ணிப் பார்ப்பதில்லை?. தன்னுடைய தவறுகளை உணர்ந்து ஏன் அதை திருத்திக் கொள்வதில்லை. சரிதானேடா வேமா, சொல்லுடா?
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



