I AM THERE FOR YOU. J K SIVAN

கிருஷ்ணன் சொல்வதை கேட்போம். நங்கநல்லூர் J K SIVAN
நமது ஹிந்து கடவுள்களில் வெகு பிரபலமாக அனைவருக்கும் தெரிந்த ஒருவர் தான் கிருஷ்ணன். காக்கும் கடவுள் ஸ்ரீமந் நாராயணனின் த்வாபர யுக அவதாரம். அற்புதமான கீதாச்சார்யன். வெள்ளைக்காரர்கள் வாழும் மேற்கத்திய நாடுகளுக்கு அதிகம் பிடித்தது கிருஷ்ணனின் கீதோபதேசம் தான்.
கிருஷ்ணனை எப்படி வேண்டுமானாலும் மனதுக்கு பிடித்தபடி அழைக்கலாம். அவனுக்கு தான் ஆயிரக்கணக்கான பெயர்கள் பல இந்திய மொழிகளிலும் உள்ளதே. அவனை நினைக்கிறோமா என்பது தான் முக்கியம்? நினைத்தால் தானே அழைக்க முடியும்? வேதத்தில் ஒரு வார்த்தை : ‘ஈஸ்வர: பரம: கிருஷ்ணா:’ அவனே பிரபஞ்சத்திலும் அதற்கு அப்பால் இருந்தும் அதைக் கண்காணிக்கும் ஒரு சக்தி. ஈஸ்வரன், பரமன், ப்ரம்மன், விஷ்ணு, கிருஷ்ணன் எப்படி சொன்னாலும் அதெல்லாம் அவன் தான்.
கிருஷ்ணன் கீதையில் சொன்ன ஒரு வாக்கியம்:
मत्त: परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय |मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव || 7||
mattaḥ parataraṁ nānyat kiñchid asti dhanañjaya mayi sarvam idaṁ protaṁ sūtre maṇi-gaṇā iva
மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித³ஸ்தி த⁴நஞ்ஜய|மயி ஸர்வமித³ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக³ணா இவ ||7-7||
“என்னிலும் உயர்ந்த உண்மை ஏதாவது உண்டா என்றால் ஒன்றுமே இல்லை. நான் தானே எல்லாமே. எல்லாமுமே. எல்லோரும் என்னையே சார்ந்து அல்லவோ இருக்கிறார்கள்’. புரியும் படியாக சொல்வதா னால் ரொம்ப நெருக்கமாக கட்டிய ஒரு நெக்லஸில் necklaceல், ஹாரத்தில் தங்கம், வெள்ளி, வைர, மரகத, முத்துமணிகள் மட்டும் தானே தெரிகிறது. அவற்றின் உள்ளே இருந்து அவற்றை எல்லாம் இணைக்கும் கம்பியோ கயிறோ தெரியவில்லை அல்லவா? அது போல நான் தான் எல்லோர் உள்ளேயும், , எல்லாவற்றி ன் உள்ளேயும் இருந்து கொண்டு இணைத்து, நடத்தும் வெளியே தெரியாத கம்பி” என்கிறான் கிருஷ்ணன் கீதையில் 7: 7
இன்னொரு அற்புத வாக்கியம்.
न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः । अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः ॥ 10:2
na me viduh sura-ganah prabhavam na maharshayah aham adir hi devanam maharshinam ca sarvasah
நமே விது3 : ஸுரக3ணா: ப்1ரப4வம் ந மஹர்ஷய: |அஹமாதி3ர்ஹி தே3வானாம் மஹர்ஷீணாம் ச1 ஸர்வஶ: ||2||
” அக்னி, வாயு, இந்திரன், சந்திரன், முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்கிறது எதற்காக? உனக்கு எது விருப்பமோ எது பிடிக்குமோ, எதன் மேல் நம்பிக்கையோ, அதை வணங்குவதற்காக, அதாவது உனது சௌகர்யத்துக்காக ஏற்படுத்திய வசதி. ஆனால் நீ எதை வணங்கினாலும் அவற்றை இயக்கும் என்னையே (கிருஷ்ணனையே ) அது சேரும். அதாவது நான் (கிருஷ்ணன்) தான் ‘சர்வ ஆதார சக்தி’ என்று அவனே கீதையில் சொல்கிறது புரிகிறதா?
விஷ்ணுவின் அவதாரங்கள் கார்யார்த்தமானவை. அவர் மகா விஷ்ணு, கர்போதகசாயி விஷ்ணு, க்ஷீரோதகசாயி விஷ்ணு என்றும் காணப் படுபவர். எந்த விஷ்ணுவாக வர்ணிக்கப் பட்டாலும் நாராயணன் ஒருவரே.
இப்போதைக்கு இது போதுமே சிந்திக்க.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;