பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
கடன் சுமைக்கு தீர்வு –
காஞ்சி மஹா பெரியவா இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார். நம்மை சுற்றிலும், நாம் ஸ்வாசிக்கும் ப்ராணவாயுவிலும் வியாபித்திருக்கிறார். எதற்கு? நம்மை உய்விப்பதற்கு. அது தான் அவர் லக்ஷியம். ஜகதகுருவாக அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு கடமையாக. இப்போதே இப்படி என்றால் அவர் ஜீவியவந்தராக தேகத்தோடு நமக்கு தரிசனம் கொடுத்த காலத்தில், நம் கண்ணுக்குப் புறப்பட்ட காலத்தில் அவரை எத்தனை பக்தர்கள் காண துடித்து காஞ்சிபுரத்தை மொய்த்திருப்பார்கள்…. ஒரே ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
காஞ்சியில் மடத்தில் ஒரு சமயம் ஒரு பக்தர் மூன்று நாளாக மஹா பெரியவாளைத் தனியாக பிடித்து விடவேண்டும் என்று கண்ணிமைக்காமல் காத்திருக்கிறார். ஏதோ தனியாக சொல்ல வேண்டிய விஷயம்.
ஏன் மூன்று நாளாக முடியவில்லை என்றால் மஹா பெரியவா மௌன விரதத்தில் இருந்தார்.
அதிர்ஷ்டசாலி அந்த பக்தர். பெரியவாளை சந்தித்து பேச அவர் காத்திருந்த சந்தர்ப்பம் கிடைத்தது
“பெரியவாகிட்ட தனியா பேசணும்.ரெண்டே நிமிஷம்..”
“அதுக்காகத்தான் மூணுநாளா காத்திண்டிருந்தியோ?என்ன விஷயம்?”
பக்தருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. ஆஹா நம்மை எவ்வளவு துல்லியமாக பகவான் கவனித்திருக்கிறார்!.
“குடும்ப விஷயம்….ரகசியமாகப் பேசணும்…”
“என்னிடம் ரகசியமெல்லாம் வேண்டாம். இரைந்தே பேசு. மத்தவாளுக்கு தெரிஞ்சதாலே ஒண்ணும் குடி

முழுகிப் போய்விடாது…”
எங்க ஆத்திலே எனக்கு முன்னே இருந்தவா நல்ல வசதியா,செழிப்பா,செல்வாக்கோடு கிராமத்தில் இருந்தா. இப்போ என் காலத்திலேயே தாங்கமுடியாத கஷ்டம், கடன் சுமை தாங்கலே. இருந்த வயல் விளைச்சல் நிலமும் கடன்காரன் ஏலத்துலே போயிட்டுது. அப்படியும் கடன் தீரலை. வாங்கின கடனை திருப்பி தரமுடியலே. வட்டி சுமை ஏறிண்டே போறது. வாக்கு தவறினதாலே பாவம் வேறே கூடறது. ராப்பகலா தூக்கம் இல்லே. என்கிட்டே பணம் இல்லை.குடும்பத்தை நடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. தாத்தா காலத்துக் கடன்களையெல்லாம் அடைத்துவிட்டால்தான் நிம்மதியும் சௌகரியமும் உண்டாகும் போலிருக்கிறது. அதுக்கு தான் வழி தெரியாம தவிச்சுண்டு மஹா பெரியவா கிட்டே வந்தேன். என் மேலே கருணை வச்சு பெரியவாதான் எனக்கு ஒரு வழி சொல்லணும்…”

மஹா பெரியவா பதில் சொல்லவில்லை. கண்மூடி சிறு நிமிஷங்கள் மௌனம்.
“வெயில் காலத்திலே பல க்ஷேத்திரங்களில் உற்சவம் பண்ணுவா. ரொம்ப ஜனங்கள் வருவா. எல்லாருக்கும்
ரொம்ப தாகம் இருக்கும் னு பானகம் நீர்மோர் குடிக்க ஜலம் தருவா. நீயும் ஒரு தண்ணீர்ப் பந்தல் போடு.
பக்தர்களுக்கெல்லாம், ‘சிவ சிவ,ராம ராம’ ன்னு சொல்லிண்டே “கடனைத் திருப்பிக் கொடுக்க முடியல்லே;
தண்ணீர் கொடுக்கிறேன்” என்று சத்தமா சொல்லிண்டே -எல்லோருக்கும் தீர்த்தம் கொடு…உனக்கு நல்ல மனசு..கடன்பட்ட உன்னுடைய பாவம் போயிடும்….”

கண்ணீர் விட்டு அழுதுகொண்டே மஹா பெரியவா முன்னாலே விழுந்து விழுந்து நமஸ்கரித்தார் அந்த பக்தர். அப்புறம் என்ன?
கடன் சுமை தாங்காம வந்தவர் தான தர்ம பலன் சேர்ந்த பணக்காரனாக மாறினார். கடன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா திரும்ப கொடுத்தார் னு கேள்வி.
மஹா பெரியவா பற்றிய அற்புத விஷயங்களை சேகரித்து தருவதில் எனக்கு தெரிந்து ஒரு ஈடிணையற்றவர் தட்டச்சு வரகூரான் அவர்கள். நல்ல நண்பர். நேரில் இன்னும் பார்த்ததில்லை. அவரெழுதிய ஒரு விஷயம் இது. என் வழியில் உங்களை அடைகிறது.