RASA AASWAATHA THARANGINI – J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி.

ஸ்லோகம் 23-30

23. अयं मृत्युवश्य इति त्वम्, ‘यस्य ब्रह्म च क्षत्रं च उभे भवत ओदनः । मृत्युर्यस्योपसेचन क इत्था वेद यत्र सः’ इति मृत्युमुपसेचनीकृत्य ब्रह्मक्षत्रोपलक्षितं सर्व चराचरमपि ओदनं भक्षयित्वा विश्रान्तः न च कालवशानुग इति कालस्यापि कालभूतं परं तत्त्वमित्यहम ।।

அயம் ம்ருத்யுவஸ்ய இதித்வம் யஸ்ய ப்ரம்ம சா க்ஷத்ரம் சா உபே பாவத்தை ஓதன: ம்ருத்யுர் யஸ்யோப ஸேசன க இதய வேத யத்ர ஸ : இதை ம்ருத்யு உப ஸேசநிக்ருத்ய பிரமக்ஷத்ரோ பலக்ஷித ம் சர்வ சராசர நபி ஓதனம் பக்ஷயித்வா விஸ்ராந்த: ந ச காலவசாகுண இதை காலஸ்யாபி கால பூதம் பரம் தத்வமித்யஹம்:

ராமன் காலத்தினால் கட்டுண்டவன் இல்லை. காலண்டர் ஷீட் சீட்டு, கிழியக் கிழிய கிழடு தட்டி வயது எண்ணிக்கை கூடுபவன் அல்ல. அவன் உபநிஷதங்கள் அசைவைப் பற்றி கூறும் ப்ரம்மத்தையும் அசையாததை பற்றி கூறும் க்ஷத்ரத் தையும் தயிர்சாத மாக உண்பவன். அதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் எதுவா? வேறு என்ன ம்ருத்யு எனும் காலம், மரணம் தான். பிறப்போ இறப்போ இல்லாதவனை இவை என்ன செய்யும் தசரதா ? இதை நான் அறிவேன் நீ அறியாதவன்.

24 अयं कारब्धशरीर इति त्वमः अयं स्वेच्छारब्ध शरीर इत्यहम्।
அயம் காரப்த சரீர இதித்வம்.; அயம் ஸ்வேச்சாரப்த சரீர இத்யஹம்

”தசரதா, ராமன் ஏதோ உன்னுடைய கர்ம வினைப்பயனால் உனக்கு புத்திரனாக பிறந்ததாக நீ நினைத்துக் கொண்டிருக் கிறாய். உண்மையில் ராமனாக உன் இல்லத்தில் பிறந்தது அவன் எடுத்த முடிவு. இந்திராதி தேவர்கள் பூமாதேவியோடு கலந்து ஆலோசித்து அவன் எடுத்த முடிவு. தெய்வத்தின் சங்கல்பம்.அதை நீ உணர மாட்டாய். நான் நன்றாக உணர்வேன்.

25. अयं बाह्यरिपुदलने चतुर इति त्वम्; अयम् आन्तररिपुदलने समर्थ इत्यहम्
அயம் பாஹக்ரிபுதலனே சதுர இதித்வம்; அயம் ஆனந்தசரீரபுதலனே சமர்த்த இத்யஹம் :

ராமன் பராக்கிரமன், வில்வித்தை தெரிந்தவன், தகுந்த ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றவன். அவனால் வெளியே உள்ள எதிரிகளை மட்டும் வெல்ல முடியும் என்று நீ நம்புகிறாய். உனக்கு தெரியுமா அவன் நமக்குள்ளே இருந்துகொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் காம க்ரோத மோகம் போன்ற எதிரிகளையும் அழிக்கக்கூடியவன் என்று. இது எனக்குத் தெரியும் தசரதா.
தசரதன் அசந்து போகிறான். ஆச்சர்யத்தில் ஆழ்ந்து பிளந்த வாய் மூடாமல் சிலையாக நிற்கிறான். அவன் முழு கவனமும் அடுத்து விஸ்வாமித்ரர் தனது அருமை மகன் ராமனைப்பற்றி என்ன சொல்லப்போகிறார் என்பதை கேட்பதிலேயே ஆர்வமாக இருக்கிறது. என் மகன் ராமன் இப்படிப்பட்டவனா என்று அதிசயிக்கிறான்.

26. अयं प्रत्यक्षविषय इति त्वम्; अयं परोक्षविषय इत्यहम्।
அயம் ப்ரத்யக்ஷ விஷய இதித்வம்; அயம் பரோக்ஷ விஷய இத்யஹம் .

தசரதா, ஐம்புலன்கள் உணர்வினால் கட்டுண்ட உடல் கொண்ட சாதாரண மானிடனாக நீ ராமனைப் பார்க்கிறாய். ராமன் ஐம்புலன்கள், ஐம் பூதங்கள் அனைத்தையும் ஆளுமை கொண்ட அவற்றை எல்லாம் கடந்த அருவமானவன். எந்த உருவத்தையும் ஏற்பவன். இது எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது.

27. अयं भक्तानां भुक्तिदातेति त्वम्; अयं भक्तानां भुक्तिमुक्तिदातेति अहम् । அயம் பக்தானாம் புக்திதாதேதி த்வம் ; அயம் பக்தானாம் புக்திமுக்திதாதேதி அஹம் ;

தன்னை அண்டியவர்களுக்கு எல்லா வசதிகள் உதவிகளையும் புரியும் ஒரு மானுட அரசனாக, உனது பட்டத்து இளவரசனாக ராஜாவாக நீ ராமனை எண்ணுகிறாய். அவன் இம்மைக்கு தேவையானவை மட்டுமல்ல மறுமைக்கும் பக்தர்களுக்கு முக்தி தருபவன். பரமாத்மா. இதை நான் அறிவேன். நீ அறியவில்லை.

28. अयमेक इति त्वम् अयमनेक इत्यहम् ।அயமேக இதித்வம் அயமனேக இத்யஹம் .

தசரதா, ராமனை நீ ‘ ‘ஒரு” மானிடனாக அறிகிறாய் தசரதா. அவன் ”எண்ணற்ற பலர்” ஆனவன். நீ காண்பது அவர்களில் ஒருவனை. நினைத்த உருவத்தை தக்க காரணத்தோடு, எடுத்துக்கொண்டு இயக்குபவன் ராமன் என உன் மகனாக வந்த ஸ்ரீமன் நாராயணன். காக்கும் கடவுள். இதை நான் அறிவேன். உனக்குத் தெரியாது.

29. अयं चक्षुषा ग्राह्य इति त्वम् अयं ‘न चक्षुषा गृह्यते नापि वाचा नान्यैर्देवैर्मनसा कर्मणा वा’ । इति करणागोचर इत्यहम् ।
அயம் சக்ஷுஷா க்ராம்ஹஇதித்வம். அயம் ந சக்ஷுஷா க்ருஹ்யதே நாபி வாசா நான்யை தேவைர் மனஸா கர்மணா வா; இதி கர்ணாகோசர இத்யஹம் .

தசரதா , நீ ராமன் என்கிற ” ஒரு” உருவத் தை மட்டும் கண்ணால் காண்கிறாய். எனக்கு தெரியும் ராமனை. அவனை கண்களால் முழுவதும் காண முடியாது. அவனை விளக்கிச் சொல்லமுடியாது, வார்த்தையே இல்லை. காதால் கேட்டு மாளாது. எந்த புலனாலும் அவனை உணர முடியாது. அதற்கு அப்பாற்பட்ட எல்லையற்ற இயம்ப முடியாத ப்ரம்மம். பரப்பிரம்மம். சதானந்தம் அவன். இதை நான் அறிந்தவன். நீ அறியாதவன்.

30 अयं जात इति त्वम् अयं ‘अजायमानो बहुधा विजायत’ इत्यहम् ।
அயம் ஜாத இதித்வம் அயம் அஜாயமானோ பஹுதா விஜாயத இத்யஹம் .

இத்தனாம் நாள், இன்ன தேதி, இன்ன கிழமை, இந்த நேரம், காலம் அதில் ராமன் ஜனனம் என்று நீ குறித்து வைத்தவன். அது மட்டுமல்ல. அவன் உருவத்தைத் தாங்கி அவதரித்த பிறவிகள் எண்ணற்றவை. அதில் எதிலோ ஒரு சிறு துளி தான் அவன் இப்போது எடுத்துள்ள ஸ்ரீ ராமாவதாரம். அவன் பிறவியற்றவன். எந்த ரூபத்திலும் பிறர் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கேற்ப தன் உருவத்தை மாற்றி அமைத்துக் கொள்பவன். இது அவன் மாயை. நான் அவனை அறிவேன் நீ அறிய காலம் ஆகும்.

தொடரும்

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;